SCIENCE TEST QUESTIONS
1. இராபர்ட் கேலோ எய்ட்ஸை உருவாக்கும் HIV வைரஸைக் கண்டுபிடித்த ஆண்டு
A) 1994
B) 1984
C) 1988
D) 1985
2. எந்த பிளாஸ்மா புரதம் நோய் எதிர்ப்பு பொருள் உருவாக பயன்படுகிறது?
A) அல்புமின்
B) குளோபுலின்
C) பைபிரினோஜன்
D) த்ரோம்பின்
3. வெளிச்சுவாசத்தின் போது நாம் அன்றாடம் இழக்கப்படும் நீரின் அளவு
A) 400 மி.லி.
C) 200 மி.லி.
B) 300 மி.லி.
D) 100 மி.லி.
4. உயிரி மருத்துவக் கழிவுகள் அழிக்கப்படும் முறை
A) உயிரியத்தீர்வு
B) நிலத்தில் நிரப்புதல்
C) எரித்துச் சாம்பலாக்கல்
D) மேற்பரப்பில் மூடிவைத்தல்
5. இலையோபிளாஸ்டினால் சேமிக்கப்படும் பொருள் என்ன?
A) புரதம்
B) லிப்பிட்
C) கார்போஹைட்ரேட்
D) சர்க்கரை
6. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடைகளைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a) டையபடிஸ் – 1. தடுப்பூசி திட்டம்
b) மராஸ்மஸ் – 2. இரத்தக் குழாய் சிகிச்சை
c) ஊக்குவிப்பு தடுப்பூசி – 3. புரத குறைபாடு
d) ஆஞ்சியோபிளாஸ்டி – 4. இன்சுலின்
A) 4 3 1 2
B) 2 1 3 4
C) 3 2 1 4
D) 4 1 3 2
7. இரத்தச் சிவப்பு அணுக்களின் வாழ்நாட்கள் எவ்வளவு?
A) 120 நாட்கள்
B) 220 நாட்கள்
C) 400 நாட்கள்
D) 320 நாட்கள்
8. பின்வருவனவற்றுள் உயிர்த் தோன்றலுக்கு மிக இன்றியமையாதது எது?
A) மாவுப் பொருட்கள்
B) புரதங்கள்
C) கொழுப்புப் பொருட்கள்
D) நியூக்ளிக் அமிலங்கள்
9. வெண்மைப் புரட்சியின் தந்தை எனக்கருதப்படுபவர்
A) M.S. சுவாமிநாதன்
B) A.M. சக்கரபர்த்தி
C) V. குரியன்
D) ஐயன் வில்மட்
10. பொருத்துக :
a) உணவு மற்றும் தண்ணீர் – 1. பொருள் வழி கடத்துதல்
b) கொசு மற்றும் ஈ – 2. காற்று வழி கடத்துதல்
c) துணி மற்றும் ஊசி – 3. திட, திரவ சாதனம் வழி கடத்துதல்
d) எச்சில் (அ) சளிதுளி மற்றும் தூசி – 4. கடத்தி வழி கடத்துதல்
சரியானவற்றை எடுத்து எழுதுக.
A) 3 1 2 4
B) 3 4 2 1
C) 3 4 1 2
D) 4 3 1 2
11. எந்த ஹார்மோனால் உணர்ச்சி வயப்பட்ட தொந்தரவுகள் ஏற்படுத்துகிறது.
A) தைராஸின்
B) ஆக்ஸிடாக்ஸின்
C) வாசோபிரசின்
D) அட்ரினலின்
12. கோடான் என்பது இதன் தொடரில் மூன்று நியூக்ளியோடைடுகள் ஆகும்.
A) டி.ஆர்.என்.ஏ
B) எம்.ஆர்.என்.ஏ
C) ஆர்.ஆர்.என்.ஏ
D) எச்என்.ஆர்.என்.ஏ
13. அண்டவிடுப்பிற்குப்பின் நாளமில்லா பகுதியான அண்டகம் …………. என அழைக்கப்படுகிறது.
A) கார்பஸ் கலோசம்
B) கார்பஸ் லூட்டியம்
C) கார்பஸ் ஸ்பான்சியம்
D) கார்பஸ் அல்பிகன்ஸ்
14. பின்வருபவற்றை இணைக்கவும் :
பட்டியல் I பட்டியல் II
a) ஹிமோ பிலியா – 1. பெண்
b) Y-இணைப்பு – 2. கிறிஸ்துமஸ் நோய்
c) பார் பாடி – 3. குரோமோசோம்கள்
d) XX – 4. ஹலோன்ரிக் ஜீன்
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 1 2 4 3
D) 2 4 1 3
15. சூழ்நிலையியலில் தனி உயிரினம் அல்லது தொகுப்பு உயிரினம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
A) சைனி சூழ்நிலையியல்
B) ஆட்டோ சூழ்நிலையியல்
C) கேபிடேட் சூழ்நிலையியல்
D) பாபுலேஷன் சூழ்நிலையியல்
16. அனைத்து விலங்குகளிலும் சேமிக்கப்படும் விலங்கு ஸ்டார்ச்சானது
A) செல்லுலோஸ்
B) ஹெமிசெல்லுலோஸ்
C) எதிர்ப்பு ஸ்டார்ச்
D) கிளைகோஜென்
17.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எந்த வைட்டமின் இனப்பெருக்க உறுப்பு செயல்பாட்டிற்கு தேவைப்படுகிறது.
A) வைட்டமின் A
B) வைட்டமின் B
C) வைட்டமின் D
D) வைட்டமின் E
18. மனிதனின் விந்து செல்லில் இல்லாத செல் நுண் உறுப்பு எது?
A) உட்கரு
B) சென்ரியோல்
C) என்டோ பிளாசவலை
D) மைட்டோகான்ரியா
19. ………… மைட்டாசிஸ் செல் பிரிதலில் பங்கு பெறுவதில்லை.
A) ஹெட்டிரோ குரோமோட்டின்
B) யூகுரோமோட்டின்
C) நியூக்ளியோசோம்
D) லேம்ப்பிரஸ் குரோமோசோம்
20. மஞ்சள் காய்ச்சலை எத்தனை வகையான வைரஸ்கள் உண்டாக்குகின்றன?
A) 9
B) 8
C) 7
D) 6
21. ஸ்டிரெப்டோகாக்கல் பாக்டீரியங்கள் தாக்குவதால் தோன்றும் நோய்
A) இதயத் தமனி நோய்
B) ருமாட்டிக் இதய நோய்
C) இதய இரத்தக் குழாய் அடைப்பு
D) இதய தூண்டல் அடைப்பு
22. சற்று மிதமான தொழில் செய்யும் IRM ம் அடிப்படை வளர்சிதை மாற்றத்தின் போது தேவைப்படும் கலோரியின் அளவு
A) 1220 கலோரிகள்
B) 750 கலோரிகள்
C) 1100 கலோரிகள்
D) 460 கலோரிகள்
23. கீழ்க்கண்டவைகளில் எது சுய தடைகாப்பு நோய்?
A) ஆஸ்துமா
B) தீவிர ஒருங்கிணைந்த தடைகாப்பு குறைவு நோய்
C) எய்ட்ஸ்
D) பல்கூட்டு செதில் நோய்
24. மைகோபேக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்பது ………….. நுண்ணுயிர் ஆகும்.
