2. பண்டைய நாகரிகங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை ________ என்கிறோம்.
அ) அழகெழுத்து
ஆ) சித்திர எழுத்து
இ) கருத்து எழுத்து
ஈ) மண்ணடுக்காய்வு
விடை: ஆ) சித்திர எழுத்து
2.எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை __________
அ) சர்கோபகஸ்
ஆ) ஹைக்சோஸ்
இ) மம்மியாக்கம்
ஈ) பல கடவுளர்களை வணங்குதல்
விடை: இ) மம்மியாக்கம்
3. சுமேரியரின் எழுத்துமுறை _____ ஆகும்
அ) பிக்டோகிராபி
ஆ) ஹைரோகிளிபிக்
இ) சோனோகிராம்
ஈ) க்யூனிபார்ம்
விடை: ஈ) க்யூனிபார்ம்
4. ஹரப்பா மக்கள் _______ பற்றி அறிந்திருக்கவில்லை
அ) தங்கம் மற்றும் யானை
ஆ) குதிரை மற்றும் இரும்பு
இ) ஆடு மற்றும் வெள்ளி
ஈ) எருது மற்றும் பிளாட்டினம்
விடை: ஆ) குதிரை மற்றும் இரும்பு
5. சிந்துவெளி மக்கள் இழந்த மெழுகு செயல் முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _____ ஆகும்
அ) ஜாடி
ஆ) மதகுரு அல்லது அரசன்
இ) பறவை
ஈ) நடனமாடும் பெண்
விடை: ஈ) நடனமாடும் பெண்
6. i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்
ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்
iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்
அ) (i) சரி
ஆ) (i) மற்றும் (ii) சரி
இ) (iii) சரி
ஈ) (iv) சரி
விடை: ஈ) (iv) சரி
7. i) யாங்ட்சி ஆறு சீனாவின் துயரம் என்று அழைக்கப்படுகிறது.
ii) வு-டி சீனப்பெருஞ்சுவரைக் கட்டினார்
iii) சீனர்கள் வெடிமருந்தைக் கண்டுபிடித்தனர்
iv) தாவோயிசத்தை நிறுவியவர் மென்சியஸ் என்று சீன மரபு கூறுகிறது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (iii) சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
விடை: இ) (iii) சரி
8. பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
அ) சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
ஆ) பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்
ஈ) பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
விடை: இ) சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள் – அஸிரியர்கள்
9. கூற்று:- மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம் :- அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
ஆ)கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரி; காரணம் தவறு
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை: ஆ) கூற்றும் கரரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. _______ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
விடை: ஸ்பிங்க்ஸின்
2. எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை ______ ஆகும்.
விடை: ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை)
3. _______ என்பது பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைவிளக்கிக்கூறும் பண்டைய பாபிலோனியாவின் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.
விடை: ஹமுராபியின் சட்டத் தொகுப்பு
4. சௌ அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ______ ஆவார்.
விடை: லாவோட்சு
5. ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள _______ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
விடை: சுடுமண்
III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
1. அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
ஆ) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.
விடை: ஆ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
2. அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்
ஆ)அரண்களால் சூழ்ந்த ஹரப்பா நகரத்தில் கோயில்கள் இருந்தன.
இ) பெரிய ஸ்பிங்ஸ் என்பது பழங்கால மெசபடோமியாவில் உள்ள பிரமிடு வடிவ நினைவுச்சின்னமாகும்.
ஈ) பானை வனைவதற்கான சக்கரத்தைக் கண்டுபிடித்த பெருமை எகிப்தியர்களைச் சாரும்.
விடை: அ) அமோன் ஓர் எகிப்திய கடவுள்
IV. பொருத்துக.
1. பாரோ – அ) ஒரு வகை புல்
2. பாப்பிரஸ் – ஆ) பூமியின் மிகப்பழமையான எழுத்துக் காவியம்
3. பெரும் சட்ட வல்லுனர் – இ) மொகஞ்சதாரோ
4. கில்காமெஷ் – ஈ) ஹமுராபி
5. பெருங்குளம் – உ) எகிப்திய அரசர்
விடை:
1. பாரோ – உ) எகிப்திய அரசர்
2. பாப்பிரஸ் – அ) ஒரு வகை புல்
3. பெரும் சட்ட வல்லுனர் – ஈ) ஹமுராபி
4. கில்காமெஷ் – ஆ) பூமியின் மிகப்பழமையான எழுத்துக் காவியம்
5. பெருங்குளம் – இ) மொகஞ்சதாரோ