BNS CHAPTER 13 VIDEO CLASS

Categories: SID-LAW-BNS-CLASS
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

BNS CHAPTER 13

BNS CHAPTER 13 PART 1 VIDEO CLASS LINK 

https://www.youtube.com/live/K8WZ8bkVS3I?si=c_Nlm49KqGHcx2Va

BNS CHAPTER 13 PART S VIDEO CLASS LINK 

https://www.youtube.com/live/ItIXiijqSHc?si=Q4mImySBBnvp_p-i

பொது ஊழியரின் சட்டபூர்வ அதிகாரத்தை அவமதித்தல்

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 206

அழைப்பானை சார்பு செய்தல் அல்லது பிற நடவடிக்கைகளை தவிர்க்க தலைமறைவாகுதல் குற்றம்.

சட்டப்படி அதிகாரம் பெற்ற எந்த ஒரு பொது ஊழியர் பிறப்பிக்கும் அழைப்பானை (summons) அறிவிப்பு ( notice)  அல்லது உத்தரவை (order proceeding) சார்பு செய்வதை தவிர்ப்பதற்காக தலைமறைவாதல் குற்றம்.

தண்டனை

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 206(a)

ஒரு மாதத்திற்கு நீடிக்கக்கூடிய எளிய சிறைத் தண்டனையோ  அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 206(b)

அத்தகைய அழைப்பானை (summons) அறிவிப்பு( notice)  அல்லது உத்தரவு  (order proceeding ) அல்லது  ஆவணம் அல்லது மின்னணு பதிவு நேரில் அல்லது முகவர் மூலமாக நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்றால் ஆறு மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய சாதாரண சிறைதண்டனை  அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும்

குற்ற வகைப்பாடு

 கைது செய்யக்கூடாத குற்றம் – பிணைவிடு குற்றம்- எந்த நடுவராலும் விசாரிக்க கூடிய குற்றம்- சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்.

*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 207

பொது ஊழியராக, சம்மன், அறிவிப்பு அல்லது உத்தரவு பிறப்பிக்க சட்டப்படி அதிகாரம் பெற்றவறால் பிறப்பிக்கப்படும்  சம்மன், அறிவிப்பு அல்லது உத்தரவை வேண்டுமென்றே தனக்கு அல்லது வேறு எந்த நபர் மீதும்பிறப்பிக்கப்படுவதைத் தடுப்பவர், எந்த இடத்திலும் சட்டப்பூர்வமாக ஒட்டுவதைத் தடுப்பது அல்லது நீக்குவது  அல்லது எந்தவொரு பொது அதிகாரத்தின் கீழ் எந்தவொரு பிரகடனத்தையும் சட்டப்பூர்வமாக உருவாக்குவதை வேண்டுமென்றே தடுப்பது குற்றம்

தண்டனை

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 207 (a)

ஒரு மாதத்திற்கு நீடிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனையோ  அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 207  (b)

அத்தகைய அழைப்பானை (summons) அறிவிப்பு( notice)  அல்லது உத்தரவு  (order proceeding ) அல்லது  ஆவணம் அல்லது மின்னணு பதிவு நேரில் அல்லது முகவர் மூலமாக நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்றால் ஆறு மாதங்களுக்கு நீடிக்கக்கூடிய சாதாரண சிறைதண்டனை  அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும்

குற்ற வகைப்பாடு   207(a)   207(b)

 கைது செய்யக்கூடாத குற்றம் பிணைவிடு குற்றம் எந்த நடுவராலும் விசாரிக்க கூடிய குற்றம் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 208

பொது ஊழியர்கள் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து ஆஜராகாமல் இருத்தல் குற்றம்

சட்டபூர்வமாக அழைப்பானை அறிவிப்பு உத்தரவு அல்லது பிரகடனம் பிறப்பிக்க அதிகாரம் பெற்ற பொது ஊழியரின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் அல்லது முகவர் மூலம் ஆஜராகாமல் தவிக்கிறார் அல்லது அந்த இடத்தில் இருந்து ஆஜராகாமல் முன்கூட்டியே  புறப்படுகிறார் எனில் குற்றம்

தண்டனை

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 208 (a)

ஒரு மாதம் வரை நீடிக்கக்கூடிய சாதாரண தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும்

 பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 208 (a)

நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டிய போது தண்டனை ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய சாதாரண சிறைத் தண்டனை  அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும்

எடுத்துக்காட்டு

(a) உயர் நீதிமன்றத்தின் முன் சட்டபடியாக ஆஜராக வேண்டிய நபர் அழைப்பாணிக்கு கீழ்ப்படிந்து ஆஜராகாமல் தவிர்க்கிறார் எனில் இந்த பிரிவில் வரையறுக்கப்பட்ட குற்றத்தை அவர் செய்துள்ளார்

 

(b) மாவட்ட நீதிமன்றத்தின் முன் சட்டபடியாக ஆஜராக வேண்டிய நபர் அழைப்பாணிக்கு கீழ்ப்படிந்து ஆஜராகாமல் தவிர்க்கிறார் எனில் இந்த பிரிவில் வரையறுக்கப்பட்ட குற்றத்தை அவர் செய்துள்ளார்

குற்ற வகைப்பாடு   208(a)   208(b)

 கைது செய்யக்கூடாத குற்றம் பிணைவிடு குற்றம் எந்த நடுவராலும் விசாரிக்க கூடிய குற்றம் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 209

பாரதிய மக்கள் பாதுகாப்பு சட்டம் 2023 இன் பிரிவு 84 இன் கீழ் ஒரு பிரகடனத்திற்கு பதிலளிக்கும் வகையில் தோன்றாதது இருத்தல் குற்றம்.

தண்டனை

மூன்றாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் அல்லது  சமூக சேவை பணி

பாரதிய மக்கள் பாதுகாப்பு சட்டம் 2023 இன் பிரிவு 84(4) கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக இருந்தால் தண்டனை ஏழாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம்.

குற்ற வகைப்பாடு

கைது செய்யக்கூடிய குற்றம் பிணை விடா  குற்றம் முதல் வகுப்பு நடுவரால் விசாரிக்க கூடிய குற்றம் சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 210

ஆவணம் அல்லது மின்னணுப் பதிவேட்டைத் தாக்கல் செய்ய சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்ட நபர் அரசு ஊழியரிடம் சமர்ப்பிக்கத் தவறுதல் குற்றம்

 தண்டனை

(a) ​​ஒரு மாதம் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான சாதாரண சிறைத்தண்டனை அல்லது ஐயாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்

(b) மற்றும் ஆவணம் அல்லது மின்னணுப் பதிவேடு நீதிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும், எனில் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால சிறைத் தண்டனை அல்லது பத்து ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்

விளக்கம்.

A, ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்க சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்டு, வேண்டுமென்றே அதைத் தாக்கல் செய்வதைத் தவிர்க்கிறார். இந்த பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A செய்துள்ளார்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 211

சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்ட நபர் மூலம் பொது ஊழியருக்கு அறிவிப்பு அல்லது தகவலை வழங்கத் தவறுதல்.

தண்டனை

(a) ​​ஒரு மாதம் வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத் தண்டனை ஐந்தராயிரம் வரை நீடிக்கக்கூடிய   அபராதம் அல்லது இரண்டும்

(b) ஒரு குற்றச் செயலுக்கு உரிய அறிவிப்பு அல்லது தகவல் தேவைப்படும்போது, ​​அல்லது ஒரு குற்றச் செயலைத் தடுக்கும் நோக்கத்திற்காக அல்லது ஒரு குற்றவாளியைக் கைதுசெய்வதற்காக,

 தண்டனை

ஆறு  மாதங்கள்  வரை நீட்டிக்கக்கூடிய  சாதாரண சிறைத் தண்டனை  பத்தாயிரம் வரை நீடிக்கக்கூடிய   அபராதம் அல்லது இரண்டும்

(c) பாரதிய மக்கள் பாதுகாப்பு சட்டம் , 2023 இன் பிரிவு 394 இன் கீழ் (தண்டிக்கப்பட்ட குற்றவாளி முகவரி அறிவிக்க  வேண்டும் என்று உத்தரவு) நிறைவேற்றப்பட்ட உத்தரவு மூலம் அறிவிப்பு அல்லது தகவல் தேவைப்படுகையில், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஏதேனும் ஒரு வகை சிறைத்தண்டனை அல்லது  ஆயிரம் ரூபாய் வரை நீடிக்கக்கூடிய அபராதம்  அல்லது இரண்டும்


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 212

தவறான தகவல்களை வழங்குதல்.

