Maths Test 8 – 08102022
- 176. ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்தத் தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
(A) 24%
(B) 25%
(C) 28%
(D) 30%
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 24%
- ராமு என்பவர் தமிழ் பாடத்தில் 50க்கு 40 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 25க்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40க்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80க்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில் அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்?
(A) தமிழ்
(B) ஆங்கிலம்
(C) அறிவியல்
(D) கணிதம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கணிதம்
- ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு?
(A) 1000 வாக்குகள்
(B) 1050 வாக்குகள்
(C) 1100 வாக்குகள்
(D) 1200 வாக்குகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 1200 வாக்குகள்
- இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பொ.கா. 5 எனில் அவ்வெண்கள் யாவை?
(A) 30, 20
(B) 25, 12
(C) 10,30
(D) 15,20
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 15,20
- ஒரு மிகை முழுவை 88 ஆல் வகுக்கும் போது மீதி 61 கிடைக்கிறது. அதே மிகை முழுவை 11ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி யாது?
(A) 0
(B) 2
(C) 4
(D) 6
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 6
- மீ.பொ.ம. காண்க: 5x-10, 5x ^ 2 – 20
(A) 5(x – 2)
(B) 5(x + 2)
(C) (x – 2)(x + 2)
(D) 5(x – 2)(x + 2)
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 5(x – 2)(x + 2)
- மீ.பொ.ம. காண்க: 16m, – 12m ^ 2 * n ^ 2 , 8n
(A) -16mn
(B) – 16m ^ 2 * n ^ 2
(C) – 48m ^ 2 * n ^ 2
(D) 48m ^ 2 * n ^ 2
(E) விடை தெரியவில்லை
விடை: (C) – 48m ^ 2 * n ^ 2
- ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்?
(A) 9 அலகுகள்
(B) 10 அலகுகள்
(C) 11 அலகுகள்
(D) 12 அலகுகள்
(E) விடை தெரியவில்லை.
விடை: (A) 9 அலகுகள்
- 25% இன் 25% என்பது
(A) 6.25
(B) 0.625
(C) 0.0625
(D) 0.00625
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 0.0625
- ஆண்டுக்கு 13% தனிவட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500/- ல் இருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935/- ஆக உயரும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 3
- ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனி வட்டி வீதத்தில் தொகை 17,000/-ஆகக் கிடைக்கிறது எனில் அந்த அசலைக் காண்க.
(A) ₹ 12,500/-
(B) ₹ 13,000/-
(C) ₹14,500/-
(D) ₹ 13,300/-
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ₹ 12,500/-
- ஒரு தொகை தனிவட்டியில் 4 ஆண்டுகளில் 50% அதிகரித்தால், ₹ 10,000க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி யாது?
(A) ₹3,842
(B) ₹4,238
(C) ₹ 2,438
(D) ₹3,482
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ₹4,238
- ஒரு மரத்தின் தற்போதைய உயரம் 847 செ.மீ அது ஆண்டுக்கு 10% வீதம் வளர்கிறது எனில், 2 ஆண்டுகளுக்கு முன் அதன் உயரத்தைக் காண்க.
(A) 770 cm
(B) 700 cm
(C) 630 cm
(D) 560 cm
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 700 cm
- ஓர் உருளையின் உயரம் 35 செ.மீ. மற்றும் அதன் அடிப்பரப்பு 70 மீ^2. எனில் அதன் கன அளவு யாது?
(A) 200 cm ^ 2
(B) 200 cm ^ 3
(C) 2450 m^ 3
(D) 24.5 m^ 3
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 24.5 m^ 3
- ஒரு சதுரம் வட்டத்தினுள் அதன் நான்கு முனைகளும் தொடுமாறு அமைந்துள்ளது. அவ்வட்டத்தின் பரப்பு 110 ச.செ.மீ எனில் அதனுள் அமைந்த சதுரத்தின் பரப்பளவு யாது?
(A) 77 cm ^ 2
(B) 35 cm ^ 2
(C) 70 cm ^ 2
(D) 2 √ 35 cm ^ 3
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 70 cm ^ 2
- கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 சதுர மீட்டர் எனில் கயிற்றின் நீளம்
(A) 7 மீட்டர்
(B) 8 மீட்டர்
(C) 15 மீட்டர்
(D) 56 மீட்டர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 56 மீட்டர்
- A என்பவர் B ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர், மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் A மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்?
(A) 36 நாட்கள்
(B) 48 நாட்கள்
(C) 30 நாட்கள்
(D) 32 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 36 நாட்கள்
- 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ₹12,500ஐ 5 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள். 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ₹ 17,400-ஐ 3 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள். எனில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் ₹35,000/-ஐ வருமானமாக ஈட்ட எத்தனை நாட்களாகும்?
(A) 6 நாட்கள்
(B) 8 நாட்கள்
(C) 10 நாட்கள்
(D) 12 நாட்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 10 நாட்கள்
- ஒரு தேர்வில் 10 வினாக்கள் சரியா? தவறா? என்ற வகையில் உள்ளது எனில், அவ்வினாக்களுக்கு எத்தனை வகையில் விடையளிக்க முடியும்?
(A) 120 வழிகள்
(B) 240 வழிகள்
(C) 1024 வழிகள்
(D) 512 வழிகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 1024 வழிகள்
- கீழ்கண்ட பட்டியலின் விவரங்களைக் கொண்டு, அதன் வீச்சைக் காண்க.
(A) 8 ஆண்டுகள்
(B) 6 ஆண்டுகள்
(C) 12 ஆண்டுகள்
(D) 10 ஆண்டுகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 10 ஆண்டுகள்
- STOP = 24, PEN = 10, NEAR = 12 எனக் குறிப்பிட்டால் ROSE என்பதை எவ்வாறு குறிப்போம் ?
(A) 19
(B) 20
(C) 18
(D) 22
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 19
- ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் “LIFE” என்ற வார்த்தைக்கு “2965” என்று குறியீடுச் செய்யப்பட்டால் “SAVE” என்ற வார்த்தையின் குறியீடு யாது?
(A) 1912
(B) 1901
(C) 9125
(D) 9120
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 9125
- கூடுதல் காண்க. : 3+5+7+……+71
(A) 1296
(B) 1295
(C) 1294
(D) 1286
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 1295
- 1 ^ 3 + 2 ^ 3 + 3 ^ 3 +… + k ^ 3 = 44100 எனில் 1 + 2 + 3 +….+k இன் மதிப்பு காண்க
(A) 210
(B) 220
(C) 225
(D) 230
(E). விடை தெரியவில்லை
விடை: (A) 210
- கீழ்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல் மற்றும் மூலை விட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், x, y மற்றும் Z ன் மதிப்புகளைக் காண்க.
(A) x = -7, y = -4, z= 0
(B) x = 0, y = – 7, z = – 4
(C) x = 0, y = – 4 , z = – 7
(D) x = – 4, y = 0 , z = – 7
(E) விடை தெரியவில்லை
விடை: (C) x = 0, y = – 4 , z = – 7