SI DEPT, OPEN QUOTA, TNPSC DAY – 09 TEST
About Lesson

 

TAMIL TEST QUESTIONS

1.பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்தெழுதுக.
(A) பொங்கலன்று
(B) பொங்கலென்று
(C) பொங்க அன்று
(D) பொங்கல் அன்று
(E) விடை தெரியவில்லை

2.பிரித்தெழுதுக.
சீரிளமை
(A) சீர் + இளமை
(B) சீர்மை + இளமை
(C) சீரி + இளமை
(D) சீற் + இளமை
(E) விடை தெரியவில்லை

3.சேர்த்தெழுதுதல்,
பூ + சோலை
(A) பூம்சோலை
(B) பூஞ்ஞ்சோலை
(C) பூம்ச்சோலை
(D) பூஞ்சோலை
(E) விடை தெரியவில்லை

4.கூட்டப் பெயர் :
‘யானை’
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
(A) யானை மந்தை
(B) யானை திரள்
(C) யானை நிரை
(D)யானைக்கூட்டம்
(E) விடை தெரியவில்லை

5.சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
‘பழம்’
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
(A) பழக்குவியல்
(B) பழக்கூட்டம்
(C)பழக்குலை
(D) பழமந்தை
(E) விடை தெரியவில்லை

6.கூற்று – சரியா? தவறா?
கூற்று 1 : பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று முல்லைப்பாட்டு
கூற்று 2 : முல்லைப் பாட்டைப் பாடியவர் கபிலர்
(A) கூற்று இரண்டும் தவறு
(B)கூற்று 1 மட்டும் சரி
(C) கூற்று இரண்டும் சரி
(D) கூற்று 2 மட்டும் சரி
(E) விடை தெரியவில்லை

 


7.கீழ்க்கண்ட தொடர்களைக் கவனி.
கூற்று : தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும்
உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்.
காரணம் : மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாற்றில் ஓடி
வீணாவதைத் தடுப்பதற்காக அணையைக் கட்டினார்.
(A) கூற்று சரி காரணம் தவறு
(B)கூற்று தவறு காரணம் சரி
(C)கூற்று சரி காரணம் சரி
(D)கூற்று தவறு காரணம் தவறு
(E) விடை தெரியவில்லை

 

8.அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் பயன்படுத்துக.
(மார்க்கம்)
(A) குணம் இருந்தால்_____உண்டு
(B) பணம் இருந்தால் _____உண்டு
(C)மனம் இருந்தால்_____உண்டு
(D) தனம் இருந்தால் _____உண்டு
(E) விடை தெரியவில்லை

 

9.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(நோயாளன்)
(A) வாளால் அறுத்த____போல்
(B)மாளாத காதல்____போல்
(C) மீளாத துயர்தரினும்____போல்
(D) ஆளா உனதருள்____போல்
(E) விடை தெரியவில்லை____போல்

 

10. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(இனிய)
(A)_____விலங்கிடம் பழகாதே
(B)எல்லோருக்கும்_____வணக்கம்
(C) நாம்_____வாங்கவேண்டும்
(D) தமிழ்____கொண்டுள்ளது
(E) விடை தெரியவில்லை

 

11. பொருத்தமான காலத்தைச் சுட்டுக
“வாழ்த்தொலிகள் வந்து கொண்டே இருந்தன”
(A) எதிர்காலம்
(B) நிகழ்காலம்
(C)இறந்தகாலம்
(D) சங்ககாலம்
(E) விடை தெரியவில்லை

 

12.சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) மழை பெய்யாது – இறந்தகாலம்
(B)மழை பெய்யும்-எதிர்காலம்
(C) மழை பெய்தது- நிகழ்காலம்
(D) மழை பெய்கின்றது-எதிர்காலம்
(E) விடை தெரியவில்லை

 

13. கீழ்கண்ட வாக்கியங்களில் இறந்த காலத்தைக் காட்டும் வாக்கியத்தைக் கண்டறிக
(A) பழம் நழுவிப் பாலில் விழுந்தது
(B) பழம் நழுவிப் பாலில் விழாது
(C) பழம் நழுவிப் பாலில் விழும்
(D) பழம் நழுவிப் பாலில் விழுகின்றது
(E) விடை தெரியவில்லை

 

14.விசனம் என்பதன் எதிர்ச்சொல் தருக
(A) கவலை
(B)மகிழ்ச்சி
(C) துன்பம்
(D) துயர்
(E) விடை தெரியவில்லை

 

15. “அல்லவை” என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
(A) தீயவை
(B) சொல்லவை
(C)நல்லவை
(D) செல்லவை
(E) விடை தெரியவில்லை

16. ‘மயிலை என வழங்கப்படும் ஊர்ப்பெயர் எதுவென கண்டறிக.
(A) மயிலாப்பூர்
(B) மயிலாடுதுறை
(C) மன்னார்குடி
(E) விடை தெரியவில்லை
(D) மயிலாடும் பாறை
(E) விடை தெரியவில்லை

 

17. புதுக்கோட்டை என்பதன் மரூஉ எதுவெனக் கண்டறிக.
(A)புதுகை
(B) புதுவை
(C) புதுமை
(D) புதுக்கை
(E) விடை தெரியவில்லை

 

18.‘சிவிங்கம்’ தமிழ்ப்படுத்துக
(A)சுவைப்புப்பயின்
(B) சுருள் மிட்டாய்
(C) இரப்பர்மிட்டாய்
(D) பப்புல்காம்
(E) விடை தெரியவில்லை

 

19. Magazine-சரியான தமிழ்ச்சொல்
(A)பருவ இதழ்
(B) திங்கள் இதழ்
(C) செய்தித்தாள்
(D) வார இதழ்
(E) விடை தெரியவில்லை

 

20. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
“செய்தக்க செய்யாமை யானும் கெடும்”
(A) எதுவும் செய்யாமல் இருப்பது நன்றா?
(B)செய்யத் தகுந்த செயல்களைச் செய்ய வேண்டுமா?
(C)செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால் கெடுமா?
(D)எதைச் செய்யாமையால் கெடும்
(E) விடை தெரியவில்லை

 

21.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
“கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்”
(A) கரகாட்டம் என்றால் என்ன?
(B)கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
(C) கரகாட்டமும் கும்பாட்டமும் ஒன்றா?
(D) கரகாட்டத்தின் அடவு முறைகள் யாவை?
(E) விடை தெரியவில்லை

 

22.விடைக்கேற்ற வினாவைத் தெரிந்தெடுத்து எழுதுக.
“இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்” என தன்மையினை படர்க்கை இடத்தில் கூறுவது, இட வழுவமைதியாகும்.
(A) என்ன வழுவமைதி இது?
(B) இது என்ன வழுவமைதி?
(C)வழுவமைதி என்றால் என்ன?
(D)இது எவ்வகை வழுவமைதி?
(E) விடை தெரியவில்லை

 

23. விடைக்கேற்ற வினா அமைக்க.
முத்துக்குளிக்கும் கொற்கையின் அரசர் அதிவீரராம பாண்டியர்.
(A) முத்துக்குளிக்கும் இடம் எது ?
(B) எங்கே முத்துக்குளிக்க வேண்டும்?
(C) யார் முத்துக்குளிக்க வேண்டும்?
(D)கொற்கையின் அரசர் யார்?
(E) விடை தெரியவில்லை

 

24.சரியான விடையைத் தேர்க.
‘நான் லைட்ஹவுசுக்கு செல்கிறேன்
(A) நான் ஒளிவீட்டிற்குச் செல்கிறேன்
(B) நான் மின்சார வீட்டிற்குச் செல்கிறேன்
(C)நான் கலங்கரை விளக்கத்திற்குச் செல்கிறேன்
(D) நான் மின்விளக்குக் கடைக்குச் செல்கிறேன்
(E) விடை தெரியவில்லை

