Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 38
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. பின்வருவனவற்றுள் தவறான கருத்தை குறிப்பிடுக. 

I. பூஞ்சைகள் பச்சையத்தைக் கொண்டிருக்காது 

II. பூஞ்சைகள் சுய ஜீவிகள் 

III.பூஞ்சைகளில் உடலம் மைசிலியம் எனப்படும் 

IV.பூஞ்சைகள் ஒட்டுண்ணியாகவோ அல்லது சாறுண்ணியாகவோ இருக்கலாம்.

A) l

B) II

C) III

D) IV

 

 

2. தொடரும் அறிக்கைகளை ஆலோசித்து கீழ்க்காணும்விடைகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்: தாவரங்களில் கழிவுகளைக் கழிக்க சிறப்பு உறுப்புகள் இல்லை, ஏனெனில் : 

I. தாவரங்கள் தங்கள் உடலுக்குள் நுழையும் அனைத்துப் பொருட்களையும் முழுமையாகப் பயன்படுத்துகின்றன. 

II. விலங்குகளோடு ஒப்பிடுகையில் தாவரங்கள் மிக மெதுவாகவே பொருட்களைச் சிதைக்கின்றன. 

III. கழிவுப் பொருட்கள் இலைகளில் சேமிக்கப் பட்டு உதிர்க்கப்படுகின்றன. 

IV. கழிவுப் பொருட்கள் பிசின், தாவர உயிர்ச்சாறு மற்றும் மரப்பால் ஆகிய வகைகளில் வெளியேறுகிறது. இவைகளில்.

A) | சரி மற்றும் II மற்றும் III தவறு

B) l மற்றும் II சரி மற்றும் III மற்றும் IV தவறு

C) II மற்றும் III சரி மற்றும் I மற்றும் IV தவறு

D) l தவறு மற்றும் II-IV சரி

 

 

3. முதல் பட்டியலையும், இரண்டாவது பட்டியலையும் ஒப்பிட்டு, கீழ்க்கண்ட தொகுப்பின் துணையோடு சரியான விடையை அளிக்கவும் : 

பட்டியல்-I                     பட்டியல்-II                                  

a) ஜேகோப் மற்றும் மொனாடு. -1.குரோமோசோம் 

b) பீடில் மற்றும் டாடம். -2. மரபுக் குறியீடு 

c) வால்டேயர். -3. ஓபரான் கோட்பாடு 

d) நிரன்பர்க் -4. ஒரு ஜீன்-ஒரு என்சைம் கோட்பாடு 

குறியீடுகள்:

A)2 1 3 4

B)1 2 4 3

C)3 4 1 2

D)1 3 2 4

 

 

4. ஹைட்ரோபோனிக்ஸின் மறுபெயர் 

1. மண்ணில்லாத வேளாண்மை 

2. தொட்டி விவசாயம் 

3. இரசாயன விவசாயம் 

4. மேலே கூறிய அனைத்தும் 

சரியான விடையை தேர்ந்தெடு :

A) 1 மற்றும் 2 சரி

B) 1 மட்டும் சரி

C) 2 மற்றும் 3 சரி

D) 4 மட்டும் சரி

 

 

5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாகங்களில் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

A) (1) சலாசா (2) சூல்துளை (3) அண்டம் (4) கருப்பை

B) (1) சூல்துளை (2) கருப்பை(3) அண்டம் (4) சலாசா

C) (1) சூல்துளை (2) அண்டம்(3) கருப்பை (4) சலாசா

D) (1) சினர்ஜிடு (2) அண்டம்(3) கருப்பை (4) சலாசா

 

 

6. தொடரும் அறிக்கைகளை ஆலோசித்து கீழ்க்காணும் விடைகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்வு செய். 

l. வனவாழை மற்றும் கள்ளி மலர்கள் வெளுத்த வண்ணத்துடன் இரவில் மலருபவையாக இருக்கின்றன. 