A) வைரஸ்
B) பூஞ்சை
C) பாசி
D) பாக்டீரியா
25. யுட்ரோபிகேஷனினால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது
A) ஆக்ஸிஜன் அளவு அதிகமாவதால்
B) பாசிகள் எண்ணிக்கை அதிகமாவதால்
C) பாசிகள் எண்ணிக்கை குறைவதால்
D) ஆக்ஸிஜன் அளவு குறைவதால்
26. சிறுநீரகத்தில் அதிகமான அளவு சர்க்கரை காணப்படுவது
A) பாலியூரியா
B) நாக்டியூரியா
C) ஹைப்பர்கிளைசீமியா
D) கிளைக்கோஸ்யூரியா
27. டி.என்.ஏ.மற்றும் ஆர்.என்.ஏ வின் சிறிய நீள நிரப்புகளை பயன்படுத்தி மருந்து வடிவமைக்கும் புதிய எல்லை
A) பென்சிலின்
B) ஆலிகோநியூக்லியோடைட்ஸ்
C) ஆம்பிசிலின்
D) சி்ப்ரோஃபிளாக்ஸேசின்
28. ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ க்கும் இடையில் உள்ள வேறுபாடு என்பது
A) பாஸ்பேட் மற்றும் சர்க்கரையில் உள்ளது
B) பாஸ்பேட் மற்றும் நைட்ராஜினஸ் பேஸ்-ல் உள்ளது
C) நியூக்ளியோசைடு மற்றும் நியூக்ளியோடைடில் உள்ளது
D) சர்க்கரை மற்றும் நைட்ராஜினால் பேஸ்-ல் உள்ளது
29. டிராகுள்குளியாசிஸ் நோய் பரவுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
A) சைக்ளாப்ஸ் உள்ள தண்ணீரை உட்கொள்வதால்
B) மாசு காற்றை சுவாசிப்பதால்
C) நத்தையை உட்கொள்வதால்
D) கெட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுவதால்
30. மிக பரவலாக பயன்படும் உயிரி ஆயுதம்
A) பேசில்லஸ் சப்டில்லிஸ்
B) விப்ரியோ காலரே
C) பேசில்லஸ் ஆந்தராசிஸ்
D) எஸ்ஸெரிசியா கோலை
31. தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு எவை நடை பெறுகிறது?
1. α- குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
2. β – குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
3. α மற்றும் β குளோபின் உருவாவது அதிகரிக்கப்படுகிறது
A) 1 மட்டும் சரி
B) 2 மட்டும் சரி
C) 1 மற்றும் 2 மட்டும் சரி
D) 3 மட்டும் சரி
32. கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமில்லா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும் :
1. ஐலெட்ஸ் ஆப் லாங்கர்கான் – இன்சுலினை கொடுக்கும்
2. தைராய்டு சுரப்பி – சர்க்கரை வியாதியை கொடுக்கும்
3. அட்ரினல் சுரப்பி – முன் கழுத்து கலழையை கொடுக்கும்
A) 1 மட்டும்
B) 1 மற்றும் 2 மட்டும்
C) 2 மற்றும் 3 மட்டும்
D) 1, 2 மற்றும் 3
33. கீழ்க்கண்டவற்றில் இரத்த சிவப்பு அணுக்கள் ஹிமோசைட்டோபிளாஸ்டிகளிலிருந்து உருவாகி முதிர்ச்சி அடைவதற்கு பெயர்
A) எரித்திரோபாய்சிஸ்
B) எரித்திரோசைனின்
C) எரித்திரோசைட்
D) ஹிமட்டோசைட்
34. மலேரியாவை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் கூட்டு மருந்து எது?
A) குயினைன்
B) பேன்சிடர்
C) குளோரோகுயின்
D) பிரைமாகுயின்
35. பாலூட்டிகளில் பால் சுரக்கும் சுரப்பிகள் பின்வரும் சுரப்பிகளின் மாற்றப்பட்ட சுரப்பிகளாகும்.
1. உமிழ்நீர் சுரப்பி
2. சபேசியஸ் சுரப்பி
3. பிட்யூட்டரி சுரப்பி
A) 1 மட்டும்
B) 2 மட்டும்
C) 1 மற்றும் 2 மட்டும்
D) 1 மற்றும் 3 மட்டும்
36. பின்வருவனவற்றில் எது நேரான சூழ்நிலையியல் கூம்பு?
