TAMIL DAY 2 SPEED REVISION AND SPEED TEST
TEST 1/10
1.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு :
உயிருள்ள உடல் விடை:
2. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
தமிழ் மொழி மரபு பாடலின் ஆசிரியர் _____ விடை:
3. பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு ;
மாடு புல் மேய்ந்தது _____ விடை:
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு _____ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக.
விடை:
5. பொருத்தமான காலம் கண்டறிக.
அமுதன் நேற்று வீட்டிற்கு வந்தான் விடை:
6. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக கீரி _____ விடை:
7. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் சாவி___ விடை:
8. பேச்சுவழக்கு, எழுத்து வழக்காக்குக. ‘நாட்கள்’ விடை:
9. பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு காக்கா விடை:
10. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது) நல்லவன் வாழ்வான் தீயவன் தாழ்வான் விடை:
REVISION 1/10
1.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு : உயிருள்ள உடல் விடை: எது
2. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
தமிழ் மொழி மரபு பாடலின் ஆசிரியர் _____ விடை: யார்
3. பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு ;
மாடு புல் மேய்ந்தது _____ விடை: இறந்த காலம்
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு _____ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக.
விடை: நடத்துவார்
5. பொருத்தமான காலம் கண்டறிக.
விடை: அமுதன் நேற்று வீட்டிற்கு வந்தான் (இறந்தகாலம்)
6. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக கீரி _____ விடை: பிள்ளை
7. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் சாவி___ விடை: கொத்து
8. பேச்சுவழக்கு, எழுத்து வழக்காக்குக. ‘நாட்கள்’ விடை: நாள்கள்
9. பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு காக்கா விடை: காக்கா – காக்கை
10. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)
விடை: நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.
TEST 11/20
11.நிறுத்தற்குறிகளை அறிதல்
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
விடை:
12.பொருத்தமான நிறுத்தற்குறி அமைந்த தொடர்
விடை:
13.ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக. சைதாப்பேட்டை விடை:
14. ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க. மயிலாப்பூர் விடை:
15. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக. கோவன்புத்தூர் விடை:
16. பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
இ.மெயில் விடை:
17. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.
இக்காலத்திற்கு விஞ்ஞான அறிவு தேவை. விடை:
18.’ கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்கு ‘போகமாட்டேன்’ என்ற கூறுவது எவ்வகையான விடை?
விடை:
19. விடை வகைகள்
“நீ விளையாடவில்லையா”? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.
விடை:
20. சரியான இணையைத் தேர்க
(A) ஏவல் விடை – மதுரை எங்குள்ளது? என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல்
(B) நேர் விடை – கடைக்கு போவாயா? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல்
(C) மறை விடை – இது செய்வாயா? என்று வினவியபோது நீயே செய் என்று ஏவிக்கூறுவது
(D) சுட்டு விடை – கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக்கூறல்
விடை:
REVISION 1/10
11.நிறுத்தற்குறிகளை அறிதல்
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
விடை: பூக்கள்நிறைந்த இடம் சோலை ஆகும்.
12.பொருத்தமான நிறுத்தற்குறி அமைந்த தொடர்
விடை: கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்
13.ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக. சைதாப்பேட்டை விடை: சைதை
14. ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க. மயிலாப்பூர் விடை: (B) மயிலை
15. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக. கோவன்புத்தூர் விடை: கோயம்புத்தூர்
16. பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
இ.மெயில் விடை: மின்னஞ்சல்
17. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.
இக்காலத்திற்கு விஞ்ஞான அறிவு தேவை. விடை: அறிவியல்
18.’ கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்கு ‘போகமாட்டேன்’ என்ற கூறுவது எவ்வகையான விடை?
விடை: மறை விடை
19. விடை வகைகள்
“நீ விளையாடவில்லையா”? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.
