
SCIENCE TEST QUESTIONS
1. பாக்டீரியாவை பாதிக்கும் வைரஸ்
A) ஆக்டினோபேஜ்
B) சயனோபேஜ்
C) வைரோபேஜ்
D) பாக்டீரியோபேஜ்
2. டி.என்.ஏ.வின். இரட்டை இழைச் சுருள் மாதிரியைக் கண்டறிந்தவர்கள்
A) வாட்சன் மற்றும் கிரிக்
B) ஜேம்ஸ் மற்றும் மெசெல்சன்
C) ஜேக்கப் மற்றும் மோனட்
D) வில்கின்ஸ் மற்றும் லெவீன்
3. பால்பியானி வளையங்கள் இவற்றில் காணப்படுகின்றன
A) பால் குரோமோசோம்கள்
B) அல்லோசோம்கள்
C) ஆட்டோசோம்கள்
D) பாலிடீன் குரோமோசோம்கள்
4. பாலியன்டாலஜி படிப்பு இதனுடன் தொடர்புடையது
A) தாவரங்கள்
B) விலங்கினங்கள்
C) புதைபடிமங்கள்/பாசில்கள்
D) பாக்டீரியா
5. மாலிப்டீனம் என்ற மண்ணில் உள்ள நுண்ஊட்டப் பொருளின் குறைபாட்டால் விளையும் நோய்
A) கரும்பில் செவ்வழுகல் நோய்
B) காலிபிளவரில் சாட்டை வால் நோய்
C) அமராந்தஸில் வெண்துரு நோய்
D) கோதுமையில் கருந்துரு நோய்
6. எண்டோதீசியம் மற்றும் எண்டோதீலியம் என்னும் அமைப்புகள் முறையே இவற்றோடு தொடர்பு உடையவை?
A) மகரந்தப்பை மற்றும் சூலுறை
B) மகரந்தப்பை மற்றும் நியூசெல்லஸ்
C) சூலுறை மற்றும் மகரந்தப்பை
D) மகரந்தப்பை மற்றும் சூற்பை சுவர்
7. உண்ணக்கூடிய காளான்கள்
A) அகாரிகஸ் பைஸ்போரஸ்
B) ரைசோபஸ்
C) மியூக்கர்
D) நியூரோஸ்போரா
8. பாலிகார்பிக் தாவரத்திற்கு உதாரணமாக இதனை கூறலாம்
A) பட்டாணி
B) மா
C) மூங்கில்
D) துவரை
9. பாக்டீரியாக்களின் செல்சுவரில் உள்ளது.
A) செல்லுலோஸ்
B) லிக்னின்
C) மியூக்கோபெப்டைடு
D) பெக்டோஸ்
10. தாவர செல்களில் வாக்குவோல்களை சுற்றியுள்ள ஒற்றை படலத்தின் பெயர்
A) அபோபிளாஸ்ட்
B) சிம்பிளாஸ்ட்
C) டோனோபிளாஸட்
D) குளோரோபிளாஸ்ட்
11. புகழ்பெற்ற ‘செல் பயாலஜி’ எனும் புத்தகத்தை எழுதியவர்
A) ஒடம்
B) டிராபர்ட்டீஸ்
C) ஸ்டிரீக் பெர்கர்
D) பெரில்
12. மஞ்சளின் தாவரவியல் பெயரானது
A) ஆஜாடைரக்டா இண்டிகா
B) ஹைபிஸ்கஸ் ரோசா-சைனன்சிஸ்
C) கர்கூமா டொமஸ்டிகா
D) அம்மானியா பேஸ்ஸிபெரா
13. இடமாற்றம் என்ற நிகழ்ச்சியில் நடைபெறுவது
A) ஒத்திசைவு அற்ற குரோமோசோம்களில் குரோமோசோமல் துண்டங்களின் பரிமாற்றம்
B) ஒத்திசைவு உள்ள குரோமோசோம்களுக்கிடையே குரோமோசோமல் துண்டங்களின் பரிமாற்றம்
C) அடுத்தடுத்த செல்களில் குரோமோசோம்களுக்கிடையே குரோமோசோமல் துண்டங்களின் பரிமாற்றம்
D) தாவர மற்றும் விலங்கு செல்களுக்கிடையே குரோமோசோமல் துண்டங்களின் பரிமாற்றம்
14. மகரந்தைப் பையில் காணப்படும் ஊட்டத்திசுவின் பெயர்
A) நியூசெல்லஸ்
B) டபிட்டம்
C) இன்டெகுமென்ட்
D) அன்னுலஸ்
15. இவற்றில் எது சரியான வரிசையில் அமைந்துள்ளது?
