1. பாறை மற்றும் மண்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது?
அ) வளிமண்டலம்
ஆ) உயிர்க்கோளம்
இ) நிலக்கோளம்
ஈ) நீர்க்கோளம்
விடை: இ) நிலக்கோளம்
2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
அ) ஆகஸ்ட் 15
ஆ) ஜனவரி 12
இ) அக்டோபர் 15
ஈ) டிசம்பர் 5
விடை: ஈ) டிசம்பர் 5
3. உயிரினப் படிமங்கள் ______________ பாறைகளில் காணப்படுகின்றன.
அ) படிவுப் பாறைகள்
ஆ) தீப்பாறைகள்
இ) உருமாறியப் பாறைகள்
ஈ) அடியாழப் பாறைகள்
விடை: அ) படிவுப் பாறைகள்
4. மண்ணின் மேல் நிலை அடுக்கு
அ) கரிம மண் அடுக்கு
ஆ) அடி மண் அடுக்கு
இ)அடி மண்
ஈ) அடித்தள பாறை
விடை: அ) கரிம மண் அடுக்கு
5. பருத்தி வளர ஏற்ற மண்
அ) செம்மண்
ஆ) கரிசல் மண்
இ) வண்டல் மண்
ஈ) மலை மண்
விடை: ஆ) கரிசல் மண்
6. மண்ணின் முக்கிய கூறு
அ) பாறைகள்
ஆ) கனிமங்கள்
இ) நீர்
ஈ) இவை அனைத்தும்
விடை: ஆ) கனிமங்கள்
7. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?
அ) வண்டல் மண்
ஆ) கரிசல் மண்
இ) செம்மண்
ஈ) மலை மண்
விடை: அ) வண்டல் மண்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு …………………..
விடை: பாறையியல் (petrology)
2. ___________ மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.
விடை: செம்மண்
3. ‘புவியின் தோல்’ என்று ______________ அழைக்கப்படுகிறது.
விடை: மண்
4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான ___________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது
விடை: வெள்ளை பளிங்கு
5. __________ பாறை முதன்மை பாறை என்று அழைக்கப்படுகிறது.
விடை: தீப்
III. பொருத்துக.
1. கிரனைட் – அடிப்பாறை
2. மண் அடுக்கு – அடியாழப் பாறைகள்
3. பாரன் தீவு – பட்டைப் பயிரிடல் வேளாண்மை
4. மண் வளப்பாதுகாப்பு – செயல்படும் எரிமலை
அ) 2 1 4 3
ஆ) 2 1 3 4
இ) 4 3 2 1
ஈ) 3 4 2 1
விடை: அ) 2 1 4 3
1. பசால்ட் (கருங்கல்) – ஆந்த்ரசைட்
2. சுண்ணாம்புப் பாறை – வெளிப்புற தீப்பாறைகள்
3. நிலக்கரி – உருமாறியப் பாறைகள்
4. ஜெனிஸ் (நைஸ்) – படிவுப் பாறைகள்
அ) 2 4 1 3
ஆ) 2 4 1 3
இ) 3 1 2 4
ஈ) 3 1 4 2
விடை: அ) 2 4 1 3
IV. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க
1. அ) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.
ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.
இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.
ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை
விடை: இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை – தவறு
2. அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது
ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.
இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.
ஈ) இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.
விடை: ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உவாகிறது – தவறு
V. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கூற்று 1 – படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை.
கூற்று 2 – படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.
அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.
ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று 1 தவறு.
விடை: அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான விளக்கம்