Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 25
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. ஆணிவேர் என்பது

A) எதிர் புவிஈர்ப்பு வளர்வுடையது

B) டையாஜியோடிரோபிக்

C) புவிஈர்ப்பு விசையை நோக்கி வளர்பவை

D) ஒளியை நோக்கி வளர்பவை

 

 

2. விதையற்ற கனிகள் காணப்படுவது

A) வாழை

B) திராட்சை

C) அன்னாசி

D) இவை அனைத்தும்

 

 

3. டைபாய்டு நோயை உண்டாக்கும் உயிரி

A) பூஞ்சை

B) வைரஸ்

C) பாக்டீரியா

D) புரோட்டோசோவா

 

 

4. ஜிம்னோஸ்பெர்ம்களின் சூல்கள்

A) சூலகத்தினுள் பதிந்துள்ளது

B) திறந்தவை

C) (A) மற்றும் (B) இவை இரண்டும்

D) கனியினுள் பதிந்துள்ளது

 

 

5. ஸ்ரெப்டோமைசீனை கண்டறிந்தவர்

A) வாக்ஸ்மேன்

B) டியூக்கர்

C) மெக்கியுரி

D) பஸ்க்கோல்டர்

 

 

6. “கெல்ப்” என்பது

A) சிவப்பு ஆல்கா

B) நீலப் பசும் ஆல்கா

C) பழுப்பு ஆல்கா

D) இவை அனைத்தும்

 

 

7. பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

A) எட்வர்டு ஜென்னர்

B) ஜெ.சி. போஸ்

C) அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங்

D) வில்லியம் ஹார்வி

 

 

8. ஈஸ்ட், கீழ்க்கண்டவற்றுள் எதனை உண்டாக்கப் பயன்படுகிறது?

A) ஆக்ஸிஜன்

B) குளூக்கோஸ்

C) ஆல்கஹால்

D) உப்பு

 

 

9. அகார் அகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

A) ஜெலிடியம்

B) லாமினேரியா

C) எக்டோகார்பஸ்

D) மியூக்கஸ்

 

 

10. நனைந்த ரொட்டியில் வளரும் உயிர்

A) ஈஸ்ட்

B) பூஞ்சை

C) இவை இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

11. இராஜஸ்தான் பாலைவனத்தில் விளையாத தாவரம்

A) சோளம்

B) கம்பு

C) வாழை

D) கடுகு

 

 

12. பாக்டீரியாக்கள் என்பவை

A) காற்றில் வாழ்பவை

B) காற்றில்லாமல் வாழ்பவை

C) (A) மற்றும் (B) இவை இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

13. “நீர் பூப்பை” உண்டாக்குபவை

A) பூஞ்சைகள்

B) ஆல்கா

C) பாக்டீரியா

D) அல்லி

 

 

14. வைரஸ்கள் என்பவை

A) கோளக வடிவமானவை

B) கனசதுர வடிவமானவை

C) குச்சி வடிவமானவை

D) இவை அனைத்தும்

 

 

15. தாவர வகைப்பாட்டியலின் மற்றொருப் பெயர்

A) பொருளாதார தாவரவியல்

B) வகைபாட்டு தாவரவியல்

C) மரபியல்

D) சூழ்நிலை இயல்

 

 

16. தாவரங்கள் நைட்ரஜனை எந்த நிலையில் உறிஞ்சுகின்றன?

A) நைட்ரேட்டுகள்

B) நைட்ரைட்டுகள்

C) அம்மோனியா

D) இவை அனைத்தும்

 

 

17. குஷ்ட நோய் உண்டாக்கக் கூடியவை

A) பாக்டீரியா

B) பூஞ்சை

C) புரோட்டோஜீவான்

D) வைரஸ்

 

 

18. தாவரங்களின் வெளிப்புற அமைப்பை பற்றி பயிலும் துறை

A) உள்ளமைப்பியல்

B) புற அமைப்பியல்

C) செயலியல்

D) பரிணாம இயல்

 

 

19. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஊசி மருந்து

A) தைராக்ஸின்

B) டெட்ராசைக்ளின்

C) ஸ்ரெப்டோமைசின்

D) இன்சுலின்

 

 

20. தாவரங்களுக்கு கந்தகம் உதவுவது

A) கார்போஹைட்ரேட் உருவாவதற்கு

B) புரதம் உருவாவதற்கு

C) கொழுப்பு உருவாவதற்கு

D) இவை எதற்கும் இல்லை

 

 

21. சிங்கோளா அஃபிஸிளாலிஸ் எக்குடும்பத்தை சார்ந்தது?

A) ரூடேசியே

B) ரூபியேசியே

C) அபோஸைளேசியே

D) மிலியேசியே

 

 

22. மூடிய மலரில் நிகழும் மகரந்த சேர்க்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) அல்லோகேமி

B) கிளைஸ்டோகேமி

C) டைகோகேமி

D) ஹோமோகேமி

 

 

23. தாவரவியலார் ஜீன் 5 தினத்தை கொண்டாடுவது

A) டார்வின் பிறந்த நாளாக

B) உலக சுகாதார தினமாக

C) உலக சுற்று சூழல் தினமாக

D) உலக மக்கள் தொகை நாளாக

 

 

24. மைய அரிசி ஆய்வுக்கழகம் அமைந்திருப்பது

A) கோயம்புத்தூர்

B) கட்டாக்

C) சிம்லா

D) திருவனந்தபுரம்

 

 

25. உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ தாவரங்களின் நிலையம் இருக்குமிடம்

A) இந்திய தாவரங்களின் பூங்கா, கல்கத்தா

B) மன்னரது தாவரங்களின் பூங்கா, இங்கிலாந்து

C) புதிய தாவரங்களின் பூங்கா, நியூஸிலாந்து

D) ஜெர்மன் தாவரங்களின் பூங்கா, ஸ்பெண்டு ஜெர்மனி

 

 

26. உலகத்தில் எல்லா தாவரங்களும் இறந்து விட்டால் எல்லா விலங்குகளும் _____ இல்லாமல் இறந்து விடும்.

A) ஆக்ஸிஜன்

B) கார்பன் டை ஆக்ஸைடு

C) உணவு

D) நைட்ரஜன்

 

 

27. கலைமான் பாசி என்பது இவ்வகையை சார்ந்த ஒன்று

A) பிரையோபைட்

B) பூஞ்சைக்காளான்

C) லைக்கன் 

D) பெரணி

 

 

28. கூட்டு வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு

A) லைக்கன்

B) ஈஸ்ட்

C) மியூகார்

D) பாக்டீரியா

 

 

29. கீழ்கண்ட கூற்றை ஆய்க:

துணிபுரை (A) : பயிர் உற்பத்தியை பெருக்குவதாலும் மண் அமைப்பில் சேதம் ஏற்படுதலை தடை செய்வதாலும் உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.

காரணம் (R) : ஏனெனில் உயிர் உரங்களை பயன்படுத்துவது சிக்கனமானதும் சுற்றப்புற சூழலுக்கு நல்ல தன்மையை அளிப்பதுமானது.

இக்கூற்றில்

A) கூற்று (A) உண்மை, ஆனால் (R) தவறு.

B) இரு கூற்றுகளுமே உண்மை.

C) கூற்று (A) தவறு. ஆனால் (R) சரி.

D) இரு கூற்றுகளுமே தவறு.

 

 

30. உயிரினங்கள் தங்கள் செயல்களை ஒழுங்குபடுத்தி செயல்பட பெரும்பாலும் இக்காரணியை சார்ந்துள்ளன.

A) ஒளி

B) தட்ப வெப்பம்

C) நீர்

D) பயனுள்ள நுண்ணுயிரிகள்

 

 

31. எய்ட்ஸ் வைரஸ் ஒரு

A) பேக்ட்டீரியோ ஃபேஜ்

B) விலங்கு வைரஸ்

C) ரெட்ரோ வைரஸ்

D) தாவர வைரஸ்

 

 

32. கீழ்க்கண்ட அறிக்கையைப் பற்றி ஆலோசிக்கவும்:

வலியுறுத்தல் (A) : ஜி.ஜே.மெண்டல் மரபியலின் தந்தை என சிறப்பாக அழைக்கப்படுகின்றார். காரணி (R) : ஜி.ஜே. மெண்டல் முதன்முதலாக மரபியல் அடிப்படை விதிகளை கண்டறிந்தவர்.

கீழே கொடுத்துள்ள குறிப்பீடு திட்டத்திலிருந்து விடையை தெரிவு செய்யவும்

A) (A) யும் (R) யும் உண்மையானவை (R), (A) வுக்கு சரியாக விளக்கமாகும்.

B) (A) யும் (R) யும் உண்மையானவை ஆனால் (R), (A) வுக்கு சரியாக விளக்கமல்ல.

C) (A) சரி ஆனால் (R) தவறு.

D) (A) தவறு ஆனால் (R) சரி.

 

 

33. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:

1. பாக்டீரியா வைரஸ்களை விட சிறியது.

2. பாக்டீரியா இரட்டைப் பிரிதல் மூலம் இனவிருத்தி செய்கிறது.

3. பாக்டீரியா பெரும்பாலும் வெளியிலிருந்து உணவைப் பெறுகிறது.

4. பாக்டீரியா ஒரு செல் உயிரி.

மேற்கூறியவற்றுள் எக்கூற்றுகள் உண்மையானது?

A) 1 2 3

B) எல்லாம்

C) 2 3 4

D) 1 3 4

 

 

34. கீழ்கண்டவற்றுள் இந்த ஒன்றை தவிர மற்ற அனைத்தும் சரியானவை:

A) தாவரங்கள் இன்றி உயிரினம் வாழ முடியாது

B) தொல் பொருளெச்சங்கள், இறந்த உயிரினங்களினெச்சங்கள்

C) தாட்களின் முக்கியப் பகுதிப்பொருள் செல்லுலோஸ்

D) பெனிஸிலின் ஃபைகோமாஸிடிஸ் பூஞ்சை இனத்திலிருந்து பெறப்படுகிறது.

 

 

35. கீழே கொடுக்கப்பட்டுள்ள பாசிகளில் எது கழிவு நீர் குட்டைகளில் வளர்கிறது?

A) குளோரெல்லா

B) வால்வாக்ஸ்

C) ஜெலிடியம்

D) அல்வா

 

 

36. கீழே கொடுக்கபட்டவற்றுள் இருவகை வாழும் தாவர ராஜ்யத்தை சார்ந்த தாவரங்கள் யாவை?

A) பேக்டீரியாக்கள்

B) பூஞ்சை

C) காளான்கள்

D) ப்ரையோஃபைட்ஸ்

 

 

37. கீழ்கண்ட வேதியியல் வினைகளில் எது கால்வின் சுழற்சியின் போது நடைபெறுகிறது?

A) ஒளி பாஸ்பரிகரணம்

B) ஆக்ஸிகரன கார்பாக்ஸிலேசன்

C) குறைப்பு கார்பாக்ஸிலேசன்

D) ஆக்ஸிகரண பாஸ்பரிகரணம்

 

 

38. கரும்பில் ‘ரெட்ராட்’ நோய் உண்டாவதற்கு காரணமாக உள்ள பூஞ்சை

A) புஸாரியம்

B) செர்கோஸ்போரா

C) கோலிடோடிரைகம்

D) பிதியம்

 

 

39. கொலிட்டோட்ரைகம் ஃபல்கேட்டம் என்னும் பூசணம் தோற்றுவிக்கும் நோய் என்னவென்று அறியப்படுகிறது?

A) டவுனி மில்டியூ 

B) இலைசுருள் 

C) செவ்வழுகல்

D) குலை நோய்

 

 

40. பூஞ்சைகள் அனைத்தும்

A) ஓட்டுண்ணிகள்

B) சுயஜீவிகள்

C) சார்பு ஜீவிகள்

D) மட்குண்ணிகள்

 

 

41. சைகஸின் விந்தணு

A) இரு இழைகள் மற்றும் சுருண்ட வளைவுடையது.

B) இரு இழைகள் மற்றும் பைரிபார்ம் வடிவமுடையது.

C) பம்பர வடிவமுடையது மற்றும் பல இழைகள் கொண்டது.

D) இழைகளற்ற பம்பர வடிவம் உடையது.

 

 

42. பென்சிலீனை கண்டுபிடித்தது

A) லூயிஸ் பாஸ்டியர்

B) அலெக்ஸாண்டர் ப்ளெமிங்

C) ஜே.சி.போஸ்

D) இ.ஜே.கோரி

 

 

43. மெண்டல் தனது ஆரம்ப கால ஆய்வுகளுக்கு பயன்படுத்திய தாவரம்

A) உருளைகிழங்கு

B) பட்டாணி

C) வாழை

D) எலுமிச்சை

 

 

44. குரோமோசோம்களில் ஜீன்களின் அமைப்பு

A) நேர் வரிசையில்

B) பரவலான அமைப்பில்

C) வளைவு அமைப்பில்

D) இங்கும் அங்குமாக

 

 

45. தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்

A) டில்லி

B) கல்கத்தா

C) கோயம்புத்தூர்

D) லக்னோ

 

 

46. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பை கண்டுபிடித்தவர்

A) ராபர்ட் ஹீக்

B) வாட்சன் மற்றும் கிரிக் (1953)

C) ஜேக்கப் மற்றும் மொனாட்

D) ருஸ்கா நோல் (1931)

 

 

47. ஆல்கா மற்றும் பூஞ்சை உறுப்பினர்களைக் கூட்டாக கொண்ட தாவர வகையை ________ என்பர்

A) தாலோஃபைட்டாக்கள்

B) பிரோயோஃபைட்டாக்கள்

C) ப்டெரிடோஃபைட்டாக்கள் 

D) லைக்கன்கள்

 

 

48. ஒட்டுமுறை பெருக்கம் ஒரு விதையிலை தாவரங்களில் பயன்படுத்தப்படாமைக்கு காரணம்

A) அவைகளில் திசுக்கள் மென்மையானவை 

B) அவைகளில் கேம்பியம் கிடையாது 

C) அவைகளில் வாஸ்குவர் திசுக்கள் நிறைய உள்ளது

D) அவைகளில் ஸைலம் என்டார்க் முறை உள்ளது

 

 

49. தாவரங்களின் உணவு, நீர் மற்றும் தாது உப்புக்கள் பக்கவாட்டில் செலுத்தப்படுவது

A) மெடல்லரி கதிர்களால்

B) வாஸ்குலர் கேம்பியத்தால்

C) சோற்றுத்திகவால் (பித்தால்)

D) இரண்டாம் ஃபுளோயத்தால்

 

 

50. பைக்காலஜி என்ற தாவரவியல் பிரிவில் நாம் படிப்பது

A) ஆல்காக்கள்

B) பூஞ்சைகள்

C) பிரையோஃபைட்டாக்கள் 

D) பாக்டீரியங்கள்

 

 

Join the conversation