எந்தவொரு பொது ஊழியருக்கும் எந்தவொரு விஷயத்திலும் தகவலை வழங்குவதற்கு சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்டு, தனக்குத் தெரிந்த அல்லது பொய்யென்று நம்புவதற்குக் காரணமுள்ள தகவலை உண்மையாக வழங்குபவர்,

 தண்டனை

(a) ​​ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை, அல்லது ஐயாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்

 (b) அவர் சட்டப்பூர்வமாக கொடுக்க வேண்டிய தகவல், ஒரு குற்ற செயலை குறித்ததாக அல்லது ஒரு குற்ற செயலை  தடுக்கும் நோக்கத்திற்காக அல்லது ஒரு குற்றவாளியைப் கைது செய்யும்  நோக்கத்திற்காக தேவைப்டுடம் தகவல் குறித்து பொய் தகவல் அளித்தால்

தண்டனை

இரண்டு வருடங்கள் வரை நீடிக்கக்கூடிய ஏதேனும் ஒருவகை சிறைத்தண்டனை  அல்லது அபராதம் அல்லது இரண்டும்

எடுத்துக்காட்டு

(a) ​​A, நில உரிமையாளர், தனது தோட்ட எல்லைக்குள் கொலை செய்யப்பட்டதை அறிந்து, பாம்பு கடித்ததன் விளைவாக தற்செயலாக மரணம் நிகழ்ந்ததாக மாவட்ட நீதிபதிக்கு வேண்டுமென்றே தவறாகத் தெரிவிக்கிறார். இந்த பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்திற்கு ஏ குற்றவாளி.

 (b) A, கிராமக் காவலாளி, பக்கத்து இடத்தில் வசிக்கும் ஒரு பணக்கார வியாபாரியான Z என்பவரின் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக கணிசமான அந்நியர்கள் தனது கிராமத்தின் வழியாகச் சென்றதை அறிந்ததும், சட்டப்பூர்வமாக முன்கூட்டியே அருகிலுள்ள காவல் நிலைய அதிகாரிக்கு, கொடுக்க வேண்டிய உண்மையான தகவலை மறைத்து  தவறான தகவலாக , சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் கிராமத்தின் வழியாக ஒரு குறிப்பிட்ட தொலைதூர இடத்தில் வேறு திசையில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சென்றதாக கூறுகிறார் . இங்கே A இந்த பிரிவில் வரையறுக்கப்பட்ட குற்றத்தை செய்கிறார்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 213

சட்டப்படி தகுதி உள்ள ஒரு பொது ஊழியரால் கோரப்படும் போது சத்திய பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுக்க மறுப்பது குற்றம்

தண்டனை

​​ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை, அல்லது ஐயாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 214

கேள்வி கேட்க அதிகாரம் உள்ள பொது ஊழியருக்கு பதில் அளிக்க மறுப்பது குற்றம்

தண்டனை

ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை, அல்லது ஐயாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 215

தம்மால்  கொடுக்கப்பட்ட வாக்குமூலத்தில் பொது ஊழியரால் கோரப்படும் போது கையொப்பமிட மறுப்பது குற்றம்.

 தண்டனை

மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை, அல்லது மூன்றாயிரம்  ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 216

பொது ஊழியரிடம் அல்லது  ஆணை உறுதி மொழியை அல்லது உறுதிமொழியை செய்து வைக்க அதிகாரம் பெற்றுள்ள ஒருவரிடம் பொய்யுரைத்தல் குற்றம்

தண்டனை

மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஏதாவது ஒருவகை  சிறைத்தண்டனை, மற்றும் அபராதம்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 217

மற்றொருவருக்கு கேடு விளைவிக்க பொது ஊழியரின் சட்டப்படியான அதிகாரத்தை பயன்படுத்த செய்யும் எண்ணத்துடன் பொய்த் தகவல் அளித்தல் குற்றம்.

