4. அரசாங்கமும் வரிகளும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள் ………………………….
அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
ஆ) மைய, மாநில மற்றும் கிராம
இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
ஈ) ஏதுமில்லை
விடை: அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
2. இந்தியாவில் உள்ள வரிகள் …………………
அ) நேர்முக வரிகள்
ஆ) மறைமுக வரிகள்
இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
ஈ) ஏதுமில்லை
விடை: இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
3. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
அ) பாதுகாப்பு
ஆ) வெளிநாட்டுக் கொள்கை
இ) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்
4. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி ………………..
அ) சேவை வரி
ஆ) கலால் வரி
இ) விற்பனை வரி
ஈ) மத்திய விற்பனை வரி
விடை: இ) விற்பனை வரி
5. ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?
அ) மதிப்புக் கூட்டு வரி (VAT)
ஆ) வருமான வரி
இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
ஈ) விற்பனை வரி
விடை: இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி
6. இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில் …..ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
அ) 1860
ஆ) 1870
இ) 1880
ஈ) 1850
விடை: அ) 1860
7. சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ……………. வரி விதிக்கப்படுகிறது.
அ) வருமான வரி
ஆ) சொத்து வரி
இ) நிறுவன வரி
ஈ) கலால் வரி
விடை: ஆ) சொத்து வரி
8. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
அ) பண்டங்களின் பற்றாக்குறை
ஆ) அதிக வரி விகிதம்
இ) கடத்தல்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. …………….. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.
விடை: வரி
2. “வரி” என்ற வார்த்தை ……………. சொல்லிலிருந்து பெறப்பட்டது.
விடை: வரிவிதிப்பு
3. ……………… வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.
விடை: நேர்முக
4. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி …………………… ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.
விடை: 1 ஜூலை 2017
5. வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ………………. என்று அழைக்கப்படுகிறது.
விடை: கருப்பு பணம்
III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.
1. GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
i) GST ‘ஒரு முனைவரி’
ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.
அ) (1) மற்றும் (ii) சரி
ஆ) (ii), (iii) மற்றும் (iv) சரி
இ) (ii), (iii) மற்றும் (iv) சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும் சரியானவை.
விடை: இ) (ii), (iii) மற்றும் (iv) சரி
IV. பொருத்துக.
1. வருமான வரி – அ) மதிப்பு கூட்டு வரி
2. ஆயத்தீர்வை – ஆ) ஜூலை 1, 2017
3. VAT – இ) கடத்துதல்
4. GST – ஈ) நேர்முக வரி
5. கருப்பு பணம் – உ) மறைமுக வரி
விடை:
1. வருமான வரி – ஈ) நேர்முக வரி
2. ஆயத்தீர்வை – உ) மறைமுக வரி
3. VAT – அ) மதிப்பு கூட்டு வரி
4. GST – ஆ) ஜுலை 1, 2017
5. கருப்பு பணம் – இ) கடத்துதல்