Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

2. நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் …………….. என்று அழைக்கப்படுகிறது.

அ) வானிலைச் சிதைவு

ஆ) அரித்தல்

இ) கடத்துதல்

ஈ) படியவைத்தல்

விடை: அ) வானிலைச் சிதைவு

 

2. இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ………. என்று அழைக்கின்றோம்.

அ) படிவுகளால் நிரப்பப்படுதல்

ஆ) அரிப்பினால் சமப்படுத்துதல்

இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

ஈ) ஏதுமில்லை

விடை: இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

 

3. ……………………… ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.

அ) துள்ளல்

ஆ) வண்டல் விசிறி

இ) டெல்டா

ஈ) மலை இடுக்கு

விடை: இ) டெல்டா

 

4. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் ……..

அ) பனியாறு

ஆ) காற்று

இ) கடல் அலைகள்

ஈ) நிலத்தடி நீர்

விடை: ஈ) நிலத்தடி நீர்

 

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப் படவில்லை.

அ) சர்க்

ஆ) மொரைன்

இ) டிரம்லின்

ஈ) எஸ்கர்

விடை: அ) சர்க்

 

6. காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ……………… ஆகும்.

அ) காற்றடி வண்டல்

ஆ) பர்கான்

இ) ஹமாடா

ஈ) மணல் சிற்றலைகள்

விடை: அ) காற்றடி வண்டல்

 

7. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ………

அ) கடல் அலை அரித்தல்

ஆ) ஆற்று நீர் அரித்தல்

இ) பனியாறு அரித்தல்

ஈ) காற்றின் படியவைத்தல்

விடை: அ) கடல் அலை அரித்தல்

 

8. …………. ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.

அ) காற்று

ஆ) பனியாறு

இ) ஆறு

ஈ) நிலத்தடி நீர்

விடை: ஆ) பனியாறு

 

II. பொருத்துக.

1. கிளையாறு – அ) பணியாற்றின் செயல்பாடு 

2. காளான் பாறை – ஆ) கடல் அலைச் செயல்

3. எஸ்கர் – இ) ஆற்றின் மூப்பு நிலை

4. கல் விழுது – ஈ) ஏயோலியன்

5. ஓங்கல் – உ) சுண்ணாம்புப் பாறை 

 

விடை: 

1. கிளையாறு – இ) ஆற்றின் மூப்பு நிலை

2. காளான் பாறை – ஈ) ஏயோலியன்

3. எஸ்கர் – அ) பணியாற்றின் செயல்பாடு 

4. கல் விழுது – உ) சுண்ணாம்புப் பாறை

5. ஓங்கல் – ஆ) கடல் அலைச் செயல்

 

III. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

1. 1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

அ) 1, 2 மற்றும் 3ம் சரி

ஆ) 1, 2 சரி

இ) 1 மற்றும் 3ம் சரி

ஈ) 2 மட்டும் சரி

விடை: ஆ) 1, 2 சரி

 

2. கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்.

கூற்று II :ஆறுகள் ஒடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.

அ) வாக்கியம் I தவறு II சரி

ஆ) வாக்கியம் I மற்றும் II தவறு

இ) வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு

ஈ) வாக்கியம் I மற்றும் II சரி

விடை: ஈ) வாக்கியம் I மற்றும் II சரி

 

3. கூற்று : சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.

காரணம் : நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.

அ) கூற்று சரி காரணம் தவறு

ஆ) கூற்று தவறு காரணம் சரி

இ) கூற்று மற்றும் காரணம் தவறு

ஈ) கூற்று மற்றும் காரணம் சரி

விடை: அ) கூற்று சரி காரணம் தவறு

Join the conversation