3. தொடக்ககாலத் தமிழ் சமூகமும் பண்பாடும்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
அ) ஆங்கிலம்
ஆ) தேவநாகரி
இ) தமிழ்-பிராமி
ஈ) கிரந்தம்
விடை: இ) தமிழ் – பிராமி
2. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
அ) தீபவம்சம்
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மகாவம்சம்
ஈ) இண்டிகா
விடை: இ) மகாவம்சம்
3. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
அ) கரிகாலன்
ஆ) முதலாம் இராஜராஜன்
இ) குலோத்துங்கன்
ஈ) முதலாம் இராஜேந்திரன்
விடை: அ) கரிகாலன்
4. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
அ) புகளூர்
ஆ) கிர்நார்
இ) புலிமான்கோம்பை
ஈ) மதுரை
விடை: அ) புகளூர்
5. (i) பொருள் பரிமாற்றத்துக்கான ஊடகமாக நாணயங்கள் சங்க காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
(ii) மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் இருந்த சாதாரண மக்கள் பிராகிருத மொழி பேசினார்கள்.
(iii) ரோமானிய ஆவணமான வியன்னா பாப்பிரஸ் முசிறி உடனான வணிகத்தைக் குறிப்பிடுகிறது.
(iv) தமிழ் இலக்கண நூலான பத்துப்பாட்டில் திணைக்குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (i) மற்றும் (ii) சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
விடை: இ) (i) மற்றும் (ii) சரி
6. (i) பதிற்றுப்பத்து பாண்டிய அரசர்களையும் அவர்களின் ஆட்சிப் பகுதிகளையும் குறித்துச் சொல்கிறது.
(ii) காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிக நடவடிக்கைகளை அகநானூறு விவரிக்கிறது.
(iii) சோழர்களின் சின்னம் புலி ஆகும்; அவர்கள் புலி உருவம் பொறித்த, சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள். (iv) நெய்தல் என்பது மணற்பாங்கான பாலைவனப் பகுதி ஆகும்.
அ) (i) சரி
ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (iii) சரி
ஈ) (iv) சரி
விடை: இ) (iii) சரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ______ ஆகும்.
விடை: கல்வெட்டியல்
2. கடந்தகாலச் சமூகங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகளாக உள்ள சில பொருட்களை மீட்டெடுப்பதற்கு ஓரிடத்தை முறைப்படி தோண்டுதல் _____ ஆகும்.
விடை: தொல்லியல்
3. மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் _____ ஆகும்.
விடை: அர்த்தசாஸ்த்ரா
4. ______ என்பது பிரிவு அல்லது வகை என்ற பொருளில் செய்யுள்களில் பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்; மேலும், இது ஒரு வாழ்விடத்தை அதன் தனித்தன்மை வாய்ந்த இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும் உள்ளது.
விடை: திணை
5. கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____ என்னும் சொல் குறிக்கிறது.
விடை: யவனம்
III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளூஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.
இ) இந்தியாவில் தொடக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.
விடை: அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
2. அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.
விடை: இ) தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
IV. பொருத்துக.
1. கல்வெட்டியல் – அ) முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு
2. காலவரிசைக் குறிப்புகள் – ஆ) சங்க காலத் துறைமுகம்
3. மேய்ச்சல் வாழ்க்கை – இ) விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்
4. புடைப்பு மணிகள் (Cameo) – ஈ) கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது
5. அரிக்கமேடு – உ) கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடோடி மக்கள்
விடை:
1. கல்வெட்டியல் – ஈ) கல்வெட்டுக் குறிப்புகளை ஆராய்வது
2. காலவரிசைக் குறிப்புகள் – அ) முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு
3. மேய்ச்சல் வாழ்க்கை – உ) கால்நடைகளை வளர்த்துப் பிழைக்கும் நாடோடி மக்கள்
4. புடைப்பு மணிகள் (Cameo) – இ) விலையுயர்ந்த கல்லில் செய்யப்பட்ட ஆபரணம்
5. அரிக்கமேடு – ஆ) சங்க காலத் துறைமுகம்