வழங்கப்பட்ட பொய் தகவலின் உண்மை நிலையை அறிந்திருந்தால் பொது ஊழியர் செய்யக்கூடாததை செய்திருக்க மாட்டார் அல்லது செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்திருக்க மாட்டார் என்ற நிலையில் தீங்கு விளைவிக்கும் எண்ணத்தில் பொய் தகவலை அளிப்பது குற்றம்

எடுத்துக்காட்டு  1 பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 217

ஒரு நடுவருக்கு கீழ் நிலையில் உள்ள ஒரு காவல் அதிகாரி தனது கடமையில் தவறினார்  அல்லது தவறான நடத்தையில் ஈடுபட்டுள்ளார் என பொய்யான தகவலை நடுவருக்கு தெரிவிப்பதன் மூலம் அந்த காவல் அதிகாரி பணிநீக்கம் செய்யப்படலாம் என்று தெரிந்து நடுவருக்கு அத்தகைய தகவலை தெரிவிப்பது இந்த பிரிவின் கீழ் குற்றமாகும்

எடுத்துக்காட்டு  2 பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 217

ஒரு ரகசிய இடத்தில் A என்பவர்  கள்ளக் கடத்தல் உப்பு வைத்திருப்பதாக பொய்யான தகவலை பொது ஊழியருக்கு கொடுப்பதன் மூலம் A யின் வளாகத்தில் தேடுதல் நடத்தப்படும், தொல்லை விளையும் என்று அறிந்து கொண்டே மேற்கண்ட தகவலை கொடுப்பது குற்றமாகும்

எடுத்துக்காட்டு  3 பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 217

A என்பவர் ஒரு கிராமத்தின் குறிப்பிட்ட பகுதியில் தான் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்யான தகவலை காவல் அதிகாரியிடம் தெரிவிக்கின்றார் ஆனால் எந்த நபர் பெயரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை இந்த பொய்த்தகவின் மூலம் கிராமவாசிகள் அல்லது அவர்களின் சிலருக்கு  தொல்லை ஏற்படும் வகையில் காவல்துறையினர்  விசாரணை மேற்கொள்ள கூடும் மற்றும் அந்த கிராமத்தில் தேடலை மேற்கொள்ள கூடும் என்று தெரிந்து A என்பவர் மேற்கண்ட பொய்த்தகவலை கொடுப்பது இந்த பிரிவின் கீழ் குற்றமாகும்

தண்டனை

ஓர் ஆண்டு வரை நீட்டிக்கக்கூடிய ஏதாவது ஒருவகை  சிறைத்தண்டனை, அல்லது பத்தாயிரம் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 218

ஒரு பொது ஊழியர் சட்டப்படி அதிகாரத்தின் மூலம் சொத்துக்களை எடுப்பதற்கு தடை செய்தல் குற்றம்

தண்டனை

ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஏதாவது ஒருவகை  சிறைத்தண்டனை, அல்லது பத்தாயிரம் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 219

பொது ஊழியரின் சட்டபூர்வமான அதிகாரத்தின் படி விற்பனைக்கு வைக்கப்படும் சொத்தை விற்பனை செய்வதை தடுத்தல் குற்றம்

தண்டனை

ஒரு மாதம் வரை நீட்டிக்கக்கூடிய ஏதாவது ஒருவகை  சிறைத்தண்டனை, அல்லது ஐந்தாயிரம் வரை வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 220

பொது ஊழியரின் அதிகாரத்தால் விற்பனை செய்யப்படும் சொத்தை சட்டத்திற்கு முரணான வகையில் வாங்குதல் அல்லது ஏலம் கேட்டல் குற்றம் செய்யப்படும்.

தண்டனை

ஒரு மாதம் வரை நீட்டிக்கக்கூடிய ஏதாவது ஒருவகை  சிறைத்தண்டனை, அல்லது இருநூறு  வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 221

பொதுப்பணிகளை பொது ஊழியர் ஆற்றும் போது  அவரைத்  தடுப்பது குற்றம்.

தண்டனை

மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஏதாவது ஒருவகை  சிறைத்தண்டனை, அல்லது ரூபாய் 2500  வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்.