A) ஆற்றல் கூம்பு
B) எண்ணிக்கை கூம்பு
C) எடை கூம்பு
D) (B) மற்றும் (C)
37. பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்
A) ருபல்லா வைரஸ்
B) ரைனோ வைரஸ்
C) H1N1 வைரஸ்
D) ஆல்ஃபா வைரஸ்
38.ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை
A) ஹைபோதலாமஸ்
B) லீடிக் செல்கள்
C) டெஸ்டோஸ்டீரோன்
D) செர்டோலி செல்கள்
39. கூற்று (A) : இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
விளக்கம் (R) : சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) சரி ஆனால், (R) தவறு
C) (A) தவறு ஆனால், (R) சரி
D) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
40. பின்வருவனவற்றில் சரியானது எது?
A) சுவாச வீதம் =
வெளியிடப்படும் CO₂ அளவு
————————————————–
பயன்படுத்தப்படும் O₂ அளவு
B) சுவாச வீதம் =
வெளியிடப்படும் O₂ அளவு
————————————————–
பயன்படுத்தப்படும் CO₂ அளவு
C) சுவாச வீதம் =
பயன்படுத்தப்படும் O₂ அளவு
————————————————–
வெளியிடப்படும் CO₂ அளவு
D) சுவாச வீதம் =
பயன்படுத்தப்படும் CO2 அளவு
————————————————–
வெளியிடப்படும் O₂ அளவு
41. ஒரு உணவு சங்கிலியில் அடங்கி உள்ளவை
A) தயாரிப்பாளர் மற்றும் முதல் நிலை நுகர்வோர்
B) தயாரிப்பாளர், தாவர உண்ணி மற்றும் விலங்குண்ணி
C) தயாரிப்பாளர், நுகர்வோர் மற்றும் அழித்தல்
D) தயாரிப்பாளர், விலங்குண்ணி மற்றும் அழிப்பவர்
42. யூகேரியாட்டில் மிகப்பெரிய ஓருசெல் உயிரி என்பது
A) எண்டமீபா ஹிஸ்டோலைட்டிகா
B) அமீபா புரோட்டியஸ்
C) யூக்ளினா இனம்
D) பாரமீசியம் காடேட்டம்
43. நிக்கோடின் ………… வகையைச் சார்ந்த போதை மருந்து ஆகும்.
A) கிளர்வூட்டிகள்
B) போதை மருந்து
C) கஞ்சா
D) வலி நிவாரணிகள்
44. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான உணவுச் சங்கிலியை அடையாளம் காண்க.
A) புல், பாம்பு, யானை
B) புல், வெட்டுக்கிளி, தவளை
C) வெள்ளாடு, பசு, யானை
D) புல், புலி, பூனை
46. பாலூட்டிகளில் இரத்த சிவப்பு செல்களில் உள்ள உட்கருவின் எண்ணிக்கை ஆகும்.
A) 3
B) 2
C) 0
D) 1
47. ஆகஸ்ட் 2017ல் ஊதா நிற தவளை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
A) கோடியக்கரை
B) மேற்கு தொடர்ச்சி மலை
C) அந்தமான்
D) இமாலயா
48. கல்லீரல் சுருக்கம் நோய் கீழ்க்கண்டவற்றுள் எதனை தொடர்ந்து உட்கொள்வதால் ஏற்படுகிறது?
A) ஒப்பியம்
B) ஆல்கஹால்
C) புகையிலை
D) கோகனின்
49. ஜெல்லி மீன்களில் தனியாக காணப்படாத உறுப்புகளாவன ………… மற்றும் ………..
A) நரம்பு மற்றும் உணர்ச்சி
B) தசை மற்றும் இரத்த ஓட்டம்
C) செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம்
D) சுவாச உறுப்பு மற்றும் கழிவு நீக்க உறுப்பு