வரலாறு
3. வேத காலம்
வேதகாலமானது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
முன் வேதகாலம் ( கி.மு. 1500 – கி.மு. 1000) (Early Vedic Period)
பின் வேதகாலம் ( கி.மு. 1000 – கி.மு. 600) (Later Vedic Period)
முன் வேதகாலம் (Early Vedic Period)
இக்காலகட்டத்தில் தான் “ரிக்வேதம்” தொகுக்கப்பட்டது. எனவே ரிக்வேதகாலம் எனவும் அழைக்கப்படுகிறது. ரிக்வேதத்தில் யமுனா, சரஸ்வதி, கங்கா நதிகளும், பனிமலைகளும் (ஹிமாவத்), பாலைவன நிலமும் (தாவா), கடலைப்பற்றியும் (சமுத்திரம்) குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்கால மக்கள் சப்தசிந்து பகுதியில் வசித்தனர் என்பதை அறியலாம்.
ஆரியர்கள் குடியேறிய போது இந்தியாவில் தாசா (ஏற்கனவே குடியேறிய ஆரியர்கள்) மற்றும் தாஷ்யூ (பூர்வகுடிகள்) என இருபிரிவினர் இருந்தனர். இவர்களுக்கும் ஆரியர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.
பூர்வகுடிகளை ஆரியர்கள் அடக்கி ஒடுக்கி அழித்ததைக் குறிக்கும் வகையில் தாஷ்யுஹதா எனும் சொல் ரிக்வேதத்தில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதகால கடவுள்கள்
கடவுள்
குறிப்பு
கடவுள்
குறிப்பு
இந்திரன் (புராந்தர்)
கோட்டைகளைத் தகர்ப்பவர். (மிக முக்கிய கடவுள்)
ருத்ரன்
விலங்குகளின் கடவுள்.
அக்னி
நெருப்புக் கடவுள்
டையாவுஸ்
மூத்த கடவுள். உலகின் தந்தை.
வருணா
நீர் மற்றும் இயற்கை ஒழுங்கை பராமரிப்பவர்.
அஸ்வின் /நஸ்தயா
உடல்நலனைக் காப்பவர். இளமை மற்றும் இறவா பேறினை வழங்குபவர்.
சூர்யா
ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் பவனி வருபவர்.
சிந்து
நதிகளின் கடவுள் (பெண் கடவுள்)
சாவித்ரி (காயத்ரி)
ஒளியின் கடவுள். காயத்ரி மந்திரம் இவருக்கான துதியாகும்.
எமன்
மரணத்திற்கான கடவுள்.
புசன்
திருமணக் கடவுள். சாலைகளைப் பாதுகாப்பவரும் இவரே
மாருத்
புயல் கடவுள்.
விஷ்ணு
உலகை மூன்றடிகளால் அளந்தவர். (உபகிராமா)
ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிகளும் அவற்றின் தற்போதைய பெயர்களும்
சிந்து
இண்டஸ்
சுதுத்ரி
சட்லெஜ்
விதஸ்தா
ஜீலம்
நந்திதாரா
சரஸ்வதி
அஸ்கினி
செனாப்
குமல்
கோமதி
பருஷ்னி
ராவி
சடனிரா
கண்டக்
விபாஸ்
பியாஸ்
முக்கிய யாகங்கள்
அரசர் தனது அதிகாரத்தை யாகங்கள் மற்றும் சடங்குகளின் மூலம் மேம்படுத்திக் கொண்டார்.
இராஜசூயம் : உயர்ந்த நிலையை அடைய. (முடிசூட்டும்பொழுதும் நடத்தப்படும்).
அஸ்வமேதம்: சில சடங்குகளுக்குப் பிறகு அரசரின் பட்டத்து குதிரை அவிழ்த்துவிடப்படும். அக்குதிரை செல்லும் நாடுகள் அனைத்தும் தனது ஆளுகைக்கு உட்பட்டது என அரசன் உரிமை கொண்டாடினான். இக்குதிரையை தடுத்து நிறுத்தும் பிற அரசர்களுடன் போரும் ஏற்படும்
வாஜ்பேயம் : இந்த யாகத்தில் தேர் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் எப்பொழுதும் அரசனது தேரே வெற்றி பெறும்
வேதகால இலக்கியம்
வேதம் என்பது “வித்” என்பதிலிருந்து பிறந்த சொல்லாகும். இதன் பொருள் அறிவு என்பதாகும். வேதங்கள், சம்ஹிதைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஸ்ருதி – செவி வழியாகக் கேட்டதை அடிப்படையாகக் கொண்டது.
