Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 26
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. கீழ்க்காணும் தாவரத்தின் எந்த பகுதியிலிருந்த கிராம்பு பெறப்படுகிறது?

A) தண்டு

B) மலர் மொட்டுகள்

C) இலைகள்

D) வேர்

 

 

2. ஒரு வித்திலைத் தாவரங்களின் முக்கியப் பண்பு

A) சல்லி வேர்த் தொகுப்பு 

B) ஆணிவேர் தொகுப்பு

C) தூண்வேர் தொகுப்பு 

D) காற்று வேர்கள்

 

 

3. மண் அரிப்பின் காரணமாக

A) நீர் இழப்பு ஏற்படுகிறது

B) காற்று குறைகிறது

C) தாவரங்கள் அழிகின்றன

D) விலங்கினங்கள் அழிகின்றன

 

 

4. பாக்டீரிய ஜீன் மாற்றத்தால் தயாரிக்கப்படும் மருந்து

A) டைரோதிரிசின்

B) பாலிமைசின்

C) இன்கலின்

D) பேசிட்ராசின்

 

 

5. நீலப்பச்சை பாசிகள் ஏன் சயனோ பாக்டீரியா என்று அழைக்கப்படுகிறது?

A) ஏனெனில் இவை புரோகாரியாட்டிக் வகையை சேர்ந்தவை.

B) ஏனெனில் இவை நீரில் வாழ கூடியவை.

C) ஏனெனில் இலைகளில் நீல நிறம் காணப்படுகிறது.

D) ஏனெனில் இவை ஒரு செல் உயிரிகள்.

 

 

6. இலைகளின் சர்சிளேட் வெர்னேசன் இதனுடைய குறிப்பு பண்பாகும்

A) ஜிம்னோஸ்பெர்ம்கள்

B) பெரணிகள்

C) பொதுவாக டெரிடோஃபைட்டுகள்

D) ஆர்கிட்டுகள்

 

 

7. ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்கள் எவ்வகையில் ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் தாவரங்களை ஒத்துள்ளது?

A) கசையிழை உடைய விந்தணுக்கள்

B) ஆர்க்கிகோனியம் காணப்படுதல்

C) சூல்கள் காணப்படுதல்

D) மானோசைலிக் கட்டை காணப்படுதல்

 

 

8. டென்ட்ரோ குரோனாலஜி என்ற படிப்பு கீழ்கண்டவற்றுள் எதனை குறிக்கும்?

A) மரத்தின் உயரம் பற்றி அறிய

B) மரத்தின் குறுக்கு விட்டம் பற்றி அறிய

C) மரத்தில் காணப்படும் ஆண்டு வளையத்தினை கொண்டு மரத்தின் வயதை அறிய

D) கிளைகளின் எண்ணிக்கையை அறிய

 

 

9. பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?

A) அயோடின்

B) அகர்-அகார்

C) சர்க்கரை

D) ஆல்கஹால்

 

 

10. பட்டியல் Iஜ பட்டியல் II உடன் பொருத்தி கீழே குறியீடுகளைக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் (1)                     பட்டியல் (2)

a) ரிக்சியா –          1. மோனோஷியஸ்

b) செலாஜினெல்லா – 2. ஹோமோஸ்போரஸ்

c) நெஃப்ரோலெபிஸ் – 3. ஹெட்டிரோஸ் போரஸ்

d) பைனஸ் –         4. ஹோமோதாலிக்

குறியீடுகள் :     

A) 4 3 2 1

B) 3 4 1 2

C) 1 3 4 2

D) 2 1 3 4

 

 

11. ஆப்பிள் என்பது

A) கூட்டுக் கனி 

B) பொய்க் கனி

C) உண்மைக்கனி

D) இவை ஏதுமில்லை

 

 

12. வியாபாரத்திற்காக வளர்க்கப்படும் உண்ண கூடிய நாய்க்குடையின் பேரினம்

A) அம்மானிட்டா

B) ப்ளூரோட்டிஸ்

C) அகாரிகஸ்

D) பாலிபோரேஸ்

 

 

13. காளான்கள் சம்பந்தமாக கீழ்கண்டவற்றுள் இதைத் தவிர மற்றனைத்தும் உண்மையானவை:

A) இவை பேஸிடியோமைஸிடிஸ் வகை பூஞ்சைகள்

B) இவை ஊட்டச்சத்து மற்றும் புரதங்கள் ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளவை.

C) இவை எளிதில் செரிக்கப்படக்கூடிய பொருட்களல்ல.

D) இவற்றில் கொழுப்பின் அளவு மிகவும் குறைவு

 

 

14. சயனோ பாக்டீரியா என்பவை

A) நீலப்பச்சை பாசிகள்

B) மஞ்சள் பாக்டீரியா

C) பச்சை பாக்டீரியா

D) சிவப்பு பாக்டீரியா

 

 

15. தாவரங்களில் பாரம்பரிய மாற்றங்கள் எதனால் தோற்றுவிக்கப்படுகின்றன?

A) ஆக்சின்கள்

B) கதிர்கள்

C) ஜிப்ரலின்கள்

D) இவை எல்லாம்

 

 

16. பையோஸ்ஃபியர் என்பது

A) ஸ்பிரோகார்பஸின் உயிரியல்

B) உயிருள்ளவைகள் ஆக்கிரமித்துள்ள பகுதி

C) உயிரின இடர்பாடுகளின் விளைவு

D) விண்வெளி ஆய்வு

 

 

17. சமுதாய காடு வளர்ப்பின் நோக்கம் யாது?

A) கிராம மக்களுக்கு தீவனம், எரிபொருள், மரம் கிடைக்க செய்தல்

B) மண் அரிப்பை தடை செய்தலுக்காக

C) அலங்கார தேவைக்காக

D) தீவனத் தேவைக்காக

 

 

18. கரிம பொருட்கள் சிதைவதற்கு காரணம் எதனுடைய செயல்பாடு?

A) பாக்டீரியாக்கள்

B) காளான்கள்

C) வைரஸ்கள்

D) A, B இரண்டினாலும்

 

 

19. பெனிசிலியம் என்பதை நாம் பொதுவாக அறிவது

A) ஆல்கே

B) ஒரு பூஞ்சக்காளான்

C) ஒரு பேக்டீரியம்

D) ஒரு வைரஸ்

 

 

20. வைரஸ்கள் என்பவை வேதியியல் ரீதியாக?

A) கார்போஹைட்ரேட்கள்

B) லிப்போ பாலி சாக்கரைடுகள்

C) கிளிக்கோ பெப்டைடுகள்

D) நியூக்ளியோ புரதங்கள்

 

 

21. நன்கு உருவான பித் எவற்றில் காணப்படுகின்றன?

A) ஒரு வித்திலை வேர் மற்றும் ஒரு வித்திலை தண்டு

B) ஒரு வித்திலை வேர் மற்றும் இரு வித்திலை தண்டு

C) ஒரு வித்திலை தண்டு மற்றும் இரு வித்திலை வேர்

D) இரு வித்திலை வேர் மற்றும் இரு வித்திலை தண்டு

 

 

22. ஜெனிரா பிளாண்டாரம் எழுதியவர்

A) எங்க்ளர் மற்றும் பிரான்டில்

B) பெந்தம் மற்றும் ஹீக்கர்

C) ஹட்சின்சன்

D) பெஸ்ஸே

 

 

23. மிக்ஸோமைலீட்களின் சாதாரணப் பெயர்

A) ரஸ்ட்

B) ஸ்மட்

C) ஸ்லைம் மோல்ட்

D) அகாரிகஸ்

 

 

24. தாவரத்தின் உயிர்ப்பு செயல்களை ஆற்றுவது

A) சைட்டோபிளாசம்

B) புரோட்டோபிளாசம்

C) எக்டோபிளாசம்

D) எண்டோபிளாசம்

 

 

25. ஒரே மாதிரியான அமைப்பும் வேலையும் உடைய செல்களின் தொகுப்பு

A) திசு

B) உறுப்பு

C) உயிரினம்

D) உயிரின தொகுப்பு உருவாதல்

 

 

26. ஒரு மலரில் ஆண், பெண் பால் இனப்பெருக்க உறுப்புகள் காணப்பட்டால்

அ) இருபால் வகை

B) ஒரு பால்வகை

C) இவை இரண்டும்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

27. உண்ணக்கூடிய வகை பூஞ்சை

A) மோர்ச் செல்லா

B) அகாரிகஸ்

C) லைக்கோபெர்டான்

D) இவை அனைத்தும்

 

 

28. பாலாடை கட்டி தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை

A) ஈஸ்ட்

B) யுஸ்டிலாகோ

C) பெனிசிலியம்

D) ரைஸோபஸ்

 

 

29. பாக்டீரியா இனப்பெருக்கம்

A) பாலினப் பெருக்கம் மட்டும்

B) பாலிலா இனப்பெருக்கம் மட்டும்

C) பெரும்பாலும் பாலினப் பெருக்கம்

D) பெரும்பாலும் பாலிலா இனப்பெருக்கம்

 

 

30. வளிமண்டல CO2 அளவை குறைக்கும் செயலியல்

A) நீராவிக் போக்கு

B) நீர் ஆவியாதல்

C) ஒளிச்சேர்க்கை

D) சுவாசம்

 

 

31. மண்வளப் பாதுகாப்பு என்பது

A) வளமில்லா மண்ணை வளமுள்ளதாக மாற்றுவது

B) மண்ணை காற்றோட்டமானதாகச் செய்வது

C) மண் அரிப்பு ஏற்படுவது

D) மண் அரிப்பை தடுத்து மண்ணினை காப்பது

 

 

32. ஃபைட்டாலஜி என்பது

A) காளான்

B) பாக்டீரியா

C) ஆல்கா 

D) செடிகள்

 

 

33. மிகப் பெரிய மலர்

A) நீர் வெண் தாமரை

B) டாலியா

C) ரஃப்லேஷியா

D) சூரியகாந்தி

 

 

34. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.

பட்டியல் I                            பட்டியல் II

a) மைட்டோகாண்ட்ரியா – 1) ஒளிச்சேர்க்கை

b) குளோரோபிளாஸ்ட். – 2) நீராவிப் போக்கு

c) ஸ்டோமேடா – 3) சுவாசித்தல்

d) செல் சுவர் – 4) ஆஸ்மாஸிஸ்

குறியீடுகள்: 

A) 1 3 4 2 

B) 3 1 4 2

C) 1 3 2 4

D) 3 1 2 4

 

 

35. நியூகிளியோடைட் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது?

I. பாஸ்பாரிக் அமிலம்

II. டிஆக்ஸிரைபோஸ் சர்க்கரை

III. நைட்ராஜினஸ் காரங்கள்

கீழ்க்கண்டவற்றுள் எது சரியான விடை?

A) I, II மற்றும் III

B) I மற்றும் II

C) II மற்றும் III

D) III மட்டும்

 

 

36. பாக்டீரியோபேஜ் என்பது

A) இறந்த திசுக்களில் வசிக்கும் ஒரு பாக்டீரியா

B) பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கும் ஒரு வைரஸ்

C) வைரஸுடன் சண்டையிடும் ஒரு பாக்டீரியா

D) ஒரு நீலப் பச்சை பாசி

 

 

37. ஒரு செல்லில் ரைபோசோமின் முக்கிய பங்கு யாது?

A) கொழுப்பு உற்பத்தி 

B) ஒளிச்சேர்க்கை

C) புரத உற்பத்தி

D) சுரத்தல்

 

 

38. பேக்கரி-ஈஸ்ட் எனப்படுவது

A) சைகோஸெக்காரோமைஸிஸ் ஆக்டோஸ்போரஸ்

B) ஸக்கரோமைசிஸ் ஸெரிவிஸியே

C) லெமினேரியா

D) ஸெ. லெடுவெஜி

 

 

39. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப்பிரிவு

A) டெரிடோபைட்டுகள் 

B) மானோகாட்டுகள்

C) ஜிம்னோஸ்பெர்ம்கள்

D) டைகாட்டுகள்

 

 

40. ஹெர்பிசைடு என்பது கீழ்கண்ட ஒன்றை கொல்லுவதற்கு பயன்படுகிறது

A) தேவையற்ற பூச்சியினங்கள்

B) தேவையற்ற விலங்கினங்கள்

C) களை தாவரங்கள்

D) நீர்வாழ் தாவரங்கள்

 

 

41. எளிய வகை நிலவாழ் தாவர வகையானது

A) பிரையோபைட்டுகள்

B) லைகன்கள்

C) ஆல்காக்கள்

D) பூஞ்சைகள்

 

 

42. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை

A) இரட்டை பகுப்பு

B) பல பகுப்பு

C) நீள் பகுப்பு

D) இவை அனைத்தும்

 

 

43. நைட்ரஜன் நிலை நிறுத்துதல் செய்பவை

A) நீலப் பசும் பாசிகள்

B) பசும் பாசிகள்

C) பழுப்பு நிற ஆல்கா

D) சிகப்பு ஆல்கா

 

 

44. சர்க்கரை கரைசலிலிருந்து ஒயின் (வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா

A) எஸ்செரிச்சியா

B) அஸிடோபேக்டர்

C) அஸிட்டோபேக்டர் அஸிடி 

D) ரைஸோபியம்

 

 

45. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்

A) யூபோர்பியேஸி

B) பேபேஸியி

C) ஆஸ்டிரேஸியி

D) மியுஸேஸியி

 

 

46. கருவுற்றபின் சூலகமானது வளர்ச்சி அடைந்து

A) கனியாகிறது

B) கருவாகிறது

C) விதையாகிறது

D) இவை அனைத்தும்

 

 

47. பெனிசிலியத்தின் வாழிடம்

A) நன்னீர்

B) பாறை

C) மலைப்பகுதி

D) அங்கப்பொருள்

 

 

48. டி.என்.ஏ. இரட்டை சுருள் அமைப்பை முதன் முதலாக விவரித்தவர்

A) பீடில் மற்றும் டாட்டம் 

B) மெக்இன்டோஷ்ச் 

C) ஹர்கோபிந்த் கொரானா 

D) வாட்சன் மற்றும் கிரிக்

 

 

49. இனச்செல் தோற்றத்திற்குக் காரணமான செல் பிரிதல்

A) மைட்டாசிஸ்

B) மியாஸிஸ்

C) ஏமைட்டாசிஸ்

D) நேர்முக செல் பகுப்பு

 

 

50. தாவர இனத்தில் மிகப்பெரிய செல் காணப்படுவது ______ 

A) அஸட்டாபுலேரியாவில் 

B) பைரிகுளேரியாவில்

C) பின்னுலேரியாவில்

D) குரோட்டலேரியாவில்

 

 

 

Join the conversation