 

25. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு
(A) நாம கரணம் – வணக்கம்
(B)நாம கரணம் – பெயர்
(C)நாம கரணம் – நாம் காரணம்
(D) நாம கரணம் – நாமம்
(E) விடை தெரியவில்லை

 

26. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.
(A) மதுரவசனி – மதுரை மீனாட்சி
(B) மதுரவசனி- தேன் மொழியாள்
(C)மதுரவசனி –தேன்மொழிப்பாவை      
(D)மதுரவசனி – அறம் வளர்த்த நாயகி
(E) விடை தெரியவில்லை

 

27. இரு வினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்
பணிந்து – பணித்து
(A) வணங்குதல் –  எதிர்த்தல்
(B) கட்டுபடுதல் –  உத்தரவிடுதல்
(C) ஆமோதித்தல் – ஏற்றுக்கொள்ளுதல்
(D) கட்டளையிடுதல் – ஒத்துக்கொள்ளுதல்
(E) விடை தெரியவில்லை

 

28.சரியான பொருளை அறிக.
தகளி
(A) அறிவு
(B)அகல்விளக்கு
(C) உலகம்
(D) நெய்
(E) விடை தெரியவில்லை

 

29.சரியான பொருளை அறிக.
‘காருகர்’
(A) வெற்றிலை விற்போர்
(B) எண்ணெய் விற்போர்
(C) நெய்பவர்
(D) உணவு சமைப்போர்
(E) விடை தெரியவில்லை

 

30. ‘நுழாய்’ என்பது
(A) இளநெல்
(B) வாழைப்பிஞ்சு
(C) இளம்பாக்கு
(D) எள்பிஞ்சு
(E) விடை தெரியவில்லை

 

31. குறில், நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிக.
விதி – வீதி
(A) சட்டம் – தெரு
(B) தெரு – சட்டம்
(C) விதித்தல் – சட்டம்
(D) தெரு விதித்தல்
(E) விடை தெரியவில்லை

 

32.குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
நசி – நாசி
(A) விடம், முகர்தல்
(B) நச்சு, நலிதல்
(C) மூக்கு, சுவாசி
(D)குறைதல், மூக்கு
(E) விடை தெரியவில்லை

 

33.’களை’ என்னும் சொல்லிற்கு பொருத்தமுடைய இரு பொருள்களைக் கண்டறிக.
(A) அழித்தல், ஆக்கல்
(B) ஒழித்தல், ஓடுதல்
(C) வயலில் களை, முகத்தின் ஒளி
(D) வயலில் காளை, எரு
(E) விடை தெரியவில்லை

 

34. சொல் – இருபொருள் தருக
(A) நில் – பதம்
(B) பதம் – கல்
(C) பதம் – தொல்
(D) நெல் – பதம்
(E) விடை தெரியவில்லை

 

35. சரியான இரு பொருளைத் தேர்ந்தெடு.
உறவு
(A) பகை – விருப்பு
(B) சுற்றம் – விருப்பம்
(C) விருப்பு வெறுப்பு
(D) ஒப்பு – பகை
(E) விடை தெரியவில்லை

 

36.உங்கூருக்கே வர்றேன் – என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக
(A) உங்களுடைய ஊருக்கே வர்றேன்
(B) உம்முடைய ஊருக்கே வருகிறேன்
(C) உன்னுடைய ஊருக்கே வர்றேன்
(D)ஊங்கள் ஊருக்கே வருகிறேன்
(E) விடை தெரியவில்லை

 

37. வெரசா வந்துருவேன் – என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக
(A) நொடியில் வந்துவிடுவேன்
(B) வேகமாக வந்துருவேன்
(C) விரைவில் வந்துவிடுவேன்
(D) விரைவாக வந்துருவேன்
(E) விடை தெரியவில்லை

 

38. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம்______
(A) எவை
(B) யார்
(C) எது
(D) என்ன
(E) விடை தெரியவில்லை

 

39. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.
வினைத்திட்டம் என்பது
(A) யாது?
(B) எது?
(C) என்ன?
(D) யாவை?
(E) விடை தெரியவில்லை

 

40.சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு.இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுவர்.
(A) எவர்
(B) யாவர்
(C) யார்
(D) எப்படி?
(E) விடை தெரியவில்லை

 

41. சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) ஆ, எவ்வளவு பெரிய கரடி, கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா.
(B) ஆ! எவ்வளவு பெரிய கரடி. கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா?
(C) ஆ எவ்வளவு பெரிய கரடி கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா?
(D) ஆ! எவ்வளவு பெரிய கரடி கரடிக்கு மரம் ஏறத்தெரியுமா.
(E) விடை தெரியவில்லை

 

42. பொருத்தமான நிறுத்தற்குறிகளை இட்டத் தொடரைக் கண்டறிக.
(A) பேரறிஞர் அண்ணா, ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
(B) பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
(C) பேரறிஞர் அண்ணா “செவ்வாழை” என்னும் சிறுகதை எழுதினார்.
(D) பேரறிஞர் அண்ணா ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்!
(E) விடை தெரியவில்லை

 

43. சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக
(A) இனியன் நன்கு படித்தான்; அதனால், தேர்ச்சி பெற்றான்.
(B) இனியன் நன்கு படித்தான், அதனால்; தேர்ச்சி பெற்றான்.
(C) இனியன் நன்கு படித்தான். அதனால் தேர்ச்சி, பெற்றான்:
(D) இனியன், நன்கு படித்தான். அதனால்; தேர்ச்சி பெற்றான்.
(E) விடை தெரியவில்லை

 

44. “மாணவன்” எதிர்பாலுக்குரிய பெயரை எழுதுக.
(A) சிறுமி
(B) மாணவி
(C) தோழி
(D) அரசி
(E) விடை தெரியவில்லை

 

45. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) 1-க
(B) 2-உ
(C) 3-௩
(D) 4-எ
(E) விடை தெரியவில்லை

 

46. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிக.
தாவரத்தின் இளம் நிலையை குறிக்காத ஒரு சொல்.
(A) மடலி
(B) பைங்கூழ்
(C) குருத்து
(D) மட்டை
(E) விடை தெரியவில்லை

 

47. இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் என்னும் திருக்குறளையொட்டி.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
(A) இன்பம்
(B) காமம்
(C) வெகுளி
(D) மயக்கம்
(E) விடை தெரியவில்லை

 

48. மரபுப்பிழைகள் வினைமரபு.
பால்
(A) குடி
(B) பருகு
(C) தின்
(D) உண்
(E) விடை தெரியவில்லை

 

49. மரபுப் பிழைகள் ஒலி மரபு.
கிளி
(A) அகவும்
(B) கூவும்
(C) பேசும்
(D) குனுகும்
(E) விடை தெரியவில்லை

 

50. அவிந்தன, நெகிழ்ந்தன, விண்டன, கொண்ட ஆகிய சொற்கள் தரும் பொருளைக் கண்டறிக.
(A) மலர்ந்தன
(B) கூம்பின
(C) வளர்ந்த
(D) வாடின
(E) விடை தெரியவில்லை

 

51. தொலி, தோல், தோடு, ஓடு ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கின்றன.
(A) காய்களின் மேற்பகுதி
(B) வீடுகளின் மேற்பகுதி
(C) பழங்களின் மேற்பகுதி
(D) மரங்களின் மேற்பகுதி
(E) விடை தெரியவில்லை

 

52. சரியான அகர வரிசையைக் கண்டறிக.
(A) மன்னா,தளை, அணை, அண்ணா
(B) தளை, மன்னா, அணை,அண்ணா
(C) அண்ணா, அணை, தளை, மன்னா
(D) அணை, தளை, அண்ணா, மன்னா
(E) விடை தெரியவில்லை

 

53.அகர வரிசைப்படுத்துக.
(A)மதம், மணம், மஞ்சள், மரகதம்
(B) மரகதம், மஞ்சள், மணம், மதம்
(C) மஞ்சள், மணம், மதம், மரகதம்
(D) மணம், மரகதம், மதம், மஞ்சள்
(E) விடை தெரியவில்லை

 

54.அகர வரிசைப்படுத்துக.
(A) ஓராயிரம், ஓரம், ஓரிதழ், ஓருயிர்
(B) ஓரம், ஓரிதழ், ஓருயிர், ஓராயிரம்
(C) ஓருயிர், ஓரிதழ், ஓரம், ஓராயிரம்
(D) ஓரம், ஓராயிரம், ஓரிதழ், ஓருயிர்
(E) விடை தெரியவில்லை

 

55. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க.
‘இளை-இழை
(A) மெலிந்து போதல்-நூல் இழை
(B) இளைஞர். -இழைப்புளி
(C) இளமை. -இழுப்பறை
(D) இளையோன்.   -இழைத்தல்
(E) விடை தெரியவில்லை

 

56. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
‘நேமி – கோடு’
(A) நற்சொல்-தோள்
(B) சக்கரம்-மலை
(C) நேமிநாதம்-நேரான வழி
(D) மலை  -வனம்
(E) விடை தெரியவில்லை

 

57.சரியான வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
(A)”மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்”.
(B)”ஆண்டுதோறும் மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக கூட்டம் நடைபெறும்”.
(C)”கூட்டம் ஆண்டுதோறும் மறைந்த தி.ஜானகிராமன் நினைவாக நடைபெறும்.
(D)”தி.ஜானகிராமன் மறைந்த கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் நினைவாக”.
(E) விடை தெரியவில்லை

 

58.வேர்ச்சொல்லைக் கண்டறிக – ‘நடத்தல்’
(A) நட
(B) நடந்த
(C) நடந்து
(D) நடக்க
(E) விடை தெரியவில்லை

 

59.போட்டேன் – வேர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) போட்டு
(B) போடு
(C) போட்ட
(D) போடுதல்
(E) விடை தெரியவில்லை

 

60. ‘ஓடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க.
(A) ஓடுதல்
(B) ஓடி
(C)ஓடினான்
(D) ஓடிய
(E) விடை தெரியவில்லை

 

61.வினைமுற்று, எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது எதுவென கண்டறிக.
(A)முற்றெச்சம்
(B) வினையெச்சம்
(C) குறிப்பு வினைமுற்று
(D) தெரிநிலை வினைமுற்று
(E). விடை தெரியவில்லை

 

62.படி எனும் வேர்ச்சொல்லின் வினையெச்சச் சொல்லைக் கண்டறிக.
(A) படித்தல்
(B) படித்து
(C) படித்த
(D) படித்தான்
(E) விடை தெரியவில்லை

 

63.காண் என்பதன் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
(A) காணுதல்
(B) கண்ட
(C) கண்டவர்
(D) கண்டேன்
(E) விடை தெரியவில்லை

 

64. வழுவற்றத்தொடரைக் கண்டறிக.
(A) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
(B) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை மேய்ந்தனர்.
(C) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடிக்கினர்
(D) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்.
(E) விடை தெரியவில்லை

 

 

65.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லில் சரியானவற்றைக் காண்க.
1. Excavation – அகழாய்வு
2. Epigraphy – ஓலைச்சுவடி
3. Hero stone – நடுகல்
4. Inscription – செதுக்குதல்
(A) 1 மற்றும் 3
(B) 2 மற்றும் 3
(C) 1 மற்றும் 4
(D) 2 மற்றும் 4
(E) விடை தெரியவில்லை