ஸ்மிருதி – நினைவை அடிப்படையாகக் கொண்டது.
ரிக்வேதம்
உலகின் மிகப்பழமையான சமய நூல்களில் ஒன்றாகும். கி.மு. 1700 வாக்கில் தொகுக்கப்பட்ட இது 1028 ஸ்லோகங்களைக் (hymns) கொண்டது. இதில் மொத்தம் 10 மண்டலங்கள் உள்ளன.
யஜுர் வேதம்
வழிபாடுகள், வேள்விகள் உள்ளிட்ட சடங்குகளை நிகழ்த்தும் வழிமுறைகளைக் கொண்டுள்ளது. ஆரியர் அல்லாதோரின் நம்பிக்கைகளும் சடங்குகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
யஜுர் வேதம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
சுக்லா (வெள்ளை) யஜுர் வேதம்
கிருஷ்ணா (கருப்பு) யஜுர் வேதம்
சாமவேதம்
இசைப்பாடல்களின் தொகுப்பு சாம வேதம் எனப்படும். இதில்தான் துருபத இராகம் இடம்பெற்றுள்ளது.
சடங்குகளின்போது இசைப்பதற்கான பாடல்களின் தொகுப்பு. சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோன்றியது எனக் கூறப்படுகிறது.
அதர்வண வேதம்
மாயாஜால சூத்திரங்களின் புத்தகம் எனக் கருதப்படும் இந்நூலில் தீயசக்திகள் மற்றும் நோய்களை குணப்படுத்தும் மந்திரங்களும் உச்சாடனங்களும் இடம் பெற்றுள்ளன.
உபவேதங்கள்
நான்கு முதன்மை வேதங்களின் துணை வேதங்கள் உபவேதங்கள் எனப்படுகின்றன.
உபவேதம் மற்றும் வேதம்
துறை
உபவேதம் மற்றும் வேதம்
துறை
ஆயுர்வேதம் (ரிக்வேதம்)
மருத்துவம்
காந்தர்வ வேதம் (சாம வேதம்)
கலை மற்றும் இசை
தனுர்வேதம் (யஜுர் வேதம்)
போர்க்கலை
சில்பவேதம் (அதர்வண வேதம்)
கட்டடக் கலை
புராணங்கள்
அண்டத்தின் தோற்றம், புராணக்கதைகள், பல்வேறு மகத்தான மனிதர்கள், பழைய நம்பிக்கைகள், சட்ட விதிமுறைகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் அமைந்தவை புராணங்களாகும். இவை மக்களின் வழிபாட்டு முறை பலியிடுதலிலிருந்து சிலை வழிபாட்டை நோக்கி நகர்ந்ததைக் குறிப்பிடுகின்றன .
சூத்திரங்கள்
சூத்திர இலக்கியம் மூன்று வகைப்படும்.
ஸ்ரவுத சூத்திரம் (Srauda Sutra) – மாபெரும் பொது தானங்களுடன் தொடர்புடையது.
கிரிஹ சூத்திரம் (Griha Sutra) – பிறப்பு, பெயர் வைத்தல் மற்றும் திருமணங்களுடன் தொடர்புடையது.
தர்ம சூத்திரம் (Dharma Sutra) சமூக மற்றும் உள்ளூர் நடைமுறைகளைக் கொண்டது.
மகாபாரதம்
வேதவியாசரால் இயற்றப்பட்டது. முதலில் 880 செய்யுள்களைக் கொண்டிருந்த இது, பின்னர் 24000 செய்யுள்களைக் கொண்டதாக விரிவாக்கப்பட்டது. பிற்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு 1 லட்சம் பாடல்களைக் கொண்டதாக மாற்றப்பட்டது.
