
SCIENCE TEST ANSWER KEY
1. சாதாரண மனிதனின் குரோமோசோம்கள் 46, ஒப்பிட்டு குரோமோசோம் பார்க்கையில் கீழ்க்கண்டவை சரியான ஜோடி என கணக்கிடுக.
1. அண்டம் (அ) முட்டை – 23
2. விந்தணு – 46
3. சிறுநீரகம் – 46
4. சிறுநீர் பை – 23
இவற்றுள் எது சரியாக பொருந்தும்?
A) 1, 2 மற்றும் 4
B) 2, 3 மற்றும் 4
C) 1 மற்றும் 3
D) 1, 3 மற்றும் 4
விடை: C) 1 மற்றும் 3
2.சிக்கிள் செல் அனிமியா எனும் இரத்த சோகை நோய் ஏற்பட காரணம்
A) இரும்பு சந்து குறைபாடு
B) மலேரியா காய்ச்சல்
C) சுகாதார கேடு
D) ஜீன்கள்
விடை: D) ஜீன்கள்
3. மனித பால் நிர்ணயித்தலில், பால் குரோமோ சோம்கள் X மற்றும் Y உள்ளன. மரபு அமைப்பில் சராசரி பெண்ணின் குரோமோசோம்கள்
A) XO
B) XX
C) XY
D) YY
விடை: B) XX
4. இரத்தத்தால் கடத்தப்படாத ஒரு வாயு எது?
A) ஆக்சிஜன்
B) கரியமில வாயு
C) ஆக்சிஜன் மற்றும் கரியமில வாயு
D) நைட்ரஜன்
விடை: D) நைட்ரஜன்
5. அண்டகத்திலிருந்து முதிர்ந்த முட்டை வெளியேறும் போது அவை …………… ல் நுழைகிறது.
A) ஒவிடக்ட்
B) பாலிகிள்
C) எண்டோமெட்ரியம்
D) இன்டர்சீசியல் செல்
விடை: A) ஒவிடக்ட்
6. மரபணு வரைபடம் தயாரிக்க கீழ்க்கண்டவற்றுள் எந்த முறை பயன்படுகிறது?
A) தனித்து பிரிதல்
B) ஓங்கு பண்பு
C) குறுக்கெதிர் மாற்ற சதவீதம்
D) சார்பின்றி ஒதுங்குதல்
விடை: C) குறுக்கெதிர் மாற்ற சதவீதம்
7. பிணைப்பு எனப்படுவது
A) குறுக்கெதிர் மாற்றத்துடன் நேர்மறை தொடர்புடையது
B) இடம் மாறுதல் போன்றது
C) குறுக்கெதிர் மாற்றத்துடன் எதிர்மறை தொடர்புடையது
D) பாகுபாட்டிற்கு எதிரானது
விடை: C) குறுக்கெதிர் மாற்றத்துடன் எதிர்மறை தொடர்புடையது
8. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது பரவா நோய்க்கு உதாரணம்?
A) சிகா நோய்
B) எஸ்.டி.பி.
C) எபோலா
D) கண்புரை
விடை: D) கண்புரை
9. உடலில் போதுமான அளவு இன்சுலின் இல்லாமையால் இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிகளவு சர்க்கரை காணப்படுவது இந்நோயின் குணமாகும்.
A) வயிற்றுப்புண்
B) டைவர்டிகுளோசிஸ்
C) உடல் பருமன்
D) நீரிழிவு
விடை: D) நீரிழிவு
10. பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
A) ட்ர்னர் குறைபாடு – 44 உடல்குரோமோசோம்கள் + XO
B) கிளைன்ஃபில்டர் குறைபாடு – 44 உடல்குரோமோசோம்கள் + XXY
C) டவுன் குறைபாடு – 44 உடல்குரோமோசோம்கள் + XYY
D) சூப்பர் பெண் – 44 உடல்குரோமோசோம்கள்+XXX
விடை: C) டவுன் குறைபாடு – 44 உடல்குரோமோசோம்கள் + XYY
11. டோடோ ஒரு …………. விலங்கு
A) அழியும் நிலை உயிரி
B) கவலைக்கிடமான அழிவு நிலை உயிரி
C) அரிய
D) அழிந்து போன
விடை: D) அழிந்து போன
12. ஆண் தேனீக்கள் …………… குரோமோசோம்கள் குழுக்கள் பெற்றிருக்கிறது.
A) டிப்ளாய்டு
B) ஹேப்ளாய்டு
C) டெட்ராப்ளாய்டு
D) பாலிப்ளாய்டு
விடை: B) ஹேப்ளாய்டு
13. பெரும்பாலும் குடல் புண் தோன்ற காரணமான பாக்டீரியம்
A) ஹெலிக்கோபேக்டர் பைலோரி
B) ஸ்ரெப்டோ காக்கை
C) ஸ்டெபைலோ காக்கை
D) மைக்கோபாக்டீரியம் டியூபர் குலோசஸ்
விடை: A) ஹெலிக்கோபேக்டர் பைலோரி
14. மின்சார தாக்குதலால் இதயத்துடிப்பு நின்று விட்ட ஒருவருக்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி சிகிச்சை முறை
A) உடனடியாக மார்புப் பகுதியில் இதயத்திற்கு மேல் அழுத்தி பிசைதல்
B) வாயின் மேல் வாய் வைத்து சுவாசத் தூண்டல் செய்தல்
C) இதய – நுரையீரல் செயல் தூண்டல்
D) மேற்கூறிய அனைத்தும்
விடை: D) மேற்கூறிய அனைத்தும்
15. I. ஓபிலியாவின் பாலிப்கள் நகர முடியாததாகவும் ஒட்டிக் கொண்டும் காணப்படும்
Il. ஒபிலியாவின் முதிர்ந்த மெடுசா-தனியாக நீந்தக் கூடியவை.
மேற்கூறிய கூற்று சரியா ? தவறா ?
A) (I) மட்டும் சரி
B) (II) மட்டும் சரி
C) (I) மற்றும் (II) சரியானவை
D) (I) மற்றும் (II) தவறானவை
விடை: C) (I) மற்றும் (II) சரியானவை
16. உணர்ச்சியற்றிருப்பது, கான்ஜெனிட்டல், டிரவுமாடிக், வளர்சிதை மாற்றம் மற்றும் மருந்து, புகை மற்றும் குடிப்பழக்கத்தோடு தொடர்புடைய நோய்
A) குண்டாக இருப்பது
B) காட்ராக்ட்
C) குளுக்கோமா
D) நீரழிவு
விடை: B) காட்ராக்ட்
17. மனிதனில், மலேரியா ஒட்டுண்ணியினால் எந்த வகை செல்கள் பாதிக்கப்படுகிறது?
A) கல்லீரல் செல் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள்
B) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்த-வெள்ளையணுக்கள்
C) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் TH செல்கள்
D) இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் எபிடெர்மிஸ் செல்கள்
விடை: A) கல்லீரல் செல் மற்றும் இரத்த சிவப்பு அணுக்கள்
18. திரவ-மொசைக் மாதிரியின் படி, பிளாஸ்மா சவ்வானது …………. ஆல் ஆனது.
A) செல்லுலோஸ் மற்றும் ஹெமிசெல்லுலோஸ்
B) பாஸ்போலிபிட்டுகள் மற்றும் ஹெமி செல்லுலோஸ்
C) பாஸ்போலிபிட்டுகள் மற்றும் உள்ளார்ந்த புரதங்கள்
D) பாஸ்போலி பிட்டுகள் உள்ளார்ந்த புரதங்கள் மற்றும் வெளிப்புறப் புரதங்கள்
விடை: D) பாஸ்போலி பிட்டுகள் உள்ளார்ந்த புரதங்கள் மற்றும் வெளிப்புறப் புரதங்கள்
19. பின்வருவனவற்றுள் அச்சுப்பொறி மை, செருப்பு பாலிஷ் மற்றும் பெயிண்டுகளில் பயன்படுத்தப்படும் பொருள் யாது?
A) விளக்கு கருப்பு
B) எலும்பு கருப்பு
C) கார்பன் கருப்பு
D) காப்பர் கருப்பு
விடை: B) எலும்பு கருப்பு
20. சுவாச ஈவு (RQ) என்பது
A) பயன்படுத்தப்படும் O₂அளவு
————————————————
வெளிப்படும் CO₂ அளவு
B) வெளிப்படும் CO₂ அளவு
————————————————
பயன்படுத்தப்படும் O₂ அளவு
C) வெளிப்படும் O₂ அளவு
————————————————–
பயன்படுத்தப்படும் CO₂ அளவு
D) பயன்படுத்தப்படும் CO₂அளவு
–————————————————
வெளிப்படும் O₂ அளவு
விடை: B) வெளிப்படும் CO₂ அளவு
————————————————
பயன்படுத்தப்படும் O₂ அளவு
21. ஊட்டச்சத்து அட்லஸ் மற்றும் உணவு அட்லஸ் இவற்றை வெளியிட்டது
A) ICMR
B) UNICEF
C) WHO
D) FAO
விடை: A) ICMR
22. டிரிப்பனோஸோமியாஸிஸ் என்ற நோயைக் கடத்தும் உயிரி
A) மணல்பூச்சி
B) Tse-tse (செட்சி) பூச்சி
C) தீ பூச்சி
D) மே பூச்சி
விடை: B) Tse-tse (செட்சி) பூச்சி
23. AIDS உயிர்கொல்லி வைரஸ்க்கு எதிராக பயன் படுத்தபடும் மருந்தின் பெயர்
A) சைடோரூடின்
B) மைகோனோசோல்
C) நானோசைலால்
D) விரசோல்
விடை: A) சைடோரூடின்
24. இவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் பாக்டீரியாக்கள்
A) பாக்டீரியாபேஜ்
B) எ.கோலை
C) லாக்டோபேஸிலஸ் சப்டிலிஸ்
D) கார்ணிப்பாக்டீரியம் டிப்திரியா
விடை: A) பாக்டீரியாபேஜ்
25. இவர்களில் யார் முதன்முதலில் DNA க்கு வெற்றிகரமாக மாதிரி வடிவம் கொடுத்தார்கள்?
A) பார்பாரா மெக்கிளின்டாக் 1965
B) மெல்வின் மற்றும் கால்வின் 1963
C) வாட்சன் மற்றும் கிரிக்ஸ் 1953
D) ஹேச் மற்றும் ஸ்லாக் 1965
விடை: C) வாட்சன் மற்றும் கிரிக்ஸ் 1953
26. முட்டை வெளிப்படுதல் எந்த காலத்தில் நடைபெறும்
A) மாதவிடாய்க்கு முன்பு
B) மாதவிடாய் காலத்தின் போது
C) மாதவிடாய் காலம் பின்னால்
D) மாதவிடாய் நடக்கும் காலத்தின் இடையே
விடை: D) மாதவிடாய் நடக்கும் காலத்தின் இடையே
27. வளர்ச்சியடைந்த மனிதனின் இரத்தத்தை உருவாக்குவது
A) இதயம்
B) மண்ணீரல்
C) சிகப்பு எலும்பு மஞ்சை
D) மஞ்சள் எலும்பு மஞ்சை
விடை: C) சிகப்பு எலும்பு மஞ்சை
28. கருவுணவு அற்ற மனித அண்ட அணுவினை எவ்வாறு அழைக்கலாம்?
A) ஏலெசித்தல் முட்டை
B) ஐசோலெசித்தல் முட்டை
C) மீசோலெசித்தல் முட்டை
D) டீலோலெசித்தல் முட்டை
விடை: A) ஏலெசித்தல் முட்டை
29. வயது முதிரும் நிலையில் ஆண்களுக்கு எந்த சுரப்பி பெரிதாவதால், சிறுநீர் கழிப்பு பாதிப்படையும்
A) பல்போ – யூரித்ரல் சுரப்பி
B) புரோஸ்டேட் சுரப்பி
C) ஆம்புல்லா
D) கௌப்பர் சுரப்பி
விடை: B) புரோஸ்டேட் சுரப்பி
30. உலகம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ள உயிரிய மிகை பல்வகைமை இடங்களின் எண்ணிக்கை
A) 30
B) 40
C) 35
D) 25
விடை: D) 25
31. “காலா அசாரை” ஏற்படுத்தும் புரோட்டோ சோவன் (ஒரு செல் ஒட்டுண்ணி) எது?
A) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
B) லீஸ்மேனியா டோனாவானி
C) லீஸ்மேனியா டிராபிக்கா
D) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
விடை: B) லீஸ்மேனியா டோனாவானி
32. பெண்ணின் கருவுறுதல் (ஏறக்குறைய) நடைபெறும் நாள்
A) மாதவிடாய் இருந்து 7 முதல் 10-வது நாள்
B) மாதவிடாயிலிருந்து 15 முதல் 19-வது நாள்
C) 14-வது நாள் மாதவிடாயில் இருந்து
D) மாதவிடாயிலிருந்து அனைத்து நாட்களிலும்
விடை: B) மாதவிடாயிலிருந்து 15 முதல் 19-வது நாள்
33. உயிர்சத்து விட்டமின் “A” குறைபாடு
A) முடி உதிரல்
B) வயிற்றுபோக்கு
C) மாலைக்கண் நோய்
D) சோர்வு
விடை: C) மாலைக்கண் நோய்
34. ஹீமோபீலியா என்கிற இரத்த ஒழுகல் நோய் எதனால் ஏற்படுகிறது?
A) பாக்டீரியா தொற்று மூலம்
B) பூஞ்சை தொற்று மூலம்
C) திடீர் மாற்றம் மூலம்
D) வைரல் தொற்று மூலம்
விடை: C) திடீர் மாற்றம் மூலம்
35. சர்வதேச மரபு பொறியியல் மற்றும் உயர் தொழில் நுட்பவியல் மையம் UNO -வால் உருவாக்கப்பட்டது. இந்த மையம் அமைந்துள்ள நகரம் எங்கு உள்ளது?
A) புதுடெல்லி
B) பாரிஸ்
C) டோக்கியோ
D) வாசிங்டன்
விடை: A) புதுடெல்லி
36. கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க.
கூற்று (A): நியூட்ரோஃபில்கள் துகள் சார்ந்த இரத்த வெள்ளையணுக்கள்.
காரணம் (R) : நியூட்ரோஃபில்களில் சைட்டோ பிளாச துகள்கள் இல்லை
A) (A) மற்றும் (R) சரி
B) (A) மற்றும் (R) தவறு
C) (A) சரி (R) தவறு
D) (A) தவறு (R) சரி
விடை: C) (A) சரி (R) தவறு
37. மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை சீராக பராமரிக்கும் ஹார்மோன்
A) புரோஜெஸ்டிரான்
B) ஈஸ்ட்ரோஜன்
C) ரிலாக்ஸின்
D) டெஸ்ட்டோஸ்டீரான்
விடை: A) புரோஜெஸ்டிரான்
38.பொருந்துக :
a) பெரிபெரி – 1. வைட்டமின் C
b) பெல்லாக்ரா – 2.வைட்டமின் B1
c) ஸ்கர்வி – 3. வைட்டமின் D
d) ரிக்கெட்ஸ் – 4. வைட்டமின் B3
A) 4 3 2 1
B) 2 4 1 3
C) 1 3 4 2
D) 3 2 1 4
விடை: B) 2 4 1 3
39. விந்து செல்லில் ஹயலுரோநிடேஸ் எனும் நொதியை சுரக்கும் அக்ரோசோம் எதனுடைய மாறுபாடு
A) லைசோசோம்
B) ரைபோசோம்
C) கோல்கை உறுப்பு
D) மைட்டோகோன்ட்ரியா
விடை: C) கோல்கை உறுப்பு
40. BMR என்பது விரிவாக்கம் யாது?
A) Body Mass Rate
B) Basal Metabolic Rate
C) Body Metabolic Ratio
D) Bone Mass Ratio
விடை: B) Basal Metabolic Rate
41.மனித வெள்ளணுக்களின் சதவீதத்தை பொருத்துக:
a) நியூட்ரோஃபில்கள் – 1. 1 – 4%
b) இயோசினாஃபில்கள் – 2. 20 – 30%
c) லிம்போசைட்டுகள் – 3. 0.5 – 3.0%
d) மோனோசைட்டுகள் – 4. 60-70%
A) 4 3 2 1
B) 3 1 4 2
C) 2 4 1 3
D) 1 2 3 4
விடை: A) 4 3 2 1
42. இதய இயக்கங்களில் துணை செய்யும் தனிமங்கள்
A) பொட்டாசியம் மற்றும் கால்சியம்
B) மெக்னீசியம் மற்றும் கால்சியம்
C) துத்தநாகம் மற்றும் இரும்பு
D) கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்
விடை: A) பொட்டாசியம் மற்றும் கால்சியம்
43. கிளைகாலிசிஸ் படிநிலையில் பிரக்டோஸ், 1. 6. பிஸ்பாஸ்பேட் நொதியை பயன்படுத்தி, 3C இரண்டு மூலக்கூறு டைஹைட்ராக்ஸி அசிடோன் பாஸ்பேட் மற்றும் கிளிசரால்டி ஹைடு 3 -பாஸ்பேட்டாக மாறும் அதற்கு பயன்படும் நொதி என்ன?
A) ஹெக்சோகைனேஸ்
B) எனோலேஸ்
C) பைருவிக்கைனேஸ்
D) ஆல்டோலேஸ்
விடை: D) ஆல்டோலேஸ்
44. இரத்த தானம் செய்வதற்கு முன் மனிதனில் குறைந்த பட்சம் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு
A) 10 கிராம்
B) 11.5 கிராம்
C) 12.5 கிராம்
D) 14 கிராம்
விடை: C) 12.5 கிராம்
45. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
கூற்று (A) யூகேரியோட்டிக் செல்கள் நான்கு விதமான :RNA மூலக் கூறுகளை கொண்டுள்ளது. அவைகள் முறையே 28 S rRNA, 18 S rRNA, 5.8 S rRNA மற்றும் 5 S rRNA.
காரணம் (R) : யூகேரியோட்டில் உள்ள 80 S ரைபோசோம்கள் 28 S rRNA, 5.8 RNA மற்றும் 5 S rRNA மூலக்கூறுகள் 60 S ரைபோ சோம்களின் பகுப்பிலும் மற்றும் 18 S rRNA 40 S ரைபோசோம்களின் பகுப்பிலும் காணப்படுகின்றது.
சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்:
A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
விடை: A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
46. கீழ்க்கண்டவற்றில் தவறான இணையை கண்டறிக.
A) SARS – நுரையீரல்
B) AIDS – நோய் எதிர்ப்பு சக்தி
C) ELISA – குணப்படுத்துதல்
D) MALT – புற்றுநோய் ஜீன்கள்
விடை: D) MALT – புற்றுநோய் ஜீன்கள்
47. இவற்றில் எது டி.என்.ஏ.வில் நிலையான விகிதம் உள்ள
A) A + G/T + C
B) A + T/G + C
C) A + C/U + G
D) A + U/C + G
விடை: A) A + G/T + C
48. கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : ஒமேகா-3 கொழுப்பு LDL கொலஸ்ட்ராலை குறைத்து இருதய நோய் வருவதை குறைக்கக் கூடியது.
காரணம் (R) : இரத்த ஓட்டத்தில் குறைபாடு- வேரிகோஸ் நாளம் உள்ள மனிதர்கள் ஒமேகா-3 கொழுப்பை உட்கொண்டால் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி, இரத்த கட்டிகளை உடைக்கும்.
சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்:
A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
விடை: B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
49. சென்ட்ரோமியரின் முதன்மைப் பணியானது
A) குரோமோசோம் பிளவுறுதல்
B) கதிர்க்கோல் இழைகள் உருவாக்கம்
C) டி.என்.ஏ. இரட்டிப்பாதல்
D) குரோமோசோம்கள் துருவங்களுக்கு நகர்தல்
விடை: D) குரோமோசோம்கள் துருவங்களுக்கு நகர்தல்
50. திடீர் பயம், பாதுகாப்புக்காக ஓடுதல் மற்றும் சண்டையிடுதலுக்கான ஹார்மோன் எது?
A) அட்ரினலின்
B) சோமோடோடிரொபின்
C) ஆக்ஸிடோசின்
D) இன்சுலின்
விடை: A) அட்ரினலின்