 

66. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக.
(A) Thesis – குறியீட்டியல்
(B) Intellectual – அறிவாளர்
(C) Myth – கலைச்சொல்
(D) Patent – ஆவணம்
(E) விடை தெரியவில்லை

 

67. பொருந்தா இணையைக் கண்டறிக.
(A) வங்கம் – கப்பல்
(B) நீகான் – நாவாய் ஓட்டுபவன்
(C) எல் – காற்று
(D) மாட ஒள்ளெரி-கலங்கரை விளக்கம்
(E) விடை தெரியவில்லை

 

68. துஞ்சுபுலி இடறிய சிதடன் போல…..
உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக.
(A) துணிதல்
(B) அறிதல்
(C) அறியாமை
(D) ஆணவம்
(E) விடை தெரியவில்லை

 


69.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.
பசுமரத்து ஆணி போல
(A) எதிர்பாராத நிகழ்வு
(B) தற்செயல் நிகழ்வு
(C) பயனற்ற செயல்
(D) எளிதில் மனத்தில் பதிதல்
(E) விடை தெரியவில்லை

 

70.விடை வகைகள்
‘கடைத்தெரு எங்குள்ளது? என்ற வினாவிற்கு, ‘இப்பக்கத்தில் உள்ளது’ எனக்கூறல்
(A) ஏவல் விடை
(B) சுட்டு விடை
(C) நேர்விடை
(D) மறைவிடை
(E) விடை தெரியவில்லை

 

71.விடை வகைகள் “உனக்குக் கதை எழுதத் தெரியுமா” என்ற வினாவிற்குக் “கட்டுரை
எழுதத் தெரியும்” என்று கூறுவது.
(A) உறுவது கூறல் விடை
(B) இனமொழி விடை
(C) சுட்டு விடை
(D) மறை விடை
(E) விடை தெரியவில்லை

 

72. வினாவிற்கு விடையாக மற்றொரு வினாவைக் கேட்பது எவ்வகை விடை?
(A) உறுவது கூறல் விடை
(B) இனமொழி விடை
(C) சுட்டு விடை
(D) வினா எதிர் வினாதல் விடை
(E) விடை தெரியவில்லை

 

 


73.விடை வகைகள்:
‘நீ படிக்கவில்லையா?’ என்ற வினாவிற்கு ‘எனக்குத் தலை வலிக்கிறது’ என்று உரைப்பது
(A) நேர் விடை
(B) உற்றது உரைத்தல் விடை
(C) உறுவது கூறல் விடை
(D) வினா எதிர் வினாதல் விடை
(E) விடை தெரியவில்லை

 

74. ஒருமைப் பன்மை பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) பறவைகள் வந்து தங்கியது.
(B) பறவைகள் வந்து தங்கினார்கள்.
(C) பறவைகள் வந்து தங்குகின்றது.
(D) பறவைகள் வந்து தங்கின.
(E) விடை தெரியவில்லை

 

75. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.
(A) மொழி வளரும் தன்மை உடையன.
(B) மொழி வளரும் தன்மை உள்ளன.
(C) மொழி வளரும் தன்மை உடையது.
(D) மொழி வளரும் தன்மை உள்ளவை.
(E) விடை தெரியவில்லை

 

76. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(A) பவளவிழியால் பரிசு உரியவள்

(B) பவளவிழிதான் பரிசு உரியது
(C) பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்
(D) பவளவிழியின் பரிசு உரியது
(E) விடை தெரியவில்லை

 

77.சொல் – பொருள் – பொருத்துக.
(a) திகிரி 1.கருணை
(b) அளி 2.ஆணைச்சக்ரம்
(c) அலர்     3.மகரந்தம்
(d) கொங்கு 4. மலர்தல்

     (a)(b)(c)(d)
(A)  2  1   4   3
(B)  4  1   2   3
(C)  2  4   1   3
(D)  1  2   3   4
(E) விடை தெரியவில்லை

 

78. சொல் – பொருள் – பொருத்துக.
(a) புரிசை 1. சாளரம்
(b) புழை   2. நீர்நிலை
(c) பணை 3. மதில்
(d) கயம்    4. முரசு
(E) விடை தெரியவில்லை
     (a)(b)(c)(d)
(A) 1   3   4  2
(B) 4   2   1  3
(C) 2   1   3  4
(D) 3   1   4   2

(E) விடை தெரியவில்லை

 

79. ‘வருதல்’ என்பதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) வந்தான்
(B) வரு
(C) வா
(D) வந்த
(E) விடை தெரியவில்லை

 

 

80.’சுடச்சுடரும் பொன்போல்’ எனும் உவமை கூறும் பொருளைக் கண்டறிக.
(A) தானம் வளரும்
(B) கானம் வளரும்
(C) செல்வம் வளரும்
(D) ஞானம் வளரும்
(E) விடை தெரியவில்லை

 

81. சொற்களை ஒழுங்குப்படுத்துக.
“தமது கருத்தைச் சுவையோடு கவிஞர் சொல்வதற்கு உதவுவது அணி”
(A) கவிஞர் தமது கருத்தைச் சொல்வதற்கு சுவையோடு உதவுவது அணி
(B) சுவையோடு கவிஞர் தமது கருத்தைச் சொல்வதற்கு உதவுவது அணி
(C) கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி
(D) அணி தமது கருத்தைச் சுவையோடு கவிஞர் சொல்வதற்கு உதவுவது
(E) விடை தெரியவில்லை

 

82. பிறவினைச் சொற்றொடரைக் காண்க.
(A) மாலை அணிந்தான்
(B) மாலை அணிவித்தான்
(C) மாலை அணிந்து கொண்டான்
(D) மாலை அணிந்து வந்தான்
(E) விடை தெரியவில்லை

 

83. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
“நான் இந்த வீட்டைக் கட்டினேன்” என்பது
(A) எதிர்வினை வாக்கியம்
(B) பிறவினை வாக்கியம்
(C) செய்வினை வாக்கியம்
(D) செயப்பாட்டுவினை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை

 

84.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்-தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
அப்துல் நேற்று வருவித்தான்.
(A) தன்வினை
(B) பிறவினை
(C) செய்வினை
(D) செயப்பாட்டுவினை
(E) விடை தெரியவில்லை

 

85. ‘மயில்’ என்பதற்கு பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக.
(A) அகவியது
(B) கூவியது
(C) கொஞ்சியது
(D) கரைந்தது
(E) விடை தெரியவில்லை

 

86.’வண்டு’ என்பதுடன் பொருந்தி வரும் ஒலிமரபுச் சொல்லைக் கண்டறிக.
(A) ரீங்காரமிடும்
(B) உறுமும்
(C) இசைக்கும்
(D) முரலும்
(E) விடை தெரியவில்லை

 

87. சரியான இணைப்புச் சொல்லை நிரப்புக.
எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை.______இதுவே எமக்குத் தாயாகும்.
(A) ஏனெனில்
(B) அதனால்
(C) ஆகையால்
(D) எனவே
(E) விடை தெரியவில்லை

 

88. சரியான இணைப்புச் சொல்லை தெரிவு செய்க.
நான் ஏற்கனவே சென்ற இடம்தான்.______அச்சம் ஒன்றும் இல்லை.
(A) ஆதலால்
(B) ஆனால்
(C) ஆயினும்
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை

 

89.சரியான இணைப்புச் சொல் எழுதுக.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்_____துன்பப்பட வேண்டும்.
(A) அதனால்
(B) எனவே
(C) இல்லையென்றால்
(D) எனில்
(E) விடை தெரியவில்லை

 

90. கலைச்சொல் அறிக.
Monolingual
(A) மெய்யெழுத்து
(B) ஒரு மொழி
(C) உரையாடல்
(D) கலந்துரையாடல்
(E) விடை தெரியவில்லை

