Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

201. ஆணிவேர் என்பது

A) எதிர் புவிஈர்ப்பு வளர்வுடையது

B) டையாஜியோடிரோபிக்

C) புவிஈர்ப்பு விசையை நோக்கி வளர்பவை

D) ஒளியை நோக்கி வளர்பவை

விடை : C) புவிஈர்ப்பு விசையை நோக்கி வளர்பவை

 

202. விதையற்ற கனிகள் காணப்படுவது

A) வாழை

B) திராட்சை

C) அன்னாசி

D) இவை அனைத்தும்

விடை: D) இவை அனைத்தும்

 

203. டைபாய்டு நோயை உண்டாக்கும் உயிரி

A) பூஞ்சை

B) வைரஸ்

C) பாக்டீரியா

D) புரோட்டோசோவா

விடை : C) பாக்டீரியா

 

204. ஜிம்னோஸ்பெர்ம்களின் சூல்கள்

A) சூலகத்தினுள் பதிந்துள்ளது

B) திறந்தவை

C) (A) மற்றும் (B) இவை இரண்டும்

D) கனியினுள் பதிந்துள்ளது

விடை : B) திறந்தவை

 

205. ஸ்ரெப்டோமைசீனை கண்டறிந்தவர்

A) வாக்ஸ்மேன்

B) டியூக்கர்

C) மெக்கியுரி

D) பஸ்க்கோல்டர்

விடை : A) வாக்ஸ்மேன்

 

206. “கெல்ப்” என்பது

A) சிவப்பு ஆல்கா

B) நீலப் பசும் ஆல்கா

C) பழுப்பு ஆல்கா

D) இவை அனைத்தும்

விடை : C) பழுப்பு ஆல்கா

 

207. பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

A) எட்வர்டு ஜென்னர்

B) ஜெ.சி. போஸ்

C) அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங்

D) வில்லியம் ஹார்வி

விடை : C) அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங்

 

208. ஈஸ்ட், கீழ்க்கண்டவற்றுள் எதனை உண்டாக்கப் பயன்படுகிறது?

A) ஆக்ஸிஜன்

B) குளூக்கோஸ்

C) ஆல்கஹால்

D) உப்பு

விடை : C) ஆல்கஹால்

 

209. அகார் அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) ஜெலிடியம்

B) லாமினேரியா

C) எக்டோகார்பஸ்

D) மியூக்கஸ்

விடை : A) ஜெலிடியம்

 

210. நனைந்த ரொட்டியில் வளரும் உயிர்

A) ஈஸ்ட்

B) பூஞ்சை

C) இவை இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை : A) ஈஸ்ட்

 

211. இராஜஸ்தான் பாலைவனத்தில் விளையாத தாவரம்

A) சோளம்

B) கம்பு

C) வாழை

D) கடுகு

விடை : C) வாழை

 

212. பாக்டீரியாக்கள் என்பவை

A) காற்றில் வாழ்பவை

B) காற்றில்லாமல் வாழ்பவை

C) (A) மற்றும் (B) இவை இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை : C) (A) மற்றும் (B) இவை இரண்டும்

 

213. “நீர் பூப்பை” உண்டாக்குபவை

A) பூஞ்சைகள்

B) ஆல்கா

C) பாக்டீரியா

D) அல்லி

விடை : B) ஆல்கா

 

214. வைரஸ்கள் என்பவை

A) கோளக வடிவமானவை

B) கனசதுர வடிவமானவை

C) குச்சி வடிவமானவை

D) இவை அனைத்தும்

விடை : D) இவை அனைத்தும்

 

215. தாவர வகைப்பாட்டியலின் மற்றொருப் பெயர்

A) பொருளாதார தாவரவியல்

B) வகைபாட்டு தாவரவியல்

C) மரபியல்

D) சூழ்நிலை இயல்

விடை : B) வகைபாட்டு தாவரவியல்

 

216. தாவரங்கள் நைட்ரஜனை எந்த நிலையில் உறிஞ்சுகின்றன?

A) நைட்ரேட்டுகள்

B) நைட்ரைட்டுகள்

C) அம்மோனியா

D) இவை அனைத்தும்

விடை : A) நைட்ரேட்டுகள்

 

217. குஷ்ட நோய் உண்டாக்கக் கூடியவை

A) பாக்டீரியா

B) பூஞ்சை

C) புரோட்டோஜீவான்

D) வைரஸ்

விடை : A) பாக்டீரியா

 

218. தாவரங்களின் வெளிப்புற அமைப்பை பற்றி பயிலும் துறை

A) உள்ளமைப்பியல்

B) புற அமைப்பியல்

C) செயலியல்

D) பரிணாம இயல்

விடை : B) புற அமைப்பியல்

 

219. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஊசி மருந்து

A) தைராக்ஸின்

B) டெட்ராசைக்ளின்

C) ஸ்ரெப்டோமைசின்

D) இன்சுலின்

விடை : D) இன்சுலின்

 

220. தாவரங்களுக்கு கந்தகம் உதவுவது

A) கார்போஹைட்ரேட் உருவாவதற்கு

B) புரதம் உருவாவதற்கு

C) கொழுப்பு உருவாவதற்கு

D) இவை எதற்கும் இல்லை

விடை : B) புரதம் உருவாவதற்கு

 

221. சிங்கோளா அஃபிஸிளாலிஸ் எக்குடும்பத்தை சார்ந்தது?

A) ரூடேசியே

B) ரூபியேசியே

C) அபோஸைளேசியே

D) மிலியேசியே

விடை : B) ரூபியேசியே

 

222. மூடிய மலரில் நிகழும் மகரந்த சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) அல்லோகேமி

B) கிளைஸ்டோகேமி

C) டைகோகேமி

D) ஹோமோகேமி

விடை : B) கிளைஸ்டோகேமி

 

223. தாவரவியலார் ஜீன் 5 தினத்தை கொண்டாடுவது

A) டார்வின் பிறந்த நாளாக

B) உலக சுகாதார தினமாக

C) உலக சுற்று சூழல் தினமாக

D) உலக மக்கள் தொகை நாளாக

விடை : C) உலக சுற்று சூழல் தினமாக

 

224. மைய அரிசி ஆய்வுக்கழகம் அமைந்திருப்பது

A) கோயம்புத்தூர்

B) கட்டாக்

C) சிம்லா

D) திருவனந்தபுரம்

விடை : B) கட்டாக்

 

225. உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ தாவரங்களின் நிலையம் இருக்குமிடம்

A) இந்திய தாவரங்களின் பூங்கா, கல்கத்தா

B) மன்னரது தாவரங்களின் பூங்கா, இங்கிலாந்து

C) புதிய தாவரங்களின் பூங்கா, நியூஸிலாந்து

D) ஜெர்மன் தாவரங்களின் பூங்கா, ஸ்பெண்டு ஜெர்மனி

விடை : B) மன்னரது தாவரங்களின் பூங்கா, இங்கிலாந்து

 

226. உலகத்தில் எல்லா தாவரங்களும் இறந்து விட்டால் எல்லா விலங்குகளும் _____ இல்லாமல் இறந்து விடும்.

A) ஆக்ஸிஜன்

B) கார்பன் டை ஆக்ஸைடு

C) உணவு

D) நைட்ரஜன்

விடை : A) ஆக்ஸிஜன்

 

227. கலைமான் பாசி என்பது இவ்வகையை சார்ந்த ஒன்று

A) பிரையோபைட்

B) பூஞ்சைக்காளான்

C) லைக்கன் 

D) பெரணி

விடை : A) பிரையோபைட்

 

228. கூட்டு வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு

A) லைக்கன்

B) ஈஸ்ட்

C) மியூகார்

D) பாக்டீரியா

விடை : A) லைக்கன்

 

229. கீழ்கண்ட கூற்றை ஆய்க:

துணிபுரை (A) : பயிர் உற்பத்தியை பெருக்குவதாலும் மண் அமைப்பில் சேதம் ஏற்படுதலை தடை செய்வதாலும் உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.

காரணம் (R) : ஏனெனில் உயிர் உரங்களை பயன்படுத்துவது சிக்கனமானதும் சுற்றப்புற சூழலுக்கு நல்ல தன்மையை அளிப்பதுமானது.

இக்கூற்றில்

A) கூற்று (A) உண்மை, ஆனால் (R) தவறு.

B) இரு கூற்றுகளுமே உண்மை.

C) கூற்று (A) தவறு. ஆனால் (R) சரி.

D) இரு கூற்றுகளுமே தவறு.

விடை : B) இரு கூற்றுகளுமே உண்மை.

