
SCIENCE TEST QUESTIONS
1. தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரிபாதி குரோமோசோம்களை கொண்டுள்ள நான்கு சேய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு ……………… எனப்படும்.
A) மைட்டாசிஸ்
B) ஏமைட்டாசிஸ்
C) மையோசிஸ்
D) கேரியோகைனிஸிஸ்
2.அண்டம் வெளிப்படல் நிகழ்ச்சியுடன் தொடர்புடையது
A) புரோலேக்டின்
B) டெஸ்டோஸ்டிரோன்
C) ஆக்ஸிடோசின்
D) எல்.எச்
3. குளிர்காலத்தில் விலங்குகள் தங்கள் உடல் நடுக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் தகவமைப்பின் பெயர்
A) ஹைபர்நேஷன்
B) என்சிஸ்ட்மென்ட்
C) ஏயிஸ்டிவேஷன்
D) டையபாஸ்
4.மனித இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும் நிகழ்விற்கு
A) பாலிசைதீமியா
B) லுயுகோபினியா
C) லூகீமியா
D) அனிமியா
5.கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
A) வைட்டமின் A பெண்களின் கருகலைவதை தடுக்கிறது
B) வைட்டமின் K இரத்தப் போக்கை தடுக்கிறது
C) வைட்டமின் D பல்சொத்தையை தடுக்கிறது
D) வைட்டமின் C ஸ்கர்வியை தடுக்கிறது
6. பொருத்துக :
இரத்த செல்கள் – சதவீதம்/சி.எம்.எம்
a) நியூட்ரோஃபில் – 1. 20-30
b) இயோசினோஃபில் – 2. 2-2
c) பேசோஃபில் – 3.1-4
d) லிம்போசைட்கள் – 4.60-70
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 4 1 2 3
D) 1 2 3 4
7. ஒன்றிற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தொகுப்பாக ஒரே அலகாக வாழும் உயிரினங்களுக்கும், அவற்றின் சுற்றுப்புறத்திற்கும் இடையேயான உறவினை படித்தறியும் பிரிவிற்கு என்ன பெயர்?
A) ஒருங்கிணைப்பு சூழலியல் (அ) பிணைப்பு சூழலியல்
B) தனிப்பட்ட சூழலியல்
C) மரபணு சூழலியல்
D) மூலங்களின் சூழலியல்
8. சரியான கூற்றை தேர்வு செய்க:
I. அண்ட அணு வெளியேற்றத்திற்கு பிறகு கிராஃபியன் பாலிகிள்கள் உடைந்து கார்பஸ் லூட்டியமாக மாறுகிறது.
II. கார்பஸ் லூட்டியம் ஒரு நாளமில்லாச் சுரப்பியாக மாறுகிறது.
A) I தவறு II சரி
B) I சரி II தவறு
C) I மற்றும் II தவறு
D) I மற்றும் II சரி
9. சூடோமோனாஸ் எனும் மரபுப் பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட பாக்டீரியாவை கண்டறிந்தவர்
A) Dr. அயன் வில்மட்
B) Dr.கொரானா
C) Dr. சந்திரசேகர்
D) Dr. ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
10. எயிட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது ?
A) DNA
B) RNA
C) குரோமோசோம்
D) ஜீன்
11.தவறான ஜோடியை கண்டறிக:
I. அல்புமின் – நீர் சமநிலை
II. குளோபுலின் – நோய் எதிர்ப்பாற்றல்
III.பைபிரினோஜன் – இரத்தம் உறைதல்
IV. பிளாஸ்மா – திட ஊடகம்
A) I
B) II
C) III
D) IV
12. கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
A) புல் →மான் →நரி →புலி
B) புல் → வெட்டுக்கிளி → தவளை → பாம்பு → கழுகு
C) புல் →தவளை பாம்பு → யானை
D) புல் → கால்நடைகள் →சிங்கம்
13. மிதிலேஷன் என்றால் என்ன?
I. DNAவில் இரசாயன மாற்றத்தை உண்டு பண்ணும் இயற்கை நடைமுறை.
II. உயர்மட்ட ஆற்றலிலிருந்து தாழ்மட்ட ஆற்றலுக்கு மாற்றும் ஒரு இயற்பொருள் சார்ந்த நடைமுறை.
III. உயிர் நூலைச் சார்ந்த காலக் கணிப்புப் பொறி.
IV. உணர்ச்சியின்மை உண்டுபடுத்தும் நடைமுறை.
A) I மட்டும்
B) I மற்றும் III மட்டும்
C) II மட்டும்
D) II மற்றும் IV மட்டும்
14.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப் பட்டுள்ள கோட்பாடு (A) விளக்கம் (R) ஆகியவை களைக் கருத்தில் கொண்டு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கோட்பாடு (A) : ஸ்டீராய்ட் இயக்குநீரை உணரும் உறுப்புகள் செல்லின் உள்ளே அமைந்திருக்கும்.
விளக்கம் (R) : ஸ்டீராய்ட் இயக்குநீர் கொழுப்பில் கரையுமாதலால் செல் ஐவ்வின் பாஸ்போலிப்பிட் வழியாக செல்லினுள் ஊடுறுவும்.
A) (A) மற்றும் (R) சரியானவை (R), (A) வின் சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை; (R), (A) வின் சரியான விளக்கம் அல்ல
C) (A) சரியானது (R) தவறானது
D) (A) தவறானது (R) சரியானது
15.சாதாரண மனிதனின் ஹிமோகுளோபின் அளவு என்ன?
A) 10.5 கிராம் / 100 மி.லி. இரத்தம்
B) 12.5 கிராம் / 100 மி.லி. இரத்தம்
C) 14.5 கிராம் / 100 மி.லி. இரத்தம்
D) 13.5 கிராம் / 100 மி.லி. இரத்தம்
16. கீழ்வருவனவற்றுள் எவை காற்றில்லாமல் சுவாசிக்கக் கூடியது?
A) அமீபா
B) மூட்டைபூச்சி
C) ஹைட்ரா
D) நாடாபுழு
17. விலங்கு மிதவை உயிரிகள் தன் முழு வாழ்க்கையினை மிதவைகளாகவே வாழ்கின்றன
A) ஹொலோபிளாங்ட்டான்
B) மீரோபிளாங்ட்டான்
C) நெக்ட்டான்
D) பென்தாஸ்
18. இரத்த ஓட்டமண்டலம் பற்றிய கூற்றுகளில் தவறானவை எவை?
I) உணவூட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும்
II) கழிவு பொருட்களை ஏற்றிச் செல்லும்
III) ஹார்மோன்களை ஏற்றிச் செல்லும்
IV) தூண்டுதல்களை கடத்துதல்
A) I மற்றும் II
B) II மற்றும் III
C) III
D) IV
19. கீழ்கண்ட கூற்றுக்களில் சரியான கூற்றை தேர்ந்தெடு
I) டீனியா சோலியத்தின் லார்வாக்கள் ஆன்கோஸ்பியர், ஹெக்ஸகேன்ந்த் மற்றும் சிஸ்டிசெர்கஸ்
II) நாடாப் புழுவில் காணப்படும் ஒட்டுறுப்புக்கள் இடப்பெயர்ச்சிக்கு பயன்படுகின்றன.
III) டீனியா சோலியத்தில் நடைபெறும் அப்போலைசிஸ் என்பது கருவளர் நிலையை குறிக்கும்
IV) முதிர்ந்த புரோகிளாட்டில் முழுமையான இனப்பெருக்க அலகுகளும் முட்டை உற்பத்தியும் உள்ளன.
A) II மற்றும் III
B) I மற்றும் IV
C) III மட்டும்
D) II மட்டும்
20.அமீபிக் பேதி எதனால் ஏற்படுகிறது?
A) ஈ.கோலி
B) நாடாப் புழு
C) என்டமீபா ஹிஸ்டோலிடிகா
D) இரத்தப் புழு
21. சொமேட்டோடிராபிக் ஹார்மோன் குழந்தை களில் அதிகமாக சுரத்தலினால் ஏற்படுவது
A) அக்ரோமெகாலி
B) குள்ளத்தன்மை
C) மிக்ஸிடிமா
D) கிரேவ்ஸ் நோய்
22. மனிதரின் ஒரு விந்து மீச்சில் இருக்கும் விந்து எண்ணிக்கை
A) 100 லிருந்து 200 மில்லியன் விந்துக்கள்
B) 300 லிருந்து 400 மில்லியன் விந்துக்கள்
C) 200 லிருந்து 300 மில்லியன் விந்துக்கள்
D) 400 லிருந்து 500 மில்லியன் விந்துக்கள்
23. கீழ்வருவனவற்றிலிருந்து சரியான தெரிவுகளைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.
அயல் ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை.
A) மின்துனையாக்கம்
B) பிளாஸ்மிடு
C) இணைதல்
D) மின்னாற்பகுப்பு
24. ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படும் இடம்
A) கிரிஸ்டே
B) சிஸ்டர்னே
C) தைலக்காய்டு
D) ஸ்ட்ரோமா
25. கல்லீரல் செல் அழிதலுக்கு காரணம்
A) புகைத்தல்
B) புகையிலை மெல்வதால்
C) வெற்றிலை மெல்வதால்
D) மது அருந்துவதால்
26. காசிரங்கா தேசிய பூங்கா எந்த விலங்கிற்கு புகழ் பெற்றது?
A) புலி
B) ஆண் மான்
C) யானை
D) காண்டாமிருகம்
27. காய்ட்டர் நோய் எதன் பற்றாக்குறையால் ஏற்படுகிறது?
A) அயோடின்
B) பொட்டாசியம்
C) கால்சியம்
D) கந்தகம்
28. குழந்தைகளில், எலும்புருக்கி நோயின் அறிகுறிகளை விரைவிலும் துல்லியமாகவும் சோதனை செய்யவல்ல புதிய இரத்த சோதனை எது?
A) TAM-TB அஸே
B) T-TB அஸே
C) MS அஸே
D) MS-TB அஸே
29. விஞ்ஞானிகள், செயற்கை வேதிவினைப் பொருட்களைப் பயன்படுத்தி பேக்டீரியாக்களை வளர்த்து அதன் மரபியல் விதிப் தொகுப்பேட்டினை மறுமுறை எழுதி உள்ளனர். இது GMO என்று அழைக்கப்படுகிறது. GMO எதைக் குறிக்கும்?
A) Genetically Manipulated Organisms
B) Genetically Modified Organisms
C) Globally Modified Organisms
D) Genetically Modelled Organisms
30. கீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும்:
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III.தூய நீர்
IV.பால்
A) II, III, IV மற்றும் I
B) II, I, III மற்றும் IV
C) II, IV, III மற்றும் I
D) II III IV மற்றும் I
31. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக ;
a) ரிபோபிளேவின் – 1. வைட்டமின் பீ
b) தையமின் – 2. வைட்டமின் பி₂
c) பைரிடாக்ஸின் – 3. வைட்டமின் பி 12
d) சையனோ கோபாலமைன்- 4.வைட்டமின் பி
A) 2 4 3 1
B) 2 3 4 1
C) 2 4 1 3
D) 1 3 4 2
32. பினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்
A) மெலடோனின்
B) தைமோசின்
C) ரிலாக்ஸின்
D) தைரோடிராப்பின்
33. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது X-குரோமோ சோம் பிணைப்பு பாரம்பரியத்திற்கு உதாரணம் ஆகும்?
A) நிறக்குருடு
B) அல்பினிசம்
C) ஆல்காப்டோநியூரியா
D) மங்கோலிசம்
34. தொழுநோயின் மற்றொரு பெயர் என்ன?
A) பாடுலிசம்
B) டெட்டானஸ்
C) ஹன்சன்ஸ் நோய்
D) ரேபிஸ்
35. கிரிட்டினிசம், மிக்சோஎடிமா மற்றும் முன் கழுத்து கழலை ஆகிய கோளாறுகள் இதனுடன் தொடர்புடையது.
A) பேராதைராய்டு சுரப்பி
B) தைராய் சுரப்பி
C) அட்ரீனல் சுரப்பி
D) பிட்யூட்டரி சுரப்பி
36. கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
A) அனோஃபிலிஸ் ஸ்டீபென்சி – விஸ்மேனியாசிஸ்
B) கிளாசினியா பால்பாலிஸ் – உறக்க நோய்
C) க்யூலக்ஸ் பைப்பியன்ஸ் – யானைக்கால் நோய்
D) ஏடஸ் ஈஜிப்டை – டெங்கு காய்ச்சல்
37. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I) பெட்ரோமைசானில் ஏழு ஜோடி தமனி வளைவுகள் உள்ளன.
II) ஊர்வனவற்றில் நான்கு செயல்படு தமனி வளைவுகள் உள்ளன.
III) ஆம்பியாக்ஸில் இரண்டு ஜோடி தமனி வளைவுகள் உள்ளன.
IV) பறவைகளில் ஒன்பது தமனி வளைவுகள் உள்ளன.
A) II
B) I
C) III
D) IV
38. கீழ்க்கண்டவற்றில் ‘உயிர்காக்கும் ஹார்மோன்’ எது?
A) குளுக்கோகார்டிகாய்டு
B) மினரலோகார்டிகாய்டு
C) கால்சிடோனின்
D) பாராதார்மோன்
39. எது தவறாகப் பொருந்தியுள்ளது?
A) Rh இரத்தம் – எரித்திரோபிளாஸ்டாசிஸ் ஃபிடாலிஸ்
B) ஹீமோபிலியா – பால் இணைந்த பாரம்பரியம்
C) A, B, O இரத்தம் – பல்கூற்று அல்லில்ஸ்
D) நிறக்குருடு – சத்துணவு பற்றாக்குறை
40.கீழ்க்கண்டவற்றுள் பட்டுள்ளது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
I) வைட்டமின் A – கால்சிபெரால்
II) வைட்டமின் D – ரெட்டினால்
III) வைட்டமின் E – டோகோபெரால்
IV)வைட்டமின் H – பைரிடாக்ஸின்
A) I
B) II
C) III
D) IV
41. இரத்த புற்றுநோயை கண்டறிய பயன்படுவது
I) 15P31
II) 15P32
III) 26Fe59
IV) 11Na24
A) I மட்டும்
B) II மட்டும்
C) III மட்டும்
D) IV மற்றும் II மட்டும்
42. எந்த உறுப்பு இரத்த சிவப்பணுக்களின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது?
A) கல்லீரல்
B) சிறுநீரகம்
C) மண்ணீரல்
D) பித்தப்பை
43. லாங்கர்ஹேன்ஸ் திட்டுகளில் உள்ள ஆல்பா செல்கள் சுரக்கும் ஹார்மோன்
A) குளுக்ககான்
B) இன்சுலின்
C) சோமோடோஸ்டேட்டின்
D) கால்சிடோனின்
44. கீழ்க்கண்ட கண்டுபிடிப்புகளை அதற்கான அறிஞர்களுடன் பொருத்துக :
a) இருபெயரிடும் முறை – 1. K. லேண்ட்ஸ்டினர்
b) செல் சவ்வின் ப்ளூயிட் மொசைக் மாதிரி – 2. G. பீடில் மற்றும் E டாட்டம்
c) ஒரு ஜீன் ஒரு நொதி கோட்பாடு – 3. S.J. சிங்கர் மற்றும் G.L. நிக்கல்சன்
d) மனித இரத்த குருப் வகைகள் – 4. கார்ல் வான் லின்னேயஸ்
குறியீடுகள் :
A) 1 3 4 2
B) 2 3 4 1
C) 4 3 2 1
D) 4 1 2 3
45.வரிசை I உடன் வரிசை II வினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பி லிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I வரிசை II
a) அனீமியா – 1.எலும்பு
b) ஆஸ்டியோஃபோரோசிஸ் – 2. மூளை
c) அல்ஜிமீர்ஸ் நோய் – 3. கல்லீரல்
d) மஞ்சள் காமாலை – 4. ஹீமோகுளோபின்
குறியீடுகள் :
A) 1 2 3 4
B) 4 1 2 3
C) 2 3 1 4
D) 1 2 4 3
46. “கிறிஸ்துமஸ் நோய்” என்பதன் வேறுபெயர் என்ன?
A) ஹீமோபிலியா (அ) இரத்தம் உறையாமை A
B) ஹீமோபிலியா (அ) இரத்தம் உறையாமை B
C) புரோட்டோநோப்பியா
D) டியூட்டிரோநோப்பியா
47. பொருத்துக :
a) கிரப் சுழற்சி – 1. சைட்டோபிளாசத்தில் நடைபெறும்
b) யூபிக்குயினான் – 2. சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்குபரவும்
c) கிளைக்கோலிஸிஸ் – 3. நகரும் கேரியர்கள்
d) அஸிட்டல் துணை என்ஸைம் ஏ – 4. மைட்டோகாண்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில் நடைபெறும்.
A) 4 3 1 2
B) 3 1 4 2
C) 1 4 2 3
D) 4 1 3 2
48.நியூக்ளிக் அமிலங்களில் காணப்படும் ப்யூரின்கள்
I. அடினைன் மற்றும் சைட்டோசின்
II. குவானின் மற்றும் தைமின்
III.அடினைன் மற்றும் குவானின்
IV. சைடோசின் மற்றும் யுராசில்
A) IV
B) III
C) II
D) I
49. சரியான பொருத்தத்தினைக்/யவைகளை கண்டறிக.
I. நொதிகள் – உயிரிய கிரியா ஊக்கிகள்
II. டி.என்.ஏ – நியூக்ளிக் அமிலம்
III.இன்சுலின் – ஹார்மோன்
IV. வைட்டமின் – நீரில் கரையும் வைட்டமின்
A) II மட்டும்
B)I மட்டும்
C) I, II மற்றும் IV
D) I, II மற்றும் III
50.கிளைக்கோலிசிஸ் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?
I. கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை பென்டோஸ் பாஸ்பேட் வழிப்பாதை எனவும் அழைப்பார்கள்.
II. கிளைக்கோலிசிஸின் மின் தளப்பொருள் குளுக்கோஸ்.
III. கிளைக்கோலிசிஸ் நிகழ்வின் முடிவுப் பொருள் கிளைக்கோஜன்
IV.கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை கிளையாக்ஸலேட் சுழற்சி எனவும் அழைப்பார்கள்.
A) I மற்றும் III
B) II மட்டும்
C) III மற்றும் IV
D) IV மற்றும் II