PART: 1 – POLITY PREVIOUS YEAR QUESTIONS
1. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்?
A) டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B) டாக்டர் அம்பேத்கார்
C) டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
D) பண்டித ஜவஹர்லால் நேரு
2. இந்திய அரசியல் அமைப்பு வரைந்து முடித்தது
A) 26 டிசம்பர், 1949 இல்
B) 26 ஜனவரி, 1950 இல்
C) 26 நவம்பர், 1949 இல்
D) 30 நவம்பர், 1949 இல்
3. இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A) மாநிலங்களவையால்
B) மாநிலங்களவை மற்றும் மக்களவையால்
C) மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநில
சட்டமன்றம் ஆகியவைகளால்
D) மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால
4. குடியரசுத்தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
A) துணைக் குடியரசுத் தலைவர்
B) மக்களவை சபாநாயகர்
C) பிரதமர்
D) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
5. அமைச்சரவை கூட்டாக
A) குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது
B) பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது
C) மக்களவைக்குப் பொறுப்பானது
D) மாநிலங்களவைக்குப் பொறுப்பானது
6. அடிப்படை உரிமைகள்
A) மாநில* ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம்
B) குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
C) சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
D) பிரதம அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
7. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள்அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
A) அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்.
B) சோவியத் ரஷ்ய அமைப்பிலிருந்து பெற்றனர்
C) ஐரிஷ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
D) கனடா அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
8. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
A) அரசியலமைப்பின் பகுதி IV
B) அரசியலமைப்பின் பகுதி V
C) அரசியலமைப்பின் பகுதி VI
D) அரசியலமைப்பின் பகுதி III
9. இந்திய திட்டக்குழுவின் தலைவர்
A) திட்ட அமைச்சர்
B) துணை பிரதம அமைச்சர்
C) பிரதம அமைச்சர்
D) நிதி அமைச்சர்
10 .இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
A) 96 வகைகள்
B) 66வகைகள்
C) 52 வகைகள்
D) 99 வகைகள்
11. ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
A) இந்தியாவில் வசிப்பவராக இருத்தல்
B) இந்தியாவில் பிறந்தவராக இருத்தல்
C) பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்
D) இவை எல்லாவற்றையும் உடையவர்
12. கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுப்பட்டது?
A) கூட்டாட்சி அரசாங்கம்
B) பாராளுமன்ற அரசாங்கம்
C) ஜனாதிபதி முறை அரசாங்கம்
D) தனித்துவம் வாய்ந்த நீதித்துறை
13. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A) 62
B) 65
C) 60
D) 64
14 .உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
A) விதி 243 ன் படி
B) விதி 43ன் படி
C) விதி 142ன் படி
D) விதி 143ன் படி
15. இந்திய உச்சநீதி மன்றம்
A) அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது
B) பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டது
C) குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது
D) இவைகளில் ஏதுமில்லை
16. இந்திய பாராளுமன்றம்
A) மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
B) குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டுருக்கிறது
C)மக்களவை, குடியரசுத்தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது
D) மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும்குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது
17. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
A) 50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
B) 70 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
C) 60 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
D) 80 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
18. மக்களவையின் தலைவர்
A) அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்
B) மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்
C) வாக்களிக்க உரிமை இல்லை
D) இரண்டு வாக்குகள்-சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள்இருக்கும் போது மற்றொரு வாக்கும்
19. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
A) சட்டமன்றம்
B) நிர்வாகத்துறை
C) அரசியல் கட்சிகள்
D) நீதித்துறை
20. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வாழ்க்கபட்டுள்ளது
A) 19
B) 17
C) 32
D) 30
21. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
A) சட்ட சமத்துவம்
B) சமூக சமத்துவம்
C) பொருளாதார சமத்துவம்
D) அரசியல் சமத்துவம்
22. நீதி மறுபரிசீலணை என்பது
A) நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது
B) சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலணை செய்வது
C) நீதித்துறைகுழு நீதிமன்றங்களைக் கண்கன்காணிப்பது.
D) நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது.
23. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
A) அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
B) அடிப்படை உரிமைகள்
C) அடிப்படை கடமைகள்
D) குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்
24. எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?
A) 40வது அரசியலமைப்பு திருத்தம்
B) மூல அரசியல் அமைப்பு
C) 39வது அரசியலமைப்பு திருத்தம்
D) 42வது அரசியலமைப்பு திருத்தம்
25. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டபின், சொத்துரிமையானது
A) அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
B) அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது
C) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது
D) இவற்றில் எதுவுமில்லை
26. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீதுசட்ட எல்லையை உடையது?
A) புதுடில்லி
B) கர்நாடகா
C) கேரளா
D) மும்பாய்
27. எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
A) 356
B) 360
C) 372
D) 370
28.இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
A) வாக்குரிமை பெறுவது இல்லை
B) சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
C) எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்
D) சட்டதிருத்தத்தில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்
29. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
A) மத்தியில் ஒரவை, தமிழ்நாட்டில் இருஅவை
B) தமிழ்நாட்டில் ஓரவை, மத்தியில் ஓரவை
C) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இருஅவை
D) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓரவை
30 .இந்தியக் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
A) இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம்
B) பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்ட பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்
C) பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களால் மட்டும்
D) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் இருஅவை உறுப்பினர்களால்
31. அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A) ரூஸோ
B) ஜான்லாக்
C) மாண்டேஸ்கு
D) மார்க்ஸ்
32. அரசியல் அறிவியலின் தந்தை எனப்படுபவர்
A) சாக்ரடிஸ்
B) பிளாட்டோ
C) சிஸரோ
D) அரிஸ்டாட்டில்
33. அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது?
A) அமெரிக்க அரசியலமைப்பு
B) பிரிட்டிஷ் அரசியலமைப்பு
C) சுவிஸ் அரசியலமைப்பு
D) அயர்லாந்து அரசியலமைப்பு
34. இந்தியக் குடியரசுத் தலைவர் மேல்அவைக்கு நியமனம் செய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை
A) 10
B) 7
C) 13
D) 12
35.கட்டளைப் பேராணை என்பது
A) ஆளைக்கொண்டு வா என்பது
B) செயல்படுத்தும் ஏவல் ஆணை
C) யாருடைய அதிகாரத்தால்
D) கோப்புகளைச் சான்றாக கொண்டு வருவது
36. திட்டக்குழு என்பது
A) அரசியல் சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
B) அமைச்சர் குழுவால் உண்டாக்கப்பட்ட ஒரு அமைப்பு
C) நிதியாணைக் குழுவின் துணை அமைப்பு
D) அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பு
37. பின்வருவனவற்றுள் எது பன்மை செயற்குழுவிற்கு சிறந்த உதாரணம்?
A) இங்கிலாந்து
B) அமெரிக்கா
C) சுவிட்சர்லாந்து
D) இந்தியா
38. பஞ்சாயத்து அரசுமுறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு
A) 1950
B) 1959
C) 1956
D) 1951
39. இந்திய அரசு திட்டக்குழுவை நிறுவிய ஆண்டு
A) 1944
B) 1947
C) 1950
D) 1951
40. மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்
A) திரு. சந்திரசேகர்
B) திரு.ஏ.பி. வாஜ்பாய்
C) திருவி.பி. சிங்
D) திரு. மொரார்ஜிதேசாய்
41. இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம் எது?
A) மக்கள்
B) அரசியலமைப்புச் சட்டம்
C) பாராளுமன்றம்
D) பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள்
42. கீழே உள்ளவற்றில் எது அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது?
A) சமத்துவ உரிமை
B) சுதந்திரங்கள் உரிமை
C) சொத்துரிமை
D) இவற்றில் ஏதுமில்லை
43. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது
A) ஒற்றைக்குடியுரிமை
B) இரட்டைக் குடியுரிமை
C) பலகுடியுரிமை
D) மேலே உள்ளவற்றில் ஏதுமில்லை
44.இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்
A) மக்களவை மட்டும்
B) மக்களவை மற்றும் மாநிலங்களவை
C) குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
D) மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டட மன்றங்கள்
45. பாராளுமன்ற இருகூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன?
A) மூன்று மாதங்கள்
B) ஆறு மாதங்கள்
C) ஒன்பது மாதங்கள்
D) ஓராண்டு
46. தி.மு.க. எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
A) 1947
B) 1948
C) 1949
D) 1950
47. மக்களவையின் முதல் சபாநாயகர் யார்?
A) ஹுக்கம் சிங்
B) ஜி. எஸ். தில்லான்
C) கணேஷ் வாசுதேவர் மாவலங்கர்
D) அனந்தசயனம் ஐயங்கார்
48. சுதந்திரக் கட்சியை 1959ல் நிறுவியவர் யார்?
A) சி. ராஜகோபாலாச்சாரி
B) டாக்டர் பி. ஆர். அம்பேத்கார்
C) டாக்டர் ஹெச். வி. ஹண்டே
D) என். ஜி. ரங்கா
49. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது
A) 22 மொழிகள்
B) 15 மொழிகள்
C) 17 மொழிகள்
D) 19 மொழிகள்
50. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியது?
A) பகுதி I
B) பகுதி II
C) பகுதி III
D) பகுதி IV