5. செவ்வியல் உலகம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. _____ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.
அ) அக்ரோபொலிஸ்
ஆ) ஸ்பார்ட்டா
இ ஏதென்ஸ்
ஈ) ரோம்
விடை: இ) ஏதென்ஸ்
2. கிரேக்கர்களின் மற்றொரு பெயர் _____ ஆகும்.
அ) ஹெலனிஸ்டுகள்
ஆ) ஹெலனியர்கள்
இ பீனிசியர்கள்
ஈ) ஸ்பார்ட்டன்கள்
விடை: ஆ) ஹெலனியர்கள்
3. ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ______ ஆவார்.
அ) வு-தை
ஆ) ஹங் சோவ்
இ லீயு-பங்
ஈ) மங்கு கான்
விடை: இ) லீயு-பங்
4. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _____ ஆவார்.
அ) முதலாம் இன்னசென்ட்
ஆ) ஹில்ட்பிராண்டு
இ முதலாம் லியோ
ஈ) போன்டியஸ் பிலாத்து
விடை: ஈ) போன்டியஸ் பிலாத்து
5. பெலப்பொனேஷியப் போர் ______ மற்றும் ______ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது.
அ) கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
ஆ) பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
இ ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
ஈ) கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
விடை: இ) ஸ்பார்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கிரேக்கர்கள் _____ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
விடை: மராத்தான்
2. ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் ______
விடை: கிராக்கஸ் சகோதரர்கள் (டைபிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்)
3. ______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.
விடை: ஹான்
4. _______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்.
விடை: புனித சோபியா ஆலயம்
5. _____ மற்றும் _____ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
விடை: மாரியஸ், சுல்லா
III. சரியான கூற்றினை தேர்வு செய்க.
1. i) கிரீஸின் மீதான முதல் பாரசீகத் தாக்குதல் தோல்வியடைந்தது.
ii) ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஜூலியஸ் சீஸர் ஒரு காரணமாயிருந்தார்.
iii) ரோமின் மீது படையெடுத்த கூட்டத்தினர் பண்பாட்டில் மேம்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
iv) பௌத்தமதம் ரோமப் பேரரசை வலுவிழக்கச் செய்தது.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும் (iii) சரி
ஈ) (iv) சரி
விடை: ஈ) (iv) சரி
2. i) யூகிளிட் கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரியை உருவாக்கினார்.
ii) எட்ரூஸ்கர்களை முறியடித்து, ரோமானியர்கள் ஒரு குடியரசை நிறுவினர்.
iii) அக்ரோபொலிஸ் புகழ்பெற்ற அடிமைச் சந்தை ஆனது.
iv) ரோமும் கார்த்தேஜும் கிரேக்கர்களைத் துரத்துவதற்கு ஒன்றிணைந்தன.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும் (iv) சரி
ஈ) (iv) சரி
விடை: ஆ) (ii) சரி
3. i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
iii) விர்ஜில் எழுதிய ‘ஆனெய்ட்’ ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.
iv) ஸ்பார்ட்டகஸ், ஜுலியஸ் சீஸரைக் கொன்றவர்
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ (ii) மற்றும் (iv) சரி
ஈ) (iii) சரி
விடை: ஈ) (ifi) சரி
4. i) ரோமப் பேரரசர் மார்க்கஸ் அரிலியஸ் ஒரு கொடுங்கோலன்.
ii) ரோமுலஸ் அரிலிஸ், ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
iii) பேபியஸ் ஒரு புழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (ii) மற்றும் (iii) சரி
ஈ) (iv) சரி
விடை: ஈ) (iv) சரி
5. i) பௌத்தமதம் ஜப்பானில் இருந்து சீனாவிற்கு பரவியது.
ii) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னர், புனித தோமையர் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பினார்.
iii) ஐரோப்பாவில் புனித சோபியா ஆலயம் மிக நேர்த்தியான கட்டடம் ஆகும்.
iv) டிராஜன், ரோமனின் மோசமான சர்வாதிகாரிகளில் ஒருவராவார்.
அ) (i) சரி
ஆ) (i) சரி
இ (iii) சரி
ஈ) (iv) சரி
விடை: இ) (iii) சரி
IV. பொருத்துக.
1. அக்ரோபொலிஸ் – அ) கான்சல்
2. பிளாட்டோ – ஆ) ஏதென்ஸ்
3. மாரியஸ் – இ) தத்துவ ஞானி
4. ஜீயஸ் – ஈ) பொருள் முதல் வாதி
5. எபிகியுரஸ் – உ) பாதுகாக்கப்பட்ட நகரம்
விடை:
1. அக்ரோபொலிஸ் – உ) பாதுகாக்கப்பட்ட நகரம்
2. பிளாட்டோ – இ) தத்துவ ஞானி
3. மாரியஸ் – அ) கான்சல்
4. ஜீயஸ் – ஆ) ஏதென்ஸ்
5. எபிகியுரஸ் – ஈ) பொருள் முதல் வாதி