Course Content
நாள் 3 – ஆங்கிலம்
0/1
SI DAY – 03 CLASS
About Lesson

4. மக்களின் புரட்சி

 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

1. பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ) 1519

ஆ) 1520

இ) 1529

ஈ) 1530

விடை: இ) 1529

 

2. பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

அ) பூலித்தேவன்

ஆ) யூசுப்கான்

இ) கட்டபொம்மன்

ஈ) மருது சகோதரர்கள்

விடை: அ) பூலித்தேவன்

 

3. காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?

அ) மதுரை

ஆ) திருநெல்வேலி

இ) இராமநாதபுரம்

ஈ) தூத்துக்குடி

விடை: இ) இராமநாதபுரம்

 

4. வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

அ) பாஞ்சாலங்குறிச்சி

ஆ) சிவகங்கை

இ) திருப்பத்தூர்

ஈ) கயத்தாறு

விடை: ஈ) கயத்தாறு

 

5. வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

அ) நாகலாபுரம்

ஆ) சிவகிரி

இ) சிவகங்கை

ஈ) விருப்பாச்சி

விடை: இ) சிவகங்கை

 

6. ‘திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது?

அ) மருது பாண்டியர்கள்

ஆ) கிருஷ்ணப்ப நாயக்கர்

இ) வேலு நாச்சியார்

ஈ) தீரன் சின்னமலை

விடை: அ) மருது பாண்டியர்கள்

 

7. கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

அ) திண்டுக்கல்

ஆ) நாகலாபுரம்

இ) புதுக்கோட்டை

ஈ) ஓடாநிலை

விடை: ஈ) ஓடாநிலை

 

8. ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

அ) மத்திய இந்தியா

ஆ) டெல்லி

இ) கான்பூர்

ஈ) பரெய்லி

விடை: அ) மத்திய இந்தியா

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கிழக்குப்பகுதி பாளையங்கள் ___________ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது

விடை: கட்டபொம்மன்

 

2. விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் ___________ உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்

விடை: அரியநாதர்

 

3. கட்டபொம்மனின் முன்னோர்கள் _____________ பகுதியைச் சார்ந்தவர்கள்

விடை: ஆந்திரப்

 

4. ____________ தமிழர்களால் ‘வீர மங்கை’ எனவும் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி எனவும் அறியப்பட்டார்

விடை: வேலு நாச்சியார்

 

5. ____________ ‘சிவகங்கையின் சிங்கம்’ என அழைக்கப்படுகிறார்

விடை: சின்ன மருது

 

6. 1857 ஆம் ஆண்டு புரட்சியை ___________ என்பவர் முதல் இந்திய சுதந்திரப் போர் என விவரிக்கிறார்.

விடை: வி.டி. சவார்க்கர்

 

III. பொருத்துக.

1. டெல்லி – அ) கன்வர் சிங் 

2. கான்பூர் – ஆ) கான் பகதூர் கான் 

3. ஜான்சி – இ) நானா சாகிப்

4. பிரெய்லி – ஈ) லட்சுமி பாய்

5. பீகார் – உ) இரண்டாம் பகதூர் ஷா

 

விடை: 

1. டெல்லி – உ) இரண்டாம் பகதூர் ஷா

2. கான்பூர் – இ) நானா சாகிப்

3. ஜான்சி – ஈ) லட்சுமி பாய்

4. பிரெய்லி – ஆ) கான் பகதூர் கான் 

5. பீகார் – அ) கன்வர் சிங்

 

IV. அ) பின்வரும் கூற்றை ஆராய்ந்து சரியான விடையைக் குறிப்பிடவும்

I. வேலூர் புரட்சி 1801ம் ஆண்டு ஏற்பட்டது.

II. நான்காம் மைசூர் போருக்குப்பின் திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்

III. வேலூர் புரட்சியின் போது வில்லியம் பெண்டிங் சென்னையின் ஆளுநராக இருந்தார்

IV. ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் கலகத்தின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு ஆகும்.

அ) I & II சரி

ஆ) II & IV சரி

இ) II & III சரி

ஈ) I, II, & IV சரி

விடை: இ) II & III சரி

 

IV. ஆ) தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்.

1. மருது பாண்டியர் – எட்டயபுரம்

2. கோபால நாயக்கர் – திண்டுக்கல்

3. கேரளவர்மன் – மலபார்

4. துண்டாஜி – மைசூர்

விடை: 1. மருது பாண்டியர் – எட்டயபுரம்

 

இ) மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி.

கட்டப்பொம்மன், ஊமைத்துரை, செவத்தையா, திப்பு சுல்தான்.

விடை: திப்பு சுல்தான்

Join the conversation