6. இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
அ) கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்
ஆ) கண்ணாடி வளையல் உருவாக்குதல்
இ) பட்டு சேலை நெய்தல்
ஈ) இரும்பை உருக்குதல்
விடை: ஈ) இரும்பை உருக்குதல்
2. ____________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
அ) நெசவு
ஆ) எஃகு
இ) மின்சக்தி
ஈ) உரங்கள்
விடை: அ) நெசவு
3. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் __________
அ) பம்பாய்
ஆ) அகமதாபாத்
இ) கான்பூர்
ஈ) டாக்கா
விடை: இ) கான்பூர்
4. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன ?
அ) மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
ஆ) எழுத்தறிவின்மையைக் குறைத்தல்
இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
ஈ) பெண்களுக்கு அதிகாரமளித்தல்
விடை: இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
5. இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
ஆ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
ஈ) பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை
விடை: இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ……………………… இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
விடை: கைவினைப் பொருட்கள்
2. தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ………………..
விடை: இங்கிலாந்து
3. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………………
விடை: 1839
4. கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் …………….. இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
விடை: ரிஷ்ரா
5. ……………….. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.
விடை: சூயஸ் கால்வாய்
III. பொருத்துக.
1. தவர்னியர் – அ) செல்வச் சுரண்டல் கோட்பாடு
2. டாக்கா – ஆ) காகித ஆலை
3. தாதாபாய் நவ்ரோஜி – இ) கைவினைஞர்
4. பாலிகன்ஜ் – ஈ) மஸ்லின் துணி
5. ஸ்மித் – உ) பிரெஞ்சு பயணி
விடை:
1. தவர்னியர் – உ) பிரெஞ்சு பயணி
2. டாக்கா – ஈ) மஸ்லின் துணி
3. தாதாபாய் நவ்ரோஜி – அ) செல்வச் சுரண்டல் கோட்பாடு
4. பாலிகன்ஜ் – ஆ) காகித ஆலை
5. ஸ்மித் – இ) கைவினைஞர்
IV. சரியான கூற்றை கண்டுபிடி.
1. பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும் :
i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து.
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.
அ) i மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை: ஆ) ii மற்றும் iv சரி
2. கூற்று : இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.
காரணம் : பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்றும் காரணமும் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை: அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்
3. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாதது ஒன்று எது?
அ) பெர்னியர் – ஷாஜகான்
ஆ) பருத்தி ஆலை – அகமதாபாத்
இ) TISCO – ஜாம்ஜெட்பூர்
ஈ) பொருளாதார தாரளமயமாக்கல் – 1980
விடை: ஈ) பொருளாதார தாராளமயமாக்கல் – 1980