தத்துவங்கள்
இந்து சமயத்தின் ஆறு தத்துவ முறைகள் பழங்கால இந்தியாவின் ஆறு தத்துவஞானிகளால் அருளப்பட்டன. அவை,
தத்துவம்
அருளியவர்
நியாயா
கௌதமர்
சாங்கியா
கபிலர்
பூர்வமீமாம்சா
ஜெய்மினி
வைஷேஷிகா
கன்னடர்
யோகா
பதஞ்சலி
உத்திரமீமாம்சா
வியாசர்
இராமாயணம்
வால்மீகியால் இயற்றப்பட்டது. ஆரம்பத்தில் இதில் 6000 செய்யுள்கள் இருந்தன. தற்பொழுது 24 ஆயிரம் செய்யுள்கள் உள்ளன.
ஸ்மிருதிகள்
தர்ம சாஸ்திரங்கள் ஸ்மிருதிகள் எனப்படுகின்றன. இவை ஸ்லோக வடிவில் இயற்றப்பட்ட சட்ட நூல்களாகும். இவற்றில் மானவ் தர்ம சாஸ்திரம் எனப்படும் மனு தர்மம் காலத்தால் முற்பட்டதாகும். இதனை இயற்றிய மனு முதலாவது அரசராகவும் சட்டம் இயற்றுபவராகவும் இருந்திருக்கலாம்.
இது தவிர விஷ்ணு தர்ம சாஸ்த்திரம், யஜ்னவல்யா மற்றும் நாரத ஸ்மிருதி போன்றவையும் இயற்றப்பட்டன. மித்தாக்ஷரா என்பது பின்னாட்களில் இயற்றப்பட்ட சிறிய ஸ்மிருதியாகும்.
உபநிடதங்கள்
உபநிடதம் என்பதற்கு குருவின் அருகிலிருந்து கற்றுக்கொள்ளுதல் என்று பொருள். இது வேதரிதா என்றும் அழைக்கப்படுகின்றது. இவை வேதகாலத்தின் இறுதி காலகட்டத்தினைக் குறிக்கின்றன .
ஆன்மிகம் மற்றும் தத்துவம் சார்ந்த இவை வேதங்களின் நோக்கத்தினை வெளிப்படுத்துகின்றன. கர்மா, ஆத்மா, பிரம்மா மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் உள்ளிட்டவற்றைப் பற்றி வரையறுக்கின்றன.
இவை கி.மு. 800 முதல் கி.மு. 500 வரை தொகுக்கப்பட்டன. மொத்தம் 108 உபநிடதங்கள் உள்ளன. இவற்றில் 11 உபநிடதங்கள் மிக முக்கியமானவையாகும்.
பிரமாணங்கள்
வேதங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு பாடல்களுக்கான உரைகள் பிரமாணங்கள் எனப்படும். இவை வேதங்களை ஐதீகமான முறையில் விளக்குகின்றன. வேத துதி பாடல்களிலுள்ள மறை பொருள்களை விளக்குகின்றன. இயல்பிலேயே இவை சம்பிரதாயம் மிக்கவை.
இவற்றுள் மிகமுக்கியமானது யஜுர் வேதத்துடன் இணைந்த சதபத பிரமாணமாகும். இது 100 புனிதமான வழிகளைக் கூறுகின்றது.
ஆரண்யங்கள்
வனங்களில் வசித்த துறவிகள் தங்களது சீடர்களுக்கு எளிதாக விளங்கும், புரியும் வகையில் வேதங்களுக்கான உரைகளை எழுதினர். இவையே ஆரண்யங்களாகும்.
இவை தியானம் மற்றும் வேதாந்தத்தைப் பற்றியவை. பூஜை புனஸ்காரங்களுக்கு எதிரானவை. வனங்களில் வாழும் ரிஷிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவரிக்கின்றன. இவை பிரமாணங்களின் முடிவுரையாகக் கருதப்படுகிறது.