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 222

222(a)

பொது ஊழியருக்கு உதவ சட்டப்படி கடமைப்பட்டுள்ள நபர் உதவ தவறுதல் குற்றம்

தண்டனை

ஒரு மாதத்திற்கு நீடிக்கக்கூடிய சாதாரண சிறை தண்டனை

அல்லது 2500 ரூபாய் வரை நீடிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்

222(b)

ஒரு நீதிமன்றத்தால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட எந்த ஒரு கட்டளை நிறைவேற்றுவதற்காக, ஒரு குற்ற செயல் புரிவதை தடுப்பதற்காக, ஒரு கலவரம் சர்ச்சை அடக்கப்படுவதற்காக, குற்றம் சாட்டப்பட்ட அல்லது குற்றவாளி ஒருவரை கைது செய்ய, சட்டபூர்வமான காவலில்  இருந்து தப்பி வரை கைது செய்ய அத்தகைய உதவி கோரப்படுகின்ற போது அத்தகைய உதவியினை செய்திட சட்டப்படி கடமைப்பட்ட நபர் உதவி செய்ய தவறினால்

தண்டனை

ஆறு மாதங்கள் வரை நீடிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டு விதிக்கப்படும்


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 223 (IPC 188)

பொது ஊழியரால் முறையாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்படியாமை குற்றம்

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 223(a) அத்தகைய கீழ்ப்படியாமல் சட்டபூர்வமாக கடமையை செய்யும் எந்த ஒரு நபருக்கும் தடங்கல் எரிச்சல் தீங்கு விளைவிக்க காரணமாக இருந்தால் ஆறு மாதத்திற்கு நீடிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

 

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 223(b) அத்தகைய கீழ்படியாமை மனித உயிருக்கு, ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தால்

 கலவரம் அல்லது சச்சரவு ஏற்பட காரணமாக இருந்தால் ஓர் ஆண்டு வரை நீட்டிக்கக்கூடிய ஏதேனும் ஒரு வகை சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்

விளக்கம் ஒரு மத ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட தெருவில் செல்லக்கூடாது என்று உத்தரவை அறிவிக்க சட்டபூர்வமாக அதிகாரம் பெற்ற அதிகாரியின் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தெரிந்து அதை மதிக்காமல் அதன் மூலம் கலவரத்தின் ஆபத்தை ஏற்படுத்தும் என  தெரிந்து உத்தரவை மீறும் நபர் இந்த பிரிவில் விலக்கப்பட்டுள்ள குற்றத்தை செய்தவராவார்


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 224

பொது ஊழியருக்கு தீங்கு விளைவிக்க அச்சுறுத்துதல்

பொது  ஊழியர் தொடர்புடைய எந்த ஒரு பொதுப்பணி தொடர்புடைய  செயலை செய்ய அல்லது செய்யாதிருக்க அல்லது தாமதப்படுத்த தூண்டும்  நோக்கத்திற்காக எந்த ஒரு பொது ஊழியர் அல்லது பொது ஊழியர் அக்கறை கொண்டிருக்கும்  எந்த ஒரு நபருக்கும் தீங்கு விளைவிக்க அச்சுறுத்தலை செய்கின்றவருக்கு இரண்டு வருடங்கள் நீடிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கு ஏதேனும் ஒரு வகை சிறை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.  


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 225

பொது ஊழியரிடம்  பாதுகாப்பிற்க்காக  விண்ணப்பிப்பதை தவிர்ப்பதற்கு ஒரு நபரை தூண்டுவதற்காக தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்தல் குற்றம்

தண்டனை

ஒரு வருடத்திற்கு நீட்டிக்கக்கூடிய ஏதேனும் ஒரு வகை சிறை தண்டனை  அல்லது அபரதம் அல்லது இரண்டும்


*****************************************************

பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 226

எந்த ஒரு பொது ஊழியரும் தனது அலுவல் ரீதியான கடமையை நிறைவேற்றுவதை கட்டாயப்படுத்த அல்லது கட்டுப்படுத்த நோக்கம் கொண்டு தற்கொலைக்கு முயல்வது குற்றம் ஓர் ஆண்டு வரை நீடிக்கக்கூடிய சாதாரண சிறை தண்டனை  அல்லது அபராதம் அல்லது இரண்டும் அல்லது சமூக சேவை பணி விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்

Show More

What Will You Learn?

  • BNS CHAPTER 13 PART 2 VIDEO CLASS https://www.youtube.com/live/ItIXiijqSHc?si=Q4mImySBBnvp_p-i

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet