Course Content
TAMIL TEST DAY – 01
100 QUESTIONS
0/1
TAMIL TEST DAY – 01
About Lesson

PREVIOUS YEAR QUESTIONS – TAMIL MODEL TEST -1 

  1. இங்கு நகரப் பேருந்து நிற்குமா?என்ற வழிப்போக்கனின் வினாவுக்கு அதோ, அங்கு நிற்கும் என்று விடையளிப்பது

A) நேர் விடை  B) ஏவல் விடை   C) சுட்டு விடை   D) மறை விடை 

 

  1. சரியான விடை வகையை தெரிவு செய்க.

உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் கட்டுரை எழுதத் தெரியும்’’ என்று கூறுவது 

A) நேர்விடை B) ஏவல் விடை    C) இனமொழி விடை   D) மறைவிடை 

 

  1. எவ்வகை வினா என்பதை எழுதுக.

ஆசிரியரிடம், இந்தக் கவிதையின் பொருள் யாது?என்று மாணவர் கேட்டல். 

A) அறி வினா B) ஐய வினா C) அறியா வினா       D) கொளல் வினா 

 

  1. அலுவல் சார்ந்த கலைச்சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.

டெலிகேட் : 

A) செயலர் B) மேலாளர்       C) பேராளர்              D) வடிவமைப்பு 

 

  1. சரியான கலைச்சொல்லால் பொருத்துக.

(a) அகழாய்வு.               – (1) Epigraphy 

b) கல்வெட்டியல்.   – (2) Inscription 

(c) பொறிப்பு.                 – (3) Embrossed sculpture 

(d) புடைப்புச் சிற்பம்         – (4) Excavation 

A) 4 1 2 3  B) 2 4 1 3  C) 2 1 4 3           D) 4 2 1 3  

 

  1. MEDIA’என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.

A) இதழியல் B) ஊடகம் C) உரையாடல்   D) பொம்மலாட்டம் 

 

  1. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

“நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல” 

A) பயனற்ற செயல் B) தற்செயல் நிகழ்வு 

C) ஒற்றுமையின்மை D) வெளிப்படைத் தன்மை 

 

  1. பின்வரும் மரபுத் தொடரைப் பொருளோடு பொருத்துக.

    ‘கல்லில் நார் உரித்தல்’ 

A) ஆராய்ந்து பார்த்துச் செய்தல் B) இயலாத செயல் 

C) நீண்டகாலமாக இருப்பது D) விரைந்து வெளியேறுதல்

 

  1. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – இந்த உவமையின் பொருளைத் தேர்க.

A) தற்செயல் நிகழ்வு B) தடையின்றி மிகுதியாக

C) அவசரகுடுக்கை D) எதிர்பாரா நிகழ்வு 

 

  1. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார் – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

A) தன்வினை B) பிறவினை C) செய்வினை    D) செயப்பாட்டு வினை 

 

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

     “அவர்கள் நன்றாகப் படித்தனர்.”  

A) பிறவினை B) தன்வினை   C) எதிர்மறைவினை D) செயப்பாட்டு வினை 

 

  1. தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தேர்க.

       நேற்று நம் ஊரில் மழைபெய்ததா? 

A) விழைவுத் தொடர் B) விளித் தொடர்     

C) வினாத் தொடர் D) செய்தித் தொடர் 

 

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர் ஆவார். 

A) எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்ள வேண்டுமா?

B) எது எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்ளும்?

C) நேர்மையான வாழ்வு வாழ்பவர் யார்?

D) நேர்மையான வாழ்வு வாழாதவர் யார்?

 

  1. விடைக்கேற்ற வினாவை தெரிவு செய்க.

        விடை : எறும்பு உயிர்பிழைக்கப் பாடுபடுகிறது. 

A) எறும்பு எப்படி பாடுபடுகிறது? B) எறும்பு எதனால் பாடுபடுகிறது? 

C) எறும்பு யாருக்குப் பாடுபடுகிறது? D) எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?

 

  1. ‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

A) இன் + ஓசை B) இனி + ஓசை  C) இனிமை + ஓசை   D) இன் + னோசை 

 

  1. பொருந்திய இணைகளைத் தேர்க.

(பொருந்து – பொருத்து) 

மின்விசையைப்பொருந்து 

நல்லாரோடு.   – பொருந்து

III. பொருளோடு.      – பொருத்து 

தீயவரைப்.   – பொருத்து

A) I மற்றும் II சரி B) II மற்றும் III சரி C) III மற்றும் IV சரி D) I மற்றும் IV சரி 

 

  1. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

A) வண்மை யின்மையால் வறுமையில்லையோர்.

B) வறுமை இல்லையோர் வண்மையின்மையால்.

C) வண்மை யில்லையோர் வறுமையின்மையால்.

D) வறுமை இன்மையால் வண்மை இல்லையோர்.

 

  1. சொற்களை ஒழுங்குப்படுத்திச் சரியான தொடரைத் தேர்க.

A) தமிழரின் விளையாட்டு நாகரிகத்தை உணர்த்தும் ஏறுதழுவுதல்.

B) ஏறுதழுவுதல் உணர்த்தும் தமிழரின் நாகரிகத்தை விளையாட்டு.

C) ஏறுதழுவுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு

D) தமிழரின் நாகரிகத்தை விளையாட்டு ஏறுதழுவுதல் உணர்த்தும்

 

  1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

      உலகிலுள்ள மனிதப்பிறவி தனித்தன்மை உயிரினங்களுள் உடையது. 

A) தனித்தன்மை மனிதப்பிறவி உடையது உலகிலுள்ள உயிரினங்களுள்.

B) உலகிலுள்ள உயிரினங்களுள் உடையது தனித்தன்மை மனிதப் பிறவி.

C) மனிதப் பிறவி தனித்தன்மை உயிரினங்களுள் உலகிலுள்ள உடையது.

D) உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப்பிறவி தனித்தன்மை உடையது.

 

  1. பின்வரும் சொற்களை அகர வரிசைப்படுத்துக.

    சங்கு, நுங்கு, பிஞ்சு, வஞ்சம், பட்டணம், சுண்டல், வண்டி 

A) சங்கு, சுண்டல், நுங்கு, பட்டணம், பிஞ்சு, வஞ்சம், வண்டி

B) சங்கு, சுண்டல், நுங்கு, பட்டணம், பிஞ்சு, வண்டி, வஞ்சம்

C) சங்கு, சுண்டல், நுங்கு, பிஞ்சு, பட்டணம், வண்டி, வஞ்சம்

D) சங்கு, சுண்டல், பிஞ்சு, நுங்கு, பட்டணம், வஞ்சம், வண்டி

 

  1. கீழ்க்கண்ட சொற்களை அகரவரிசைப்படி சீர் செய்க.

       வா, தேன், மலர், பை, நூல். 

A) நூல், தேன், மலர், பை, வா B) தேன், நூல், மலர், வா, பை 

C) நூல், மலர், பை, வா, தேன் D) தேன், நூல், பை, மலர், வா

 

  1. ‘பிடி‘ என்ற சொல்லின் வினையெச்சம் கண்டறிக.

A) பிடித்தாள் B) பிடித்து     C) பிடித்த     D) பிடித்தல் 

 

  1. “நட” என்னும் வேர்ச் சொல்லின் வினைமுற்று அறிக.

A) நடந்த B) நடந்து       C) நடத்தல்   D) நடக்கிறது 

 

  1. வா’ – என்ற சொல்லுக்குரிய பெயரெச்சத்தை கண்டறிக.

A) வருதல் B) வந்தான்      C) வந்த      D) வந்து 

 

  1. “அறைந்தனன்” வேர்ச்சொல்லைத் தருக.

A) அறை B) அறைந்து     C) அறைந்த   D) அறைதல் 

 

  1. வேர்ச்சொல்லைக் கண்டறிதல்.