II. அணில்கள் வனவாழைக்கும், கள்ளிக்கும் மகரந்த பரப்பிகளாகும். III.வனவாழை மற்றும் கள்ளிச் செடிகளில் வவ்வால்களே மகரந்த பரப்பிகளாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

A) II ஆனது I-க்குச் சரியான பதிலாகும்

B) II மற்றும் III சரி மற்றும் l தவறு

C) III மற்றும் IIயே l க்குச் சரியான பதிலாகும்

D) l மற்றும் lII சரி மற்றும் II தவறு

 

 

7. வரிசை l மற்றும் வரிசை ll ஆகியவைகளை பொருத்தி, சரியான தெரிவினை தேர்வு செய்க : 

வரிசை I                          வரிசை II 

a) சுவாசித்தல் -1. குளோரோபிளாஸ்ட் 

b) புரதச் சேர்க்கை-2. மைட்டோகான்ட்ரியா 

c) ஒளிச்சேர்க்கை-3. டிக்டியோசோம் 

d) சுரத்தல். -4. ரைபோசோம்

A)1 3 2 4

B)4 2 3 1

C)3 1 4 2

D)2 4 1 3

 

 

8. உரங்கள் தொடர்புடைய கீழ்க்கண்ட வாக்கியங்களை படிக்கவும். 

1. நைட்ரஜன், தாவரங்களின் வேகமான வளர்ச்சிக்கு அவசியமானதாகும். 

II. தாவரங்களின் துரித வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் பாஸ்பேட் தேவை. 

II. வலிமையான வேர் அமைப்பை பொட்டாசியம் உருவாக்குகிறது. மேற்கண்ட எந்த வாக்கியம் / வாக்கியங்கள் சரி?

A) I மற்றும் II

B) I, II மற்றும் lll

C) I மற்றும் III

D) l மட்டும்

 

 

9. ஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது

A) எப்பொழுதும் பசுமையானது

B) கூட்டிலைகள் கொண்டது

C) சிறிய அளவினைக் கொண்டது

D) சூல்கள், சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்

 

 

10. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப்பட்டுள்ள பாகங்களின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

A) (1) டி.யு.சி. வளையம்(2) எதிர்கோடான் வளையம்(3) டி.எச்.யு. வளையம்

B) (1) எதிர்கோடான் வளையம் (2) டி.யு.சி. வளையம்(3) டி.எச்.யு. வளையம்

C) (1) டி.யு.சி. வளையம் (2) டி.எச்.யு. வளையம் (3)எதிர்கோடான் வளையம்

D) (1) டி.எச்.யு. வளையம் (2) எதிர்கோடான் வளையம்(3) டி.யு.சி. வளையம்

 

 

11. உரம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? 

I. அது விலை குறைவாக கிடைக்க வேண்டும். 

II. அது தாவரங்களால் எளிதில் உறிஞ்சத்தக்க வகையில்இருக்க வேண்டும். 

III. அது நீரில் எளிதில் கரையக்கூடாது.

A) l மற்றும் II

C) I மற்றும் III

B) II மற்றும் III

D) III மட்டும்

 

 

12. கீழ்க்கண்ட தலைப்புகளில்  

கூற்று (A): பூச்சுண்ணும் தாவரம் பூச்சிகளின் உள்ள புரோட்டீன்களை உடலில் செரிக்கின்றன.

காரணம் : பூச்சுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணில் வளரும் குறியீட்டில் சரியான கீழே குறிப்பிட்டுள்ள விடையைத் தேர்ந்தெடு :

A) (A) சரி ஆனால், (A)விற்கு சரியான விளக்கமல்ல

B) (A) மற்றும் இரண்டும் சரி, மேலும் என்பது (A)-விற்கு சரியான விளக்கம்

C) (A) சரி ஆனால் தவறு

D) (A) மற்றும் இரண்டும் தவறு

 

 

13. கீழ்க்கண்டவற்றை சரியாக பொருத்துக : 

வரிசை I                வரிசை II

a) டார்வின். – 1.திடீர்மாற்றம் 

b) மெண்டல். – 2. தருவித்த பண்புகள் பரிணாம விதி 

c)லாமார்க். – 3.தனித்து பிரிதல் விதி 

d) க்ஃகோ டிவரிஸ்- 4.சிற்றின தோற்றம்

A)4 3 2 1

B)2 1 3 4

C)3 4 2 1

D)1 3 4 2

 

 

14. பின்வரும் தாவர இனத்தின் வகைப்பாட்டின் பிரிவுகளை இறங்கு வரிசையில் எழுது

I.பிரிவு டெரிடோபைட்டா

II. பிரிவு தாலோபைட்டா 

III.பிரிவு ஸ்பெர்மேட்டோபைட்டா 

IV. பிரிவு பிரையோபைட்டா

A) IV, II, III, I

B) III, I, IV, II

C) II, I, IV, III

D) l, IV, II, III

 

 

15. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி : 

கூற்று (A) : பூச்சுண்ணும் தாவரம் பூச்சிகளின் உடலில் உள்ள புரோட்டீன்களை செரிக்கின்றன. 

