5. இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
I. சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுக.
1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு …………………
அ) வரைபடவியல்
ஆ) மக்களியல்
இ) மானுடவியல்
ஈ) கல்வெட்டியல்
விடை: ஆ) மக்களியல்
2. ……………. போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.
அ) இரயில்வே
ஆ) சாலை
இ) வான்வழி
ஈ) நீர்வழி
விடை: ஆ) சாலை
3. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் …………………….
அ) 5846 கி.மீ
ஆ) 5847 கி.மீ
இ) 5849 கி.மீ
ஈ) 5800 கி.மீ
விடை: அ) 5846 கி.மீ
4. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் …………………
அ) பெங்களூரு
ஆ) சென்னை
இ) புது டெல்லி
ஈ) ஹைதராபாத்
விடை: ஈ) ஹைதராபாத்
5. எளிதில் செல்லமுடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து …………………
அ) சாலைப்போக்குவரத்து
ஆ) இரயில் போக்குவரத்து
இ) வான்வழிப் போக்குவரத்து
ஈ) நீர்வழிப் போக்குவரத்து
விடை: இ) வான்வழிப் போக்குவரத்து
6. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன் (ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
அ) ஏர் இந்தியா
ஆ) இந்தியன் ஏர்லைன்ஸ்
இ) வாயுதூத்
ஈ) பவன்ஹான்ஸ்
விடை: ஈ) பவன்ஹான்ஸ்
7. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் ………………………
அ) சிமெண்ட்
ஆ) ஆபரணங்கள்
இ) தேயிலை
ஈ) பெட்ரோலியம்
விடை: ஈ) பெட்ரோலியம்
II. பொருத்துக.
1. எல்லைபுறச் சாலை – அ) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு
2. INSAT ( இன்சாட்) – ஆ) நகரமயமாக்கலின் தாக்கம்
3. மேசகான் கப்பல் கட்டும் தளம் – இ) 1990
4. புறநகர் பரவல் – ஈ) மும்பை
5. கொங்கன் இரயில்வே – உ) 1960 ஹைதராபாத்
விடை:
1. எல்லைபுறச் சாலை – உ) 1960 ஹைதராபாத்
2. INSAT ( இன்சாட்) – அ) செயற்கைக்கோள் தகவல் தொடர்பு
3. மேசகான் கப்பல் கட்டும் தளம் – ஈ) மும்பை
4. புறநகர் பரவல் – ஆ) நகரமயமாக்கலின் தாக்கம்
5. கொங்கன் இரயில்வே – இ) 1990