     கேட்டார் 

A) கேல் B) கேழ்          C) கேட்டு       D) கேள் 

 

  1. ‘பேசினாள்’ – இதன் வேர்ச்சொல்லை அறிக.

A) பேசி B) பேசிய C) பேசு          D) பேசியது 

 

  1. ‘இது செய்வாயா?’ என்று வினவியபோது, “நீயே செய்” என்று கூறுவது,______  விடை ஆகும்.

A) நேர் விடை B) ஏவல் விடை 

C) உறுவது கூறல் விடை D) சுட்டு விடை

 

  1. தானியங்களைக் குறிக்கும் சொல் அல்லாதது

A) கூலம் B) பயறு        C) முதிரை        D) சிவியல் 

 

  1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.

புல்புள் 

A) புல் தரைஓரறிவு தாவரம்  

B) ஓரறிவு தாவரம் பறவை

C) பறவைபுண்  

D) அசைபறவை

 

  1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.

குழை – குலை 

A) குண்டலம் காது 

B)  குண்டலம்.   – கொத்து 

C) காது.   – குண்டலம்

D) கொத்து.   – குண்டலம்

 

  1. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான தொடரைத் தெரிவு செய்க.

A) தேற்த் திருவிளாவிற்குச் சென்றணர்.

B) தேர்த் திருவிழாவிற்குச் செண்றனர்.

C) தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

D) தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்

 

  1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அமைந்த இணை எது?

A) டெபிட்கார்டு.   – பற்று அட்டை

B) கிரெடிட் கார்டு.   – வரைவோலை

C) செக்.   – பணத்தாள்

D) டிமாண்ட் டிராஃப்ட்கடன் அட்டை 

 

  1.  ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிதல்.

  RATIONAL 

A) சீர்திருத்தம் B) பகுத்தறிவு      C) தத்துவம்       D) ஞானி 

 

  1. Consonant – சரியான தமிழ்ச் சொல்லை எடுத்தெழுதுக.

A) உயிரொலி B) மூக்கொலி    C) மெய்யொலி    D) சித்திர எழுத்து 

 

  1. பிறமொழி கலவாத தொடரை எடுத்து எழுதுக.

A) இன்று ரோபோ பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

B) அதிகாலை விழித்தெழுதல் நல்லது.

C) கம்பியூட்டர் காலம் இது.

D) காலிங்பெல்லை அழுத்துங்கள்.

 

  1. வழூவுச் சொற்களை நீக்கி எழுதுதல்.

       கோளிமுட்டை தாவாரத்தில் உருண்டது. 

A) கோலிமுட்டை தாவாரத்தில் உருண்டது.

B) கோளிமூட்டை தாவாரத்தில் உருண்டது.

C) கோழிமுட்டை தாவாரத்தில் உருண்டது.

D) கோழிமுட்டை தாழ்வாரத்தில் உருண்டது.

 

  1. மரபுப் பிழைகள் (வினை மரபு)

      சோறு 

A) தின் B) பருகு       C) குடி      D) உண் 

 

  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

        கண்ணதாசன் 

A) ஏசுகாவியம் B) மாங்கனி   

C) ஆட்டனத்தி ஆதிமந்தி D) வீரத்தாய் 

 

  1. பண்புத் தொகை அல்லாத சொல் தேர்க.

A) நன்னுதல் B) மூதூர்     C) கொடுஞ்செலவு     D) கண்ணுதல்  

 

  1. கீழ்க்கண்டவற்றுள் வேற்றுமை உருபுகள் அடிப்படையில் பொருந்தாதவற்றைக் கண்டறிக.

       ஐ, ஆல், உறு, கு 

A) கு B) ஐ           C) உறு            D) ஆல்  

 

  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

A) பாயிரவியல் B) இல்லறவியல்   C) குடிமையியல்    D) துறவறவியல் 

 

  1. எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்தெழுதுதல்.

     கல்லுண்டு 

A) கள்ளுண்டு B) கள்ளில்லை     C) கல்லில்லை      D) கல்லிலை 

 

  1. எதிர்ச் சொல்லை எடுத்தெழுதுதல்

      இருநிலம் – எதிர்ச்சொல் தருக. 

