4. தமிழகத்தில் வேளாண்மை
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு
அ) 27%
ஆ) 57%
இ) 28 %
ஈ) 49%
விடை: ஆ) 57 %
2. இவற்றுள் உணவல்லாத பயிர் எது?
அ) கம்பு
ஆ) கேழ்வரகு
இ) சோளம்
ஈ) தென்னை
விடை: ஈ) தென்னை
3. 2014-15ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித்திறன்
அ) 3,039 கி.கி
ஆ) 4,429 கி.கி
இ) 2,775 கி.கி
ஈ) 3,519 கி.கி
விடை: ஆ) 4,429 கி.கி
4. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
அ) குறைந்துள்ளது
ஆ) எதிர்மறையாக உள்ளது
இ) நிலையாக உள்ளது
ஈ) அதிகரித்துள்ளது
விடை: ஈ) அதிகரித்துள்ளது
5. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள்
அ) ஆகஸ்டு – அக்டோபர்
ஆ) செப்டம்பர் – நவம்பர்
இ அக்டோபர் – டிசம்பர்
ஈ) நவம்பர் – ஜனவரி
விடை: இ) அக்டோபர் – டிசம்பர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தமிழக மக்களில் பெரும்பான்மையினர் ____ தொழிலையே சார்ந்திருக்கின்றனர்
விடை: வேளாண்
2. தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது ____ பருவ மழையாகும்.
விடை: வடகிழக்குப்
3. தமிழகத்தின் மொத்தப் புவியியல் பரப்பு ____ ஹெக்டேர்கள் ஆகும்.
விடை: ஒரு கோடியே முப்பது லட்சத்து முப்பத்து மூன்றாயிரம்
III. பொருத்துக.
1. உணவல்லாத பயிர்கள் – அ) 79,38,000
2. பருப்பு வகைகள் – ஆ) ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்
3. வடகிழக்குப் பருவமழை – இ) அக்டோபர் – டிசம்பர்
4. குரு விவசாயிகள் – ஈ) உளுந்து, துவரை, பாசிப்பயிறு
5. 2015 இல் விவசாயிகளின் எண்ணிக்கை – உ) தென்னை
விடை:
1. உணவல்லாத பயிர்கள் – உ) தென்னை
2. பருப்பு வகைகள் – ஈ) உளுந்து, துவரை, பாசிப்பயிறு
3. வடகிழக்குப் பருவமழை
இ) அக்டோபர் – டிசம்பர்
4. குரு விவசாயிகள் – ஆ) ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர்
5. 2015 இல் விவசாயிகளின் எண்ணிக்கை – அ) 79,38,000