காரணம்(R ) : பூச்சுண்ணும் தாவரம் நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள மண்ணிலும் வளரும்.

A) (A) சரி ஆனால் (R ) (A)-விற்கு சரியான விளக்கமல்ல.

B) (A) மற்றும் (R )இரண்டும் சரி, மேலும் ( R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.

C) (A) சரி ஆனால் (R ) தவறு.

D) (A) மற்றும்( R) இரண்டும் தவறு.

 

 

16. கீழ்க்கண்டவற்றுள் எது/எவை சரியான பொருத்தம்? 

I. கடின ரெசின்-கொக்காயின் 

II. ஒலியா ரெசின் – கனடா பால்சம் 

III.லேட்டெக்ஸ்- ரப்பர் 

IV. ஆல்கலாய்டு-பெருங்காயம்

A) I மட்டும்

B) II மற்றும் III

C) III மட்டும்

D) I மற்றும் IV

 

 

17.குரோமானிமா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது

A) பாரானிமிக் சுருள்

B) பிளக்டோனிமிக் சுருள்

C) குரோமானிமிக் சுருள்

D) டீலோனிமிக் சுருள்

 

 

18. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க. 

கூற்று (A): கஸ்குடா என்பது ஓர் ஒட்டுண்ணி விலங்கினம். 

காரணம் (R ):கஸ்குடா தனது உணவு, தண்ணீர் மற்றும் தனிம உப்புகளின் தேவைகளுக்கு ஆதாரத் தாவரத்தினைச் சார்ந்திருக்கும்.

A)(A) மற்றும்(R) இரண்டும் சரி, மேலும்(R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்

B)(A) மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல.

C) (A) சரி, ஆனால் R தவறு-

D) (A) தவறு, ஆனால் R சரி.

 

 

19. தக்காளிப் பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்

A) ஆந்தோ சையனின்கள் 

B) சுரோட்டினாய்டுகள்

C) ப்ளேவனாய்டுகள் 

D) டேனின்கள்

 

 

20. பின்வரும் தாவர செல்களைப் பற்றிய கூற்றுகளில் எவை உண்மையானவை? 

I. தாவர செல்களில் சென்ட்ரியோல்கள் உள்ளன. 

ll. தாவர செல்களில் பசுங்கணிகங்கள் உள்ளன. 

III.தாவர செல்களில் செல் சுவர்கள் உள்ளன. 

IV.தாவர செல்களில் நுண்குமிழிகள் உள்ளன.

A) I மற்றும் IV

B) II மற்றும் III

C) I மற்றும் III

D) II மற்றும் IV

 

 

21. காற்று சுவாசத்தின் சரியான சமன்பாட்டினைத் தேர்வு செய்க :

A) C6H12 O6 + 602→ 6CO + 6H2O

B) C2H5O10 + 6CO2 → 602 + 5H2O2 + 2CO2

C) C 6H12 O 6+ 6CO2 → 6CO2+ 6h2O

D)C 6 H12 O 6 + 6O2 → 6CO 2+ 6H2

 

 

22. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க. 

I. ஈக்விசிடம் ஒரு நீர்வாழ் தாவரம் 

II. ஈக்விசிடம் பொதுவாக குதிரைவால் என்று அழைக்கப்படும் 

III. ஈக்விசிடம் ஒரு டெரிடோபைட் தாவரமாகும் 

IV.ஈக்விசிடம் ஆஞ்சியோஸ்பெர்ம் வகையைச் சார்ந்தது

மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

A) I மற்றும் II

B) II மற்றும் III

C) III மற்றும் IV

D) IV மற்றும் l

 

 

23. கீழ்க்கண்டவற்றுள் எது/எவை காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவாக உள்ள நிகழ்வு? 

l. கிளைக்காலிசிஸ் 

II.கிரப் சுழற்சி 

III.லேக்டிக் அமில நொதித்தல் 

IV.ஆல்கஹால் நொதித்தல்

A) II மட்டும்

B) I மற்றும் lll

C) II மற்றும் IV

D) l மட்டும்

 

 

24. தவறான பொருத்தத்தைக் கண்டறிக.

A) குளோரெல்லா-ஆல்கா

B) பெனிசிலியம்-பாக்டீரியம்

C) அகாரிகஸ்-பூஞ்சைக்காளான்

D) அஸ்னியா-லைக்கன்

 

 

25. பின்வருவனவற்றுள் தவறான கூற்று/கூற்றுகளை குறிப்பிடுக: 

I. தனக்கு தேவையான உணவைத் தானே தயாரித்துக் கொள்பவை தற்சார்பு உயிரிகள் 

II. தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை பிறசார்பு உயிரிகள் 

III. தனக்கு தேவையான உணவை தானே தயாரிக்க முடியாதவை தற்சார்பு உயிரிகள் 

IV. தனக்கு தேவையான உணவை தானே தயாரித்து கொள்பவை பிறசார்பு உயிரிகள்

A) (ii) and (iv)

B) (i) and (ii)

C) (i) and (iii)

D) (iii) and (iv)

 

 

26. கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?

1) லைகன்ஸ்-குளோரெல்லா

II) காளான்கள்-அகாரிகஸ்

III) ஆல்காக்கள்-பெனிசீலியம்

IV) பூஞ்சைகள்-அஸ்னீயா

A) l

B) II

C) lll

D) IV

 

 

27. ஆக்ஸிடேடிவ் பாஸ்போரைலேஷன் நடைபெறும் உள்ளுறுப்பு

A) மைட்டோகாண்ட்ரியாக்கள் 

B) பசுங்கனிகங்கள்

C) லைசோசோம்

D) கால்கி

 

 

28. ‘செல் கோட்பாடு” பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/ எவை சரி ? 

l) அனைத்து செல்களும் செவ்வக வடிவானவை 

II) உயிரினங்களின் வாழ்வின் அடிப்படை அலகு செல் ஆகும் 

III) அனைத்து செல்களும் பச்சைய நிறமிகளைப் பெற்றிருக்கும் 

IV) அனைத்து செல்களும் மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பகுப்புகளை மேற்கொள்ளும்

A) 1 மற்றும் III

B) II மற்றும் IV

C) III மற்றும் IV

D) II மட்டும்

 

 

29. பின்வருவனவற்றை பொருத்துக. 

a) குளோரோபைட்டா-1. சிவப்பு பாசிகள் 

b) ரோடோபைட்டா. -2.பச்சை பாசிகள் 

c)சயனோபைட்டா. -3. பழுப்பு பாசிகள் 

d)பேயோபைட்டா. -4. நீலபசும் பாசிகள்

A)2 4 3 1

B)4 2 3 1

C)2 1 4 3

D)4 1 2 3

 

 

30. கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.

A) வைட்டமின் A

B) வைட்டமின் B

C) வைட்டமின் D

D) வைட்டமின் E

 

 

31. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி.

I. தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், குறைந்த மழைப் பொழிவு,சத்தான மண் ஆகியவையாகும்.

II. தாவர வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைபவை அதிக வெப்பம், அதிக மழைப் பொழிவு, சத்தான மண் ஆகியவையாகும். மேலே கொடுக்கப்பட்ட சொற்றொடரில் சரியான விடையை தேர்ந்தெடு.

A) I மட்டும்

B) II மட்டும்

C) I, II மட்டும்

D) l மற்றும் II தவறு

 

 

32. கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும் :

கருத்துக்கள் : 

l. வைட்டமின் A கொழுப்பில் கரையும். 

II. வைட்டமின் C நீரில் கரையும். 

Ill.கிளைக்கோஜன் என்பது விலங்கின ஸ்டார்ச். 

IV. வைட்டமின் E கால்சிஃபெரால் எனவும் அறியப்படும்

A) I

B) II

C) III

D) IV

 

 

33. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.

A) ஃபிலிகோஃபைட்டா

B) ஹிஸ்டிரோஃபைட்டா

C) லைக்கோஃபைட்டா

D) ஸைலோஃபைட்டா

 

 

34. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி. 

I. பாக்கள் (aerosols) மற்றும் பூச்சிக் கொல்லிகளில் பெரும்பான்மையாக குளோரோ ஃபுளூரோகார்பன்கள் உயரிய குளிரூட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன. 

II. மீதோபிரின் தாவரங்கள் விலங்குகளுக்கு கேடு விளைவிப்பதாகும். III.ஃபோட்டோ பாக்டிரியம் பாஸ்ஃபாரியம் என்பது உயிர் ஒளிர்விப்பான்களுக்கு உதாரணமாகும்.  

IV. பீடாலஜி என்பது இயற்கை சூழலில் மண் பற்றிய ஆய்வாகும். கீழ்க்கண்ட குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையை எழுதுக.

A) I, II மற்றும் III மட்டும் சரியானவை

B) I, III மற்றும் IV மட்டும் சரியானவை

C) I மற்றும் III மட்டும் சரியானவை

D) III மற்றும் IV மட்டும் சரியானவை

 

 

35. கனிகள் மற்றும் காய் வகைகளின் புதியத் தன்மையை நீடிக்க சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தால் கண்டறியப்பட்ட நொதி

A) கைனேஸ் சூப்பர் ஆக்ஸிடேஸ்

B) எதில் குளுகோனேஸ்

C) பீனைல் அவ்டோலேஸ்

D) சூப்பர் ஆக்ஸைடு டிஸ்ம்யூடேஸ்

 

 

36. பின்வருவனவற்றுள் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?

A) கிராம் நெகடிவ் ஒளிச்சேர்க்கையின் நீலப்பசும்பாசி

B) 3 பில்லியன் ஆண்டுகளாக வாழ்வது

C) ஸ்பைருலினா உணவு வகையைச் சார்ந்த நீலப்பசும்பாசி

D) சர்காசம் நீலப்பசும்பாசி வகையைச் சார்ந்தது

 

 

37. கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: 

கூற்று (A) 1 ஸ்கிளரன்கைமா செல்கள் தாவரங்களுக்கு உறுதித் தன்மையினை அளிக்கின்றன. 

காரணம்( R) :ஸ்கிளரன்கைமா செல்கள் மென்மையான செல்சுவர்களைப் பெற்றுள்ளன.

(A)(A) மற்றும் (R )இரண்டும் சரி. மேலும் ( R)என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

(B)(A) மமற்றும்(R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.

C) (A) சரி, ஆனால் (R ) தவறு.

D) (A) தவறு, ஆனால் (R ) சரி.

 

 

38. மைமோசா பூடிகா தாவரத்தில் வெளிப்படுத்தப்படும் அசைவுகளை கண்டறியவும்.

A) தூங்கும் இயக்கம்

B) தொடு இயக்கம்

C) ஒளி நோக்கு இயக்கம்

D) அதிர்வு இயக்கம்

 

 

39. நீலப் பச்சை பாசிகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை ? 

I. நீலப்பச்சைப் பாசிகளின் செல்கள் புரோகேரியோட்டிக் வகையைச் சார்ந்தவை. 

II. நீலப் பச்சைப் பாசிகளின் சேமிப்பு உணவுப் பொருள் லேமினேரின்.

III. சவ்வு சூழ்ந்த கணிகங்கள் நீலப் பச்சை பாசிகளின் செல்களில் இல்லை. 

IV. நீலப் பச்சை பாசிகளில் கசையிழைகள் இல்லை

A) II மற்றும் IV

B) l மற்றும் II

C) ll மற்றும் III

D) I, Ill மற்றும் IV

 

 

40. பாசிகளை ஆய்ந்தறியும் அறிவியலின் பெயர் என்ன?

A) ஃபிசியாலஜி

B) ஃபைக்காலஜி

C) மைக்காலஜி

D) போமாலஜி

 

 

41. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேதிப்பொருட்களின் குழுமத்திற்குப் பொருந்தாததைக் கண்டறி : BHC, DDT, 2, 4-D, யூரியா

A) BHC

B) DDT

C) 2, 4-D 

D) யூரியா

 

 

42. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு எது ?

A) கார்பன்-டை-ஆக்ஸைடு

B) நைட்ரஜன்

C) ஹைட்ரஜன்

D) ஆக்சிஜன்

 

 

43. இடப்பெயர்ப்பின் போது மரபணு சார்ந்த, குறியன்களில் எதில் தடை குறியன் உள்ளது ? I. UGC II. UAA III.UAG IV.UGA

A) I, II, III

B) I, II, IV

C) II, I, III

D) II, III, IV

 

 

44. சுவாசித்தல் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை? 

1. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது. 

II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. 

III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை. IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.

A) I, II மற்றும் IV

B) II மற்றும் IV

C) I மற்றும் II மட்டும்

D) | மற்றும் III

 

 

45. மகசூலை அதிகரிக்க, பாக்டீரியாவிலிருந்துஎடுக்கப்பட்டு, பயறு அல்லாத தாவரங்களில் செலுத்தப்படும் ஜீன் எது ?

A) T, ஜீன்

B) B, ஜீன்

C) நிஃப் ஜீன்

D) உணர்தடை ஜீன்

 

 

46. தொடரும் அறிக்கையை ஆலோசித்து கீழ்க்காணும் ஒன்றைத் தேர்வு செய். அதிகப்படியான புரதம், மாவு சக்தி, கொழுப்பு,சாம்பல், நீர் முதலானவை முதிர்ந்த மகரந்தத்தில் கீழ்க்காணும் விகிதாச்சாரத்தில் இருக்கும். புரதம்-மாவுசக்தி – கொழுப்பு – சாம்பல்- நீர் சரியான விகிதமாவது :

A) புரதம்>மாவுசக்தி > கொழுப்பு>சாம்பல்>நீர்

B) புரதம்> மாவுசக்தி < கொழுப்பு > சாம்பல்>நீர்

C) புரதம்<மாவுசக்தி > கொழுப்பு>சாம்பல்<நீர்

D) புரதம் < மாவுசக்தி < கொழுப்பு > சாம்பல்>நீர்

 

 

47. கீழ்க்கண்டவற்றுள் “ஆண், பெண் கேமீட்களின் இணைவில்லாமல் வளமான விதையினை உண்டாக்கும் பண்பு” என எது அறியப்படுகிறது?

A) அபோமிக்சிஸ்

B) அபோஸ்போரி

C) டிப்ளோஸ்போரி 

D) ஆம்பிமிக்கிஸ்

 

 

48. வரிசை I மற்றும் வரிசை II ஆகியவைகளை பொருத்தி, சரியான தெரிவினை எழுதுக :

வரிசை I                    வரிசை II 

A) உற்பத்தியாளர்கள். -1. பாக்டீரியங்கள்

B) முதல்நிலை பயன்படுத்துவோர் -2. தாவர உண்ணிகள்

C) இரண்டாம்நிலை பயன்படுத்துவோர்- 3. விலங்குண்ணிகள்

D) சிதைப்பவைகள் – 4. பச்சைத் தாவரங்கள்

 

 

49. வித்தகரின் தாவரங்களின் ஐந்து உலக வகைப்பாட்டின்படி புரோடிஸ்ட்டா உலகம் அனைத்து

A) புரோகேரியாட்டிக் உயிரினங்களை கொண்டுள்ளது

B) ஒரு செல்லால் ஆன யூக்கேரியாட்டிக் உயிரினங்களை கொண்டுள்ளது.

C) பல செல்களால் ஆன யூக்கேரியாட்டிக் உயிரினங்களை கொண்டுள்ளது. .

D) பல செல்களால் ஆன இழை பூஞ்சைகளை கொண்டுள்ளது.

 

 

50. கீழ்க்கண்ட நுண்ணுயிரிகளில் எந்த நுண்ணுயிரி அசோலாதாவரத்துடன் இணைந்து நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது?

A) பிராங்கியா

B) ரைசோபியம்

C) அனாபினா

D) அசோஸ்பைரில்லம்

 

 

 

 

Join the conversation