Course Content
நாள் 1 – பொது அறிவு
GEOGRAPHY LESSON, GEOGRAPHY PREVIOUS YEAR QUESTIONS, SCIENCE PREVIOUS YEAR QUESTIONS
0/2
நாள் 1 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 1 – ஆங்கிலம்
SYNONYMS
0/1
SI DAY – 01 CLASS
About Lesson

3. இரண்டாம் உலகப்போர்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
அ) செப்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2, 1945
இ) ஆகஸ்ட் 15, 1945
ஈ) அக்டோபர் 12, 1945
விடை: அ) செப்டம்பர் 2, 1945

 

2. சர்வதேச சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
அ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பெர்லின்
இ) உட்ரோ வில்சன்
ஈ) பால்டுவின்
விடை: ) உட்ரோ வில்சன்

 

3. ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
அ) க்வாடல்கெனால் போர்
ஆ) மிட்வே போர்
இ) லெனின்கிரேடு போர்
ஈ) எல் அலாமெய்ன் போர்
விடை: ஆ) மிட்வே போர்

 

4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
அ) கவாசாகி
ஆ) இன்னோசிமா
இ) ஹிரோஷிமா
ஈ) நாகசாகி
விடை:இ) ஹிரோஷிமா

 

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
விடை: ஈ) யூதர்கள்

 

6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இங்கிலாந்துப் பிரதமர் யார்?
அ) சேம்பர்லின்
ஆ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ) லாயிட் ஜார்ஜ்
ஈ) ஸ்டேன்லி பால்டுவின்
விடை: அ) சேம்பர்லின்

 

7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
அ) ஜீன் 26, 1942
ஆ) ஜீன் 26, 1945
இ) ஜனவரி 1, 1942
ஈ) ஜனவரி 1, 1945
விடை: ஆ) ஜீன் 26, 1945

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இராணுவ நீக்கம் செய்யப்பட்ட …………….. பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
விடை: ரைன்லாந்து

 

2. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
விடை: ரோம்-பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கை

 

3. ……………… கடன் குத்தகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
விடை: ரூஸ்வெல்ட்

 

4. 1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ………………. ஆவார்.
விடை: சேம்பர்லின்

 

5. ……………. என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
விடை: ரேடார்

 

III. பொருத்துக:

1.

பிளிட்ஸ் கிரிப்

ரூஸ்வெல்ட்

2.

ராயல் கப்பற்படை

ஸ்டாலின் கிரேடு

3.

கடன் குத்தகை

சாலமோன் தீவு

4.

வோல்கா

பிரிட்டன்

5.

க்வாடல்கெனால்

மின்னல் வேகத் தாக்குதல்

 விடை:

 

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

1. கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.
ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை .
விடை: அ) கூற்றும் காரணமும் சரி

 

Join the conversation