3. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து
I. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1. …………….. என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.
அ) உணவு கிடைத்தல்
ஆ) உணவுக்கான அணுகல்
இ) உணவின் முழு ஈடுபாடு
ஈ) இவை ஏதுமில்லை
விடை: அ) உணவு கிடைத்தல்
2. தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை …………….. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.
அ) FCI
ஆ) நுகர்வோர் கூட்டுறவு
இ) ICICI
ஈ) IFCI
விடை: அ) FCI
3. எது சரியானது?
i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
iii) PDS – பொது விநியோக முறை
iv) FCI – இந்திய உணவுக் கழகம்
அ) i மற்றும் ii சரியானவை
ஆ) iii மற்றும் iv சரியானவை
இ) ii மற்றும் iii சரியானவை
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும் சரி
4. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480ஐ கொண்டு வந்த நாடு …………
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சிங்கப்பூர்
ஈ) இங்கிலாந்து
விடை: அ) அமெரிக்கா
5. …………….. இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.
அ) நீலப் புரட்சி
ஆ) வெள்ளைப் புரட்சி
இ) பசுமைப் புரட்சி
ஈ) சாம்பல் புரட்சி
விடை: இ) பசுமைப் புரட்சி
6. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம் …………
அ) கேரளா
ஆ) ஆந்திரபிரதேசம்
இ) தமிழ்நாடு
ஈ) கர்நாடகா
விடை: இ) தமிழ்நாடு
7. ………………. என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.
அ) ஆரோக்கியம்
ஆ) ஊட்டச்சத்து
இ) சுகாதாரம்
ஈ) பாதுகாப்பு
விடை: ஆ) ஊட்டச்சத்து
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. …………… ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.
விடை: எடை குறைவாக இருப்பது
2. ………………ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
விடை: 2013
3. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் ……………… முக்கியப் பங்கு வகிக்கிறது.
விடை: நுகர்வோர் கூட்டுறவு
III. பின்வருவனவற்றைப் பொருத்துக.
1. நுகர்வோர் கூட்டுறவு – அ) மணிய விகிதங்கள்
2. பொது விநியோக முறை – ஆ) 2013
3. UNDP – இ) குறைந்த ஏழ்மை உள்ள பகுதி
4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் – ஈ) தரமான பொருள்கள் வழங்குதல்
5. கேரளா – உ) ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்
விடை:
1. நுகர்வோர் கூட்டுறவு – ஈ) தரமான பொருள்கள் வழங்குதல்
2. பொது விநியோக முறை – அ) மணிய விகிதங்கள்
3. UNDP – உ) ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்
4. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் – ஆ) 2013
5. கேரளா – இ) குறைந்த ஏழ்மை உள்ள பகுதி
IV. சரியான கூற்றை தேர்வு செய்க.
1. கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது மற்றும் இது நேர்மாறானது.
காரணம் : பொருள்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்
விடை: ஈ) கூற்று சரியானது, காரணம் கூற்றின் சரியான விளக்கம்