Course Content
நாள் 2 – தமிழ்
கட்டாயத் தமிழ் மாதிரித் தேர்வு வகுப்பு
0/1
நாள் 2 – ஆங்கிலம்
ANTONYMS
0/1
SI DAY – 02 CLASS
About Lesson

3. வளிமண்டலம்

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1. ………. உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

அ) ஹீலியம்

ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு

இ) ஆக்ஸிஜன்

ஈ) மீத்தேன்

விடை: இ) ஆக்ஸிஜன்

 

2. வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு ………… ஆகும்.

அ) கீழடுக்கு

ஆ) மீள் அடுக்கு

இ) வெளியடுக்கு

ஈ) இடையடுக்கு

விடை: அ) கீழடுக்கு

 

3. …………. வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

அ) வெளியடுக்கு

ஆ) அயன அடுக்கு

இ) இடையடுக்கு

ஈ) மீள் அடுக்கு

விடை: இ) இடையடுக்கு

 

4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை ……………. என்று அழைக்கிறோம்.

அ) பொழிவு

ஆ) ஆவியாதல்

இ) நீராவிப்போக்கு

ஈ) சுருங்குதல்

விடை: ஈ) சுருங்குதல்

 

5. …………. புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

அ) சூரியன்

ஆ) சந்திரன்இ

இ) நட்சத்திரங்கள்

ஈ) மேகங்கள்

விடை: அ) சூரியன்

 

6. அனைத்து வகை மேகங்களும் …………… ல் காணப்படுகிறது.

அ) கீழடுக்கு

ஆ) அயன அடுக்கு

இ) இடையடுக்கு

ஈ) மேலடுக்கு

விடை: அ) கீழடுக்கு

 

7. ………… செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்

ஆ) இடைப்பட்ட படை மேகங்கள்

இ) கார்படை மேகங்கள்

ஈ) கீற்றுப்படை மேகங்கள்

விடை: அ) இடைப்பட்ட திரள் மேகங்கள்

 

8. பருவக்காற்று என்பது ……..

அ) நிலவும் காற்று

ஆ) காலமுறைக் காற்றுகள்

இ) தலக்காற்று

ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: ஆ) காலமுறைக் காற்றுகள்

 

9. பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் ……….. என்று அழைக்கின்றோம்.

அ) உறைபனி

ஆ) மூடுபனி

இ) பனி

ஈ) ஆலங்கட்டி

விடை: அ) உறை பனி

 

10.……. புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

அ) அழுத்தம்

ஆ) காற்று

இ) சூறாவளி

ஈ) பனி

விடை: இ) சூறாவளி

 

11. காற்றின் செங்குத்து அசைவினை ………….. என்று அழைக்கின்றோம்.

அ) காற்று

ஆ) புயல்

இ) காற்றோட்டம்

ஈ) நகர்வு

விடை: இ) காற்றோட்டம்

 

II. பொருத்துக

1. வானிலையியல் – அ) காற்றின் வேகம் 

2. காலநிலையியல் – ஆ) காற்றின் திசை 

3. காற்று வேகமானி – இ) கீற்று மேகம் 

4. காற்று திசைமானி – ஈ) காலநிலை பற்றிய படிப்பு 

5. பெண் குதிரை வால் – உ) வானிலை பற்றிய படிப்பு 

6. காற்று மோதாப்பக்கம் – ஊ) ஆஸ்திரேலியா 

7. வில்லி வில்லி – எ) மழை மறைவுப் பகுதி 

 

விடை: 

1. வானிலையியல் – உ) வானிலை பற்றிய படிப்பு

2. காலநிலையியல் – ஈ) காலநிலை பற்றிய படிப்பு

3. காற்று வேகமானி – அ) காற்றின் வேகம் 

4. காற்று திசைமானி – ஆ) காற்றின் திசை

5. பெண் குதிரை வால் – இ) கீற்று மேகம்

6. காற்று மோதாப்பக்கம் – எ) மழை மறைவுப் பகுதி

7. வில்லி வில்லி – ஊ) ஆஸ்திரேலியா

 

Join the conversation