A) பெரிய நிலம் B) அகன்ற நிலம்   C) பரந்த நிலம்     D) சிறிய நிலம் 

 

  1. சோம்பல் – என்ற சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்லை எழுதுக.

A) அழிவு B) துன்பம்           C) சோகம்           D) சுறுசுறுப்பு 

 

  1. இன்பு + உருகு – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

A) இன்புஉருகு B) இன்பும்உருகு     C) இன்புருகு        D) இன்பருகு 

 

  1. சேர்த்து எழுதுக : ஓடை + எல்லாம்

A) ஓடை எல்லாம் B) ஓடையெல்லாம்   

C) ஓட்டையெல்லாம் D) ஓடெல்லாம் 

 

  1. சேர்த்தெழுதுக : கால் + இறங்கி

A) கால்லிறங்கி B) காலிறங்கி    C) கால்இறங்கி     D) கால்றங்கி 

 

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்கான சரியான விடையை தேர்ந்தெடு : 

விக்ரம் சாராபாய் ‘இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ஆரியபட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்குக் காரணமானவர். செயற்கைகோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக 24000 இந்திய கிராமங்களில்vஉள்ள ஐம்பது இலட்சம் மக்களுக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இவரின் பெயரால் ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இவருடைய முயற்சியால் தான்இஸ்ரோ’  தொடங்கப்பட்டது. டாக்டர். அப்துல்கலாம் 11-வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர்; தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர். ஏவுகணை, ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால் இவர் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார். இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியை தமிழ்வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

  1. ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ எங்கு செயல்பட்டு வருகிறது?

A) பெங்களூரு B) ஐதராபாத்   C) திருவனந்தபுரம் D) ஸ்ரீஹரிக்கோட்டா 

 

  1. ‘இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

A) அப்துல் கலாம் B) விக்ரம் சாராபாய் 

C) மயில்சாமி அண்ணாதுரை D) சிவன் 

 

51.இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளர் யார்? 

A) விக்ரம் சாராபாய் B) அப்துல்கலாம் 

C) டாக்டர் முத்துலட்சுமி     D) கல்பனா சாவ்லா 

 

  1. இந்திய ஏவுகணை நாயகன் தம் பள்ளிக்கல்வியை எவ்வழியில் படித்தார்?

A) ஆங்கிலம் B) தமிழ்    C) ஜெர்மன்    D) இந்தி 

 

  1. விக்ரம் சாராபாய் ஏவிய செயற்கைகோள் எதற்கு பயன்பட்டது?

A) கல்வி B) வானவியல்   C) தட்பவெப்பம்   D) புவியியல் வரைபடம் 

 

  1. ஒருமை, பன்மை பிழை அறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

A) உயர்ந்தோர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளமாட்டார்கள்.

B) சிறுவன் தமது கையில் புத்தகம் வைத்திருந்தான்

C) நாய் தனது தலையை ஆட்டியது.

D) குழந்தைகள் தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்கு செய்கின்றனர்.

 

  1. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

A) மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகிறது

B) மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன

C) மாங்காய் மட்டுமே வடுப்படுகின்றன

D) மாங்காய்கள் மட்டுமே வடுவாகிறது

 

  1. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க.

A) நான் பாடத்தைப் படித்தேன் B) நாம் பாடத்தைப் படித்தேன் 

C) நாங்கள் பாடத்தைப் படித்தான் D) நான் பாடத்தைப் படித்தான் 

 

  1. சொல்-பொருள்- பொருத்துக

(a) மருப்பு.         – (1) தேங்காய் 

(b) மடுத்து         – (2) பலாப்பழம் 

(c) வருக்கை.      – (3) பாய்ந்து 

(d) தெங்கு.        – (4) கொம்பு 

A) 2 3 4 1  B) 4 1 2 3  C) 4 3 2 1           D) 1 4 3 2  

 