 

91. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் கலைச்சொல்லை எழுதுக.
‘Whirlwind’
(A) சூறாவளி
(B) நிலக்காற்று
(C) பெருங்காற்று
(D) சுழல் காற்று
(E) விடை தெரியவில்லை

 

92. சரியான கலைச்சொல்லைத் தேர்க.
CONICAL STONE
(A) குமிழிக்கல்
(B) நீர் மேலாண்மை
(C) பாசனத் தொழில் நுட்பம்
(D) வெப்பமண்டலம்
(E) விடை தெரியவில்லை

 

93. ஒரு-ஓர் – சரியான வகையில் அமைந்த தொடரைக் கண்டறிக.
(A) ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(B) ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்
(C) ஒரு இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(D) ஓர் இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஓர் நாள்
(E) விடை தெரியவில்லை

 

94.பிழை திருத்துதல்.
சரியான எண்ணடையைத் தேர்ந்தெடு.
(A) ஒரு அடர்ந்து காடு
(B) ஒன்று அடர்ந்த காடு
(C) ஓர் அடர்ந்த காடு
(D) ஒன்னு அடர்ந்த காடு
(E) விடை தெரியவில்லை

 

95. கீழ்காணும் தொடர்களில் [ஒரு-ஓர்] சரியாக அமைந்த தொடர் எது?
(A) ஓர் தெய்வீக காலைப்பொழுது
(B) ஓர் இனிய காலைப்பொழுது
(C) ஒரு அழகிய காலைப்பொழுது
(D) ஒரு இனிய காலைப்பொழுது
(E) விடை தெரியவில்லை

 

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.

தமிழர் நாகரிக வளர்ச்சியில் சிற்பம் கல்லில் வடித்த கவிதைகள் எனலாம். கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைக்கும் கலையே சிற்பக்கலை. சிற்பக்கலை பற்றி திவாகர நிகண்டு மணிமேகலை போன்றவற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. பல்லவர் காலத்து தூண்களில் சிங்கம், யாளி, தாமரை மலர் போன்ற சிற்பங்கள் இருந்தன. திருச்சி மலைக்கோட்டை, மாமல்லபுரம் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் பல்லவர் கால சிற்பம் கலைநுட்பத்துடன் அமைந்துள்ளன. பல்லவர் கால குடைவரைக் கோவில்களில் நுழைவாயில் இரு புறங்களிலும் காவலர் நிற்பது போன்ற சிற்பங்கள் படைக்கப்பட்டன.

96. சிற்பம் கல்லில் வடித்த____எனலாம்.
(A) கவிதை
(B) கட்டுரை
(C) படம்
(D) காட்சி
(E) விடை தெரியவில்லை

 

97. திவாகர நிகண்டுவில் சொல்லப்பட்ட கலை எது?
(A) சிற்பம்
(B) ஓவியம்
(C) கட்டிடம்
(D) வரைகலை
(E) விடை தெரியவில்லை

 

98. தூண்களில் காணப்படும் சிற்பங்கள் எவை?
(A) தாழி,காளை
(B) புலி, கரடி
(C) சிங்கம், யாளி
(D) மீன்,வில்
(E) விடை தெரியவில்லை

 

99.காவலர் நிற்பது போன்ற சிற்பம் எவ்வகைக் கோவில்களில் செதுக்கப்பட்டன?
(A) கற்கோவில்
(B) பொற்கோவில்
(C) கட்டிடக் கோவில்
(D) குடைவரைக் கோவில்
(E) விடை தெரியவில்லை

 

100. திருச்சி மலைக் கோட்டையில் காணப்படும் சிற்பம் யாருடைய காலம் ?
(A) சேரர்
(B) சோழர்
(C) பாண்டியர்
(D) பல்லவர்
(E) விடை தெரியவில்லை

 

Join the conversation