2. நிலத்தோற்றங்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க:
1. மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
அ) உட்பாயத் தேக்கம்
ஆ) வண்டல் விசிறி
இ) வெள்ளச் சமவெளி
ஈ) டெல்டா
விடை: ஆ) வண்டல் விசிறி
2. குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) பெண்ணாறு
இ) சிற்றாறு
ஈ) வைகை
விடை: இ) சிற்றாறு
3. பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ______________ ஆகும்.
அ) சர்க்
ஆ) அரெட்டுகள்
இ) மொரைன்
ஈ) டார்ன் ஏரி
விடை: இ) மொரைன்
4. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரேசில்
விடை: இ) சீனா
5. பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ___________
அ) கடல் ஓங்கல்கள்
ஆ) கடல் வளைவுகள்
இ) கடல் தூண்க ள்
ஈ) கடற்கரைகள்
விடை: ஈ) கடற்கரைகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
விடை: பாறை சிதைவடைதல்
2. ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் _____________ எனப்படுகிறது.
விடை: ஆற்று முகத்துவாரம்
3. காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ___________ பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை: கலஹாரி
4. ஜெர்மனியில் காணப்படும் சர்க் ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை: கார் சர்க்
5. உலகின் மிக நீண்ட கடற்கரை __________ ஆகும்.
விடை: மியாமி கடற்கரை
III. பொருத்துக.
1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் – பனியாறுகள்
2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் – பர்கான்கள்
3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் – காயல்
4. பிறை வடிவ மணல் குன்றுகள் – பாறைச் சிதைவுகள்
5. வேம்பநாடு ஏரி – குதிரைக் குளம்பு ஏரி
விடை:
1. பாறை உடைதல் மற்றும் நொறுங்குதல் – பாறைச் சிதைவுகள்
2. கைவிடப்பட்ட மியாண்டர் வளைவுகள் – குதிரைக் குளம்பு ஏரி
3. நகரும் ஒரு பெரும் பனிக்குவியல் – பனியாறுகள்
4. பிறை வடிவ மணல் குன்றுகள் – பர்கான்கள்
5. வேம்பநாடு ஏரி – காயல்
IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை (✓) குறியிடுக.
1. கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
2. கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை: ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு