2. வானிலை மற்றும் காலநிலை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. புவியின் வளிமண்டலம் ___________ நைட்ரஜன் மற்றும் ___________ ஆக்சிஜன் அளவைக் கொண்டுள்ளது.
அ) 78% மற்றும் 21%
ஆ) 22% மற்றும் 1%
இ) 21% மற்றும் 0.97%
ஈ) 10% மற்றும் 20%
விடை: அ) 78% மற்றும் 21%
2. __________ ஒரு பகுதியின் சராசரி வானிலையைக் குறிப்பதாகும்.
அ) புவி
ஆ) வளிமண்டலம்
இ) காலநிலை
ஈ) சூரியன்
விடை: இ) காலநிலை
3. புவி பெறும் ஆற்றல் ____________
அ) நீரோட்டம்
ஆ) மின்காந்த அலைகள்
இ) அலைகள்
ஈ) வெப்பம்
விடை: ஈ) வெப்பம்
4. கீழ்க்கண்டவற்றில் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.
அ) சமவெப்பக்கோடு
ஆ) சம சூரிய வெளிச்சக் கோடு
இ) சம காற்றழுத்தக் கோடு
ஈ) சம மழையளவுக் கோடு
விடை: ஈ) சம மழையளவுக் கோடு
5. ______________ என்ற கருவி ஈரப்பதத்தை அளக்கப் பயன்படுகிறது.
அ) காற்றுமானி
ஆ) அழுத்த மானி
இ) ஈரநிலை மானி
ஈ) வெப்ப மானி
விடை: இ) ஈரநிலை மானி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. __________ என்பது குறுகிய காலத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கூறுவது ஆகும்.
விடை: வானிலை
2. வானிலையைப் பற்றிய அறிவியல் ஆய்வு ___________
விடை: வளியியல்
3. புவியில் அதிகபட்ச வெப்பம் பதிவான இடம் ______________
விடை: கிரீன்லாந்து மலைத் தொடர் (மரணப் பள்ளத்தாக்கு)
4. காற்றில் உள்ள அதிக பட்ச நீராவிக் கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவிற்கும் உள்ள விகிதாச்சாரம் ___________
விடை: ஒப்பு ஈரப்பதம்
5. அனிமாமீட்டர் மற்றும் காற்றுமானி மூலம் _________ மற்றும் __________ ஆகியவை அளக்கப்படுகின்றன.
விடை: காற்றின் வேகம், காற்றின் திசை
6. சம அளவுள்ள வெப்ப நிலையை இணைக்கும் கற்பனைக் கோடு __________
விடை: சம வெப்பக் கோடு
III. பொருத்துக.
1. காலநிலை – அ) புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
2. ஐசோநிப் – ஆ) சூறாவளி
3. ஈரநிலைமானி – இ) சம அளவுள்ள பனிபொழிவு
4. ரேடார் – ஈ) நீண்ட நாளைய மாற்றங்கள்
5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்த மண்டலம்) – உ) ஈரப்பதம்
விடை:
1. காலநிலை – ஈ) நீண்ட நாளைய மாற்றங்கள்
2. ஐசோநிப் – இ) சம அளவுள்ள பனிபொழிவு
3. ஈரநிலைமானி – உ) ஈரப்பதம்
4. ரேடார் – அ) புயலின் அமைவிடத்தையும் அது நகரும் திசையையும் அறிந்து கொள்வது
5. குறைந்த அழுத்தம் (தாழ்வு அழுத்த மண்டலம்) – ஆ) சூறாவளி