Course Content
GEOGRAPHY TEST – 3
100Q
0/1
GEOGRAPHY TEST – 03
About Lesson

GEOGRAPHY TEST QUESTIONS 

201. இந்தியாவில் முதன் முதலாக பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
A) கல்கத்தா
B) மும்பை
C) மைசூர்
D) கோயம்புத்தூர்

 

202. இந்தியாவில் தற்போது எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
A) 5
B) 11
C) 12
D) 15

 

203. பருத்தி பயிரிட சிறந்த மண் எது?
A) வண்டல் மண்
B) களிமண்
C) மெல்லிய, நீர்வடிந்த மண்
D) கருப்பு மண்.

 

204. எந்த மாநிலத்தில் சூரிய சக்தி நடைமுறையில் பயன்படுத்துகிறது?
A) ஒரிஸா
B) பஞ்சாப்
C) பீகார்
D) இராஜஸ்தான்

 

205. வடகிழக்கு இரயில்வேயின் தலைமையிடம்
A) அஸ்ஸாம்
B) கல்கத்தா
C) கோரக்பூர்
D) தானாபூர்

 

206. துர்காபூர், பிலாய் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் இரும்பு உருக்கு ஆலைகள் எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் அமைக்கப்பட்டன?
A) முதல் ஐந்தாண்டு திட்டம்
B) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்
C) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்
D) நான்காம் ஐந்தாண்டு திட்டம்

 

207. இந்தியாவின் எந்த மாநிலம் ‘சர்க்கரைக் கிண்ணம்’ என அழைக்கப்படுகிறது?
A) ஆந்திரப்பிரதேசம்
B) உத்திரப்பிரதேசம்
C) இமாசலப்பிரதேசம்
D) தமிழ்நாடு

 

208. உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாவார் சுரங்கம் எதற்குப் பெயர் பெற்றது?
A) இரும்புத்தாது
B) தாமிரம்
C) மாங்கனீஸ்
D) துத்தநாகம்

 

 

209. இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு இடம் பெறும் பிரதேசத்தை கீழ்க்கண்டவற்றுள் கண்டறிக:
A) தென்மேற்கு இந்தியா
B) வடகிழக்கு இந்தியா
C) தென் இந்தியா
D) வடமேற்கு இந்தியா

 

 

210. கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களின் கூட்டாக பாங் அணைக்கட்டு அமைந்துள்ளது
A) ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான்
B) குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிஸா
C) குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப்
D) இராஜஸ்தான், ஹரியானா, குஜராத்

 

211. இந்தியாவின் பருத்தி விளைச்சலுக்கும், சாகுபடி செய்யவும் உகந்த பகுதியாக உள்ள பிரதேசம்
A) ரான் ஆஃப் கட்ச்
B) காஷ்மீர் பள்ளத்தாக்கு
C) சிந்து கங்கைச் சமவெளி
D) தக்காண பீடபூமி

 

212. இந்திய சுரங்கங்களுள் இச்சுரங்கத்தில் தான் ஊது உலைக்கேற்ற தரமான நிலக்கரி கிடைக்கின்றன-
A) ஜாரியா
B) இராமகுண்டம்
D) இராணிகஞ்ச்
C) நெய்வேலி

 

213. கீழ்க்கண்ட உற்பத்தி தொழிற்சாலைகளுள் எத்தொழிற்சாலை தற்கால தொழில்துறை வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும்?
A) இரும்பு எஃகுத் தொழிற்சாலை ,
B) காகிதத் தொழிற்சாலை
C) நெசவுத் தொழிற்சாலை
D) மோட்டார் வாகனத் தொழிற்சாலை

 

 

214. இந்தியாவின் இவ்விரு மாநிலங்களில் இரும்புக் கனியின் பரவல் மிகுதியாக காணப்படுகின்றன
A) மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
B) பீகார் மற்றும் ஒரிஸா
C) ஒரிஸா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
D) பீகார் மற்றும் தமிழ்நாடு

 

 

215. இந்தியாவில் எம்மாநிலம் நுண்மின் கருவி நகர் என அழைக்கப்படுகிறது
A) பெங்களூர்
B) போபால்
C) சென்னை
D) ஹைதராபாத்

 

 