  1. சரியான பொருள்தரும் இணையைத் தேர்க

A) பொக்கிஷம்.   – செல்வம்

B) சாஸ்தி.   – பெரும் பரப்பு

C) விஸ்தாரம்அழகு

D) சிங்காரம்.   – மிகுதி

 

  1. சொல்-பொருள்- பொருத்துக

(a) நவிலல்.      – (1) உலகம் 

(b) வையகம்.    – (2) நெருப்பு 

(c) இயற்றுக.     – (3) சொல்லல் 

(d) தணல்.        – (4) செய்க 

A) 3 4 2 1  B) 1 3 4 2  C) 4 1 2 3         D) 3 1 4 2  

 

  1. கீழ்காணும் தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

       ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது. 

A) அது அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

B) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

C) அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

D) அது அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

 

  1. பிழை திருத்துதல் (ஒரு – ஓர்)

கீழ்க்காணும் தொடர்களில் ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடர் எது? 

A) குறுந்தொகை ஒரு அக இலக்கிய நூலாகும்; ஒரு பாடல் மனிதத்தை உணர்த்துகிறது

B) குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்; ஓர் பாடல் மனிதத்தை உணர்த்துகிறது

C) குறுந்தொகை ஒரு அக இலக்கிய நூலாகும்; ஓர் பாடல் மனிதத்தை உணர்த்துகிறது

D) குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்; ஒரு பாடல் மனிதத்தை உணர்த்துகிறது

 

  1. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

A) ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்

B) ஓர் ஊரில் ஒரு அரசன் இருந்தான்

C) ஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தான்

D) ஒரு ஊரில் ஓர் அரசன் இருந்தான்

 

  1. பின்வருவனவற்றுள் சரியான தொடரைத் தேர்ந்தெடு

A) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

B) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

C) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

D) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

 

  1. உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்? – இது எவ்வகைத் தொடர்

A) உணர்ச்சித் தொடர் B) கட்டளைத் தொடர்

C) செய்தித் தொடர் D) வினாத் தொடர்

 

  1. கொடுக்கப்பட்டுள்ள சொல்லின் சரியான கூட்டுப் பெயரை தெரிவு செய்க.

  கரும்பு 

A) கரும்புக் காடு B) கரும்புத் தோட்டம் 

C) கரும்புத் தோப்பு D) கரும்பு குவியல் 

 

  1. பொருத்தமானத் தொடரை எழுதுக

     ஜெயகாந்தனின் “இமயத்துக்கு அப்பால்” என்ற நூல் பெற்ற விருது 

A) ஞானபீட விருது B) தாமரைத்திரு விருது 

C) சோவியத் நாட்டு விருது D) சாகித்யா அகாதமி விருது 

 

  1. பொருத்தமான பொருளைத் தெரிவுசெய்க.

      “தேவதுந்துபி” என்றழைக்கப்படும் இசைக் கருவியின் வேறு பெயர்? 

A) நாகசுரம் B) உறுமி        C) சலங்கை        D) வீணை 

 

  1. சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை

A) அகவலோசை B) செப்பலோசை   C) துள்ளலோசை   D) தூங்கலோசை 

 

  1. பராபரமே என்பதன் பொருள்

A) மேலான பொருளே B) முத்தி   C) எங்கும் நிறைந்த   D) இறைநிலை 

 

  1. கலைச்சொல் அறிதல்

     MISSILE 

A) வானூர்தி B) ஏவு ஊர்தி C) ஏவுகணை        D) எழுத்தாணி 

 

  1. பின்வரும் கலைச்சொல்லின் பொருளறிந்து சரியான விடையைத் தேர்க.

Infrared rays 

A) அகச்சிவப்புக் கதிர்கள் B) புறஊதாக் கதிர்கள்

C) விண்வெளிக் கதிர்கள் D) ஊடுகதிர்கள்

 

  1. கூற்றும், காரணமும் – சரியா? தவறா?

கூற்று:       குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். 