 

230. உயிரினங்கள் தங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தி செயல்பட பெரும்பாலும் இக்காரணியை சார்ந்துள்ளன.

A) ஒளி

B) தட்ப வெப்பம்

C) நீர்

D) பயனுள்ள நுண்ணுயிரிகள்

விடை : A) ஒளி

 

231. எய்ட்ஸ் வைரஸ் ஒரு

A) பேக்ட்டீரியோ ஃபேஜ்

B) விலங்கு வைரஸ்

C) ரெட்ரோ வைரஸ்

D) தாவர வைரஸ்

விடை : C) ரெட்ரோ வைரஸ்

 

232. கீழ்க்கண்ட அறிக்கையைப் பற்றி ஆலோசிக்கவும்:

வலியுறுத்தல் (A) : ஜி.ஜே.மெண்டல் மரபியலின் தந்தை என சிறப்பாக அழைக்கப்படுகின்றார். காரணி (R) : ஜி.ஜே. மெண்டல் முதன்முதலாக மரபியல் அடிப்படை விதிகளை கண்டறிந்தவர்.

கீழே கொடுத்துள்ள குறிப்பீடு திட்டத்திலிருந்து விடையை தெரிவு செய்யவும்

A) (A) யும் (R) யும் உண்மையானவை (R), (A) வுக்கு சரியாக விளக்கமாகும்.

B) (A) யும் (R) யும் உண்மையானவை ஆனால் (R), (A) வுக்கு சரியாக விளக்கமல்ல.

C) (A) சரி ஆனால் (R) தவறு.

D) (A) தவறு ஆனால் (R) சரி.

விடை : B) (A) யும் (R) யும் உண்மையானவை ஆனால் (R), (A) வுக்கு சரியாக விளக்கமல்ல.

 

233. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:

1. பாக்டீரியா வைரஸ்களை விட சிறியது.

2. பாக்டீரியா இரட்டைப் பிரிதல் மூலம் இனவிருத்தி செய்கிறது.

3. பாக்டீரியா பெரும்பாலும் வெளியிலிருந்து உணவைப் பெறுகிறது.

4. பாக்டீரியா ஒரு செல் உயிரி.

மேற்கூறியவற்றுள் எக்கூற்றுகள் உண்மையானது?

A) 1 2 3

B) எல்லாம்

C) 2 3 4

D) 1 3 4

விடை : C) 2 3 4

 

234. கீழ்கண்டவற்றுள் இந்த ஒன்றை தவிர மற்ற அனைத்தும் சரியானவை:

A) தாவரங்கள் இன்றி உயிரினம் வாழ முடியாது

B) தொல் பொருளெச்சங்கள், இறந்த உயிரினங்களினெச்சங்கள்

C) தாட்களின் முக்கியப் பகுதிப்பொருள் செல்லுலோஸ்

D) பெனிஸிலின் ஃபைகோமாஸிடிஸ் பூஞ்சை இனத்திலிருந்து பெறப்படுகிறது.

விடை : D) பெனிஸிலின் ஃபைகோமாஸிடிஸ் பூஞ்சை இனத்திலிருந்து பெறப்படுகிறது.

 

235. கீழே கொடுக்கப்பட்டுள்ள பாசிகளில் எது கழிவு நீர் குட்டைகளில் வளர்கிறது?

A) குளோரெல்லா

B) வால்வாக்ஸ்

C) ஜெலிடியம்

D) அல்வா

விடை : B) வால்வாக்ஸ்

 

236. கீழே கொடுக்கபட்டவற்றுள் இருவகை வாழும் தாவர ராஜ்யத்தை சார்ந்த தாவரங்கள் யாவை?

A) பேக்டீரியாக்கள்

B) பூஞ்சை

C) காளான்கள்

D) ப்ரையோஃபைட்ஸ்

விடை : D) ப்ரையோஃபைட்ஸ்

 

237. கீழ்கண்ட வேதியியல் வினைகளில் எது கால்வின் சுழற்சியின் போது நடைபெறுகிறது?

A) ஒளி பாஸ்பரிகரணம்

B) ஆக்ஸிகரன கார்பாக்ஸிலேசன்

C) குறைப்பு கார்பாக்ஸிலேசன்

D) ஆக்ஸிகரண பாஸ்பரிகரணம்

விடை : C) குறைப்பு கார்பாக்ஸிலேசன்

 

238. கரும்பில் ‘ரெட்ராட்’ நோய் உண்டாவதற்கு காரணமாக உள்ள பூஞ்சை

A) புஸாரியம்

B) செர்கோஸ்போரா

C) கோலிடோடிரைகம்

D) பிதியம்

விடை : C) கோலிடோடிரைகம்

 

239. கொலிட்டோட்ரைகம் ஃபல்கேட்டம் என்னும் பூசணம் தோற்றுவிக்கும் நோய் என்னவென்று அறியப்படுகிறது?

A) டவுனி மில்டியூ 

B) இலைசுருள் 

C) செவ்வழுகல்

D) குலை நோய்

விடை : C) செவ்வழுகல்

 

240. பூஞ்சைகள் அனைத்தும்

A) ஓட்டுண்ணிகள்

B) சுயஜீவிகள்

C) சார்பு ஜீவிகள்

D) மட்குண்ணிகள்

விடை : C) சார்பு ஜீவிகள்

 

241. சைகஸின் விந்தணு

A) இரு இழைகள் மற்றும் சுருண்ட வளைவுடையது.

B) இரு இழைகள் மற்றும் பைரிபார்ம் வடிவமுடையது.

C) பம்பர வடிவமுடையது மற்றும் பல இழைகள் கொண்டது.

D) இழைகளற்ற பம்பர வடிவம் உடையது.

விடை : C) பம்பர வடிவமுடையது மற்றும் பல இழைகள் கொண்டது.

 

242. பென்சிலீனை கண்டுபிடித்தது

A) லூயிஸ் பாஸ்டியர்

B) அலெக்ஸாண்டர் ப்ளெமிங்

C) ஜே.சி.போஸ்

D) இ.ஜே.கோரி

விடை : B) அலெக்ஸாண்டர் ப்ளெமிங்

 

243. மெண்டல் தனது ஆரம்ப கால ஆய்வுகளுக்கு பயன்படுத்திய தாவரம்

A) உருளைகிழங்கு

B) பட்டாணி

C) வாழை

D) எலுமிச்சை

விடை : B) பட்டாணி

 

244. குரோமோசோம்களில் ஜீன்களின் அமைப்பு

A) நேர் வரிசையில்

B) பரவலான அமைப்பில்

C) வளைவு அமைப்பில்

D) இங்கும் அங்குமாக

விடை : A) நேர் வரிசையில்

 

245. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்

A) டில்லி

B) கல்கத்தா

C) கோயம்புத்தூர்

D) லக்னோ

விடை : D) லக்னோ

 

246. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை கண்டுபிடித்தவர்

A) ராபர்ட் ஹீக்

B) வாட்சன் மற்றும் கிரிக் (1953)

C) ஜேக்கப் மற்றும் மொனாட்

D) ருஸ்கா நோல் (1931)

விடை : D) ருஸ்கா நோல் (1931)

 

247. ஆல்கா மற்றும் பூஞ்சை உறுப்பினர்களைக் கூட்டாக கொண்ட தாவர வகையை ________ என்பர்

A) தாலோஃபைட்டாக்கள்

B) பிரோயோஃபைட்டாக்கள்

C) ப்டெரிடோஃபைட்டாக்கள் 

D) லைக்கன்கள்

விடை : A) தாலோஃபைட்டாக்கள்

 

248. ஒட்டுமுறை பெருக்கம் ஒரு விதையிலை தாவரங்களில் பயன்படுத்தப்படாமைக்கு காரணம்

A) அவைகளில் திசுக்கள் மென்மையானவை 

B) அவைகளில் கேம்பியம் கிடையாது 

C) அவைகளில் வாஸ்குவர் திசுக்கள் நிறைய உள்ளது

D) அவைகளில் ஸைலம் என்டார்க் முறை உள்ளது

விடை : B) அவைகளில் கேம்பியம் கிடையாது 

 

249. தாவரங்களின் உணவு, நீர் மற்றும் தாது உப்புக்கள் பக்கவாட்டில் செலுத்தப்படுவது

A) மெடல்லரி கதிர்களால்

B) வாஸ்குலர் கேம்பியத்தால்

C) சோற்றுத்திகவால் (பித்தால்)

D) இரண்டாம் ஃபுளோயத்தால்

விடை : D) இரண்டாம் ஃபுளோயத்தால்

 

250. பைக்காலஜி என்ற தாவரவியல் பிரிவில் நாம் படிப்பது

A) ஆல்காக்கள்

B) பூஞ்சைகள்

C) பிரையோஃபைட்டாக்கள் 

D) பாக்டீரியங்கள்

விடை : B) பூஞ்சைகள்

 

251. தாவர இனத்தில் மிகப்பெரிய செல் காணப்படுவது ______ 

A) அஸட்டாபுலேரியாவில் 

B) பைரிகுளேரியாவில்

C) பின்னுலேரியாவில்

D) குரோட்டலேரியாவில்

விடை : D) குரோட்டலேரியாவில்

 

252. ஆப்பிள் என்பது

A) கூட்டுக் கனி 

B) பொய்க் கனி

C) உண்மைக்கனி

D) இவை ஏதுமில்லை

விடை : B) பொய்க் கனி

 

253. மண் அரிப்பின் காரணமாக

A) நீர் இழப்பு ஏற்படுகிறது

B) காற்று குறைகிறது

C) தாவரங்கள் அழிகின்றன

D) விலங்கினங்கள் அழிகின்றன

விடை : C) தாவரங்கள் அழிகின்றன

 

254. பாக்டீரிய ஜீன் மாற்றத்தால் தயாரிக்கப்படும் மருந்து

A) டைரோதிரிசின்

B) பாலிமைசின்

C) இன்கலின்

D) பேசிட்ராசின்

விடை : C) இன்கலின்

 

255. நீலப்பச்சை பாசிகள் ஏன் சயனோ பாக்டீரியா என்று அழைக்கப்படுகிறது?

A) ஏனெனில் இவை புரோகாரியாட்டிக் வகையை சேர்ந்தவை.

B) ஏனெனில் இவை நீரில் வாழ கூடியவை.

C) ஏனெனில் இலைகளில் நீல நிறம் காணப்படுகிறது.

D) ஏனெனில் இவை ஒரு செல் உயிரிகள்.

விடை : C) ஏனெனில் இலைகளில் நீல நிறம் காணப்படுகிறது.

 

256. இலைகளின் சர்சிளேட் வெர்னேசன் இதனுடைய குறிப்பு பண்பாகும்

A) ஜிம்னோஸ்பெர்ம்கள்

B) பெரணிகள்

C) பொதுவாக டெரிடோஃபைட்டுகள்

D) ஆர்கிட்டுகள்

விடை : B) பெரணிகள்

 

257. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்கள் எவ்வகையில் ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் தாவரங்களை ஒத்துள்ளது?

A) கசையிழை உடைய விந்தணுக்கள்

B) ஆர்க்கிகோனியம் காணப்படுதல்

C) சூல்கள் காணப்படுதல்

D) மானோசைலிக் கட்டை காணப்படுதல்

விடை : C) சூல்கள் காணப்படுதல்

 

258. டென்ட்ரோ குரோனாலஜி என்ற படிப்பு கீழ்கண்டவற்றுள் எதனை குறிக்கும்?

A) மரத்தின் உயரம் பற்றி அறிய

B) மரத்தின் குறுக்கு விட்டம் பற்றி அறிய

C) மரத்தில் காணப்படும் ஆண்டு வளையத்தினை கொண்டு மரத்தின் வயதை அறிய

D) கிளைகளின் எண்ணிக்கையை அறிய

விடை : C) மரத்தில் காணப்படும் ஆண்டு வளையத்தினை கொண்டு மரத்தின் வயதை அறிய

 

259. கீழ்க்காணும் தாவரத்தின் எந்த பகுதியிலிருந்த கிராம்பு பெறப்படுகிறது?

A) தண்டு

B) மலர் மொட்டுகள்

C) இலைகள்

D) வேர்

விடை : B) மலர் மொட்டுகள்

 

260. பட்டியல் Iஜ பட்டியல் II உடன் பொருத்தி கீழே குறியீடுகளைக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் (1) பட்டியல் (2)

a) ரிக்சியா – 1. மோனோஷியஸ்

b) செலாஜினெல்லா – 2. ஹோமோஸ்போரஸ்

c) நெஃப்ரோலெபிஸ் – 3. ஹெட்டிரோஸ் போரஸ்

d) பைனஸ் – 4. ஹோமோதாலிக்

குறியீடுகள் :     

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 1 3 4 2

D) 2 1 3 4

விடை : A) 4 3 2 1

 