216. தென் பீகாரில் கனரகத் தொழிற்சாலைகள் அதிக அளவில் அமர்ந்திருப்பதற்கு முக்கியக் காரணம்
A) மலிவான தொழிலாளர்கள்
B) முதலீடு
C) கச்சாப் பொருள்
D) கல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ளது

 

217. தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக:
A) ரூர்கேலா. – ஒரிஸா
B) பிலாய். – பீஹார்
C) துர்காப்பூர். – மேற்கு வங்காளம்
D) பத்ராவதி. – கர்நாடகம்

 

 

218. இந்தியாவின் எந்தப் பகுதியில் கண்டக் காலநிலை நிலவுகிறது?
A) தெற்குப் பகுதி
B) மேற்குப் பகுதி
C) வடகிழக்குப் பகுதி
D) வடமத்தியப் பகுதி

 

219. ‘மாங்காய் மழை’ எங்கு முக்கியமாக காணப்படுகிறது?
A) மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம்
B) தக்காண பீடபூமி
C) குஜராத் மற்றும் மஹராஷ்டிரா
D) கேரளா மற்றும் கர்நாடகா

 

220. சம்பல் நதி கீழ்க்கண்ட மாநிலங்களில் ஓடுகிறது
A) மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹார்
B) உ.பி, மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹார்
C) உ.பி, மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான்
D) உ.பி, மத்தியப் பிரதேசம் மற்றும ஒரிஸ்ஸா

 

221. இந்த இந்திய மாநிலத்தில் கால்வாய்ப் பாசனம் மிகுதியாக காணப்படுகிறது
A) பஞ்சாப்
B) ஆந்திரப் பிரதேசம்
C) பீஹார்
D) தமிழ்நாடு

 

222. இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகள் பெரும்பாலானவை தோன்றும் இடம்
A) தென் கோளார்த்த கடல் பகுதி
B) அரபிக்கடல்
C) தென்மேற்கு வங்காள விரிகுடாக் கடல்
D) தென்கிழக்கு வங்காள விரிகுடாக்கடல்

 

 

223. கீழ்வரும் இந்திய பிரசேதங்களுள் எது அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது?
A) ஆரவல்லி தொடர் குன்றுகள்
B) தக்காண பீடபூமி
C) இமயமலை தொடர் குன்றுகள்
D) மாளவப் பீடபூமி

 

 

224. வருடத்தின் எப்பருவத்தில் வங்காள விரிகுடாவில் இருந்து தோன்றும் அயனிமண்டலச் சூறாவளியின் உன்னத அலைவெண் காணப்படுகிறது?
A) தென் மேற்கு பருவகாற்றுக் காலம்
B) வடகிழக்கு பருவகாற்றுக் காலம்
C) இலையுதிர் காலம்
D) கோடை காலத்திற்குப் பின்னர்

 

 

225. இலையுதிர் காடுகளின் மற்றொரு பெயர்
A) பசுமை மாறாக் காடுகள்
B) பருவகாற்று காடுகள்
C) மாங்குரோவ் காடுகள்
D) அல்பைன் காடுகள்

 

226. எந்த மாநிலத்தில் அதிகமான ஏரிப்பாசன பரப்பளவு காணப்படுகிறது?
A) தமிழ்நாடு
B) உத்திரப்பிரதேசம்
C) மேற்கு வங்காளம்
D) கர்நாடகம்

 

 

227. கீழ்வரும் மாநிலங்களில் அதிக அளவில் இரும்புத் தாது சேம ஒதுக்கீடு காணப்படும் மாநிலம்
A) பீஹார்
B) மத்தியப்பிரதேசம்
C) ஒரிஸ்ஸா
D) மேற்கு வங்காளம்

 

 

228. மத்திய தாதுச்சுரங்க ஆராய்ச்சி நிலையம் காணப்படும் இடம்
A) தன்பாத்
B) பூனே
C) கட்டாக்
D) பிம்பிரி

 

 

229. அதிக அளவு இயற்கை ரப்பரை உற்பத்தி செய்வது
A) கர்நாடகம்
B) கேரளா
C) தமிழ்நாடு
D) மேற்கு வங்காளம்

 

230. பிரம்மபுத்திரா ஆற்றின் மற்றொருப் பெயர்
A) டிஸ்டா
B) சாங்கோ
C) கண்டக்
D) யமுனை

 

 

231. எம்மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 1040 பெண்கள் என்ற மிகச் சாதகமான பால் விகிதம் காணப்படுகிறது?
A) பீஹார்
B) கேரளா
C) அஸ்ஸாம்
D) தமிழ்நாடு

 

 

232. கார்பெட் தேசியப் பூங்கா காணப்படும் மாநிலம்
A) பீஹார்
B) கர்நாடகா
C) மத்தியப் பிரதேசம்
D) உத்திரப் பிரதேசம்
குறிப்பு: உத்திரப்பிரதேசத்தை பிரித்ததால் தற்போது உத்தரகாண்ட்-ல் உள்ளது

 

233. அதிக முதலீட்டுடன் நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி, பரந்த அளவில் பணப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயத்தின் பெயர்
A) தீவிர விவசாயம்
B) தோட்டப்பயிர் விவசாயம்
C) பரந்த முறை விவசாயம்
D) சுயதேவை விவசாயம்

 

234. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ள இடம்
A) அரபிக்கடல்
B) வங்காள விரிகுடா
C) இந்து மகாசமுத்திரம்
D) சிவப்புக் கடல்

 

 

235. எந்த தாது இருப்பதால் செம்மண் நிறம் சிவப்பாக இருக்கின்றது?
A) நைட்ரஜன்
B) பொட்டாசியம்
C) மாங்கனீசு
D) இரும்புத்தாது

 

 

236. 1991 ஆம் ஆண்டு கணக்கீடுப்படி இந்தியாவின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட நகரம்
A) சென்னை
B) கல்கத்தா
C) மும்பாய்
D) புதுடெல்லி

 

237. பட்டியல் 1 ஐ, பட்டியல் 11 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I. பட்டியல் II
a) மகாநதி. – 1. திரியம்பக்
b) கோதாவரி. – 2. மஸ்தார் ஏரி
c)கிருஷ்ணா. – 3. மகாபலேஸ்வரம்
d) காவேரி. – 4. தலைக்காவேரி
குறியீடுகள் :
A) 4 1 2 3
B) 2 1 3 4
C) 3 1 2 4
D) 1 3 4 2

 

 

238. இந்தியாவின் இரும்புத்தாது மிக அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம்
A) பீஹார்
B) ஒரிஸ்ஸா
C) மத்தியப் பிரதேசம்
D) கர்நாடகம்

 

 

239. கடின தானிய வகையைச் சார்ந்தவை
A) பருத்தி விதைகள்
B) அரிசி
C) மக்காச்சோளாம் மற்றும் பார்லி
D) பருப்புவகைகள்

 

 

240. உலகத்திலேயே நீளமான இரயில்வே நடைமேடை இருக்கும் நாடு
A) சிங்கப்பூர்
B) லண்டன்
C) அமெரிக்கா
D) இந்தியா

 

 

241. ஜப்பானின் நாணயம்
A) ரூபாய்
B) டாலர்
C) யென்
D) தினார்

 

 

242. முதன் முதலில் இந்தியாவில் சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்ட இடம்
A) கல்கத்தா
B) சென்னை
C) மும்பாய்
D) டெல்லி

 

 

243. பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I.                                                                                             பட்டியல் II
a) ஹிந்துஸ்தான் புகைப்பட சுருள் தொழிற்சாலை. – 1. கோயம்புத்தூர்
b) அணுமின் நிலையம்.                                                               – 2. ஊட்டி
c) தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம்.            – 3. நெய்வேலி
d) அனல்மின் உற்பத்தி நிலையம்.                                      – 4. கல்பாக்கம்
A) 1 2 3 4
B) 2 4 1 3
C) 3 2 1 4
D) 2 3 4 1

 

244. இந்தியாவில் எந்த நகரை கணிணி நகரம் என்று அழைக்கிறோம்?
A) மும்பை
B) டெல்லி
C) பெங்களூர்
D) கல்கத்தா

 

 

245. இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் உள்ள இடம்
A)தாராபூர்
B) கல்பாக்கம்
C) நரோரா
D) பூனா

 

246. ரொடீஷியா என்ற நாட்டின் புதுப்பெயர்
A) நமீபியா
B) மியான்மார்
C) ஜிம்பாப்வே
D) டான்சானியா

 

247. சூரியன். ____ க்கு மேல் செங்குத்தாக பிரகாசிக்கும் பொழுது சம பகலிரவு நாள் ஏற்படுகிறது
A) பூமத்தியரேகை
B) கடகரேகை
C) மகர ரேகை
D) அண்டார்டிக் வட்டம்

 

248. பெரிய மாலய மலைகளில் காணப்படாத தொடர் குன்று
A) காரகோரம்
B) கைலாஷ் தொடர்குன்றுகள்
C) நங்கபர்வதம்
D) பிர்பஞ்சால்

 

 

249. கீழ்வருவனவற்றில் இந்தியாவில் மழை மறைவு பிரதேசமாக எது அழைக்கப்படுகிறது?
A) மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி
B) மலபார் கடற்கரை
C) சிவாலிக் குன்றுகள்
D) காசி குன்றுகள்

 

 

250. ஈரத்தன்மை கொண்ட பொழுது உப்புவதும், வறண்ட தன்மை காணப்படும் பொழுது வெடிப்பதுமான தன்மை கொண்ட மண்
A) வண்டல் மண்
B) செம்மண்
C) கரிசல் மண்
D) சரளை மண்

 

 

251. கீழ்வரும் மாநிலங்களுள் எது அதிகமான லிக்னைட் சேமிப்பை பெற்றுள்ளது?
A) தமிழ்நாடு
B) இராஜஸ்தான்
C) குஜராத்
D) ஜம்மு & காஷ்மீர்

 

 

252. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் அமைந்துள்ள ஆற்றின் பெயர்
A) சினாப்
B) ஜீலம்
C) ரவி
D) சிந்து

 

253. இந்தியாவில் காபி உற்பத்தியின் முதன்மையிடம் வகிப்பது
A) கேரளா
B) தமிழ்நாடு
C) கர்நாடகா
D) அஸ்ஸாம்

 

 

254. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் காணப்படும் துறைமுகம்
A) கேரளா
B) கொச்சின்
C) கல்கத்தா
D) விசாகப்பட்டினம்

 

 

255. கீழ்வரும் பொருட்களில் இந்தியாவிற்கு அதிக அன்னியச் செலாவணியை பெற்றுத் தருவது
A) சணல்
B) இரும்பு எஃகு
C) தேயிலை
D) சர்க்கரை

 

256. கீழ்வருவனவற்றுள் எது கங்கையாற்றின் துணையாறு அல்ல?
A) கான்டெக்
B) கோமதி
C) யமுனை
D) சாம்பல்

 

 

257. கீழ்வருவனவற்றுள் எது துறைமுகம் அல்ல?
A) கொச்சின்
B) பாரதீப்
C) இராமேஸ்வரம்
D) விசாகப்பட்டினம்

 

258. வைகை ஆறு தோன்றுமிடம்
A) அகஸ்தியர் குன்றுகள்
B) ஏலமலை
C) கொல்லி மலை
D) கூர்க்

 

 

259. இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்
A) கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
B) கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு
C) தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா
D) கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரப் பிரசேதம்

 

 

260. நெசவுத் தொழிற்சாலை ____ ஐ அடிப்படையாக கொண்டது
A) விவசாயம்
B) தாதுப் பொருட்கள்
C) இரசாயனத் தொழிற்சாலை
D) இவற்றில் ஏதுமில்லை

 

 

261. விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பெயர்
A) வெள்ளப் புரட்சி
B) நீலப்புரட்சி
C) பசுமைப் புரட்சி
D) வெண்மைப் புரட்சி

 

 

262. கேரளாவையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் முக்கிய கணவாய்
A) பால்காட்
B) தால்காட்
C) போர்காட்
D) ஆரம்போலி

 

263. பட்டியல் 1 ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I. பட்டியல் II
a) வண்டல் மண். – 1. கோவை, ராமநாதபுரம்
b) செம்மண். – 2. ராமேஸ்வரம், தூத்துக்குடி
c) கரிசல் மண். – 3. காவேரி டெல்டா
d) சதுப்பு நிலம். – 4. தமிழ் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு நிலம்
குறியீடுகள் :
A) 3 1 2 4
B) 3 4 1 2
C) 4 2 1 3
D) 2 1 3 4

 

264. பட்டியல் 1 ஐ, பட்டியல் 11 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) மிக முக்கியப் பயிர்.     – 1. கரும்பு
b) வியாபாரப் பயிர்.          – 2. நெல்
c) ஒரு ஹெக்டேருக்கு 100 டன் – 3. அதிக அளவில் விளையும் பயிர்கள்
d) பசுமைப் புரட்சி. – 4. சணல்
குறியீடுகள் :
A) 2 4 3 1
B) 2 4 1 3
C) 3 2 1 4
D) 3 1 4 2

 

265. எது சரியாகப் பொருந்தவில்லை?
A) பருத்தி தொழில்கள். – கோயம்பத்தூர்
B) தீப்பெட்டி தொழில்கள். – சிவகாசி
C) காகித தொழில்கள். – புகளூர்
D) தோல் பதனிடும் தொழில்கள். – மதுரை

 

266. இந்திய நேரம் கிரீன்விச் நேரத்தை விட _____ அதிகமானது
A) 4/2 மணி நேரம்
B) 6 மணி நேரம்
C) 8/2 மணி நேரம்
D) 5/2 மணி நேரம்

 

 

267. கீழ்க்கண்டவற்றில் எந்த எரிபொருள் சுற்றுப்புற சூழலை குறைந்த அளவு பாதிக்கும்?
A) டீசல்
B) நிலக்கரி
C) ஹைட்ரஜன்
D) மண்ணெண்ணெய்

 

 

268. தமிழ் நாட்டில் தோல் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டம் எது?
A) வேலூர்
B) இராமநாதபுரம்
C) நாமக்கல்
D) தர்மபுரி

 

 

269. தமிழ் நாட்டில் “நெல்களஞ்சியம்” என அழைக்கப் படுவது
A) திருச்சிராப்பள்ளி மாவட்டம்
B) தஞ்சை மாவட்டம்
C) நாகை மாவட்டம்
D) செங்கல் மாவட்டம்

 

 

270. தமிழ் நாட்டின் ‘பருத்தி நகரம்’ எனப்படுவது
A) மதுரை
B) காஞ்சிபுரம்
C) கரூர்
D) கோயம்புத்தூர்

 

 

271. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய இந்தியாவுடன் ஒத்துழைப்பு நல்கும் நாடு எது?
A) பிரான்ஸ்
B) யு.எஸ்.ஏ
C) ரஷ்யா
D) ஜெர்மனி

 

 

272. எந்த இந்திய மாநிலம் இரு தலைநகர்களை கொண்டது?
A) கேரளா
B) ஜம்மு & காஷ்மீர்
C) பஞ்சாப்
D) குஜராத்

 

 

273. பரப்பளவில் மிகப்பெரிய இந்திய மாநிலம் எது?
A) மத்தியப்பிரதேசம்
B) உத்திரப் பிரதேசம்
C) தமிழ்நாடு
D) மேற்கு வங்காளம்

 

 

274. எல்நினோ என்பது என்ன?
A) வைரஸ்களினால் ஏற்படும் ஒருவகை வியாதி
B) இதனால் அதிக மழை பொழிகிறது
C) மகா சமுத்திரங்களையும், சீதோஷ்ணத்தையும் வெப்பமடைய செய்கிறது
D) இது ஒரு மேற்கத்திய இசை நடனம்

 

 

275. எந்த நகரங்களிடையேயானது நீண்டதூர மின்சாரப் பாதை
A) மும்பாய். – டெல்லி
B) கல்கத்தா. – டெல்லி
C) கல்கத்தா. – மும்பாய்
D) இவை எதுவுமில்லை

 

 

276. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் “எது?
A) யு. எஸ். ஏ
B) சுவிட்சர்லாந்து
C) லாஸ் ஏஞ்சல்ஸ்
D) இவை எதுவுமில்லை

 

 

277. தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் நகரம் கீழ்க்கண்ட ஒன்றின் மூலமாக அதிகமாக தெரிய வந்தது
A) லாரி அமைப்புக் கட்டுதல்
B) கோழி வளர்ப்பு
C) ஆடைத் தொழில்
D) பனை சாகுபடி

 

 

278. பட்டியல் 1 ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) குங்குமப் பூ. – 1. பீஹார்
b) அரக்கு.          – 2. தமிழ்நாடு
c) கிராம்பு.        – 3. ஜம்மு காஷ்மீர்
d) ஆமணக்கு விதை – 4. கேரளா
குறியீடுகள் :
A) 2 3 4 1
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 3 1 4 2

 

 

279. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் திரும்ப பெறமுடியாத சக்தி மூலம்?
A) காற்று
B) கடல் அலை
C) மண்ணெண்ணெய்
D) புவிஈர்ப்பு சக்தி

 

280. கீழ்க்கண்ட எந்த மாநிலம் மற்ற மாநில எல்லைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ளது?
A) மேற்கு வங்காளம்
B) மத்தியப் பிரதேசம்
C) உத்திரப் பிரதேசம்
D) கர்நாடகம்

 

 

281. புகழ் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு இவற்றிற்கிடையே காணப்படுகின்றது
A) பிர்பஞ்சால் மற்றும் கிழக்கு இமாத்திரி மலைத் தொடர்
B) பிர்பஞ்சால் மற்றும் மேற்கு இமாத்திரி மலைத் தொடர்
C) காரகோரம் மலைத் தொடர் மற்றும் இமாத்திரி
D) டங்மலைத் தொடர் மற்றும் சிவாலிக்

 

282. எங்கு மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலை காணப்படுகிறது?
A) லே
B) சித்ராதுர்க்
C) பாட்னா
D) கர்நாடகம்

 

283. வடகிழக்கு பருவகாற்று காலத்தில் மழை வீழ்ச்சி பெறும் பிரதேசம்
A) மலபார் கடற்கரை
B) கொங்கண கடற்கரை
C) சோழ மண்டல கடற்கரை
D) சர்கார் கடற்கரை

 

284. இமயமலை ஆறுகள் வற்றாத ஆறுகளாக இருப்பதற்கான காரணம்
A) தென்மேற்கு பருவகாற்று மழை வீழ்ச்சி தருகிறது
B) வடகிழக்கு பருவகாற்று மழை வீழ்ச்சி தருகிறது
C) பனி உருகுவதால் நீர் கிடைக்கிறது
D) ஆண்டு முழுவதும் மழைவீழ்ச்சி கிடைக்கிறது

 

285. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
கூற்று (A): தேயிலையும் காபியும் நீலகிரி மலையில் சாகுபடி செய்யப்படுகிறது
காரணம் (R) : இரண்டு பயிர்களின் வளர்ச்சிக்கும் ஒரே வகையான காலநிலை தேவைப்படுகிறது
கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு
சரியான பதிலை தேர்ந்தெடு:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) , (A) க்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி

 

 

286. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
கூற்று (A): பருத்தி கருப்பு மண்ணில் பயிரிடப் படுகிறது
காரணம் (R) : கருப்பு மண் ஈரத்தை தேக்கி வைத்து கொள்வதில்லை
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடு:
A) (A) சரி; மேலும் (R), (A) க்கு சரியான விளக்கம்
B) (A) சரி ஆனால் (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி

 

287. இந்தியாவில் கீழ்க்கண்டவற்றுள் மிக உயர்ந்த மரம் எது?
A) தேக்கு
B) சால்
C) சந்தனமரம்
D) ரோஸ்வுட்

 

 

288. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
கூற்று (A). : ஒரே வகையான மூலப்பாறைகள் வெவ்வேறு காலநிலையில் வேறுபட்ட மண்ணை ஏற்படுத்துகிறது
காரணம் (R) : மண் அமைவதில் காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடு:
A) (A) மற்றும் (R) சரி மேலும் (A) க்கு சரியான விளக்கம் ஆகும்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி

 

289. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
கூற்று (A): இந்திய மக்கள் தொகை 1921க்குப் பின்னர் விரைவில் வளர்ச்சியடைந்தது
காரணம் (R) : இந்தியாவில் மக்கள் தொகை 1921க்குப் பின்னர் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் குறைந்தது
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடு:
A) (A) மற்றும் (R) சரி மேலும் (A) க்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி ஆனால் (A) க்கு (R) சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி

 

 

290. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எதில் மக்கள் தொகை இறங்குமுகமாக உள்ள மாநிலங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது?
A) மத்தியப் பிரதேசம், பீகார், உத்திரப் பிரதேசம்
B) உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம்
C) உத்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம்
D) மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், பீகார்

 

291. பட்டியல் 1 ஐ, பட்டியல் 11 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I. பட்டியல் II
a) நேப்பா நகர். – டீசல்
b) வாரணாசி. – ஆகாய விமானத் தொழிற்சாலை
c) நாசிக்           – காகிதத் தொழிற்சாலை
d) கலமசேரி. – இயந்திர தொழிற்சாலை
குறியீடுகள் :
A) 3 1 2 4
B) 3 1 4 2
C) 3 2 4 1
D) 4 1 2 3

 

 

292. கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
கூற்று (A) : பீகாரில் முக்கியமான இரும்பு எஃகு சுரங்கங்கள் காணப்படுகின்றன
காரணம் (R) : பீகார் கனிம வளங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலம்
கீழ்க்காணும் குறியீடு மூலம் சரியான விடையை தேர்ந்தெடு:
A) (A) மற்றும் (R) சரி மேலும் (R), (A) க்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி ஆனால் (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி

 

293. பட்டியல் 1 ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் I.                                                       பட்டியல் II
a) இந்தியாவின் ஆபரணம்                   – 1. மணிப்பூர்
b) தோட்டநகர்.                                            – 2. பெங்களூர் ·
c) ஐந்தாறுகளின் நிலம்                         – 3. பஞ்சாப்
d) தாவரவியலாளர்கள்சொர்க்கம்.     – 4. சிக்கிம்
A) 1 2 3 4
B) 2 1 3 4
C) 4 1 3 2
D) 1 4 3 2

 

 

294. என்.எச்.47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கின்றன
A) கன்னியாகுமரி – டெல்லி
B) கன்னியாகுமரி – சேலம்
C) சென்னை. – திண்டுக்கல்
D) மும்பாய். – டெல்லி

 

 

295.1991 ஆம் ஆண்டு கணக்கீடுப்படி நகரங்களில் மக்கட்தொகையை அடிப்படையாகக் கொண்டு இறங்கு வரிசையில் எழுதுக.
A) சென்னை, புதுடெல்லி, கல்கத்தா, மும்பாய்
B) மும்பாய், கல்கத்தா, புதுடெல்லி, சென்னை
C) கல்கத்தா, மும்பாய், புதுடெல்லி, சென்னை
D) புதுடெல்லி, கல்கத்தா, மும்பாய், சென்னை

 

 

296. பட்டியல் 1 ஐ, பட்டியல் 11 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
பட்டியல் 1. பட்டியல் II
(அணை)                                (ஆறு)
a) நாகார்ஜுனர் சாகர் – 1. சம்பல்
b) ஹிராகுட்.                     – 2. சீனாப்
c) சலால்.                          – 3. கிருஷ்ணா
d) காந்திசாகர்.                -4. மகாநதி
A) 1 4 3 2
B) 3 4 2 1
C) 2 3 1 4
D) 2 1 4 3

 

 

297. ஜாம்ஷெட்பூரில் அமைந்த இரும்பு எஃகு தொழிற்சாலைக்கு தேவையான நீர்தரும் ஆறு
A) சட்லெஜ்
B) தாமோதர்
C) சுவர்னரேகா
D) சோன்

 

 

298. கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருத்தப்பட்டது எது?
1. நர்மதா. – ஜபல்பூர்
II. கோதாவரி. – நாசிக்
III. மகாநதி. – கட்டாக்
IV. அமராவதி. – தமிழ்நாடு
A) I மற்றும் II
B) I, II, III மற்றும் IV
C) 1 மற்றும் III
D) III மற்றும் IV

 

 

299. இந்திய யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
A) 7
B) 8
C) 10
D) 9

 

 

300. உத்ரகண்ட நிலப்பகுதி அடங்கியுள்ள மாநிலம்
A) பீஹார்
B) உத்திரப் பிரதேசம்
C) மகாராஷ்டிரம்
D) மத்தியப் பிரதேசம்

 

Join the conversation