I. குடும்பம். II. பேரினம். III.துறை IV. பிரிவு
இவற்றுள் :
A) IV, III, I, II
B) 1, IV, III, II
C) IV, III, II, I
D) IV, I, III, II
16. செல்லில் ‘திறன் வீடுகள்’ எனப்படுபவை
A) ரைபோசோம்கள்
B) நியூக்ளியஸ்கள்
C) பசுங்கணிகங்கள்
D) மைட்டோகாண்ட்ரியாக்கள்
17. உங்கள் தோட்டத்திலுள்ள தக்காளி செடியின் ‘இளம் இலைகளின், நரம்பிடைகளில் பச்சையம் இன்றி காணப்படுகிறது. அதற்கு நீங்கள் என்ன சத்து அளிப்பீர்கள்?
A) கந்தகம்
B) இரும்பு
C) தாமிரம்
D) மாலிப்டினம்
18. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-I பட்டியல் II
a) பூவில் மிகவும் சிறியது. – 1.டிஸ்கிடியா ராபிலிஸியா
b) பூவில் மிகவும் பெரியது. – 2.கல்வாழை
c) சமச்சீரற்ற பூ. –3. பில்லேன்தஸ்
d) அல்லி வட்டம் மட்டும் உள்ள பூ – 4.உல்பியா
A) 2 1 3 4
B) 1 2 3 4
C) 3 4 1 2
D) 4 1 2 3
19. கருங்கடல் என்று பெயர் இடப்பட்டிருப்பதற்கான காரணம்
A) அது கருமை நிறத்தில் இருப்பதால்
B) நுண் கடற்பாசியின் மிகுதியான செறிவின் காரணமாக
C) அதன் நீர் அனைத்தையும் கருமை நிறத்திற்கு மாற்றுவதால்
D) (A) மற்றும் (C) ஆகிய இரண்டும்
20. கீழ்க்கண்ட பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல்-I பட்டியல்-II
a) சையனோ பாக்டீரியா – 1. ரோடோஸ்பைரில்லம்
b) அம்மோனியாவாக்கும் பாக்டீரியா. – 2. தையோ பேசில்லஸ்
c)ஒளிச்சேர்க்கை பாக்டீரியா. – 3. பாசில்லஸ்
d) நைட்ரஜனை குறைக்கும் பாக்டீரியா – 4. நாஸ்டாக்
A) 1 2 4 3
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 4 3 1 2
21. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க:
பட்டியல் – I பட்டியல்-II
a) மாலத்தியான். – 1. எலிக்கொல்லி
b) கலோமல். – 2. செடிக் கொல்லி
c) அட்ரசைன். – 3. பூஞ்சைக் கொல்லி
d) நார்புரோமைடு – 4. பூச்சிக் கொல்லி
குறியீடுகள்:
A) 4 3 2 1
B) 1 4 3 2
C) 3 2 1 4
D) 2 1 4 3
22. கீழ்க்கண்ட படத்தைக் கூர்ந்து கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
A) X – சுவாசித்தல், Y – ஒளிச்சேர்க்கை, Z – புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜன்
B) X – ஒளிச்சேர்க்கை, Y – சுவாசித்தல், Z – கார்போ ஹைட்ரேட்டுகள்
C) X – காற்றில்லா சுவாசம், Y -ஒளிச்சேர்க்கை, Z -சர்க்கரைகள்
D) X – காற்று சுவாசம், Y – ஒளிச்சேர்க்கை, Z – கார்போஹைட்ரேட்டு மற்றும் ஆக்சிஜன்
23. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வுசெய்க:
பட்டியல் I பட்டியல் II
a) வெளிப்படை அஸ்கஸ் – 1. பைரினோமைசீட்டஸ்
b) பெரிதீசியம். – 2. பிளக்டோமைசீட்டஸ்
c) அபோதீசியம். – 3. ஹெட்டிரோ அஸ்கோ மைசீட்டஸ்
d) கிளிஸ்டோதீசியம். – 4. டிஸ்கோமைசீட்டஸ்
குறியீடுகள்:
A) 4 3 1 2
B) 2 4 3 1
C) 3 1 4 2
D) 2 1 3 4
24. கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சிகள் மைட்டோ காண்ட்ரியாவில் நடைபெறுகின்றன?
A) டிரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி
B) எலக்ட்ரான் கடத்தி அமைப்பு மற்றும் ஆக்ஸிகரண பாஸ்பரிகரணம்
C) கொழுப்பு அமிலங்களின் B-ஆக்ஸிகரணம்
D) இவை அனைத்தும்
25. கீழ்க்கண்ட மூன்று இனங்களில் எது/எவை சரியானவை?
அ) வாண்டா ஒரு தொற்றுத் தாவரம்.
ஆ) இதில் வெலாமன் திசு உள்ளது.
இ) இது ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரம்.
A) (அ), (ஆ) – சரி, (இ) – தவறு
B) (அ), (இ) – சரி, (ஆ) – தவறு
C) (ஆ), (இ), – சரி, (அ) – தவறு
D) (அ), (ஆ), (இ) – சரி
26. சுவாசித்தலின் போது வெளிப்படும் ஆற்றல் எந்த வடிவத்தில் சேமிக்கப்படுகிறது?
A) ADP
B) ATP
C) NADP
D) APP
27. மரங்களின் உறுதிக்கு காரணமான திசுக்கள்
A) சைலம் ஃபுளோயம்
B) சைலம், ஸ்கீளிரன்கைமா
C) பாரன்கைமா, ஸ்கீளிரன்கைமா
D) ஃபுளோயம், பாரன்கைமா
28. காற்றில்லா சுவாச உயிர்களுக்கு எடுத்துக்காட்டு யாவை?
A) பாக்டீரியா, ஈஸ்ட்
B) பாக்டீரியா, பசுந்தாவரம்
C) ஈஸ்ட், பூஞ்சை
D) பசுந்தாவரம், ஈஸ்ட்
29. எண்ணெய் கசிவை அகற்ற ஆனந்த் மோகன் சக்கரபர்த்தி கண்டுபிடித்த பாக்டீரியம்
A) பேசில்லஸ்
B) சூடோமோனாஸ்
C) நைட்ரோசோமானாஸ்
D) ஸ்ட்ரெப்டோகாக்கஸ்
30. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரு முறைக்கு ‘ரோட்டான்’ என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது?
I.கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்
இவற்றுள் :
A)I மட்டும்
B) II மட்டும்
C) III மட்டும்
D) IV மட்டும்
31. கார்க்கினை லென்சினால் நோக்கும் போது பல அறைகளாகத் தெரிகின்றன. இந்த நிகழ்ச்சி மூலம் தாவரங்கள் பல செல்களால் ஆனவை என்று கண்டறிந்தவர்
A) கிரிகர் மெண்டல்
B) ‘சார்லஸ் டார்வின்
C) இராபர்ட் ஹூக்
D) இராபர்ட் பிரவுன்
32. ஒளிச்சேர்க்கை நடைபெறத் தேவையான முக்கிய மூலப் பொருட்கள்
1. சூரிய ஒளி, பசுங்கணிகம்
II. CO2, H2O
III. சூரிய ஒளி, பைலி புரதம்
IV.H2O வைட்டமின்கள்
இவற்றுள் :
A) I & IV
B) II & IV
C) I& II
D) III & IV
33. அதிகரிக்கும் மூலக்கூறு எடையின் அடிப்படையில், கீழ்வரும் தொடர்களில் எது சரியானது?
A) DNA, ATP, NADP, AMP
B) AMP, ATP, NADP, DNA
C) ATP, AMP, DNA, NADP
D) ATP, ADP, NADP, DNA
34. பசுந்தாள் உரம் கீழ்காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது?
A) பசுஞ்சாணம் மற்றும் தாவரக் கழிவுகள்
B) சணப்பை மற்றும் கொத்தவரை
C) சணப்பை மற்றும் பசுஞ்சாணம்
D) பசுஞ்சாணம் மற்றும் விலங்குக் கழிவுகள்
35. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-I பட்டியல் – II
a) பிளத்தல். – 1. ஈஸ்ட்
b) மொட்டுகள். – 2. பூக்கும் தாவரங்கள்
c) துண்டாதல். – 3. பாக்டீரியா
d) மகரந்தச் சேர்க்கை. – 4.ஆல்கா
குறியீடுகள்:
A) 3 1 4 2
B) 1 4 2 3
C) 4 2 3 1
D) 2 3 1 4
36. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை
A) திறந்த விதைத் தாவரங்கள்
B) மூடிய விதைத் தாவரங்கள்
C) பூவாத் தாவரங்கள்
D) நீர் வாழ்வன
37. செல் சுவாசம் இங்கு நடைபெறுகிறது
A) சென்ட்ரோமியர்
B) மைட்டோகாண்ட்ரியா
C) நியூக்ளியஸ்
D) கால்கி உறுப்புகள்
38. லெகுமினஸ் தாவர வேர் முடிச்சுகளில் உள்ள நைட்ரஜன் நிலைப்படுத்தும் பாக்டீரியா
A) சால்மோநெல்லா
B) ரைசோபியம்
C) கிளாஸ்ட்ரிடியம்
D) சூடோமோனாஸ்
39. ஆல்காக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகிய இரண்டும் இவ்விதமாக அழைக்கப்படுகின்றன
A) தாலோபைட்டுகள்
B) ப்ரையோபைட்டுகள்
C) டெரிடோபைட்டுகள்
D) ஸ்பெர்மடோபைட்டுகள்
40. குரோமோசோம்கள் எண்ணிக்கையில் மாறுபாடு அடைதல்______ என அறியப்படுகிறது
A) யூப்ளாய்டி
B) அனுப்பிளாய்டி
C) பாலிபிளாய்டி
D) அல்லோபாலிப்ளாய்டி
41. பின்வருவனவற்றுள் எது சரியான ஜோடி?
a) வெட்டப்பட்ட தண்டுப் பகுதி – ஹைபஸ்கஸ்
b) பதியம் போடுதல் – மல்லிகை
c) ஒட்டுப் போடுதல் – மா
d) ஈஸ்ட். – துண்டாதல்
e) கொனிடியா – மியூக்கர்
A) (a), (b), (c) – சரி
B) (b), (c), (d), (e)சரி
C) (c), (d), (e) – சரி
D) (a), (b), (c), (d) – சரி
42. ஆற்றல், பின்வரும் எந்த மூலக்கூறு வடிவில் மைட்டோகாண்ரியாவில் சேமிக்கப்படுகிறது. இது செல்லின் ஆற்றல் நாணயம் எனப்படுகிறது.
I.குளுக்கோஸ்
II. புரதம்
III.ATP
IV. ADP
A) I மற்றும் II சரி
B) III மட்டும் சரி
C) IV மட்டும் சரி
D) III மற்றும் IV சரி
43. பொருத்துக :
பட்டியல் I பட்டியல் II
a) குளோரோபிளாஸ்ட் – 1. உட்கரு
b) குரோமோபிளாஸ்ட். – 2. கிழங்கு
c) லியூக்கோபிளாஸ்ட். – 3. இலை
d) லைசோசோம். – 4. மலர், கனி
e) குரோமேட்டின் வலை- 5. தற்கொலை பை
குறியீடுகள்:
A) 3 4 2 5 1
B) 3 2 5 1 4
C) 3 5 1 2 4
D) 5 1 3 4 2
44. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-I பட்டியல் – II
a) அமீபா. – 1. ஸ்போர்கள்
b) பாரமீசியம். – 2. கசையிழை
c) யூக்ளினா. – 3. போலிக் கால்கள்
d) பிளாஸ்மோடியம். – 4. சிலியா
A) 3 4 2 1
B) 4 3 1 2
C) 1 2 3 4
D) 4 2 1 3
45. நீர் தொடர்மாற்றம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் எவை / எது சரியானது?
I. நுண் மிதவைத் தாவர நிலையில் அசோல்லா, லெம்னா மற்றும் ஊல்ஃபியா போன்ற தனித்த மிதவைத் தாவரங்கள் அடங்கும்.
II. கடைசி நிலை என்பது காடு எனப்படும் சமூகம்.
III.தொடர் மாற்றத்தின் இரண்டாம் நிலையானது வேரூன்றிய மிதக்கும் தாவர நிலை.
IV.மர நிலப்பகுதி என்பது நிலவாழ் தாவரங்கள் கொண்டதாகும்.
A) I, II மற்றும் IV
B) II மற்றும் IV
C) IV மட்டும்
D) I, III மற்றும் IV
46. பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-I பட்டியல் – II
a) கத்தரி. – 1. லெக்யூம்
b) ஆப்பிள். – 2. பெர்ரி
c)பட்டாணி. – 3. அறை வெடிகனி
d) வெண்டை – 4. போம்
குறியீடுகள்:
A) 2 4 1 3
B) 4 1 3 2
C) 3 1 2 4
D) 1 2 3 4
47. 1990ல் மெண்டலின் சோதனைகளை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்ட போது அதில் கலந்து கொள்ளாத வல்லுநரின் பெயரைக் கூறு.
A) டிவ்ரீஸ்
B) மார்கன்
C) கொரன்ஸ்
D) ஷெர்மார்க்
48. கீழே வரு பவைகளில் யூஃபோர்பியேசி குடும்பத்தில் காணப்படும் சிறப்பு மிக்க மஞ்சரி வகை எது
A) சயாத்தியம்
B) வெர்ட்டிசிலேஸ்டர்
C) ஹைப்பந்தோடியம்
D) சினான்தியம்
49. தொடரும் அறிக்கைகளை ஆலோசித்து கீழ்க்காணும் விடைகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்வு செய் :
a) எதிர்கால உபயோகத்திற்காக மிகுந்த நீரைச் சேமிப்பதே உவர்ப்பு நிலத் தாவரங்களில் சதைப் பற்று மிகுந்திருக்கக் காரணம்.
b) அதிக அளவில் உப்புக்கள் உட்புகுவதை ஈடுகட்ட உறிஞ்சப்படும் அதிக நீரே உவர்நிலத் தாவரங்களில் சதைப்பற்று மிகுந்திருக்கக் காரணம்
c) சில வேளைகளில் அதிகப்படியான உப்பு இலைகளின் மேல்பரப்பில் சேர்க்கப்படுகிறது.
இவைகளில்,
A) (a) மற்றும் (c) சரி மற்றும் (b) தவறு
B) (b) சரி மற்றும் (a) மற்றும் (c) தவறு
C) (c) சரி மற்றும் (a) மற்றும் (b) தவறு
D) (a) தவறு மற்றும் (b) மற்றும் (c) சரி
50. தோட்டத்து பட்டாணி வகைகளில் மென்டல் ஆராய்ந்த விதையுறையின் நிறத்தின் எதிரெதிர் பண்புகள் என்ன?
A) சிவப்பு மற்றும் வெள்ளை
B) மஞ்சள் மற்றும் பச்சை
C) சாம்பல் மற்றும் வெள்ளை
D) இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை