LAW – PSO TEST 2 ANSWER KEY
1. அரசு ஊழியர்களுக்கு துறை நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது இராஜினாமா செய்தல் ஓய்வு பெறுதல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கும் காவல் நிலை ஆணை எண் எது?
(A) 81
(B) 82
(C) 84
(D) 86
விடை: (C) 84
2. தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆளிநர்களின் சன்னத் அட்டை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
(A) உதவி ஆய்வாளர்
(B) ஆய்வாளர்
(C) நேர் மூத்த அதிகாரி
(D) மாவட்ட காவல் அலுவலகம்
விடை: (C) நேர் மூத்த அதிகாரி
3. வாய் மொழி விசாரணையின் போது விசாரணை அதிகாரி பிழையாளியிடம் எத்தனை கேள்விகள் கேட்பார்.
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
விடை -(B) 3
4. விட்டோடி என்பது எத்தனை நாட்கள் எவ்வித தகவலுமின்றி ஆஜர்யின்மையில் இருப்பதைக் குறிக்கும்?
(A) 20
(B) 21
(C) 22
(D) 23
விடை -(B) 21
5. ஒத்திவைத்த தண்டனைக் காலம் எந்த காலத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
(A) 3 மாதங்கள்
(B) 6 மாதங்கள்
(c) 9 மாதங்கள்
(d) 1 வருடம்
விடை -(B) 6 மாதங்கள்
6.ஒரு தலைமைக் காவலர் தற்செயல் விடுப்பு தவிர ஏனைய விடுப்பில் செல்லும் போது காவல் நிலைய அலுவல படிவம் ____ இல் ஓர் அறிக்கையை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
(A) 31
(B) 32
(C) 33
(D) 34
விடை -(D) 34
7.குறிப்பேடுகள் – பொருளடக்கம் எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 700
(B) 705
(C) 710
(D) 715
விடை -(C) 710
8. கூடுதல் காவல் துறை இயக்குநர் (ச(ம)ஓ) அனைத்து மாநகர காவல் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கால அளவு?
(A) வருடத்திற்கு ஒருமுறை
(B) இரண்டு வருடத்திற்கு ஒருமுறை
(C) மூன்று வருடத்திற்கு ஒருமுறை
(D) ஐந்து வருடத்திற்கு ஒருமுறை
விடை – இரண்டு வருடத்திற்கு ஒருமுறை
9.உட்கோட்ட அதிகாரி____களின் மந்தனக் கோப்புகளை பராமரிப்பார்.
(A) இ.நி.கா (தாலுக்கா கா.நி)
(B) மு.நி.கா (தாலுக்கா கா.நி)
(C) த.கா (தாலுக்கா கா.நி)
(D) உ.ஆ (தாலுக்கா கா.நி)
விடை – த.கா (தாலுக்கா கா.நி)
10.மாவட்ட ஆட்சியர் ____ யிடம் உதவி ஆய்வாளர் தரத்திற்கு கீழ் உள்ள ஒருவரை சிறப்பு காரணங்களுக்காக மாறுதல் செய்ய கோரலாம்.
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) காவல் துறை துணைத் தலைவர்
(C) காவல் துறை தலைவர்
(D) காவல் துறை இயக்குநர்
விடை -(A) காவல் கண்காணிப்பாளர்
11.காவல் கண்காணிப்பாளர் தனது தனி விசாரணைக்கு பின்னர் காவல் துறை துணைத்தலைவருக்கு எந்த படிவத்தில் அறிக்கை சமர்பிப்பார்?
(A) படிவம் 10
(B) படிவம் 11
(C) படிவம் 13
(D) படிவம் 14
விடை – படிவம் 11
12.உட்கோட்ட அதிகாரி கொடுங்குற்ற அறிக்கையினை _____ஒரு முறை சமர்பிக்க வேண்டும்.
(A) வாரத்திற்கு
(B) 15 நாட்களுக்கு
(C) மாதத்திற்கு
(D) இரண்டு மாதத்திற்கு
விடை -(A) வாரத்திற்கு
13.தங்களது மாவட்டத்தை விட்டு சிறப்பு அலுவலுக்காக செல்லும் தலைமைக் காவலர்களுக்கு கடவுச்சீட்டு படிவம் எண்______ வழங்கப்படும்.
(A) 93
(B) 94
(C) 95
(D) 96
விடை -(D) 96
14.துப்பறியும் பணி – காவல் நிலை ஆணை எண்ணை குறிப்பிடு
(A) 690
(B) 691
(C) 692
(D) 693
விடை -(C) 692
15.குற்ற வழக்குகளில் மேல் முறையீடு _____ மாதங்களுக்குள் செய்தல் வேண்டும்.
(A) 1
(B) 2
(C) 3
(D) 6
விடை -(C) 3
16.எந்த ஒரு காவல் நிலையமும் காவல் கண்காணிப்பாளரால்_____ ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்யாமல் இருக்கக் கூடாது.
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
விடை -(C) 4
17.ஆயுதப்படை படைபிரிவு உதவி ஆய்வாளர் தனது தினசரி அறிக்கையை படிவம் எண் ____சமர்ப்பிக்க வேண்டும்.
(A) 13
(B) 14
(C) 15
(D) 16
விடை -(D) 16
18.காவல் ஆய்வாளரின் குறிப்பு புத்தகம்____வருடங்களுக்கு வைத்திருத்தல் வேண்டும்.
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
விடை -(C) 3
19.தாலுக்கா காவல் நிலைய காவலர்களுக்கு வார ஓய்வு (Off-Duty) குறித்து எந்த காவல் நிலை ஆணை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 240
(B) 241
(C) 242
(D) 243
விடை -(D) 243
20.ஆய்வாளர் சேவை முத்திரைகளின் (Service Stamp) செலவீன அறிக்கையினை படிவம் எண் _____ இல் சமர்ப்பிக்க வேண்டும்.
(A) 30
(B) 31
(C) 32
(D) 33
விடை -(C) 32
21.கை விலங்கு_____ களுக்கு உபயோகித்தல் கூடாது.
(A) அரசு ஊழியர்
(B) பத்திரிக்கையாளர்
(C) வெளிநாட்டவர்
(D) அரசியல்வாதி
விடை -அரசியல்வாதி
22.காவலர் காவலில் உள்ள கைதிகள் – காவல் நிலை ஆணை எண்ணினை குறிப்பிடு
(A) 634
(B) 635
(C) 636
(D) 637
விடை -(D) 637
23.காவல் நிலையங்களில் காவல் மாற்று புத்தகம் படிவம் எண்____இல் பராமரிக்கப்படுகிறது.
(A) 70
(B) 60
(C) 50
(D) 40
விடை -(C) 50
24.படைவீரரை கைது செய்தால் அவ்விவரத்தை ____ மணி நேரத்திற்குள் அவருடைய படைப்பிரிவு உயர் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.
(A) 12
(B) 24
(C) 48
(D) 72
விடை -(B) 24
25. பிடியாணை வேண்ட வழக்குகளில் கைது செய்தல் பற்றிய விருப்புரிமை குறித்து எந்த காவல் நிலை ஆணை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 602
(B) 612
(C) 622
(D) 632
விடை -(C) 622
26.சிறப்பு தற்செயல் விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது குறித்து கா.நி.ஆ எண் _____ இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 260
(B) 262
(C) 264
(D) 266
விடை -(D) 266
27.தலைமைக் காவலர் /காவலர்களுக்கு தற்செயல் விடுப்பு___ஆல் ஒப்பளிப்பு செய்யப்படும்.
(A) உ.ஆ
(B) ஆய்வாளர்
(C) துணை காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் கண்காணிப்பாளர்
விடை – துணை காவல் கண்காணிப்பாளர்
28.இரயில்வே வாரண்ட் படிவம் எண் என்ன?
(A) 37
(B) 38
(C) 39
(D) 40
விடை -(A) 37
29.சிறு பணி புத்தகம் படிவம் எண்____இல் பராமரிக்கப்படுகிறது.
(A) 20
(B) 30
(C) 40
(D) 50
விடை -(C) 40
30.குடியிருப்பை உள் வாடகைக்கு விடுதல் குறித்து கா.நி.ஆ. எண் ___இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 286
(B) 288
(C) 296
(D) 298
விடை -(D) 298
31.அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்படும்_____பிரிவு IV இன் கீழ் வகைப்படுத்தப்படும்
(A) சுடுபடைக் கலன்கள்
(B) இதர ஆயுதங்கள்
(C) சூதாட்ட உபகரணங்கள்
(D) கன்னம் இடும் கருவிகள்
விடை – கன்னம் இடும் கருவிகள்
32.மாத குற்ற ஆய்வுரை மற்றும் மாதாந்திர குற்ற விவர அறிக்கை ஆகியவை குற்றப் புலனாய்வுக் கூடத்தால்_____இன் படி தயாரிக்க வேண்டும்.
(A) OMO No. 267
(B) OMO No. 268
(C) OMO No. 269
(D) OMO No. 270
விடை -(C) OMO No. 269
33.”குற்றவாளிகள்” – கா.நி.ஆணை எண்ணை குறிப்பிடுக
(A) 600
(B) 605
(C) 610
(D) 615
விடை -(D) 615
34.நீல அடையாள குறியீடு குற்றவாளி குறித்து எதைக் குறிப்பிடுகிறது?
(A) செயலற்று இருப்பவன்
(B)செயல் முனைப்புடையவன்
(C) தலை மறைவாய் இருப்பவன்
(D) சிறையில் உள்ளவன்
விடை – சிறையில் உள்ளவன்
35.”செயல் வகை அட்டவணை” – எந்த கா.நி.ஆ. எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 603
(B) 605
(C) 607
(D) 609
விடை -(D) 609
36.பயணப்படி குறித்து காவல் நிலை ஆணை எண்_____இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(A) 209
(B) 309
(C) 409
(D) 509
விடை -(B) 309
37.காவல் முறை மாற்று புத்தகம் பராமரிக்கப்படும் படிவம் எண்
(A) 48
(B) 49
(C) 50
(D) 51
விடை -(C) 50
38.பிற துறைகளுக்கு காவல் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக காவல் நிலைய ஆணை எண்____ இல் விளக்கப்பட்டுள்ளது.
(A) 334
(B) 333
(C) 332
(D) 331
விடை -(D) 331
39.காவல் வழி பாதுகாப்புக்கு செல்பவர்கள் தாங்கள் செல்லும் வழிதோறும் உள்ள _____ களில் அறிக்கை செய்ய வேண்டும்
(A) காவல் நிலையம்
(B) வட்ட அலுவலகம்
(C) உட்கோட்ட அலுவலகம்
(D) மாவட்ட காவல் அலுவலகம்
விடை -காவல் நிலையம்
40.சாலை ரோந்து பணி குறித்து காவல் நிலை ஆணை எண்____ தெரிவிக்கப்பட்டுள்ளது.
(A) 367
(B) 368
(C) 369
(D) 370
விடை -(C) 369
41.”குற்றப் புலனாய்வுக் கூடம்” – காவல் நிலை ஆணை எண்ணினை குறிப்பிடுக.
(A) 601
(B) 603
(C) 605
(D) 607
விடை -(D) 607
42.அஞ்சல் அலுவலக பதிவுகளை காவலர் ஆய்வு செய்தல் குறித்து விளக்கும் காவல் நிலை ஆணை எண்ணை குறிப்பிடு
(A) 504
(B) 604
(C) 704
(D) 804
விடை -(B) 604
43. சுடுபடைக் கலன்களால் காயங்கள் ஏற்படின் விசாரணை அலுவலர்களுக்கான அறிவுரை காவல் நிலை ஆணை எண் _____ இல் வழங்கப்பட்டுள்ளது.
(A) 503
(B) 553
(C) 603
(D) 653
விடை -(C) 603
44.அடையாள அணிவகுப்பு குறித்து காவல் நிலை ஆணை எண்____இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(A) 500
(B) 600
(C) 700
(D) 800
விடை -(B) 600
45.’குற்றத்தை ஒத்துக்கொள்ளத் தூண்டுதல்” குறித்து காவல் நிலை ஆணை எண்_____இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(A) 497
(B) 547
(C) 597
(D) 647
விடை -(C) 597
46.தீப்பிடித்தல் தொடர்பாக முதலில் கேள்விப்படும் காவல் ஆளிநர் உடனடியாக____க்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
(A) காவல் நிலையம்
(B) உயர் அதிகாரி
(C) மாவட்ட ஆட்சியர்
(D) தீயணைப்பு நிலையம்
விடை -தீயணைப்பு நிலையம்
47.நேர்முக கடிதம் குறித்து காவல் நிலை ஆணை எண்____இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 387
(B) 388
(C) 389
(D) 390
விடை -(C) 389
48.அலுவலக கடிதப் போக்குவரத்துகளில் இந்திய ஆண்களின் பெயர்களுக்கு முன்னால் மதிப்பிற்காக இச்சொல் சேர்க்கப்படும்
(A) ஸ்ரீ
(B) மிஸ்டர்
(C) திரு
(D)திருவாளர்
விடை – திரு
49.காவல் துறைக்குள்ளேயே அனுப்பப்படும் கடிதப் போக்குவரத்துகளுக்கு____மூலம் அனுப்ப அரசு அனுமதி வழங்கியுள்ளது.
(A) குறிப்பாணை
(B) கடிதம்
(C) செய்முறை ஆணை
(D) மேல்வரைவு
விடை -குறிப்பாணை
50.பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காய சான்றிதழ் வழங்க மருத்துவ அதிகாரிக்கு ஒவ்வொரு வழக்குக்கும் கட்டணமாக வழங்க வேண்டும்.
(A) 10
(B) 20
(C) 30
(D) 50
விடை -(A) 10
51.”சந்தேகத்துக்குரியவர்” – காவல் நிலை ஆணை எண்ணினை குறிப்பிடு
(A) 748
(B) 749
(C) 750
(D) 751
விடை -(B) 749
52.மோட்டார் அல்லாத வாகன விபத்து குறித்து தொகுப்பு ஆண்டு விவர அறிக்கை படிவம் _____ இல் தயாரிக்க வேண்டும்.
(A) 67
(B) 68
(C) 69
(D) 70
விடை -(C) 69
53.படிவம் 67 மற்றும் 70 இல் அறிக்கைகள் வரப் பெற்றால் உடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் படிவம் ____உள்ள இரண்டு தனி பேரேடுகளில் விவரம் பதிவுசெய்தல் வேண்டும்.
(A) OM No.50A
(B) OM No.50B
(C) OM No. 50C
(D) OM No.50D
விடை -(A) OM No.50A
54.ஆயுதப்படையில் செய்ய வேண்டிய நிலையான கடமையில் இதுவும் ஒன்று
(A) பாதுகாப்புப் பணி
(B) வழி காவல் பணி
(C) பல்வகைப் பணி
(D) ஆயுதம் செப்பனிடும் பணி
விடை -ஆயுதம் செப்பனிடும் பணி
55.காவலர்களுக்கு வேலையில்லா நாள் எந்த வாரத்திலாவது கொடுக்கப்படாவிட்டால் அவருக்கு அளிக்கப்படும் சலுகை
(A) பயணப்படி
(B) மிகை நேர அலுவல் ஊதியம்
(C) உணவுப்படி
(D) அகவிலைப்படி
விடை – மிகை நேர அலுவல் ஊதியம்
56.படைக்கலன்களை சுத்தப்படுத்துவது யாருடைய பொறுப்பு?
(A) காவலர்
(B) எழுத்தர்
(C) சிறு படைபகுதித் தலைவர்
(D) ஆயுதப்படை ஆய்வாளர்
விடை -(C) சிறு படைபகுதித் தலைவர்
57.சிறுப்படைப் பகுதியின் வேலை முறைப்படியினை பராமரிப்பவர் யார்?
(A) எழுத்தர்
(B) கவில்தர்
(C) படைப்பகுதி தலைமை சார்ஜன்டு
(D) ஆயுதப்படை ஆய்வாளர்
விடை – படைப்பகுதி தலைமை சார்ஜன்டு
58.ஏவலர் விசாரணை அறை குறித்து காவல் நிலை ஆணை எண் ___இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 409
(B) 410
(C) 411
(D) 412
விடை -(C) 411
59.குற்றக் கும்பல், சதி வழக்குகள் குறித்து எந்த காவல் நிலை ஆணை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) 576
(B) 577
(C) 578
(D) 579
விடை -(B) 577
60.காவலர் காவலில் தற்கொலை நடந்த வழக்குகளில்___க்கு காவல் கண்காணிப்பாளரால் அறிக்கை தாமதமின்றி அனுப்பப்படல் வேண்டும்.
(A) காவல் துறை துணை தலைவர்
(B) காவல் துறை தலைவர்
(C) காவல் துறை இயக்குநர்
(D) அரசு
விடை -(C) காவல் துறை இயக்குநர்
61.கள்ளப்பணம் குறித்து எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 578
(B) 579
(C) 580
(D) 581
விடை -(A) 578
62.இளம் குற்றவாளி கைது குறித்து எந்த காவல் நிலை ஆணை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) 574
(B) 575
(C) 576
(D) 577
விடை -(A) 574
63.படை திரட்டு கட்டளைகள் குறித்து காவல் நிலை ஆணை எண்____இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
(A) 411
(B) 412
(C) 413
(D) 414
விடை -(C) 413
64.தடிபயிற்சி, கலகக்கூட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) 416
(B) 417
(C) 418
(D) 419
விடை -(A) 416
65.வேலை முறைப்படியை ஆயுதப்படை ஆய்வாளரால் குறைந்தது ஒரு முறை தணிக்கை செய்ய வேண்டும்.
(A) வாரத்திற்கு
(B) பதினைந்து நாட்களுக்கு
(C) மாதத்திற்கு
(D) இரண்டு மாதத்திற்கு
விடை -(C) மாதத்திற்கு
66.குடியிருப்பு பதிவேடு படிவம் எண் ____இல் பராமரிக்கப்படும்.
(A) 137
(B) 138
(C) 139
(D) 140
விடை-(C) 139
67.மாறுதலுக்கான காத்திருப்போர் பட்டியல்___முறைப்படி பராமரிக்க வேண்டும்.
(A) முதல் எழுத்து வரிசை
(B) பிறந்த தேதி
(C) பணியில் சேர்ந்த தேதி
(D) கால வரிசை
விடை-(D) கால வரிசை
68.விசாரணை மறுக்கப்பட்டால் உடன்____ மட்டும் அனுப்பப்படல் வேண்டும்
(A) அறிக்கை
(B) CAR
(C) முதல் தகவல் அறிக்கை
(D) வழக்கு நாட்குறிப்பு
விடை-(C) முதல் தகவல் அறிக்கை
69.பிடியாணையில்லாமல் பிடிக்கத்தகா வழக்குகள் குறித்து எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) 559
(B) 560
(C) 561
(D) 562
விடை -(C) 561
70.எது நடந்தவுடன் காவல் துறை இயக்குநர் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
(A) கூட்டு கொள்ளை
(B) கொலை
(C) பொருளாதார குற்றம்
(D) வகுப்புக் கலவரம்
விடை: (D) வகுப்புக் கலவரம்
71.பெரும் குற்றங்களுக்கு ச/பி___1955 த.நா.கா.சார்நிலை பணியாளர் ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
(A) 17(அ)
(B) 17 (ஆ)
(C) 3(அ)
(D) 3(ஆ)
விடை: (D) 3(ஆ)
72. காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை நற்பணி பதிவு (GSES) பெற முடியும் எனக் கூறும் காவல் நிலை ஆணை எண் எது?
(A) காவல் நிலைய ஆணை எண் 57
(B) காவல் நிலைய ஆணை எண் 58
(c) காவல் நிலைய ஆனைா எண் 59
(D) காவல் நிலைய ஆணை எண் 60
விடை (B) காவல் நிலைய ஆணை எண் 58
73. பணியாளர் மந்தணக் கோப்புகள் எந்த பதவி மற்றும் பதவிக்கு மேல் உள்ள அலுவலருக்கு ஆரம்பிக்கப்பட வேண்டும்?
(A) ஆய்வாளர்
(B) சார் ஆய்வாளர்
(c) தலைமைக்காவலர்
(D) முதல் நிலை காவலர்
விடை(c) தலைமைக் காவலர்
74. பணியாளர் மந்தணக் கோப்புகள் ஆய்வாளர்/சேம நல படை ஆய்வாளர் கிரம நிலைக்கு மேல் பேணுபவர்
(A) காவல்துறை இயக்குநர்
(B) காவல் துறை கூடுதல் இயக்குநர்
(c) காவல் துறை தலைவர்
(D) காவல் துறை துணைத் தலைவர்
விடை (A) காவல்துறை இயக்குநர்
75. சன்னத் (Sannads) அட்டையின் படிவ எண்?
A. படிவ எண் 41
B. படிவ எண் 42
C. படிவ எண் 43
D. படிவ எண் 44
விடை: A. படிவ எண் 41 (Form No. 41)
76. சன்னத் (Sannads) அட்டை குறித்து விளக்கும் காவல் நிலை ஆணை எண் எது?
(A) காவல் நிலைய ஆணை எண் 290
(B) காவல் நிலைய ஆணை எண் 294
(c) காவல் நிலைய ஆனைா எண் 194
(D) காவல் நிலைய ஆணை எண் 296
விடை (B) காவல் நிலைய ஆணை எண் 294
77. அனைத்து பொது மக்கள் கேளிக்கைகளிலும் காவல் முன்னேற்பாடுகளின் பொறுப்பில் உள்ளவர் ஆளுநருக்கு நெருங்கி காத்திருக்க வேண்டும்.
(A) துணை காவல் கண்காணிப்பாளர் அதற்கு மேற்பட்ட படிநிலை அலுவலர்
(B) ஆய்வாளர்
(C) சார்பு ஆய்வாளர்
(D) தலைமைக் காவலர்
விடை (A) துணை காவல் கண்காணிப்பாளர் அதற்கு மேற்பட்ட படிநிலை அலுவலர்
78. காவல் நிலைய குற்ற வரலாறு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
A.பதினோறு பகுதிகள்
B.ஐந்து பகுதிகள்
C.பத்து பகுதிகள்
D.இரண்டு பகுதிகள்
விடை: B.ஐந்து பகுதிகள்
79. குற்றத்தை கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டும் செய்திக்காகவும், குற்றவாளிகளை பிடிப்பதற்காகவும் தனிப்பட்ட நபர்களுக்கு காவல் துறை இயக்குநர் ஒப்புவித்து வழங்கும் பண வெகுமதி தொகை
(A) ரூபாய் 500
(B) ரூபாய் 300
(c) ரூபாய் 400
(D) ரூபாய் 200
விடை (A) ரூபாய் 500
80. காவல் மாவட்ட அலுவலர்கள் அவர்களுடைய சிறு கைத்துப்பாக்கிகளை (pistol) ஆண்டுக்கொருமுறை ஆய்வுக்காக யாரிடம் நேரில் காட்ட வேண்டும்?
(A) காவல் கண்காணிப்பாளரிடம்
(B) மாவட்ட ஆட்சித்தலைவரிடம்
(C) வருவாய் கோட்டாட்சியரிடம்
(D) சிறு படைக்கல தளவாயிடம்
விடை: (C) வருவாய் கோட்டாட்சியரிடம்