About Lesson
பத்தாம் வகுப்பு – புதிய சமச்சீர் கல்வி
அலகு – 2
இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
2.1 இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள்
1. இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகள் எவை?
விடை: அட்சங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரம், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை இந்திய காலநிலையை பாதிக்கும் காரணிகளாகும்.
அட்சங்கள்
2. இந்தியாவின் அட்சப் பரவல்?
விடை: 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரை அமைந்துள்ளது.
3. இந்தியாவை இரு சம பாகங்களாக பிரிப்பது?
விடை: 23°30′ வட அட்சமான கடகரேகை இந்தியாவை இரு சம பாகங்களாக பிரிக்கிறது.
4. புவியில் கடகரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பகுதிகளில் சூழல் எப்படி நிலவுகிறது?
விடை: ஆண்டு முழுவதும் அதிகவெப்பமும் மிக குளிரற்ற சூழலும் நிலவுகிறது.
5. புவியில் கடகரேகைக்கு வடக்கே அமைந்துள்ள பகுதிகளில் சூழல் எப்படி நிலவுகிறது?
விடை: மித வெப்ப காலநிலை நிலவுகிறது.
உயரம்
6. புவியின் “வெப்ப குறைவு விகிதம்” என்பது?
விடை: புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. இதற்கு “வெப்ப குறைவு விகிதம்” என்று பெயர்.
7. புவியில் சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் குளிராக இருக்கும் பகுதிகள்?
விடை: மலைப்பகுதிகள் குளிராக இருக்கும்.
8. இந்தியாவில் சமவெளியை விட மிகவும் குளிராக உள்ள மலை வாழிடங்கள் எவை?
விடை: உதகை தென்னிந்தியாவின் இதர மலை வாழிடங்கள் மற்றும் இமயமலையில் அமைந்துள்ள முசௌரி, சிம்லா போன்ற பகுதிகள் சமவெளிகளை விட மிகவும் குளிராக உள்ளது.
கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு
9. இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?
விடை : இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை.
10. தீபகற்ப இந்திய பகுதி முழுவதும் நிலவும் காலநிலை எந்த ஆதிக்கத்தை கொண்டுள்ளது?
விடை: கடல் சார் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.
11. தீபகற்ப இந்திய பகுதி முழுவதும் கடல்சார் ஆதிக்கத்தை கொண்டிருப்பதற்கான காரணம்?
விடை: இந்தியாவின் பெரும்பகுதி குறிப்பாக தீபகற்ப இந்தியா கடலிலிருந்து வெகுதொலைவில் இல்லை.
12. தீபகற்ப இந்தியாவில் குளிர் காலம் எப்படி இருக்கும்?
விடை : குளிர்காலம் குளிரற்று காணப்பட்டு வருடம் முழுவதும் சீரான வெப்பநிலையைக் கொண்டுள்ளது.
13. மத்திய மற்றும் வட இந்திய பகுதிகள் வெப்பநிலையில் பருவகால மாறுபாடுகளை கொண்டிருப்பதற்கான காரணம்?
விடை: கடல்களின் ஆதிக்கமின்மை காரணமாக மத்திய மற்றும் வட இந்திய பகுதிகள் வெப்பநிலையில் பருவகால மாறுபாடுகளைக் கொண்டுள்ளன.
14. இந்தியாவில் கோடையில் கடும் வெப்பமும் மற்றும் குளிர் காலத்தில் கடும் குளிரும் நிலவும் பகுதிகள்?
விடை: மத்திய மற்றும் வட இந்திய பகுதிகள்
15. கொச்சி எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?
விடை: கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
16. கொச்சியின் வருடாந்திர சராசரி வெப்பம்?
விடை: 30°C அளவுக்கு மிகாமல் உள்ளது.
17. புதுடெல்லி கடற்கரையில் இருந்து எங்கு அமைந்துள்ளது?
விடை: கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது.
18. புது டெல்லியின் வருடாந்திர சராசரி வெப்பம்?
விடை: 40°C க்கும் அதிகமாக உள்ளது.
19. கொச்சி அதிக மழைத்தரும் திறனைக் கொண்டிருப்பதற்கான காரணம்?
விடை: கடற்கரை பகுதியில் காற்றில் ஈரப்பதம் மிகுந்து இருப்பதால் கொச்சி அதிக மழைத்தரும் திறனைக் கொண்டுள்ளது.
20. இந்திய கடற்கரைக்கு அருகிலுள்ள கொல்கத்தாவில் மழைப்பொழிவு?
விடை : 119 செ.மீ
21. கடற்கரையின் உள் பகுதியில் அமைந்திருக்கும் பிகானிரில் (இராஜஸ்தான்) மழைப்பொழிவு?
விடை: 24 செ.மீ க்கு குறைவான மழைப்பொழிவே பதிவாகின்றது.
22. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கிய காரணி?
விடை: பருவக்கால காற்றாகும்.
23. பருவக்கால காற்று என்பது?
விடை : பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளாகும்.
24. இந்தியா பருவக்காற்றுகளின் தாக்கத்திற்கு எப்படி உள்ளாகிறது?
விடை: ஒரு ஆண்டின் கணிசமான காலத்தில் உள்ளாகிறது.
25. இந்தியாவில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் விழும் மாதங்கள் எவை?
விடை: ஜூன் மாத மத்தியில் விழுகின்ற பொழுதிலும் கோடைக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது.
26. தென் மேற்கு பருவக்காற்று தொடக்கத்தின் காரணமாக இந்தியாவில் நிலவும் காலநிலை?
விடை : வெப்பநிலை குறைந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமழை வரை பொழிகிறது.
27. தென்கிழக்கு இந்தியாவின் காலநிலையும் எதன் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது?
விடை: வடகிழக்கு பருவக்காற்றின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.
நிலத்தோற்றம்
28. இந்தியாவின் நிலத் தோற்றத்தால் பாதிக்கப்படுபவை எவை?
விடை : காலநிலையின் முக்கிய கூறுகளான வெப்பநிலை, வளிமண்டல அழுத்தம், காற்றின் திசை மற்றும் மழையளவை பெருமளவில் பாதிக்கின்றது.
29. மத்திய ஆசியாவில் இருந்து இந்திய துணை கண்டத்தை நோக்கி வீசும் கடும் குளிர் காற்றை தடுப்பது?
விடை: இமயமலை
30. இந்திய துணைக்கண்டத்தை வெப்பப் பகுதியாக வைத்திருப்பது?
விடை: இமயமலை
31. குளிர் காலத்திலும் வட இந்தியா வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருப்பதற்கான காரணம்?
விடை: இமயமலை மத்திய ஆசியாவில் இருந்து வீசும் குளிர் காற்றை தடுப்பதால் குளிர் காலத்திலும் வட இந்தியா வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது.
32. தென்மேற்கு பருவக்காற்று காலங்களில் கன மழையை பெறும் பகுதி?
விடை: மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுப்பகுதி கன மழையைப் பெறுகிறது.
33. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழைமறைவுப் பகுதி அல்லது காற்று மோதாப்பக்கத்தில் அமைந்திருப்பவை?
விடை : மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள்
34. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மழைமறைவுப் பகுதி அல்லது காற்று மோதாப்பக்கத்தில் அமைந்திருக்கும் பகுதிகள் பெறும் மழையின் அளவு?
விடை: மிகக்குறைந்த அளவு மழையைப் பெறுகின்றன.
35. தென்மேற்கு பருவக்காற்று பருவத்தில் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள மங்களூர் பெறும் மழை அளவு?
விடை: 280 செமீ மழைப்பொழிவை பெறுகின்றன.
36. தென்மேற்கு பருவக்காற்று பருவத்தில் மேற்கு கடற்கரையின் மழைமறைவுப் பகுதியில் அமைந்துள்ள பெங்களூரு பெறும் மழை அளவு?
விடை: 50 செ.மீ மழைப்பொழிவையும் பெறுகின்றன.
ஜெட் காற்றோட்டங்கள்
37. புவியில் “ஜெட்காற்றுகள்” என்பது?
விடை: புவியில் வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட்காற்றுகள்” என்கிறோம்.
38. ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, புவியில் தென்மேற்கு பருவக்காற்று எப்படி உருவாகின்றது?
விடை: துணை அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம்பெயர்வதால் தென்மேற்கு பருவக்காற்று உருவாகின்றது.
39. புவியில் கீழை ஜெட்காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்று காலங்களில் உருவாக்குவது?
விடை: வெப்பமண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
2.2 பருவக்காற்று
40. “மான்சூன்” என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டது?
விடை : “மௌசிம்” என்ற சொல்லிருந்து பெறப்பட்டது.
41. மௌசிம் என்பது எந்த மொழிச் சொல்?
விடை: அரபு மொழிச் சொல்.
42. மான்சூன் என்பதன் பொருள்?
விடை: பருவகாலம் என்பதாகும்.
43. பருவ காலம் என்ற சொல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யாரால் பயன்படுத்தப்பட்டது?
விடை: அரபு மாலுமிகளால் இந்தியப்பெருங்கடல் கடற்கரைப் பகுதிகளில் குறிப்பாக அரபிக்கடலில் பருவங்களுக்கேற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.
44. புவியில் பருவக்காற்று கோடைக்காலத்தில் எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கி வீசுகிறது?
விடை: தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசுகிறது.
45. புவியில் பருவக்காற்று குளிர்காலத்தில் எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கி வீசுகிறது?
விடை: வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கி வீசுகிறது.
46. புவியில் தென் மேற்கு பருவக்காற்றின் தோற்றம் குறித்து வானிலை வல்லுநர்கள் கூறுவது?
விடை : பருவக்காற்றின் தோற்றம் குறித்து வானிலை வல்லுநர்கள் பல கருத்துக்களை உருவாக்கி உள்ளனர். பருவக்காற்றின் இயங்கு கோட்பாட்டின்படி, வடகோள உச்ச கோடையில் சூரியனின் செங்குத்துக்கதிர் கடக ரேகையின் மீது விழுகின்றது. இதனால் அனைத்து வளி அழுத்த மற்றும் காற்று மண்டலங்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றன. இச்சமயத்தில் இடை அயன குவிப்பு மண்டலம் (ITCZ) வடக்கு நோக்கி நகர்வதால் இந்தியாவின் பெரும் பகுதி தென் கிழக்கு வியாபாரக் காற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகின்றன. பருவக்காற்று பூமத்தியரேகையைக் கடக்கும் போது புவி சுழற்சியால் ஏற்படும் விசையின் காரணமாக வடகிழக்கு நோக்கி வீசுகிறது. பருவக்காற்று தென்மேற்கிலிருந்து வீசுவதால் தென்மேற்கு பருவக்காற்றாக மாறுகிறது.
47. புவியில் வடகிழக்குப் பருவக்காற்றின் தோற்றம் குறித்து வானிலை வல்லுநர்கள் கூறுவது?
விடை: குளிர்பருவத்தில் வளியழுத்த மற்றும் காற்று மண்டலங்கள் தெற்கு நோக்கி நகர்வதன் மூலம் வடகிழக்கு பருவக்காற்று உருவாகின்றது.
48. புவியில் பருவக்காற்று என்பது?
விடை: பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்றுகளைப் பருவக்காற்று என்கிறோம்.
பருவக்காலங்கள்
49. வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில் நான்கு பருவங்களை அடையாளம் கண்டுள்ளனர். அவை?
விடை:
1. குளிர்காலம்: ஜனவரி முதல் பிப்ரவரி வரை
2. கோடைக்காலம்: மார்ச் முதல் மே வரை
3. தென்மேற்கு பருவக்காற்று காலம் அல்லது மழைக்காலம்: ஜூன் முதல் செப்டம்பர் வரை
4. வடகிழக்கு பருவக்காற்று காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை
50. இந்திய காலநிலையில் குளிர்கால மாதங்கள் என்பவை?
விடை: ஜனவரி முதல் பிப்ரவரி வரை
51. இந்திய காலநிலையில் கோடைகால மாதங்கள் என்பவை?
விடை: மார்ச் முதல் மே வரை
52. இந்திய காலநிலையில் தென்மேற்கு பருவக்காற்று கால மாதங்கள் என்பவை?
விடை: ஜூன் முதல் செப்டம்பர் வரை
53. இந்திய காலநிலையில் வடகிழக்கு பருவக்காற்று கால மாதங்கள் என்பவை?
விடை: அக்டோபர் முதல் டிசம்பர் வரை
1. குளிர்காலம்
54. புவியில் குளிர்காலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் எங்கு விழுகிறது?
விடை: இந்தியாவிலிருந்து வெகுதொலைவிலுள்ள மகரரேகையின் மீது செங்குத்தாக விழுகிறது.
55. குளிர்காலத்தில் இந்தியப் பகுதி எப்படி சூரியக்கதிர்களைப் பெறுகிறது?
விடை: சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகிறது.
56. இந்தியப் பகுதியில் குறைந்த வெப்பத்திற்கு காரணமாக இருப்பது?
விடை : குளிர்காலத்தில் இந்தியப் பகுதி சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுவதால்
57. இந்தியாவில் குளிர்கால பருவத்தின் பண்புகள் எவை?
விடை: தெளிவான வானம், சிறந்த வானிலை, மென்மையான வடக்கு காற்றுகள், குறைந்த ஈரப்பதம் மற்றும் மிகுந்த தினசரி பகல்நேர வெப்ப வேறுபாடுகள் ஆகியன குளிர் கால பருவத்தின் பண்புகளாகும்.
58. குளிர்காலத்தில் வட இந்தியாவில் ஓர் உயர் அழுத்தம் உருவாகி எங்கிருந்து எதன் வழியாக வீசுகிறது?
விடை: வடமேற்கிலிருந்து சிந்து-கங்கை பள்ளத்தாக்குகள் வழியாக வீசுகிறது.
59. குளிர் காலத்தில் தென்னிந்தியாவில் காற்றின் திசையானது எங்கிருந்து எதை நோக்கி வீசுகிறது?
விடை: கிழக்கிலிருந்து மேற்காக உள்ளது.
60. குளிர் காலத்தில் மழையைப் பெறும் தென் இந்திய பகுதிகள் எவை?
விடை: மேற்கு இமயமலை, தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகள் குளிர் காலத்தில் மழையைப் பெறுகின்றன.
61. குளிர் காலத்தில் மத்தியத் தரைக்கடல் பகுதியில் உருவாகும் மேற்கத்திய இடையூறுடன் தாழ்வழுத்தங்கள் எங்கு மழையைத் தருகின்றன?
விடை: வட இந்தியாவில் மழையைத் தருகின்றன.
62. குளிர்க்காற்றை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது?
விடை: ஜெட் காற்றோட்டம்
63. குளிர் காற்றால் வட இந்தியாவில் மழையை பெறும் பகுதிகள்?
விடை: பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் மழையை பெறுகின்றன.
64. குளிர் காற்றால் வட இந்தியாவில் பனிப் பொழிவை பெறும் பகுதிகள்?
விடை: ஜம்மு காஷ்மீரின் மலைப் பகுதிகள் பனிப் பொழிவை பெறுகின்றன.
65. இந்தியாவில் குளிர்கால பருவத்தின் மழை எதை பயிரிடலுக்கு மிகவும் பயனளிக்கிறது?
விடை: கோதுமை
66. இந்தியாவில் கோடைப்பருவத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் எங்கு விழுகிறது?
விடை: இந்திய தீபகற்பத்தின் மீது விழுகிறது.
67. இந்தியாவில் கோடைப்பருவத்தில் வெப்பநிலை எங்கிருந்து எதை நோக்கி அதிகரிக்கிறது?
விடை: தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிகரிக்கிறது.
68. கோடைக்காலத்தின் முற்பகுதியில் இந்தியா முழுவதும் எப்படி வானிலை நிலவுகிறது?
விடை : வெப்பமான வறண்ட வானிலை நிலவுகிறது.
69. இந்தியா கோடைக்காலத்தின் மத்தியிலும், இறுதியிலும் எதன் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது?
விடை: நிலப்பகுதி இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையின் ஆதிக்கத்திற்கு உட்படுகிறது.
70. கோடைப்பருவத்தில் இந்தியா முழுவதும் வெப்பம் எப்படி காணப்படுகிறது?
விடை : வெப்பம் அதிகரிக்கின்றது.
71. ஏப்ரல் மாதத்தில் தென் இந்திய உட்பகுதிகளில் பதிவாகும் தின சராசரி வெப்பநிலை?
விடை : 30°C – 35°C ஆக பதிவாகிறது.
72. கோடை காலத்தில் மத்திய இந்திய நிலப்பகுதியின் பல பகுதிகளில் பகல் நேர உச்ச வெப்பநிலை?
விடை : 40°C ஆக உள்ளது.
73. புவியின் வளிமண்டல அழுத்த நிலையின் வேறுபாட்டால் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் காற்றானது எந்த திசையிலிருந்து எந்த திசை நோக்கி வீசுகிறது?
விடை : தென் மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி வீசுகிறது.
74. கோடைக்கால காற்றுகள் மே மாதத்தில் எந்த பகுதிகளுக்கு முன் பருவகால மழையைத் தருகின்றன?
விடை: மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு முன் பருவகால மழையைத் தருகின்றன.
75. இந்தியாவில் மாஞ்சாரல் என்பது?
விடை: இடியுடன் கூடிய மழை ஆகும்.
76. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் விளையும் “மாங்காய்கள்” விரைவில் முதிர்வதற்கு உதவுவது?
விடை: “மாஞ்சாரல்” (Mango shower) என்ற இடியுடன் கூடிய மழை உதவுகிறது.
77. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நார்வெஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
78. நார்வெஸ்டரின் வேறு பெயர்?
விடை: கால்பைசாகி
79. நார்வெஸ்டர் எந்தெந்த மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது?
விடை: கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளான பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு இடியுடன் கூடிய குறுகியக் கால மழையைத் தருகிறது.
3. தென்மேற்கு பருவக்காற்று காலம் (மழைக்காலம்)
80. தென்மேற்கு பருவக்காற்று என்பது?
விடை: இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
81. தென் மேற்கு பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் எங்கு தொடங்குகிறது?
விடை : இந்தியாவின் தென் பகுதியில் தொடங்குகிறது.
82. தென்மேற்கு பருவக்காற்று ஜூன் இரண்டாவது வாரம் எந்தப் பகுதிக்கு முன்னேறுகிறது?
விடை: கொங்கணக் கடற்கரை பகுதிக்கு முன்னேறுகிறது.
83. தென்மேற்கு பருவக்காற்று எப்போது அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது?
விடை: ஜூலை 15 இல் அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
84. தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது?
விடை: உலகளாவிய காலநிலை நிகழ்வான “எல்நினோ” தென் மேற்கு பருவக்காற்றுக் காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
85. தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலை?
விடை: 46°C வரை உயருகிறது.
86. தென்மேற்கு பருவக்காற்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: ‘பருவமழை வெடிப்பு’
87. தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது எத்தனை கிளைகளாகப் பிரிகிறது?
விடை : இரண்டு . அவை தென்மேற்கு பருவக் காற்றின் ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.
88. இந்தியாவில் தென் மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை எதன் மீது மோதி பலத்த மழைப்பொழிவு தருகிறது?
விடை : இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
89. இந்தியாவில் தென் மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து எதனால் தடுக்கப்பட்டு கனமழையை தோற்றுவிக்கிறது?
விடை : இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.
90. இந்தியாவில் தென் மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்திருப்பது?
விடை: ஆரவல்லி மலைத்தொடர் அமைந்துள்ளது.
91. ஆரவல்லிமலைத் தொடர் தென் மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் மழை பொழிவை பெறாத பகுதிகள்?
விடை : இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.
92. இந்தியாவில் தென்மேற்கு பருவக் காற்றின் வங்காள விரிகுடா கிளை எதை நோக்கி வீசுகிறது?
விடை : வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.
93. இந்தியாவில் தென்மேற்கு பருவக் காற்றின் வங்காள விரிகுடா கிளை எதனால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் (mawsynram) மிக கனமழையைத் தருகிறது?
விடை: காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் (mawsynram) மிக கனமழையைத் தருகிறது.
94. தென்மேற்கு பருவக் காற்றின் வங்காள விரிகுடா கிளை எங்கிருந்து எதை நோக்கி நகரும் போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது?
விடை: கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
95. இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் எத்தனை சதவீதம் மழைப் பொழிவு தென் மேற்கு பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது?
விடை: 75 சதவீதம்
4. வடகிழக்கு பருவக்காற்று காலம்
96. இந்தியாவில் செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் எந்த திசை நோக்கி நகர ஆரம்பிக்கும்?
விடை : தெற்கு நோக்கி நகர ஆரம்பிக்கும்.
97. இந்தியாவில் செப்டம்பர் மாத இறுதியில் அழுத்த மண்டலமானது புவியில் தெற்கு நோக்கி நகர ஆரம்பிப்பதால் தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக எங்கிருந்து எதை நோக்கி வீசுகிறது?
விடை : நிலப்பகுதியிலிருந்து வங்காளவிரிகுடா நோக்கி வீசுகிறது.
98. பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ் விசை) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு எங்கிருந்து வீசுகிறது?
விடை: வடகிழக்கிலிருந்து வீசுகிறது. எனவே இக்காற்று வடகிழக்கு பருவக்காற்று என அழைக்கப்படுகிறது.
99. வட கிழக்குப் பருவக்காலம் இந்திய துணைக்கண்ட பகுதியில் எதற்கு காரணமாக உள்ளது?
விடை : வட கீழைக் காற்றுத் தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது .
100. இந்தியாவில் வடகிழக்கு பருவகாற்றின் மூலம் நல்ல மழைப்பொழிவைப் பெறுகின்ற பகுதிகள் எவை?
விடை: கேரளா, ஆந்திரா தமிழ்நாடு மற்றும் தென் கர்நாடகாவின் உட்பகுதிகள் நல்ல மழைப்பொழிவைப் பெறுகின்றன.
Join the conversation