261. டி.என்.ஏ. இரட்டை சுருள் அமைப்பை முதன் முதலாக விவரித்தவர்

A) பீடில் மற்றும் டாட்டம் 

B) மெக்இன்டோஷ்ச் 

C) ஹர்கோபிந்த் கொரானா 

D) வாட்சன் மற்றும் கிரிக்

விடை : D) வாட்சன் மற்றும் கிரிக்

 

262. வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் உண்ண கூடிய நாய்க்குடையின் பேரினம்

A) அம்மானிட்டா

B) ப்ளூரோட்டிஸ்

C) அகாரிகஸ்

D) பாலிபோரேஸ்

விடை : C) அகாரிகஸ்

 

263. காளான்கள் சம்பந்தமாக கீழ்கண்டவற்றுள் இதைத் தவிர மற்றனைத்தும் உண்மையானவை:

A) இவை பேஸிடியோமைஸிடிஸ் வகை பூஞ்சைகள்

B) இவை ஊட்டச்சத்து மற்றும் புரதங்கள் ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளவை.

C) இவை எளிதில் செரிக்கப்படக்கூடிய பொருட்களல்ல.

D) இவற்றில் கொழுப்பின் அளவு மிகவும் குறைவு

விடை : C) இவை எளிதில் செரிக்கப்படக்கூடிய பொருட்களல்ல.

 

264. சயனோ பாக்டீரியா என்பவை

A) நீலப்பச்சை பாசிகள்

B) மஞ்சள் பாக்டீரியா

C) பச்சை பாக்டீரியா

D) சிவப்பு பாக்டீரியா

விடை : A) நீலப்பச்சை பாசிகள்

 

265. தாவரங்களில் பாரம்பரிய மாற்றங்கள் எதனால் தோற்றுவிக்கப்படுகின்றன?

A) ஆக்சின்கள்

B) கதிர்கள்

C) ஜிப்ரலின்கள்

D) இவை எல்லாம்

விடை : C) ஜிப்ரலின்கள்

 

266. பையோஸ்ஃபியர் என்பது

A) ஸ்பிரோகார்பஸின் உயிரியல்

B) உயிருள்ளவைகள் ஆக்கிரமித்துள்ள பகுதி

C) உயிரின இடர்பாடுகளின் விளைவு

D) விண்வெளி ஆய்வு

விடை : B) உயிருள்ளவைகள் ஆக்கிரமித்துள்ள பகுதி

 

267. சமுதாய காடு வளர்ப்பின் நோக்கம் யாது?

A) கிராம மக்களுக்கு தீவனம், எரிபொருள், மரம் கிடைக்க செய்தல்

B) மண் அரிப்பை தடை செய்தலுக்காக

C) அலங்கார தேவைக்காக

D) தீவனத் தேவைக்காக

விடை : B) மண் அரிப்பை தடை செய்தலுக்காக

 

268. கரிம பொருட்கள் சிதைவதற்கு காரணம் எதனுடைய செயல்பாடு?

A) பாக்டீரியாக்கள்

B) காளான்கள்

C) வைரஸ்கள்

D) A, B இரண்டினாலும்

விடை : D) A, B இரண்டினாலும்

 

269. பெனிசிலியம் என்பதை நாம் பொதுவாக அறிவது

A) ஆல்கே

B) ஒரு பூஞ்சக்காளான்

C) ஒரு பேக்டீரியம்

D) ஒரு வைரஸ்

விடை : B) ஒரு பூஞ்சக்காளான்

 

270. வைரஸ்கள் என்பவை வேதியியல் ரீதியாக?

A) கார்போஹைட்ரேட்கள்

B) லிப்போ பாலி சாக்கரைடுகள்

C) கிளிக்கோ பெப்டைடுகள்

D) நியூக்ளியோ புரதங்கள்

விடை : D) நியூக்ளியோ புரதங்கள்

 

271. நன்கு உருவான பித் எவற்றில் காணப்படுகின்றன?

A) ஒரு வித்திலை வேர் மற்றும் ஒரு வித்திலை தண்டு

B) ஒரு வித்திலை வேர் மற்றும் இரு வித்திலை தண்டு

C) ஒரு வித்திலை தண்டு மற்றும் இரு வித்திலை வேர்

D) இரு வித்திலை வேர் மற்றும் இரு வித்திலை தண்டு

விடை : B) ஒரு வித்திலை வேர் மற்றும் இரு வித்திலை தண்டு

 

272. ஜெனிரா பிளாண்டாரம் எழுதியவர்

A) எங்க்ளர் மற்றும் பிரான்டில்

B) பெந்தம் மற்றும் ஹீக்கர்

C) ஹட்சின்சன்

D) பெஸ்ஸே

விடை : B) பெந்தம் மற்றும் ஹீக்கர்

 

273. மிக்ஸோமைலீட்களின் சாதாரணப் பெயர்

A) ரஸ்ட்

B) ஸ்மட்

C) ஸ்லைம் மோல்ட்

D) அகாரிகஸ்

விடை : C) ஸ்லைம் மோல்ட்

 

274. தாவரத்தின் உயிர்ப்பு செயல்களை ஆற்றுவது

A) சைட்டோபிளாசம்

B) புரோட்டோபிளாசம்

C) எக்டோபிளாசம்

D) எண்டோபிளாசம்

விடை : B) புரோட்டோபிளாசம்

 

275. ஒரே மாதிரியான அமைப்பும் வேலையும் உடைய செல்களின் தொகுப்பு

A) திசு

B) உறுப்பு

C) உயிரினம்

D) உயிரின தொகுப்பு உருவாதல்

விடை : A) திசு

 

276. ஒரு மலரில் ஆண், பெண் பால் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டால்

அ) இருபால் வகை

B) ஒரு பால்வகை

C) இவை இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை : A) இருபால் வகை

 

277. உண்ணக்கூடிய வகை பூஞ்சை

A) மோர்ச் செல்லா

B) அகாரிகஸ்

C) லைக்கோபெர்டான்

D) இவை அனைத்தும்

விடை : B) அகாரிகஸ்

 

278. பாலாடை கட்டி தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை

A) ஈஸ்ட்

B) யுஸ்டிலாகோ

C) பெனிசிலியம்

D) ரைஸோபஸ்

விடை : C) பெனிசிலியம்

 

279. பாக்டீரியா இனப்பெருக்கம்

A) பாலினப் பெருக்கம் மட்டும்

B) பாலிலா இனப்பெருக்கம் மட்டும்

C) பெரும்பாலும் பாலினப் பெருக்கம்

D) பெரும்பாலும் பாலிலா இனப்பெருக்கம்

விடை : D) பெரும்பாலும் பாலிலா இனப்பெருக்கம்

 

280. வளிமண்டல CO2 அளவை குறைக்கும் செயலியல்

A) நீராவிக் போக்கு

B) நீர் ஆவியாதல்

C) ஒளிச்சேர்க்கை

D) சுவாசம்

விடை : C) ஒளிச்சேர்க்கை

 

281. மண்வளப் பாதுகாப்பு என்பது

A) வளமில்லா மண்ணை வளமுள்ளதாக மாற்றுவது

B) மண்ணை காற்றோட்டமானதாகச் செய்வது

C) மண் அரிப்பு ஏற்படுவது

D) மண் அரிப்பை தடுத்து மண்ணினை காப்பது

விடை : D) மண் அரிப்பை தடுத்து மண்ணினை காப்பது

 

282. ஃபைட்டாலஜி என்பது

A) காளான்

B) பாக்டீரியா

C) ஆல்கா 

D) செடிகள்

விடை : C) ஆல்கா 

 

283. மிகப் பெரிய மலர்

A) நீர் வெண் தாமரை

B) டாலியா

C) ரஃப்லேஷியா

D) சூரியகாந்தி

விடை : C) ரஃப்லேஷியா

 

284. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் I பட்டியல் II

a) மைட்டோகாண்ட்ரியா – 1) ஒளிச்சேர்க்கை

b) குளோரோபிளாஸ்ட் – 2) நீராவிப் போக்கு

c) ஸ்டோமேடா – 3) சுவாசித்தல்

d) செல் சுவர் – 4) ஆஸ்மாஸிஸ்

குறியீடுகள்: 

A) 1 3 4 2 

B) 3 1 4 2

C) 1 3 2 4

D) 3 1 2 4

விடை : D) 3 1 2 4

 

285. நியூகிளியோடைட் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது?

I. பாஸ்பாரிக் அமிலம்

II. டிஆக்ஸிரைபோஸ் சர்க்கரை

III. நைட்ராஜினஸ் காரங்கள்

கீழ்க்கண்டவற்றுள் எது சரியான விடை?

A) I, II மற்றும் III

B) I மற்றும் II

C) II மற்றும் III

D) III மட்டும்

விடை : A) I, II மற்றும் III

 

286. பாக்டீரியோபேஜ் என்பது

A) இறந்த திசுக்களில் வசிக்கும் ஒரு பாக்டீரியா

B) பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்

C) வைரஸுடன் சண்டையிடும் ஒரு பாக்டீரியா

D) ஒரு நீலப் பச்சை பாசி

விடை : B) பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்

 

287. ஒரு செல்லில் ரைபோசோமின் முக்கிய பங்கு யாது?

A) கொழுப்பு உற்பத்தி 

B) ஒளிச்சேர்க்கை

C) புரத உற்பத்தி

D) சுரத்தல்

விடை : C) புரத உற்பத்தி

 

288. பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது

A) சைகோஸெக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்

B) ஸக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே

C) லெமினேரியா

D) ஸெ. லெடுவெஜி

விடை : B) ஸக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே

 

289. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப்பிரிவு

A) டெரிடோபைட்டுகள் 

B) மானோகாட்டுகள்

C) ஜிம்னோஸ்பெர்ம்கள்

D) டைகாட்டுகள்

விடை : C) ஜிம்னோஸ்பெர்ம்கள்

 

290. பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?

A) அயோடின்

B) அகர்-அகார்

C) சர்க்கரை

D) ஆல்கஹால்

விடை : B) அகர்-அகார்

 

291. எளிய வகை நிலவாழ் தாவர வகையானது

A) பிரையோபைட்டுகள்

B) லைகன்கள்

C) ஆல்காக்கள்

D) பூஞ்சைகள்

விடை : A) பிரையோபைட்டுகள்

 

292. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை

A) இரட்டை பகுப்பு

B) பல பகுப்பு

C) நீள் பகுப்பு

D) இவை அனைத்தும்

விடை : A) இரட்டை பகுப்பு

 

293. நைட்ரஜன் நிலை நிறுத்துதல் செய்பவை

A) நீலப் பசும் பாசிகள்

B) பசும் பாசிகள்

C) பழுப்பு நிற ஆல்கா

D) சிகப்பு ஆல்கா

விடை : A) நீலப் பசும் பாசிகள்

 

294. சர்க்கரை கரைசலிலிருந்து ஒயின் (வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா

A) எஸ்செரிச்சியா

B) அஸிடோபேக்டர்

C) அஸிட்டோபேக்டர் அஸிடி 

D) ரைஸோபியம்

விடை : C) அஸிட்டோபேக்டர் அஸிடி 

 

295. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்

A) யூபோர்பியேஸி

B) பேபேஸியி

C) ஆஸ்டிரேஸியி

D) மியுஸேஸியி

விடை : B) பேபேஸியி

 

296. கருவுற்றபின் சூலகமானது வளர்ச்சி அடைந்து

A) கனியாகிறது

B) கருவாகிறது

C) விதையாகிறது

D) இவை அனைத்தும்

விடை : A) கனியாகிறது

 

297. பெனிசிலியத்தின் வாழிடம்

A) நன்னீர்

B) பாறை

C) மலைப்பகுதி

D) அங்கப்பொருள்

விடை : D) அங்கப்பொருள்

 

298. ஒரு வித்திலைத் தாவரங்களின் முக்கியப் பண்பு

A) சல்லி வேர்த் தொகுப்பு 

B) ஆணிவேர் தொகுப்பு

C) தூண்வேர் தொகுப்பு 

D) காற்று வேர்கள்

விடை : A) சல்லி வேர்த் தொகுப்பு 

 

299. இனச்செல் தோற்றத்திற்குக் காரணமான செல் பிரிதல்

A) மைட்டாசிஸ்

B) மியாஸிஸ்

C) ஏமைட்டாசிஸ்

D) நேர்முக செல் பகுப்பு

விடை : B) மியாஸிஸ்

 

300. ஹெர்பிசைடு என்பது கீழ்கண்ட ஒன்றை கொல்லுவதற்கு பயன்படுகிறது

A) தேவையற்ற பூச்சியினங்கள்

B) தேவையற்ற விலங்கினங்கள்

C) களை தாவரங்கள்

D) நீர்வாழ் தாவரங்கள்

விடை : C) களை தாவரங்கள்

 

 

Join the conversation