வேதாங்கங்கள்
இவை வேதங்களின் விழுதுகள் எனப்படுகின்றன. இவை கலை மற்றும் அறிவியலின் கலவையாகும். மொத்தம் 6 வேதாங்கங்கள் உள்ளன. இவை வேதங்களின் முடிவுரை எனப்படுகின்றன. கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் பாணினி, அஷ்டத்யாயி வியாகர்ணா பற்றிய நூலை இயற்றினார்.
வேதாங்கம்
தொடர்புடையது (Deals with)
வேதாங்கம்
தொடர்புடையது (Deals with)
சிக்க்ஷா
உச்சரிப்பு (Phonetics)
நிருக்தா
சொற்பிறப்பு (Etymology)
கல்பா
பூஜை (Rituals)
சந்தா
அளவுகள் (Metrics)
வியாக்கரணா
இலக்கணம்
ஜோதிஷா
ஜோதிடம்
மகதத்தை ஆட்சி செய்த வம்சங்கள்
ஹரியங்க வம்சம் : பிம்பிசாரன் (கி.மு. 546 – கி.மு. 494), அஜாதசத்ரு (கி.மு. 494 – கி.மு. 462) – உதயன்.
சிசுநாக வம்சம் (கி.மு. 412 – கி.மு. 344) : சிசுநாகன், காலசோகன்
நந்த வம்சம் (கி.மு. 344 – கி.மு. 323) : மகாபத்ம நந்தர், தன நந்தர்.
பாரசீக – கிரேக்க படையெடுப்புகள்
பாரசீக படையெடுப்புகள் : சைரஸ் (கி.மு. 558 – கி.மு. 530), முதலாம் டேரியஸ் (கி.மு. 522 – கி.மு. 486), செர்க்ஸஸ் (கி.மு. 465- கி.மு. 456)
கிரேக்கர்: அலெக்சாந்தர் (கி.மு. 327-கி.மு.325)
வர்ணாசிரமம்
இதன்படி, மக்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டனர்.
பிரிவு
தொழில்
தோற்றம்
பிராமணர்
மந்திரம் ஒதுதல், யாகம் செய்தல்
பிரம்மனின் வாயிலிருந்து
சத்ரியர்
போர் புரிதல், அரசாட்சி செய்தல்
பிரம்மனின் தோளிலிருந்து
வைசியர்
வேளாண்மை, வணிகம், மேய்ச்சல்,கலை
பிரம்மனின் தொடையிலிருந்து
சூத்திரர்
மேற்கண்ட 3 பிரிவினருக்கும் சேவகம் செய்வது
பிரம்மனின் பாதத்திலிருந்து
சமண – பௌத்த சமயங்கள்
சமண சமயம்
சமயம் ரிஷபநாதரால் தோற்றுவிக்கப்பட்டது. விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணத்தின்படி, இவர் நாராயணனின் அவதாரம் எனப்படுகிறார். ரிக்வேதத்தில் இவர் அரிஷ்டநேமி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். சமண சமயத்தில் மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் (குரு) இருந்தனர். இவர்கள் அனைவரும் சத்திரிய குலத்தவர்களாவர்.
முதல் 22 தீர்த்தங்கரர்கள் பற்றி எவ்வித வரலாற்று ஆதாரமும் கிடையாது. கடைசி 2 தீர்த்தங்கரர்கள் பற்றி மட்டும் வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. 23-ஆவது தீர்த்தங்கரர் பார்ஷவநாதர். இவரின் சின்னம் பாம்பு. இவர் பனாரஸ் மன்னர் அசுவகோசரின் மகன். இவரின் முக்கிய போதனைகள் தீங்கு விளைவிக்காமை, பொய் சொல்லாமை, திருடாமை, உரிமை கொண்டாடாத தன்மை ஆகியவை பற்றியது.
24-ஆவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் வர்த்தமான மஹாவீரர் ஆவார். இவரின் சின்னம் சிங்கம். இவர் பீஹாரிலுள்ள வைசாலிக்கு அருகிலுள்ள குண்டக் கிராமத்தில் கி.மு. 539-இல் பிறந்தார்.
சமண சமய பிரிவுகள்
முகாவீரர் மறைவுக்குப்பின், சந்திரகுப்த மௌரிய மன்னர் ஆட்சியின்போது பெரும் பஞ்சத்தால் கங்கைச் சமவெளி ஜைனத் துறவிகள் தக்காணத்திற்கு நகர்ந்தனர். அங்கு அவர்கள் முக்கிய மையங்களை உருவாக்கினர். இந்த இடப்பெயர்ச்சி சமண சமயம் பரவ வாய்ப்பாகியது. பத்ரபாகு என்பவர் இங்கு குடியேறியவர்களை வழிநடத்தி மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றச் செய்தார்.
ஸ்தூல பத்ரா என்பவர் வடக்கில் மீதியிருந்த துறவிகளின் தலைவர். இவரது சீடர்களை வெண்மை உடை அணிய அனுமதித்தார். பஞ்சத்தால் சமண சமயத்தின் கொள்கைகளை கடுமையாகப் பின்பற்றுவதை கைவிட்டார். ஆகவே ஜைனமதம் திகம்பரர்கள் (நிர்வாணமாக அலைபவர்கள் அல்லது எண் திசைகளை ஆடையாக அணிந்தவர்கள்) மற்றும் ஸ்வேதம்பரர்கள் (வெள்ளை உடை அணிந்தவர்கள்) என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.
புதிதாகத் தோன்றிய சமயங்கள்
சமயம் (Sect)
தோற்றுவித்தவர் (Founder)
கொள்கை (Theory)
பௌத்தம்
கௌதம புத்தர்
உண்மையை உணர்தல்.
சமணம்
ரிஷபநாத் (மகாவீரர் என்ற கருத்தும் உள்ளது)
அகிம்சை / கொல்லாமை.
அஜிவிகா
கோசலா மஸ்காரிபுத்ரா (மகாலி)
நியதி (Niyati) எனும் விதியின் மீதான நம்பிக்கை.
அமேரலிசம்
புராண கஸ்பா
சாங்கிய தத்துவம்.
இந்து வைசேஷிகா
பகுதா கத்யயாணா
புவி,நீர் போன்று துன்பம், இன்பம் மற்றும் வாழ்க்கை போன்றவையும் அழிக்க முடியாதவை.
லோகாயதம் (அ) சார்வாகம்
அஜித கேசகம்பலின்
நாத்திகம்
சமய மாநாடுகள்
மாநாடுகள்
வருடம்
இடம்
தலைமை
அரசர்
வெளியீடு
முதல் மாநாடு
கி.மு. 3-ஆம் நூற்றாண்டு
பாடலிபுத்திரம்
ஸ்துலபத்ரா
சந்திரகுப்த மௌரியர்
14 பூர்வங்களுக்கு பதிலாக 12 அங்கங்கள் எழுதப்பட்டன.
இரண்டாம் மாநாடு
கி.பி. 512
வல்லாபி
தேவரிதிகனி
12 அங்கங்கள் இறுதி வடிவம் பெற்றன. 12 உபாசங்களும் வெளியிடப்பட்டன.
தீர்த்தங்கரர்களின் சின்னங்கள்
தீர்த்தங்கரர்களின் சின்னங்கள்
தீர்த்தங்கரர்கள்
சின்னங்கள்
பத்மபிரபா
தாமரை
சுபர்சவநாதர்
ஸ்வஸ்திக்
சந்திரப்பிரபா
நிலா
சீதாலநாதர்
அரசமரம்
மல்லிநாதர்
கலசம்
நமிநாதர்
நீலத்தாமரை
நேமிநாதர்
சங்கு
முக்தி அடைய மூன்று வழிகள் (Three Ratnas)
நல்ல நம்பிக்கை : மகாவீரரின் கருத்துகளிலும் பேரறிவிலும் நம்பிக்கை வைத்தலாகும்.
நல்ல அறிவு : கடவுள் இல்லை என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு, உலகத்தை படைத்தவர் எவருமில்லை என்பதையும், அனைத்து பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்பதையும் உணர்ந்து கொள்வதாகும்.
நல்ல நடத்தை : ஐந்து முக்கிய விரதங்களை கடைப்பிடிப்பதை குறிக்கும்.
ஐந்து விரதங்கள்
உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமை (அஹிம்சை).
பொய் உரைக்காமை (சத்தியம்)
களவாமை (அஸ்தேயா).
சொத்துகளை கொள்வதை விடுத்தல் (அபரிகிரஹா).
ஒழுக்கமற்ற வாழ்வை நடத்தாமலிருத்தல் (பிரம்மச்சார்யம்).
சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணப் படைப்புகள்
காப்பியங்கள்:
சிலப்பதிகாரம்,
சீவக சிந்தாமணி,
வளையாபதி,
சூடாமணி.
இலக்கண நூல்கள்
யாப்பருங்கல விருத்தி,
நேமிநாதம்,
நன்னூல்,
அகப்பொருள் விளக்கம்,
இலக்கண விளக்கம்.
அற நூல்கள்
நிகண்டுகள்,
நாலடியார்,
நான்மணிக்கடிகை,
பழமொழி நானூறு
திணைமாலை நூற்றைம்பது.
சமணக் கட்டடக் கலை
இராஜஸ்தான் – மவுண்ட் அபு – தில்வாரா கோவில், கஜுராஹோ, சித்தூர், ரங்க்பூர் சமணர் கோவில்கள்.
சிற்பங்கள்
உதயகிரி, ஹதிகும்பா, கிர்னார், சிரவணபெலகொலா, கழுகு மலை (திருநெல்வேலி மாவட்டம்)
புத்த சமயம்
கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு.483)
புத்தசமயம் கௌதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
கௌதம புத்தர் ததகதா (Tathagata), சாக்கியமுனி உள்ளிட்ட பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.
இவர் கி.மு. 563-ஆம் ஆண்டு லும்பினி வனத்தில் வைசாக பூர்ணிம தினத்தில் பிறந்தார்.
கபிலவஸ்த்துவின் சாக்கிய சத்திரிய மரபில் பிறந்த இவரின் இயற்பெயர் சித்தார்த்தன் என்பதாகும்.
புத்தரின் போதனைகள்
(i) நான்கு பேருண்மைகள் (ஆர்ய சத்யங்கள்)
1. உலகம் துன்பங்களால் நிறைந்தது.
2. ஆசையே துன்பத்திற்கு காரணம்.
3. ஆசையை துறந்தால் துன்பங்களைத் துடைக்கலாம்.
4. இதற்கு எண்வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
(ii) எண்வழிகள் (அஷ்டாங்கிக மார்கம்)
நன்னம்பிக்கை
நன்முயற்சி,
நற்பேச்சு,
நன்னடத்தை,
நல்வாழ்வு,
நற்சிந்தனை,
நல்ல செயல்,
நல்ல தியானம்.
(iii) மூன்று ஆபரணங்கள் (திரிரத்னா)
புத்தம் (நல்லது எது? கெட்டது எது? என அறிந்து கொள்ளுதல்)
தம்மம் (புத்தரின் போதனைகள்)
சங்கம் (புத்தபிக்குகள் மற்றும் பிக்குனிகளுக்கான கட்டளைகள்)
(iv) ஒழுக்கவழி நடத்தைகள் (Code of Conduct)
ஊறு செய்யாமை,
பொய்யாமை,
களவாமை,
உடைமை மறுத்தல்,
புலனடக்கம்
சின்னங்கள்
புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகள்
தாமரை மற்றும் காளை
ஜன்மம் (பிறப்பு)
குதிரை
துறவு
போதிமரம்
நிர்வாணம் (ஞான ஒளி பெறுதல்)
சக்கரம்
தர்மசக்கரம் (முதல் சொற்பொழிவு)
ஸ்தூபி
மகாபரிநிர்வாணம் (மரணம்)
புத்த இலக்கியங்கள் : புத்த இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியிலிருந்தன .
மூன்று கூடைகள் (திரிபீடகங்கள்)
வினய பீடகம் – துறவு வாழ்கை மற்றும் துறவிகளுக்கான நெறிமுறைகள்
சுத்த பீடகம் – புத்தர் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு.
அபிதம்ம பீடகம் – புத்தரின் போதனைகளிலுள்ள தத்துவங்கள்
சில புத்தசமய அறிஞர்கள்
அஸ்வகோஷா, நாகார்ஜுனா, அசாங்கா, வசுபந்து, புத்ரகோஷ தர்மகீர்த்தி, தின்னாகா.
புத்த மதத்தின் பிரிவுகள்
ஹீனயானம்
புத்தரின் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
உருவ வழிபாடு கிடையாது.
அசோகரின் காலத்தில் செழிப்புற்றிருந்தது. இலங்கை, எகிப்து,சிரியா,மாசிடோனியாவில் அசோகரால் அனுப்பப்பட்ட தூதுவர்களால் பரப்பப்பட்டது.
மகாயானம்
புத்தர் கடவுளாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்
புத்தரின் உருவம் வணங்கப்படுகிறது.
கனிஷ்கரின் காலத்தில் செழிப்புற்றிருந்த இப்பிரிவு, அவரின் தூதுக்குழுக்களால் பர்மா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரப்பப்பட்டது.
வஜ்ரயானம்
ஹீனயானம் மற்றும் மகாயானம் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சைவ சமயத்தின் தாக்கம் கலந்துள்ள இப்பிரிவில் வழிபாட்டுடன் வஜ்ரம், மணி (Bell) மற்றும் உருத்திராட்சம் போன்ற தியானத்திள் போது எண்ணும் மணிமாலைகள் ஆகியன புனிதமானதாகக் கருதப்பட்டன.
பாலர்களின் காலத்தில் செழிப்புற்றிருந்தது. திபெத், பூடான், சீனா மற்றும் ஜப்பானின் ஒருபகுதி, இந்தியாவின் லடாக், நேபாளம், மங்கோலியா ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
புத்த சமய மாநாடுகள்
மாநாடு
நடைபெற்ற இடம்
ஆண்டு
தலைவர் / பங்கேற்றவர்கள்
ஆதரித்த அரசர்கள்
குறிப்புகள்
ராஜகிருஹம்
கி.மு. 483
மகாகாஷியப்பர் /ஆனந்தா, உபிலி
அஜாதசத்ரு
அனந்தாவினால் சுத்தபீடகமும், உபாலியினால் வினயபீடகமும் தொகுக்கப்பட்டன.
வைசாலி
கி.மு. 383
சபகாமி
காலசோகன்
புத்த துறவிகள் ஸ்தாவிர்மதின்கள் மற்றும் மஹாசங்கிகர்கள் என இரண்டாகப் பிரிந்தனர்.
பாடலிபுத்திரா
கி.மு. 250
மொகாலிபுத்ததிஸா
அசோகர்
அபிதம்ம பீடகம் தொகுக்கப்பட்டது
குண்டலவானா (காஷ்மீர்)
கி.பி. 100
வசுமித்திரா /பார்சவா, அசுவகோசா
கனிஷ்கர்
புத்த மதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிந்தது.
போதி சத்துவர்கள்
வஜ்ரபானி : மின்னலை வைத்திருப்பவர்
மஞ்சுஸ்ரீ : 10 பாராமிதங்களை விளக்கும் புத்தகங்களை வைத்திருப்பவர்
மைத்ரேயர் : எதிர்காலத்தில் மீண்டும் அவதரிக்கவுள்ளவர்
பத்மபானி : தாமரை மலரை வைத்திருப்பவர்
கிஷித்திகிர்ஹா : சொர்க்கத்தின் பாதுகாவலர்
அமிதாபா : சொர்க்கத்தின் ஒளி
புத்த மற்றும் சமண சமயங்களுக்கு இடையிலான வேறுபாடுகள்
புத்தமதம்
சமணமதம்
மோட்சம் அடையும் வழி
மிதமானது
கடுமையானது
அகிம்சை
மிதமானது
தீவிரமானது
ஆத்மாவைப் பற்றிய நம்பிக்கை
இல்லை
உண்டு
பின்பற்றியவர்கள்
துறவிகள்
சாதாரண மக்கள்
பரவியது
வெளிநாடுகளுக்கும்
இந்தியாவிற்குள்ளேயே