2. தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) கனடா
ஈ) ரஷ்யா
விடை: ஆ) இங்கிலாந்து
2. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
அ) சுதந்திரமான அமைப்பு
ஆ) சட்டபூர்வ அமைப்பு
இ) தனியார் அமைப்பு
ஈ) பொது நிறுவனம்
விடை: அ) சுதந்திரமான அமைப்பு
3. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு
அ) பிரிவு 280
ஆ) பிரிவு 315
இ) பிரிவு 324
ஈ) பிரிவு 325
விடை: இ) பிரிவு 324
4. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?
அ) பகுதி III
ஆ) பகுதி XV
இ) பகுதி XX
ஈ) பகுதி XXII
விடை: ஆ) பகுதி XV
5. பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் /அங்கீகரிப்பது.
அ) குடியரசுத் தலைவர்
ஆ) தேர்தல் ஆணையம்
இ) நாடாளுமன்றம்
ஈ) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
விடை: ஆ) தேர்தல் ஆணையம்
6. கூற்று (A) : இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.
காரணம் (R) : இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை: அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
7. நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 2012
ஆ) 2013
இ) 2014
ஈ) 2015
விடை: இ) 2014
8. அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆ) இங்கிலாந்து
இ) முன்னாள் சோவியத் யூனியன்
ஈ) இந்தியா
விடை: அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
9. கூற்று (A) : இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக்குழுக்கள் காணப்படுகின்றன. காரணம் (R) : அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் வளர்ச்சியடையவில்லை.
அ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
இ) (A) சரியானது மற்றும் (R) தவறானது.
ஈ) (A) தவறானது மற்றும் (R) சரியானது.
விடை: ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இந்திய தேர்தல் ஆணையம் …………….. உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
விடை: மூன்று
2. தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ……….
விடை: ஜனவரி 25
3. இந்தியாவில் ……………… கட்சி முறை பின்பற்றப்படுகிறது.
விடை: பல
4.2017ல் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை …..
விடை: 7
5. நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு …….
விடை: அழுத்தக்குழு
III. பொருத்துக.
1. தேசிய கட்சி – அ) வணிகக் குழுக்கள்
2. ஒரு கட்சி ஆட்சி முறை – ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
3. இரு கட்சி ஆட்சி முறை – இ) சீனா
4. அழுத்தக் குழுக்கள் – ஈ) ஏழு
விடை:
1. தேசிய கட்சி – ஈ) ஏழு
2. ஒரு கட்சி ஆட்சி முறை – இ) சீனா
3. இரு கட்சி ஆட்சி முறை – ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4. அழுத்தக் குழுக்கள் – அ) வணிகக் குழுக்கள்
நினைவில் கொள்க
1. இந்திய தேர்தல் முறை இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2. இந்தியத் தேர்தல் ஆணையம் நியாயமான பாரபட்சமற்ற தேர்தலை நடத்துகிறது.
3. இந்தியத் தேர்தல் ஆணையம் புது டெல்லியில் அமைந்துள்ளது.
4. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் தலைமைத் தேர்தல் அதிகாரி.
5. வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுவது ஜனவரி, 25