காரணம்:     குயில் கூவும் என்பதே மரபு 

A) கூற்று: தவறு; காரணம்: சரி B) கூற்று: சரி; காரணம்: சரி 

C) கூற்று: சரி; காரணம்: தவறு D) கூற்று: தவறு; காரணம்: தவறு 

 

  1. கூற்றும், காரணமும் சரியா? தவறா?

கூற்று:    மதுரை சென்றார் வேற்றுமைத் தொகை 

காரணம் :’கு என்னும் வேற்றுமை உருபு இல்லை 

A) கூற்றும் காரணமும் சரி B) கூற்று சரி காரணம் தவறு 

C) கூற்று தவறு காரணம் சரி D) கூற்றும் காரணமும் தவறு 

 

  1. கூற்றும், காரணமும் சரியா? தவறா?

கூற்று:    இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கினார் 

காரணம்: மன்னன் இடைக்காடனாரை அவமதித்தான் 

A) கூற்று, காரணம் இரண்டும் தவறு B) காரணம் மட்டும் சரி; கூற்று தவறு 

C) கூற்று, காரணம் இரண்டும் சரி D) கூற்று மட்டும் சரி; காரணம் தவறு 

 

  1. இரு பொருள் தருக:

    நகை 

A) நதி, எண் B) புன்னகை, ஆபரணம்  

C) ஓடுதல், மேற்கூரை D) நிலவு, மாதம் 

 

  1. இருபொருள் தருக:

     திங்கள் 

A) நாள், ஆண்டு B) மாதம், நிலவு 

C) வறுமை, நோய் D) கிழமை, துன்பம் 

 

  1. இருபொருள் தரும் தவறான இணையைத் தேர்ந்தெடு.

A) இடர், துன்பம் B) நெறி, வழி 

C) பொன்னகை, அணிகலன் D) வாயு, நெருப்பு 

 

  1. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (கல்வி வளர்ச்சி நாள்)

A) அண்ணாவின் பிறந்த நாள் B) அப்துல்கலாம் பிறந்த நாள்

C) விவேகானந்தர் பிறந்த நாள் D) காமராசர் பிறந்த நாள்

 

  1. அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை பொருத்தமான தொடரில் சேர்க்க

(பந்தர்) 

A) ________ என்பது முற்றுப்போலி B) ______ என்பது இடைப்போலி

C)  _______ என்பது கடைப்போலி D) ______ என்பது முதற்போலி

 

  1. இணைப்புச்சொல் அடிப்படையில் பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.

A) அதனால் B) அவனால்      C) அதுபோல       D) எனவே 

 

  1. சரியான இணைப்புச் சொல்லைப் பயன்படுத்தி வாக்கியம் அமை.

நாளை புயல் கரையைக் கடக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். 

A) நாளை புயல் கரையைக் கடப்பதால் மீனவர் கடலுக்குச் செல்ல வேண்டாம்

B) நாளை புயல் கரையைக் கடக்கிறது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

C) நாளை புயல் கரையைக் கடக்கிறது ஏனெனில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

D) நாளை புயல் கரையைக் கடக்கப் போவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

 

  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

A) அங்கு B) இங்கு C) எங்கு        D) உண்டு 

 

  1. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

வட்டாரமொழி எனப்படுவது _______?  

A) யாவை? B) எவை? C) யாது?         D) எவை? எவை? 

 

  1. சரியான வினாச்சொல்லால் நிரப்புக.

   தமிழரின் வீர விளையாட்டு__________ 

A) யார்? B) ஏன்?      C) எங்கு?         D)  எது 

 

  1. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தேடு.

     _______ சொற்களைப் பேச வேண்டும்? 

A) எத்தகைய B) யாரால் C) எவை        D) எதனால் 

 

  1. பொருத்தமான காலம் அமைத்தல்

     சரியான தொடரைத் தேர்ந்தெடு 

A) ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைகிறது (எதிர்காலம்)

B) ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்து கொண்டிருக்கின்றன (இறந்த காலம்)

C) ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடையும் (நிகழ்காலம்)

D) ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தன (இறந்த காலம்)

 

  1. கீழ்க் கண்டச் சொல் எந்தக் காலத்தை குறிக்கும்

       நடந்தான் 

A) நிகழ்காலம் B) எதிர் காலம்     C) இறந்த காலம்     D) கார் காலம் 

 

  1. இரு சொற்களின் சரியான புதிய சொற்களைத் தெரிவு செய்க.

     மா, சிட்டு, கனி, இலை, தேன், மரம், கூடு, குருவி 

A) சிட்டுக்குருவி, மாவிலை, தேன் கூடு

B) இலைமரம், மரஇலை, மாசிட்டு

C) தேன்மரம், மாவிலை, கனிமரம்

D) குருவிக்கூடு, தேன்குருவி, மாவிலை

 

  1. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக

      மா  

A) மலர் B) மரம்       C) சிட்டு          D) முட்டை 

 

  1. சரியான எழுத்து வழக்குச் சொல்லைக் கண்டுபிடி.

A) நாய் ஊளையிடும் B) நாய் குரைக்கும் 

C) நாய் கத்தும் D) நாய் அழும் 

 

  1. பேச்சு வழக்குச் சொற்களற்ற பழமொழியைத் தேர்க.

A) அத விட்டாலும் கெதி இல்ல, அப்பால போனாலும் விதி இல்ல

B) அள்ளுறவன் பக்கத்தில் இருந்தாலும் கிள்ளுறவன் பக்கத்தில் இருக்கக் கூடாது

C) அம்மாசி இருட்டில பெருச்சாளிக்குப் போன இடமெல்லாம் வழிதான்

D) அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்

 

  1. 92. பேச்சு வழக்கிற்கு இணையான எழுத்து வழக்குச் சொல் பொருத்தமானதைத் தேர்க.

A) உங்கூருக்கே.   – உங்க ஊருக்கே

B) வெரசா.   – விரைவா

C) மூணு வயசு.   – மூன்று வயது

D) இருக்குது.   – இருக்கு

 

  1. சரியான நிறுத்தற்குறியிடப்பட்ட தொடரைத் தேர்க.

A)  கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது ‘தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.

B) அந்தோ? இயற்கை அழிகிறதே?

C) தமிழின் இனிமைதான் என்னே?

D) குழந்தை நிலாவைப் பார்த்து, ‘நிலா நிலா ஓடிவா’ என்று பாடியது.

 

  1. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)

A) தமிழின் இனிமைதான் என்னே!

B) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்?

C) சேக்கிழார் எழுதிய நூல் எது!

D) அந்தோ, இயற்கை அழிகிறதே’.

 

  1. சோழ நாடு என்பதன் மரூஉப் பெயர்

A) சோணாடு B) சோநாடு      C) சோழாடு        D) சேணாடு 

 

  1. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

உதகமண்டலம் 

A) கோவை B) மன்னை      C) ஊட்டி             D) சைதை 

 

97. மரூஉப் பெயர்

பொருத்தமான இணையைத் தேர்க. 

A) புதுச்சேரி.   – புதுவை

B) திருநெல்வேலி.   – வேலி

C) நாகூர்நாகை

D) கோயம்புத்தூர்.   – புத்தூர்

 

98. கையில் மிச்சம் உள்ள தங்கக்கட்டி வெயிட் குறைவானது

இத்தொடரில் ‘வெயிட்‘ என்ற சொல்லின் இணையான தமிழ்ச்சொல் 

A) சுமை B) கிராம் C) அளவு      D) எடை 

 

  1. ‘COMPACT DISK’என்ற வார்த்தைக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.

A) மின்நூல் B) மின் இதழ்கள்     C) குறுந்தகடு      D) சில்லுகள்  

 

  1. ரெடிமேட் டிரஸ் – என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் தேர்க.

A) தயார் ஆடை B) தையல் ஆடை C) ஆயத்த ஆடை   D) கைத்தறி ஆடை 

Exercise Files
TAMIL TEST 1 – WOA.pdf
Size: 668.97 KB
Join the conversation