TAMIL TEST QUESTIONS
1.எம்.ஜி.ஆர். திரைத்துறையில் கொடிக் கட்டிப் பறந்தார் உவமையின் பொருளை எழுதுக.
(A) நீண்ட காலமாக இருப்பது
(B) புகழ்பெற்று விளங்குதல்
(C) எண்ணி செயல்படாமை
(D) விரைந்து வெளியேறுதல்
(E) விடை தெரியவில்லை
2.வாக்கிய அமைப்பினைக் கண்டறிக
பந்து உருண்டது
(A) தன்வினை
(B) பிறவினை
(C) செய்வினை
(D) செயப்பாட்டுவினை
(E) விடை தெரியவில்லை
3.‘நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உரைப்பது -எவ்வகை விடை?
(A) நேர் விடை
(B) உறுவது கூறல் விடை
(C) உற்றது உரைத்தல் விடை
(D) இனமொழி விடை
(E) விடை தெரியவில்லை
4.பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
(A) பூங்குழலி திருக்குறள் கற்றிலள்
(B) பூங்குழலி திருக்குறள் கற்றாள்
(C) பூங்குழலி திருக்குறள் கற்பித்தாள்
(D) பூங்குழலி திருக்குறள் கற்பித்தாளா?
(E) விடை தெரியவில்லை
5.சரியான இணையைத் தேர்ந்தெடு.
குரை – குறை
(A) நாயின் குரைப்பொலி – அளவைக் குறைத்தல்
(B) அளவைக் குறைத்தல் – நாயின் குரைப்பொலி
(C) வீட்டின் மேல் பகுதி – அளவைக் குறைத்தல்
(D) அளவைக் குறைத்தல் – வீட்டின் மேல்பகுதி
(E) விடை தெரியவில்லை
6.சொற்களை ஒழுங்குபடுத்துக:
(A) தஞ்சைப் பெரியகோவில் இராசஇராசன் ஆல் கட்டப்பட்டது
(B) தஞ்சைப் பெரியகோவில் இராசராசனால் கட்டப்பட்டது
(C) இராசஇராசனால் கட்டப்பட்டது தஞ்சைப் பெரியகோவில்
(D) கட்டப்பட்டது இராசஇராசனால் தஞ்சைப் பெரியகோவில்
(E) விடை தெரியவில்லை
7.வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
வா
(A) வந்தவர்
(B) வந்தான்
(C) வருகின்றான்
(D) வந்தார்
(E) விடை தெரியவில்லை
8.பின்வரும் வேர்ச்சொல்லுக்குரிய வினைமுற்றைக் கண்டறி :
தா
(A) தந்த
(B) தருகின்றனர்
(C) தந்து
(D) தந்தவர்
(E) விடை தெரியவில்லை
9.‘சிரி’ எனும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் வடிவம் தருக.
(A) சிரித்து
(B) சிரித்தவள்
(C) சிரித்த
(D) சிரித்தல்
(E) விடை தெரியவில்லை
10.‘உண்’ – எனும் வேர்ச்சொல்லில் இருந்து வினையாலணையும் பெயரைக் கண்டுபிடிக்க.
(A) உண்டான்
(B) உண்டவன்
(C) உண்டு
(D) உண்ட
(E) விடை தெரியவில்லை
11.“தருகுவென்” – என்பதன் வேர்ச்சொல் கண்டறிக.
(A) தரு
(B) தருகு
(C) தா
(D) தருவேன்
(E) விடை தெரியவில்லை
12.“காப்பார்” – என்பதன் வேர்ச்சொல் கண்டறிக.
(A) காப்பு
(B) கா
(C) காத்து
(D) காத்தான்
(E) விடை தெரியவில்லை
13.சரியான தொடரைக் கண்டறிக.
(A) நான் ஊண் உண்ணும் வளக்கத்தை விட்டு விட்டேன்
(B) நான் ஊன் உண்ணும் வழக்கத்தை விட்டு விட்டேன்
(C) நான் ஊன் உன்னும் வழக்கத்தை விட்டு விட்டேன்
(D) நான் ஊன் உண்ணும் வளக்கத்தை விட்டு விட்டேன்
(E) விடை தெரியவில்லை
14.ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக.
குளவி குழவி
(A) குழந்தை வண்டு
(B) கோழை குளை
(C) வண்டு குழந்தை
(D) கிளவி நெகிழ்தல்
(E) விடை தெரியவில்லை
15.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை பொருத்துக :
(a) Lute Music 1. அறை
(b) Chamber 2. யாழிசை
(c) Rote 3. நீதி நூல் திரட்டு
(d) Didactic compilation 4. மனப்பாடம்
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 1 2 4 3
(C) 3 1 2 4
(D) 4 1 2 3
16.பிறமொழிச் சொற்களை நீக்குக.
யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள்
(A) சட்டை போட்டு வகுப்புக்குப் போனாள்
(B) சீருடை அணிந்து பள்ளிக்குப் போனாள்
(C) ஆடை அணிந்து வகுப்புக்குப் போனாள்
(D) அணிகலன் அணிந்து பள்ளிக்குப் போனாள்
(E) விடை தெரியவில்லை
17.வழுவுச் சொற்களை நீக்கி எழுதுக.
I.குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
II.பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
(A) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
(B) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
(C) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
(D) கால வழுவமைதி, இட வழுவமைதி
(E) விடை தெரியவில்லை
18.தொடரில் உள்ள பிழையற்ற வாக்கியம் எது?
(A) பானையை உடைத்தது கண்ணன் அல்ல
(B) பானையை உடைத்தது கண்ணன் அன்று
(C) பானையை உடைத்தது கண்ணன் அல்லன்
(D) பானையை உடைத்தது கண்ணன் அல்லேன்
(E) விடை தெரியவில்லை
19.எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
‘இன்சொல்’
(A) இனிமையான சொல்
(B) இனிக்கும் சொல்
(C) இல்லாத சொல்
(D) வன்சொல்
(E) விடை தெரியவில்லை
20.எதிர்ச்சொல் தருக.
‘வின்னம்’
(A) அழகற்ற
(B) பாதிப்பு
(C) வருத்தமில்லா
(D) சேதமற்ற
(E) விடை தெரியவில்லை
21.பால் + ஊறும் – சேர்த்தெழுதுக.
(A) பால்ஊறும்
(B) பால்லூறும்
(C) பாலூறும்
(D) பாஊறும்
(E) விடை தெரியவில்லை
22.மாசற – பிரித்தெழுதுக.
(A) மாச + அற
(B) மாச + உற
(C) மாசு + அற
(D) மாசு + உற
(E) விடை தெரியவில்லை
23.ஒருமை, பன்மை பிழை நீக்கி எழுதுக.
(A) பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறார்கள்
(B) பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறான்
(C) பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறார்
(D) பள்ளி மாணவர்கள் அறிவியல் சுற்றுலா செல்லத் திட்டமிடுகின்றது
(E) விடை தெரியவில்லை
24.விடை வகைகள்
‘கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் ‘போக மாட்டேன்’ என மறுத்துக் கூறல்
(A) எதிர்மறை விடை
(B) ஏவல் விடை
(C) மறை விடை
(D) நேர் விடை
(E) விடை தெரியவில்லை
25.ஒருமை பன்மை பிழை நீக்குக.
(A) இவை பழங்கள் அன்று
(B) இவைகள் பழங்கள் அன்று
(C) இது பழங்கள் அன்று
(D) இது பழம் அன்று
(E) விடை தெரியவில்லை
26.இராமன் குகனிடம், “விடு நனி கடிது” என்றான்.
இத்தொடரில் கோடிட்ட சொல்லுக்கான பொருளைத் தெரிக.
(A) துடிப்பாக
(B) உயர்வாக
(C) சிறப்பாக
(D) விரைவாக
(E) விடை தெரியவில்லை
27.பொருத்தி விடை காண்க.
(a) யாணர் 1. ஓசை
(b) வாரி 2. தட்டுப்பாடின்றி
(c) ஓதை 3. புதுவருவாய்
(d) முட்டாது 4. வருவாய்
(a) (b) (c) (d)
(A) 3 4 1 2
(B) 4 1 2 3
(C) 3 2 4 1
(D) 1 4 3 2
(E) விடை தெரியவில்லை
28.நண்பா படி! – என்ற விளித்தொடருக்கு இணையான தொடரினைத் தேர்ந்தெடுக்க.
(A) தேன் குடி!
(B) கண்ணா வா!
(C) விரைவாக வா!
(D) அங்கே போ!
(E) விடை தெரியவில்லை
29.கண்ணி என்பது _____ அடிகளில் பாடப்படும் பாடல் வகை.
(A) ஐந்து அடிகளில் பாடப்படும்
(B) நான்கு அடிகளில் பாடப்படும்
(C) மூன்று அடிகளில் பாடப்படும்
(D) இரண்டு அடிகளில் பாடப்படும்
(E) விடை தெரியவில்லை
30.கூட்டப்பெயர்கள்.
சொல்: கல், பழம், புல், ஆடு,
கூட்டப்பெயர் : குவியல், குலை, மந்தை, கட்டு
சரியான இணைத் தொடரை தேர்வு செய்க.
(A) கல் – குவியல், பழம் – குலை, புல் – கட்டு, ஆடு – மந்தை
(B) கல் – கட்டு, பழம் – மந்தை, புல் – குவியல், ஆடு – குவியல்
(C) பழம் – மந்தை, புல் – மந்தை, ஆடு – கட்டு, கல் – குலை
(D) கல் – மந்தை, பழம் – குவியல், புல் – குலை, ஆடு – கட்டு
(E) விடை தெரியவில்லை
31.‘வருக்கை’ – என்பது
(A) தேங்காய்
(B) பாக்கு மரம்
(C) பலாப்பழம்
(D) வாழைப்பழம்
(E) விடை தெரியவில்லை
32.சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
I.‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை
II.வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் வானொலி உரை.
III. வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்
(A) II, III சரி ; I தவறு
(B) I, III சரி ; II தவறு
(C) மூன்றும் சரி
(D) மூன்றும் தவறு
(E) விடை தெரியவில்லை
33.கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று : உரிச்சொற்கள் குறிப்பு, பண்பு எனும் பொருள்களைத் தருவதில்லை
காரணம் : உரிச்சொற்கள் தனித்து வழங்கப்படும்
(A) கூற்று சரி; காரணம் சரி
(B) கூற்று தவறு; காரணம் சரி
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் தவறு
(E) விடை தெரியவில்லை
34.கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று : ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால்
காரணம் : உயர்திணைக்கு உரியவன் ஆண்.
(A) கூற்று தவறு; காரணம் தவறு
(B) கூற்று சரி ; காரணம் சரி
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
(E) விடை தெரியவில்லை
35.குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
(A) இரை, ஈகை
(B) படம், பார்த்தல்
(C) உடல், ஊண்
(D) சிறகு, வளர்த்தல்
(E) விடை தெரியவில்லை
36.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (பெரிய)
(A) எல்லோருக்கும் _____ வணக்கம்.
(B) அவன் _____ நண்பனாக இருக்கிறான்.
(C) _____ ஓவியமாக வரைந்து வா.
(D) _____ விலங்கிடம் பழகாதே.
(E) விடை தெரியவில்லை
37.கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். _____ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்
(A) அது போல
(B) ஏனெனில்
(C) எனவே
(D) மேலும்
(E) விடை தெரியவில்லை
38.சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும். _____ அவை நம் வாழ்வை வளமாக்கும்.
(A) ஆகவே
(B) ஏனெனில்
(C) எனவே
(D) அதனால்
(E) விடை தெரியவில்லை
39.சரியான இணைப்புச் சொல் எது?
நேற்றிரவு நல்ல மழை பெய்தது. ஏரி குளங்கள் நிரம்பின.
(A) அதனால்
(B) ஆகையால்
(C) எனவே
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
40.ஆசிரியர் நாளை சிறு தேர்வு
(A) நடத்தினார்
(B) நடத்துவார்
(C) நடத்துகிறார்
(D) நடத்துகின்றார்
(E) விடை தெரியவில்லை
41.சோளம், விளக்கு, தேன், தட்டு – இச்சொற்களை இணைத்து வரும் புதிய சொற்களில் சரியானது எதுவெனக் கண்டறிக.
(A) சோளவிளக்கு
(B) சோளத்தேன்
(C) சோளத் தட்டு
(D) தேன் சோளம்
(E) விடை தெரியவில்லை
42.சரியான இணையைக் கண்டறிக
(A) மணி + அடி — மணிஅடி
(B) மரம் + கிளை — மரம்கிளை
(C) ஆல் + இலை -– ஆலிலை
(D) தே + ஆரம் –- தேஆரம்
(E) விடை தெரியவில்லை
43.வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் எவ்வாறு வழங்குகிறோம்?
(A) இல்முன்
(B) வாயில்
(C) வாசல்
(D) மூன்றில்
(E) விடை தெரியவில்லை
44.சரியான நிறுத்தற்குறியுடைய தொடரைத் தேர்ந்தெடு
(A) வணக்கம், ஐயா, நான் இணையத் தமிழன் பேசுகிறேன்.
(B) வணக்கம், ஐயா! நான் இணையத் தமிழன் பேசுகிறேன்.
(C) வணக்கம் ஐயா! நான் இணையத் தமிழன் பேசுகிறேன்.
(D) வணக்கம். ஐயா! நான் இணையத் தமிழன் பேசுகிறேன்,
(E) விடை தெரியவில்லை
45.சரியான மரூஉவை எழுது
எந்தை
(A) போது
(B) தந்தை
(C) தஞ்சை
(D) நெல்லை
(E) விடை தெரியவில்லை
46.ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
சரியான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.
(A) மயிலை — மயிலாடுதுறை
(B) குடந்தை — கும்பகோணம்
(C) புதுமை –- புதுக்கோட்டை
(D) புஞ்சை — தஞ்சாவூர்
(E) விடை தெரியவில்லை
47.ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.
தவறான ஊர்ப் பெயரின் மரூஉவை எழுதுக.
(A) உதகை – உதகமண்டலம்
(B) புதுவை – புதுக்கோட்டை
(C) தஞ்சை – தஞ்சாவூர்
(D) குடந்தை – கும்பகோணம்
(E) விடை தெரியவில்லை
48.திசைச் சொற்களை பொருத்துக.
(a) ரூபாய் 1. டச்சு
(b) துட்டு 2. இந்துஸ்தானி
(c) நபர் 3. பார்ஸி
(d) குல்லா 4. அரபி
(a) (b) (c) (d)
(A) 1 4 2 3
(B) 4 3 1 2
(C) 2 1 4 3
(D) 3 2 1 4
(E) விடை தெரியவில்லை
49.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக
(A) Printer – படி எடுப்பி
(B) Hard disk – மென்பொருள்
(C) Screen – ஸ்கிரீன்
(D) Key board – விசைப்பலகை
(E) விடை தெரியவில்லை
50.அலுவல் சார்ந்த கலைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
(Stamp pad) ஸ்டாம்ப் பேட்
(A) கம்பி தைப்புக் கருவி
(B) மை பொதி
(C) மடிப்புத் தாள்
(D) மை அட்டை
(E) விடை தெரியவில்லை
51.இரட்டை கிளவி போல் …. உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக.
(A) வளமை
(B) வறுமை
(C) வேற்றுமை
(D) ஒற்றுமை
(E) விடை தெரியவில்லை
52.பொருந்தா இணையைக் கண்டறிக.
(A) உள்ளங்கை நெல்லிக்கனிபோல – தெளிவு
(B) நகமும் சதையும் போல – நட்பு
(C) நீர் மேல் எழுத்து போல – நிலையின்மை
(D) மழைமுகம் காணாப் பயிர்போல – உவகை
(E) விடை தெரியவில்லை
53.பொருத்துக.
(a) ஊமை கண்ட கனவு போல 1. நட்பு
(b) உடுக்கை இழந்தவன் கை போல 2. கொடை
(c) வரையா மரபின் மாரி போல 3. அடக்கம்
(d) ஒருமையுள் ஆமை போல 4. தவிப்பு
(a) (b) (c) (d)
(A) 4 2 3 1
(B) 1 2 3 4
(C) 4 1 2 3
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
54.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் வினவும் வினா?
(A) அறிவினா
(B) ஐயவினா
(C) கொடைவினா
(D) ஏவல்வினா
(E) விடை தெரியவில்லை
55.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
பாரதியார் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுகிறார்.
(A) பாரதியார் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுகிறாரா?
(B) சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
(C) பாரதியார் சிந்துக்குத் தந்தை என அழைக்கப்படுவதேன்?
(D) பாரதியார் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறார்?
(E) விடை தெரியவில்லை
56.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
(A) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
(B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
(C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
(D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது.
(E) விடை தெரியவில்லை
57.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடராக்குக.
(A) நீரின்றி இயங்க இவ்வுலக மக்களால் முடியாது
(B) இயங்க நீரின்றி இவ்வுலக மக்களால் முடியாது
(C) இவ்வுலக நீரின்றி மக்களால் இயங்கமுடியாது
(D) நீரின்றி இவ்வுலக மக்களால் இயங்கமுடியாது
(E) விடை தெரியவில்லை
58.வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்க
படி
(A) படித்த
(B) படித்து
(C) படித்தவர்
(D) படித்தது
(E) விடை தெரியவில்லை
59.அகர வரிசைப்படுத்துக.
தொலை நகல், முன்பதிவு, காசோலை, காணொளி, கடவுச்சொல்
(A) காசோலை, காணொளி, கடவுச்சொல், தொலைநகல், முன்பதிவு
(B) காணொளி, கடவுச்சொல், காசோலை, முன்பதிவு, தொலைநகல்
(C) கடவுச்சொல், காசோலை, காணொளி, தொலைநகல், முன்பதிவு
(D) காசோலை, தொலைநகல், கடவுச்சொல், காணொளி, முன்பதிவு
(E) விடை தெரியவில்லை
60.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
கூந்தல், கோலம், கிழக்கு, கௌதாரி
(A) கிழக்கு, கூந்தல், கோலம், கௌதாரி
(B) கௌதாரி, கிழக்கு, கூந்தல், கோலம்
(C) கோலம், கூந்தல், கௌதாரி, கிழக்கு
(D) கூந்தல், கோலம், கிழக்கு, கௌதாரி
(E) விடை தெரியவில்லை
61.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
தருகின்றனர்
(A) தரு
(B) தருகு
(C) தா
(D) த
(E) விடை தெரியவில்லை
62.‘வனப்பு – பொருள் கண்டறிக.
(A) அழகு
(B) மகிழ்வு
(C) சாந்தம்
(D) காந்தம்
(E) விடை தெரியவில்லை
63.ஒரு பொருள் தரும் இரு சொற்களைத் தருக.
இசை
(A) அசை, அசைவு
(B) புகழ், இசைவு
(C) மாலை, பூமாலை
(D) ஓசை, குழலோசை
(E) விடை தெரியவில்லை
64.பிழையற்ற சொற்றொடரைக் கண்டறிக.
(A) ஏறியில் குளித்து விட்டு மலை மீது ஏரினான்
(B) ஏரியில் குளித்து விட்டு மலை மீது ஏறினான்
(C) ஏரியில் குளித்து விட்டு மலை மீது ஏரினான்
(D) ஏறியில் குளித்து விட்டு மலை மீது ஏறினான்
(E) விடை தெரியவில்லை
65.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை பொருத்துக :
(a) Humanity 1. சரக்குந்து
(b) Mercy 2. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
(c) Transplantation 3. கருணை
(d) Lorry 4. மனிதநேயம்
(a) (b) (c) (d)
(A) 4 3 2 1
(B) 2 3 1 4
(C) 1 4 3 2
(D) 3 1 4 2
(E) விடை தெரியவில்லை
66.நிறுத்தற்குறிகளை அறிதல்:
மாணவர்கள் ஆம் என்பதைப்போலத் தலையாட்டினார்கள்
(A) மாணவர்கள் ஆம், என்பதைப் போலத் தலையாட்டினார்கள்!
(B) மாணவர்கள், ஆம்! என்பதைப் போலத் தலையாட்டினார்கள்.
(C) மாணவர்கள் ‘ஆம்’ என்பதைப் போலத் தலையாட்டினார்கள்.
(D) மாணவர்கள்! ஆம் என்பதைப் போலத் தலையாட்டினார்கள்.
(E) விடை தெரியவில்லை
67.பிழை நீக்கி எழுதுக.
துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
(A) துன்பம்
(B) துன்பத்தைப்
(C) துன்பம் உடையவனை
(D) துன்புறுபவனை
(E) விடை தெரியவில்லை
68.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
உதித்த
(A) மறைந்த
(B) நிறைந்த
(C) குறைந்த
(D) தோன்றிய
(E) விடை தெரியவில்லை
69.பொருந்தாப் பெயரைக் கண்டறிக.
(A) ஔவையார்
(B) காவற்பெண்டு
(C) நீலாம்பிகையார்
(D) நப்பசலையார்
(E) விடை தெரியவில்லை
70.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) மார்பு
(B) அமிழ்து
(C) நெஞ்சு
(D) இயல்பு
(E) விடை தெரியவில்லை
71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
தவறான இணையைக் கண்டறிக.
(A) தார் – மாலை
(B) தமர் – பகைவர்
(C) முனிவு – சினம்
(D) கவரி – சாமரை
(E) விடை தெரியவில்லை
கீழ்காணும் பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு: (72–76)
மக்கள் வாழ்வில் பிறந்தது முதலாக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் விழா, தனக்கென்று ஒரு தனியிடம் பெறுகிறது. மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா, பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. அவ்வகையில் புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது. இந்திர விழாவின் போது தெருக்களில் புதிய மணலைப் பரப்பினர். நிழல்தரும் ஊர்மன்றங்களில் நல்லன பற்றி சொற்பொழிவாற்றினர். இவ்விழா இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்றன.
72.மக்கள் வாழ்வில் பிறந்தது முதலாக நடத்தப்படும் நிகழ்வுகளில் தனியிடம் பெறுவது எது?
(A) விளையாட்டு
(B) விழா
(C) ஆடல்
(D) பாடல்
(E) விடை தெரியவில்லை
73.விழாக்கள் எவற்றின் வெளிப்பாடாக உள்ளது?
(A) மொழி
(B) ஆளுமை
(C) பண்பாடு
(D) கல்வி
(E) விடை தெரியவில்லை
74.இந்திரவிழா எந்நகரோடு தொடர்புடையது?
(A) புகார்
(B) மதுரை
(C) கேரளம்
(D) வங்காளம்
(E) விடை தெரியவில்லை
75.இந்திர விழாவின் போது தெருக்களில் பரப்பப்பட்டது யாது?
(A) பூக்கள்
(B) புது மணல்
(C) பொடிகள்
(D) வாசனை திரவியங்கள்
(E) விடை தெரியவில்லை
76.எத்தனை நாட்கள் இந்திர விழா நடைபெற்றன?
(A) 8
(B) 12
(C) 28
(D) 30
(E) விடை தெரியவில்லை
77.சொல்லும் பொருளும் பொருத்துக.
சொல் பொருள்
(a) கனகச்சுனை 1. முழங்கும்
(b) மதவேழங்கள் 2. முதிர்ந்த மூங்கில்
(c) முரலும் 3. மதயானைகள்
(d) பழவெய் 4. பொன் வண்ண நீர்நிலை
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 3 4 2 1
(C) 2 1 4 3
(D) 1 2 3 4
(E) விடை தெரியவில்லை
78.சரியான எண்ணடையைத் தெரிவு செய்க.
ஒன்று + இடம்
(A) ஓரிடம்
(B) ஒரு இடம்
(C) ஒன்றே இடம்
(D) ஒன்று இடம்
(E) விடை தெரியவில்லை
79.பிழை திருத்துக.
சரியான எண்ணடையைத் தேர்வு செய்க.
(A) ஓர் பகல்
(B) ஒன்று பகல்
(C) ஒரு பகல்
(D) ஒன்பகல்
(E) விடை தெரியவில்லை
80.கீழ்க்கண்டவற்றை கலவைச் சொற்றொடராக மாற்றுக.
‘அழைப்பு மணி ஒலித்தது. கயல் கதவைத் திறந்தாள்’
(A) அழைப்பு மணி ஒலித்ததால் கயல் கதவைத் திறந்தாள்
(B) அழைப்பு மணி ஒலி கேட்டு கயல் கதவைத் திறந்தாள்
(C) அழைப்பு மணி ஒலிக்க கயல் கதவைத் திறந்தாள்
(D) அழைப்பு மணி ஒலியோடு கயல் கதவைத் திறந்தாள்
(E) விடை தெரியவில்லை
81.பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் நுனியில் சுருங்கிய காய் எது?
(A) அழுகல்
(B) அளியல்
(C) சூம்பல்
(D) தேரைக்காய்
(E) விடை தெரியவில்லை
82.சரியான தமிழ்ச் சொல் கண்டறிக.
Ancient Literature
(A) காப்பிய இலக்கியம்
(B) பக்தி இலக்கியம்
(C) பண்டைய இலக்கியம்
(D) நவீன இலக்கியம்
(E) விடை தெரியவில்லை
83.கலைச்சொற்களைப் பொருத்துக:
(a) Philosopher 1. மறுமலர்ச்சி
(b) Belief 2. நம்பிக்கை
(c) Renaissance 3. மீட்டுருவாக்கம்
(d) Revivalism 4. மெய்யியலாளர்
(a) (b) (c) (d)
(A) 4 1 2 3
(B) 2 1 3 4
(C) 4 2 1 3
(D) 2 1 3 4
(E) விடை தெரியவில்லை
84.விடை வகைகள்:
‘கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் ‘போவேன்’ என்று உடன்பட்டுக் கூறல்
(A) நேர் விடை
(B) எதிர் வினாதல் விடை
(C) சுட்டு விடை
(D) மறை விடை
(E) விடை தெரியவில்லை
85.குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக.
கனகம் – கானகம்
(A) செல்வம் – அரசன்
(B) காடு – தொடுதல்
(C) பொன் – காடு
(D) நங்கை – தங்கை
(E) விடை தெரியவில்லை
86.அழகு – இரு பொருள் தருக.
(A) பார், புவி
(B) புவனம், உலகம்
(C) வனம், காடு
(D) வனப்பு, அணி
(E) விடை தெரியவில்லை
87.ஒரு பொருள் தரும் பல சொற்கள்
‘திங்கள்’
(A) கிழமை, சூரியன்
(B) சந்திரன், மாதம்
(C) சந்திரன், சூரியன்
(D) நிலவு, அறிவு
(E) விடை தெரியவில்லை
88.இருபொருள் சுட்டுக:
பார்
(A) பார்த்தல், உலகம்
(B) பாரவை, பலகை
(C) பாறை, பரப்பு
(D) பறவை, பார்வை
(E) விடை தெரியவில்லை
89.அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (நன்மை)
(A) கல்வியே ஒருவருக்கு _____ தரும்.
(B) வாழ்க்கைப் பயணம் _____ பாடங்களைக் கற்றுத் தருகிறது.
(C) மரத்தை வளர்ப்பது _____ பயக்கும்.
(D) கவிதைக்கு _____ தரும்.
(E) விடை தெரியவில்லை
90.சரியான வினாச் சொல் அமைந்த வாக்கியத்தைச் சுட்டுக.
(A) கவிதையை எழுதியவர் என்ன?
(B) செல்வத்துப் பயன் எத்தனை?
(C) தமிழகத்தின் முதலமைச்சர் யார்?
(D) பொய்கையாழ்வார் எவற்றை பிறந்தார்?
(E) விடை தெரியவில்லை
91.தொடரைப் படித்து ஏற்ற வினாவைத் தேர்ந்தெடு.
பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.
(A) பூங்கொடி தன் தோழியுடன் ஏன் சென்றாள்?
(B) பூங்கொடி எந்தப் பள்ளிக்குச் சென்றாள்?
(C) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?
(D) பூங்கொடி யார், யாருடன் சென்றாள்?
(E) விடை தெரியவில்லை
92.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
(A) அறிவுநம்பி அமெரிக்கா சென்றார்
(B) நேற்று புயல் வீசியதால் பள்ளிக்கு விடுமுறை
(C) அந்தோ என் செல்வம் பறிபோயிற்றே
(D) இது எப்படி நடந்தது
(E) விடை தெரியவில்லை
93.உறங்கினாள் – வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) உற
(B) உறங்கு
(C) உறங்
(D) உறங்குதல்
(E) விடை தெரியவில்லை
94.எழுத்து வழக்கில் அமைந்துள்ள வாக்கியங்களைக் கண்டறிக.
I.நானும் அவனும் உள்ளே சென்றோம்.
II.”எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை” என்றான்.
III.“மிதிவண்டியில அவ்ளோ தூரம் போகலாமா?”
IV.“ஏன் முடியாது?”
(A) I, II மட்டும்
(B) II, III, IV மட்டும்
(C) I மட்டும்
(D) I, IV மட்டும்
(E) விடை தெரியவில்லை
95.எது தவறான நிறுத்தக்குறியிட்ட தொடர்?
(A) மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்.
(B) எழில், என்ன சாப்பிட்டாய்?
(C) மா, பலா, வாழை என்பன முக்கனிகள்.
(D) கார்மேகம் கடுமையாக உழைத்தார், அதனால் வாழ்வில், உயர்ந்தார்.
(E) விடை தெரியவில்லை
96.நிறுத்தற்குறிகளை அறிதல் எது சரியானது?
(A) செல்வி பாடம் படித்தாயா.
(B) “உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!”
(C) இந்த ஊரின் பெயர் என்ன, என்று கேட்டான் கண்ணன்
(D) பூ. பழம். பாக்கு வாங்கி வா.
(E) விடை தெரியவில்லை
97.‘ஆன்சர்’ – இணையான தமிழ்ச்சொல் தருக.
(A) மிகச்சரியான விடை
(B) நேர் விடை
(C) விடை
(D) சரியான விடை
(E) விடை தெரியவில்லை
98.சரியான இணையைத் தேர்ந்தெடுக்க :
(A) கிராமம் – ஊர்
(B) ஆஸ்பிடல் – மருந்தகம்
(C) குசினி – சமையலறை
(D) நிபுணர் – ஓவியர்
(E) விடை தெரியவில்லை
99.இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
‘ஸ்மார்ட் கார்டு’
(A) திறனட்டை
(B) குடும்ப அட்டை
(C) ரேசன் அட்டை
(D) ஆதார் அட்டை
(E) விடை தெரியவில்லை
100.ஒருவர் கேட்கும் கேள்விக்கு மறுத்துக் கூறும் விடை
(A) மறை விடை
(B) நேர் விடை
(C) ஏவல் விடை
(D) உறுவது கூறல் விடை
(E) விடை தெரியவில்லை