5. இடர்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. காற்றில் உள்ள நைட்ரஜன் சதவீதம் ___________
அ) 78.09%
ஆ) 74.08%
இ) 80.07%
ஈ) 76.63%
விடை: அ) 78.09%
2. இந்தியப் பெருங்கடலில் சுனாமி ______________ ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
அ) 1990
ஆ) 2004
இ) 2005
ஈ) 2008
விடை: ஆ) 2004
3. சுனாமி என்ற சொல் ____________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
அ) ஹிந்தி
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) ஜெர்மன்
விடை: இ) ஜப்பானிய
4. புவி மேற்பரப்பு நீருக்கு ____________ எடுத்துக்காட்டாகும்.
அ) ஆர்டீசியன் கிணறு
ஆ) நிலத்தடி நீர்
இ) அடி பரப்பு நீர்
ஈ) ஏரிகள்
விடை: ஈ) ஏரிகள்
5. பருவமழை பொய்ப்பின் காரணமாக ____________ ஏற்படுகிறது.
அ) ஆவி சுருங்குதல்
ஆ) வறட்சி
இ) ஆவியாதல்
ஈ) மழைப்பொழிவு
விடை: ஆ) வறட்சி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. இடர்கள் __________ க்கு வழிவகுக்கிறது.
விடை: பேரழிவு
2. நிலச்சரிவு _________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை: இயற்கை
3. இடர்கள் தோன்றுவதன் அடிப்படையில் இடர்களை _________ வகைகளாகப் பிரிக்கலாம்.
விடை: எட்டு
4. தீவிரவாதம் __________ இடருக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை: மனிதனால் தூண்டப்பட்ட
5. நைட்ரஜன் ஆக்சைடுகள் மனிதர்களைப் பாதிக்கும் ____________ மாசுபடுத்திகளாகும்.
விடை: முதல்நிலை
6. செர்னோபில் அணு விபத்து ___________ ஆண்டில் நடைபெற்றது.
விடை: 1986
III. பொருத்துக பட்டியல்.
1. முதல்நிலை மாசுபாடுகள் – அ) தீவிரவாதம்
2. அபாயகர கழிவுகள் – ஆ) சுனாமி
3. நில அதிர்வு – இ) காலாவதியான மருந்துகள்
4. வானிலையியல் வறட்சி – ஈ) சல்பர் ஆக்சைடுகள்
5. மனிதனால் தூண்டப்பட்ட இடர் – உ) மழைப் பொழிவு குறைதல்
விடை:
1. முதல்நிலை மாசுபாடுகள் – ஈ) சல்பர் ஆக்சைடுகள்
2. அபாயகர கழிவுகள் – இ) காலாவதியான மருந்துகள்
3. நில அதிர்வு – ஆ) சுனாமி
4. வானிலையியல் வறட்சி – உ) மழைப் பொழிவு குறைதல்
5. மனிதனால் தூண்டப்பட்ட இடர் – அ) தீவிரவாதம்