விடை: உற்றது உரைத்தல் விடை
20. சரியான இணையைத் தேர்க
(A) ஏவல் விடை – மதுரை எங்குள்ளது? என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல்
(B) நேர் விடை – கடைக்கு போவாயா? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல்
(C) மறை விடை – இது செய்வாயா? என்று வினவியபோது நீயே செய் என்று ஏவிக்கூறுவது
(D) சுட்டு விடை – கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக்கூறல்
விடை: (B) நேர் விடை – கடைக்கு போவாயா? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல்
TEST 1/10
21. கலைச்சொல் தருக. SUPREME COURT விடை:
22. அலுவல் சார்ந்த சொற்கள். Appeal விடை:
23. கலைச் சொல் அறிக. Bill Time
விடை:
24. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது
வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை:
25. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
பசு மரத்து ஆணி போலை விடை:
26. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
“கிணற்றுத் தவளை போல” உவமை கூறும் பொருள் தெளிக விடை:
27. ‘அவன் திருந்தினான்’ – இது எவ்வகைத் தொடர் என்று கண்டறிக.
விடை:
28. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
தேர்வு எழுதி ஆயிற்று விடை:
விடை:
29. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
போரில் வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை எனப்படும்
விடை:
30. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்
விடை:
REVISION 1/10
21. கலைச்சொல் தருக. SUPREME COURT விடை: உச்சநீதி மன்றம்
22. அலுவல் சார்ந்த சொற்கள். Appeal
(A) கீழ் முறையீடு (B) மேல்முறையீடு (C) தீர்வு (D) ஆணை (E) விடை தெரியவில்லை
விடை: (B) மேல்முறையீடு
23. கலைச் சொல் அறிக. Bill Time
(A) புதுப்பிக்கப்பட்ட உண்டியல்
(B) கால வரையறை உண்டியல்
(C) அட்டவணை உண்டியல்
(D) முன்படிவ உண்டியல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கால வரையறை உண்டியல்
24. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது
வேலியே பயிரை மேய்ந்தது போல
(A) எதிர்பாரா நிகழ்வு (B) அறியாமை
(C) கடமை தவறுதல் (D) பற்றாக்குறை (E) விடை தெரியவில்லை
விடை: (C) கடமை தவறுதல்
25. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
பசு மரத்து ஆணி போலை
(A) பயனற்ற செயல் (B) தற்செயல் நிகழ்வு
(C) எளிதில் மனத்தில் பதிதல் (D) எதிர்பாரா நிகழ்வு (E) விடை தெரியவில்லை
விடை: (C) எளிதில் மனத்தில் பதிதல்
26. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
“கிணற்றுத் தவளை போல” உவமை கூறும் பொருள் தெளிக
(A) சுயநலம் (B) ஞானம் (C) அறிவு (D) அறியாமை (E) விடை தெரியவில்லை
விடை: (D) அறியாமை
27. ‘அவன் திருந்தினான்’ – இது எவ்வகைத் தொடர் என்று கண்டறிக.
(A) கட்டளைத் தொடர் (B) வினாத்தொடர்
(C) தன்வினைத் தொடர் (D) பிறவினைத் தொடர் (E) விடை தெரியவில்லை
விடை: (C) தன்வினைத் தொடர்
28. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
தேர்வு எழுதி ஆயிற்று
(A) செயப்பாட்டு வினை வாக்கியம் (B) தன்வினை வாக்கியம்
(C) செய்வினை வாக்கியம் (D) பிறவினை வாக்கியம் (E) விடை தெரியவில்லை
விடை: (A) செயப்பாட்டு வினை வாக்கியம்
29. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
போரில் வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை எனப்படும்
(A) பாடாண்திணை பற்றி விளக்குக (B) பாடாண்திணை சிறுகுறிப்புத் தருக
(C) பாடாண்திணை பொருள் யாது? (D) பாடாண்திணை என்றால் என்ன?
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பாடாண்திணை என்றால் என்ன?
30. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்
(A) இயற்சொல்லின் வகை யாது?
(B) இயற்சொல் என்றால் என்ன?
(C) எளிதில் பொருள் விளங்கும் சொல்லைக் கூறுக?
(D) சொல் என்றால் என்ன?
(E) விடை தெரியவில்லை
விடை: (B) இயற்சொல் என்றால் என்ன?
TEST 1/10
31. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
விடை:
32. இரு வினைகளின் பொருள் வேறுபாடு
உரி – உறி விடை:
33. பொருள் வேறுபாடு அறிக.
அருந்து – அறுந்து விடை:
34. சொற்களை ஒழுங்குபடுத்துக.
விடை:
35. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
விடை:
36. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
விடை:
37. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அகர வரிசையில் எழுதுக
தேனி, ஓணான், வௌவால், கிளி, ஆசிரியர்
விடை:
38. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
மதில், தென்றல், தெய்வம், அங்காடி, கடல்
விடை:
39. ‘கல்’ எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச சொல்லைக் கண்டறிக.
விடை:
40.’உரை’ எனும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரைத் தேர்க. விடை:
REVISION 1/10
31. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
(A) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
(B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
(C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
(D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
(E) விடை தெரியவில்லை
விடை: (A) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
32. இரு வினைகளின் பொருள் வேறுபாடு
உரி – உறி
(A) கழற்று – தூக்கு
(B) கழல் – தூக்கு
(C) சுழல் – தூக்கு
(D) களற்று – தூக்கு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கழற்று – தூக்கு
33. பொருள் வேறுபாடு அறிக.
அருந்து – அறுந்து
(A) குடி – துண்டு பட்டு
(B) குடி – மாற்று
(C) உண் – துண்டு பட்டு
(D) பருகு – செல்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) குடி – துண்டு பட்டு
34. சொற்களை ஒழுங்குபடுத்துக.
(A) ஏடு ஒன்று எழுத கவிதை எடுத்தேன்
(B) கவிதை எடுத்தேன் ஏடு ஒன்று எழுத
(C) கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன்
(D) ஒன்று ஏடு எழுத கவிதை எடுத்தேன்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன்
35. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்.
(A) வழியில் நடத்தல் எனப்படுவது சான்றோர் பண்பு
(B) சான்றோர் பண்பு வழியில் நடத்தல் எனப்படுவது
(C) வழியில் நடத்தல் பண்பு எனப்படுவது சான்றோர்
(D) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்
36. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
சொற்களை ஒழுங்குபடுத்துக.
(A) வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்
(B) வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து
(C) வளைந்த வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் அமைந்த எழுத்து
(D) வட்டெழுத்து வளைந்த எனப்படும் அமைந்த தமிழ் எழுத்து கோடுகளால்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்
37. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அகர வரிசையில் எழுதுக
தேனி, ஓணான், வௌவால், கிளி, ஆசிரியர்
(A) ஆசிரியர், ஓணான், வௌவால், கிளி, தேனி
(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, வௌவால்
(C) கிளி, தேனி, வௌவால், ஆசிரியர், ஓணான்
(D) ஆசிரியர், கிளி, தேனி, ஓணான், வௌவால்
(E) விடை தெரியவில்லை
விடை: ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, வௌவால்
38. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
மதில், தென்றல், தெய்வம், அங்காடி, கடல்
(A) அங்காடி, தெய்வம், தென்றல், கடல், மதில்
(B) அங்காடி, மதில், கடல், தெய்வம், தென்றல்
(C) அங்காடி, கடல், மதில், தென்றல், தெய்வம்
(D) அங்காடி, கடல், மதில், தெய்வம், தென்றல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அங்காடி, கடல், மதில், தெய்வம், தென்றல்
39. ‘கல்’ எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச சொல்லைக் கண்டறிக.
(A) கல்வி (B) கற்ற (C) கற்று (D) கற்றான் (E) விடை தெரியவில்லை
விடை: (B) கற்ற
40.‘உரை’ எனும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரைத் தேர்க.
(A) உரையாமை (B) உரைத்தோர் (C) உரைத்தவர் (D) உரைத்தவன் (E) விடை தெரியவில்லை
விடை: (A) உரையாமை
TEST 1/10
41. தொழிற்பெயரைச் சுட்டுக.
மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு. இத்தொடரில் அமைந்த தொழிற்பெயர்
விடை:
42. ‘கிளர்ந்த’ வேர்ச்சொல் அறிக
விடை:
43.‘உரைத்த’ – வேர்ச்சொல்லை அறிக
விடை:
44. பின்வரும் தொடரில் வினைச்சொல்லைக் கண்டறிந்து அதன் வேர்ச்சொல்லை எழுதுக.
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
விடை:
45. ஒரு பொருள் தரும் பல சொற்கள். ‘மொழி’
விடை:
46. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
வடு, மூசு, கவ்வை, கச்சல் முதலான சொற்கள் எதனைக் குறிக்கும் ?
விடை:
47. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
சூம்பல், சிவியல், சொண்டு, அளியல்
விடை:
48. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்
மன _____ தீர்வாகாது.
விடை:
49. கலி, களி, கழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
விடை:
50.“செக்” இணையான தமிழ்ச் சொல்
விடை:
REVISION 1/10
41. தொழிற்பெயரைச் சுட்டுக.
மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு. இத்தொடரில் அமைந்த தொழிற்பெயர்
(A) உயிர் (B) வீடு (C) மது (D) கேடு (E) விடை தெரியவில்லை
விடை: (D) கேடு
42.‘கிளர்ந்த’ வேர்ச்சொல் அறிக
(A) கிளர் (B) கிளர்ச்சி (C) கிளர்ந்து (D) கிளர்க்கப் பட்டு (E) விடை தெரியவில்லை
விடை: (A) கிளர்
43.‘உரைத்த’ – வேர்ச்சொல்லை அறிக
(A) உரைத்து (B) உரைத்தது (C) உரை (D) உரைக்கப் பட்ட (E) விடை தெரியவில்லை
விடை: (C) உரை
44. பின்வரும் தொடரில் வினைச்சொல்லைக் கண்டறிந்து அதன் வேர்ச்சொல்லை எழுதுக.
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
(A) வலம் (B) பொறி (C) தடம் (D) மா (E) விடை தெரியவில்லை
விடை: (B) பொறி
45. ஒரு பொருள் தரும் பல சொற்கள். ‘மொழி’
(A) பதம், கிளவி (B) சொல், எழுத்து (C) பதம், பொருள் (D) அணி, சொல் (E) விடை தெரியவில்லை
விடை: (A) பதம், கிளவி
46. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
வடு, மூசு, கவ்வை, கச்சல் முதலான சொற்கள் எதனைக் குறிக்கும் ?
(A) பிஞ்சு வகை (B) குலை வகை (C) மணி வகை (D) இளம் பயிர் வகை (E) விடை தெரியவில்லை
விடை: (A) பிஞ்சு வகை
47. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
சூம்பல், சிவியல், சொண்டு, அளியல்
(A) குலை வகை (B) பிஞ்சு வகை (C) மணி வகை (D) கெட்டுப்போன காய்கனி வகை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கெட்டுப்போன காய்கனி வகை
48. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்
மன _____ தீர்வாகாது.
(A) உலைச்சல் (B) உளைச்சல் (C) உழைச்சல் (D) துளைச்சல் (E) விடை தெரியவில்லை
விடை: (B) உளைச்சல்
49. கலி, களி, கழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
(A) ஒலி, கோல், மகிழ்ச்சி (B) கோல், மகிழ்ச்சி, ஒலி
(C) ஒலி, மகிழ்ச்சி, கோல் (D) மகிழ்ச்சி, கோல், ஒலி (E) விடை தெரியவில்லை
விடை: (C) ஒலி, மகிழ்ச்சி, கோல்
50.“செக்” இணையான தமிழ்ச் சொல்
(A) காசோலை (B) வரைவோலை (C) பணத்தாள் (D) கடன் அட்டை (E) விடை தெரியவில்லை
விடை: (A) காசோலை
TEST 1/10
51. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. Instead of
விடை:
52. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். கரன்சி நோட்
விடை:
53. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. சேவல் _____
விடை:
54. மரபு பிழையுள்ள தொடரைத் தேர்ந்தெடு
(A) ஆநிரை கவர்ந்தனர் (B) புறா குனுகியது
(C) கூகை அலறியது (D) சேவல்கள் கூவின (E) விடை தெரியவில்லை
விடை:
55. ‘யானை’ – ஒலி மரபினைச் சுட்டுக.
விடை:
56. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
சோழர்களால் கட்டப்படாதது
(A) கங்கை கொண்ட சோழபுரம் (B) கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
(C) ஐராவதீசுவரர் கோவில் (D) திரிபுவன வீரேசுவரம் கோவில் (E) விடை தெரியவில்லை
விடை:
57. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) பீடு – சிறப்பு
(B) ஊழ் – யுகம்
(C) விசும்பு – வானம்
(D) தண்பெயல் – குளிர்ந்த மழை
(E) விடை தெரியவில்லை
விடை:
58. ‘தாழ்வு’ – என்பதன் எதிர்ச்சொல்.
விடை:
59. ‘இசை’ எதிர்ச்சொல் தருக.
விடை:
60. ‘நீக்குதல்’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
விடை:
REVISION 1/10
51. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. Instead of
(A) உடனடி (B) பதிலாக (C) நொடி நேரம் (D) தூண்டி விடு (E) விடை தெரியவில்லை
விடை: (B) பதிலாக
52. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
சரியான இணையைத் தேர்க
(A) கரன்சி நோட் – பணத்தாள்
(B) பேங்க் – காசோலை
(C) செக் – வங்கி
(D) டிமாண்ட் டிராஃப்ட் – பற்றட்டை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கரன்சி நோட் – பணத்தாள்
53. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. சேவல் _____
(A) சேவல் கூவும் (B) சேவல் கொக்கரிக்கும் (C) சேவல் கத்தும் (D) சேவல் கரையும்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சேவல் கூவும்
54. மரபு பிழையுள்ள தொடரைத் தேர்ந்தெடு
(A) ஆநிரை கவர்ந்தனர் (B) புறா குனுகியது
(C) கூகை அலறியது (D) சேவல்கள் கூவின (E) விடை தெரியவில்லை
விடை: (C) கூகை அலறியது
55. ‘யானை’ – ஒலி மரபினைச் சுட்டுக.
(A) உறுமும் (B) முழங்கும் (C) பிளிரும் (D) கதறும் (E) விடை தெரியவில்லை
விடை: (C) பிளிரும்
56. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
சோழர்களால் கட்டப்படாதது
(A) கங்கை கொண்ட சோழபுரம் (B) கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
(C) ஐராவதீசுவரர் கோவில் (D) திரிபுவன வீரேசுவரம் கோவில் (E) விடை தெரியவில்லை
விடை: (B) கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
57. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) பீடு – சிறப்பு
(B) ஊழ் – யுகம்
(C) விசும்பு – வானம்
(D) தண்பெயல் – குளிர்ந்த மழை
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஊழ் – யுகம்
58. ‘தாழ்வு’ – என்பதன் எதிர்ச்சொல்.
(A) தொலைவு (B) தூரம் (C) உயர்வு (D) தாமதம் (E) விடை தெரியவில்லை
விடை: (C) உயர்வு
59. ‘இசை’ எதிர்ச்சொல் தருக.
(A) புகழ் (B) இகழ் (C) வசை (D) நசை (E) விடை தெரியவில்லை
விடை: (C) வசை
60. ‘நீக்குதல்’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
(A) போக்குதல் (B) தள்ளுதல் (C) அழித்தல் (D) சேர்த்தல் (E) விடை தெரியவில்லை
விடை: (D) சேர்த்தல்
TEST 1/10
61. சேர்த்தெழுதுதல்.
‘கட்டி + அடித்தல்’ என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்
விடை:
62. ‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
விடை:
63. சரியான விடையைத் தேர்க. கண் + உண்டு
விடை:
64. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
_____ இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
விடை:
பத்தியைப் படித்து விடை எழுதுக. (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
65. நலமான உடலுக்கு எத்தனை வேளை சிற்றுண்டி உண்ண வேண்டும்
விடை:
66. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்கு எவ்வகை உணவு சிறந்தது?
விடை:
67. உணவில் அதிக அளவு சேர்க்க வேண்டியவைகள் யாவை?
விடை:
68. தவிர்க்க வேண்டிய உணவு எது?
விடை:
69. உடல் நலம் பேணும் வழிமுறைகளுள் ஒன்று ?
விடை:
70. ஒருமை – பன்மை பிழையற்ற தொடர் எது?
சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை _____
விடை:
REVISION 1/10
61. சேர்த்தெழுதுதல்.
‘கட்டி + அடித்தல்’ என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) கட்டியிடத்தல் (B) கட்டியடித்தல் (C) கட்டிஅடித்தல் (D) கட்டுஅடித்தல் (E) விடை தெரியவில்லை
விடை: (B) கட்டியடித்தல்
62. ‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) தேர்+எடுத்து (B) தேர்ந்து +தெடுத்து (C) தேர்ந்தது + அடுத்து (D) தேர்ந்து + எடுத்து (E) விடை தெரியவில்லை
விடை: (D) தேர்ந்து + எடுத்து
63. சரியான விடையைத் தேர்க. கண் + உண்டு
(A) கண் + உண்டு = கண்ணுண்டு
(B) கண் + உண்டு = கண்ணூண்டு
(C) கண் + உண்டு = கல்லுண்டு
(D) கண் + உண்டு காண்ணுண்டு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கண் + உண்டு = கண்ணுண்டு
64. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
_____ இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
(A) எவை (B) யாவை (C) எது (D) யாது (E) விடை தெரியவில்லை
விடை: (A) எவை
பத்தியைப் படித்து விடை எழுதுக. (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
65. நலமான உடலுக்கு எத்தனை வேளை சிற்றுண்டி உண்ண வேண்டும்
(A) 3 (B) 2 (C) 1 (D) 4 (E) விடை தெரியவில்லை
விடை: (B) 2
66. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்கு எவ்வகை உணவு சிறந்தது?
(A) குளிர்ச்சியான உணவு (B) சூடான உணவு
(C) இனிப்பான உணவு (D) கசப்பான உணவு (E) விடை தெரியவில்லை
விடை: (A) குளிர்ச்சியான உணவு
67. உணவில் அதிக அளவு சேர்க்க வேண்டியவைகள் யாவை?
(A) உப்பு (B) சர்க்கரை (C) மிளகு (D) காய்கறிகள் (E) விடை தெரியவில்லை
விடை: (D) காய்கறிகள்
68. தவிர்க்க வேண்டிய உணவு எது?
(A) நீர்ம உணவு (B) திட உணவு (C) சூடான உணவு (D) காரமான உணவு (E) விடை தெரியவில்லை
விடை: (D) காரமான உணவு
69. உடல் நலம் பேணும் வழிமுறைகளுள் ஒன்று ?
(A) நேரம் மாறி உண்ணுதல் (B) இரவு மட்டும் உண்ணுதல் (C) சரியான நேரத்திற்கு உண்ணுதல்
(D) பகல் நேரம் உண்ணுதல் (E) விடை தெரியவில்லை
விடை: (C) சரியான நேரத்திற்கு உண்ணுதல்
70. ஒருமை – பன்மை பிழையற்ற தொடர் எது?
(A) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினர்
(B) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினான்
(C) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினார்.
(D) சங்க காலத்திலிருந்தே அரசராயினும் முதியோராயினும் விருந்தினரை போற்றியது
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினர்
TEST 1/10
71. ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக.
(A) மணிகளால் காவடியை அழகுப்படுத்துகின்றனர்
(B) காவடியின் அமைப்புக்கேற்ப சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, என அழைக்கின்றது
(C) பழமையை உணர கலைகள் துணை செய்கின்றன.
(D) தேவராட்டம் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது
(E) விடை தெரியவில்லை
விடை:
72. சொல் – பொருள் – பொருத்துக.
(a) சீவன் 1. உலகம்
(b) வையம் 2. விரும்பி
(c) சபதம் 3. உயிர்
(d) மோகித்து 4. சூளுரை
விடை:
73. சொல் – பொருள் – பொருத்துக.
(a) குழி 1. நீட்டல் அளவைப்பெயர்
(b) மணி 2. புடவை
(c) சீலை 3. நில அளவைப் பெயர்
(d) சாண் 4. முற்றிய நெல்
விடை:
74. சரியான பொருளை அறிக. அலர்
விடை:
75. பிழை திருத்துக. அவன் கவிஞன் அன்று
விடை:
76. பிழை திருத்தம் (ஒரு – ஓர்)
பிழை திருத்தம் (ஒரு – ஓர்; அது – அஃது)
அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது
விடை:
77. ‘என் அண்ணன் நாளை வருவான்’ – இது எவ்வகைத் தொடர்?
விடை:
78. பிழையைத் திருத்தி சரியாக எழுதுக.
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
விடை:
79. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
விடை:
80. சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
(a) மூங்கில் 1. கீரை
(b) முளை 2. தழை
(c) வேப்பம் 3. கதிர்
(d) வரகு 4. இலை
விடை:
REVISION 1/10
71. ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக.
(A) மணிகளால் காவடியை அழகுப்படுத்துகின்றனர்
(B) காவடியின் அமைப்புக்கேற்ப சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, என அழைக்கின்றது
(C) பழமையை உணர கலைகள் துணை செய்கின்றன.
(D) தேவராட்டம் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது
(E) விடை தெரியவில்லை
விடை: (B) காவடியின் அமைப்புக்கேற்ப சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, என அழைக்கின்றது
72. சொல் – பொருள் – பொருத்துக.
(a) சீவன் 1. உலகம்
(b) வையம் 2. விரும்பி
(c) சபதம் 3. உயிர்
(d) மோகித்து 4. சூளுரை
(a) (b) (c) (d)
(A) 4 1 2 2
(B) 3 1 4 2
(C) 3 2 4 1
(D) 2 3 1 4
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 3 1 4 2
73. சொல் – பொருள் – பொருத்துக.
(a) குழி 1. நீட்டல் அளவைப்பெயர்
(b) மணி 2. புடவை
(c) சீலை 3. நில அளவைப் பெயர்
(d) சாண் 4. முற்றிய நெல்
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 1 2 3 4
(C) 2 3 4 1
(D) 3 4 2 1
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 3 4 2 1
74. சரியான பொருளை அறிக.
அலர்
(A) மலர்தல் (B) ஒளிர்தல் (C) உயர்தல் (D) அழித்தல் (E) விடை தெரியவில்லை
விடை: (A) மலர்தல்
75. பிழை திருத்துக. அவன் கவிஞன் அன்று
(A) அல்லன் (B) அல்ல (C) அன்று (D) அல்லள் (E) விடை தெரியவில்லை
விடை: (A) அல்லன்
76. பிழை திருத்தம் (ஒரு – ஓர்)
பிழை திருத்தம் (ஒரு – ஓர்; அது – அஃது)
அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது
(A) அது இல்லாத இடத்தில் ஓர் அசைவும் இருக்காது
(B) அஃது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது
(C) அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது
(D) அஃது இல்லாத இடத்தில் ஓர் அசைவும் இருக்காது
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அஃது இல்லாத இடத்தில் ஓர் அசைவும் இருக்காது
77. ‘என் அண்ணன் நாளை வருவான்’ – இது எவ்வகைத் தொடர்?
(A) செய்தித் தொடர் (B) தன்வினைத் தொடர் (C) பிறவினைத் தொடர்
(D) கட்டளைத் தொடர் (E) விடை தெரியவில்லை
விடை: (A) செய்தித் தொடர்
78. பிழையைத் திருத்தி சரியாக எழுதுக.
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(A) கோவலன் சிலம்பு விற்கப் போனாள் (B) கோவலன் சிலம்பு விற்கப் போனான்
(C) கோவலன் சிலம்பு விற்கச் சென்றது (D) கோவலன் சிலம்பு விற்க சென்றார் (E) விடை தெரியவில்லை
விடை: (B) கோவலன் சிலம்பு விற்கப் போனான்
79.தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
(A) வினாத் தொடர் (B) கட்டளைத் தொடர் (C) செய்தித் தொடர் (D) உணர்ச்சித் தொடர் (E) விடை தெரியவில்லை
விடை: (C) செய்தித் தொடர்
80. சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
(a) மூங்கில் 1. கீரை
(b) முளை 2. தழை
(c) வேப்பம் 3. கதிர்
(d) வரகு 4. இலை
(a) (b) (c) (d)
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 4 1 2 3
(D) 3 2 1 4
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 4 1 2 3
TEST 1/10
81. சொல்லுக்கேற்ற கூட்டுப்பெயர் காண். கல்
விடை:
82. எண்பத்தி ஒன்று (81) என்ற எண்ணுக்குரிய தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.
விடை:
83. தீவகத்தின் மற்றொரு பெயர்
விடை:
84. தவறான இணையைச் சுட்டுக.
(A) தினை ஓலை – மான்குட்டி (B) தென்னை ஓலை – வாழையிலை
(C) எருமைக்கன்று – பசுங்கன்று (D) நாய்க்குட்டி – புலிக்குட்டி (E) விடை தெரியவில்லை
விடை:
85. கலைச் சொற்களை அறிதல்
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. CULTURAL BOUNDARIES
விடை:
86. சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க. SYMBOLISM
விடை:
87. கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய். Sugarcane Juice
விடை:
88. சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி. Homograph
விடை:
89. கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று : திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம்
காரணம் : தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
90. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. கண் – காண்
விடை:
REVISION 1/10
81. சொல்லுக்கேற்ற கூட்டுப்பெயர் காண். கல்
(A) கட்கள் (B) கற்கள் (C) கல்கள் (D) கட்டு (E) விடை தெரியவில்லை
விடை: (B) கற்கள்
82. எண்பத்தி ஒன்று (81) என்ற எண்ணுக்குரிய தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.
(A) எஉ (B) எரு (C) எச (D)அக (E) விடை தெரியவில்லை
விடை: (D) அக
83. தீவகத்தின் மற்றொரு பெயர்
(A) நெருப்பு (B) கனல் (C) அனல் (D) விளக்கு (E) விடை தெரியவில்லை
விடை: (D) விளக்கு
84. தவறான இணையைச் சுட்டுக.
(A) தினை ஓலை – மான்குட்டி (B) தென்னை ஓலை – வாழையிலை
(C) எருமைக்கன்று – பசுங்கன்று (D) நாய்க்குட்டி – புலிக்குட்டி (E) விடை தெரியவில்லை
விடை: (A) தினை ஓலை – மான்குட்டி
85. கலைச் சொற்களை அறிதல்
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. CULTURAL BOUNDARIES
(A) பண்பாட்டு விழுமியங்கள் (B) பண்பாட்டு எல்லை
(C) பண்பாட்டு நிகழ்வுகள் (D) பண்பாட்டு ஆதாரங்கள் (E) விடை தெரியவில்லை
விடை: (B) பண்பாட்டு எல்லை
86. சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க. SYMBOLISM
(A) ஆய்வேடு (B) அறிவாளர் (C) சின்னம் (D) குறியீட்டியல் (E) விடை தெரியவில்லை
விடை: (D) குறியீட்டியல்
87. கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய். Sugarcane Juice
(A) கரும்புச்சாறு (B) வெல்லக்கட்டி (C) பழச்சாறு (D) காய்கறிச்சாறு (E) விடை தெரியவில்லை
விடை: (A) கரும்புச்சாறு
88. சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி. Homograph
(A) உயிரெழுத்து (B) மெய்யெழுத்து (C) ஒரு மொழி (D) ஒப்பெழுத்து (E) விடை தெரியவில்லை
விடை: (D) ஒப்பெழுத்து
89. கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று : திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம்
காரணம் : தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
(A) கூற்று சரி, காரணம் தவறு (B) கூற்று தவறு காரணம் சரி
(C) கூற்று, காரணம் இரண்டும் சரி (D) கூற்று, காரணம் இரண்டும் தவறு (E) விடை தெரியவில்லை
விடை: (C) கூற்று, காரணம் இரண்டும் சரி
90. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. கண் – காண்
(A) விழி – பார் (B) செவி – திரை (C) விளி – காட்சி (D) விலி – திரை விடை தெரியவில்லை
விடை: (A) விழி – பார்
TEST 1/10
91. சரியான இணையைக் காண்க.
(A) ஊழ் ஊழ் – இரட்டைக்கிளவி
(B) வளர் வானம் – வினையாலணையும் பெயர்
(C) செந்தீ – பண்புத்தொகை
(D) பீடு – திரண்டு
(E) விடை தெரியவில்லை
விடை:
92. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. கிரி – கீரி
விடை:
93. இரு பொருள் தருக: திங்கள்
விடை:
94. இரு பொருள் தருக. ஆறு
விடை:
95. சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (இன்பம்)
(A) இயற்கையைப் போற்றுதல் _____ மரபு
(B) பட்டுப்போன மரத்தைக் காண _____ தரும்
(C) கதிர் முற்றியதும் _____ தரும்
(D) பச்சைப்பசேல் என்ற வயலைக் காண _____ தரும்.
(E) விடை தெரியவில்லை
விடை:
96. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (கண்ணெழுத்து)
(A) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் _____ ஆகும்.
(B) நேர்கோடு, வரைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் _____ ஆகும்.
(C) வண்ணங்கள் குழப்பும் பலகை _____ ஆகும்.
(D) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியம் _____ ஆகும்.
(E) விடை தெரியவில்லை
விடை:
97. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (வளர்பிறை)
விடை:
98. சரியான இணைப்புச் சொல் தேர்க .
பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் பயனில்லை _____ இரக்கம் இல்லாவிட்டால், கண்களால் என்ன பயன்?
விடை:
99. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். _____ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
(A) அதனால் (B) மேலும் (C) ஏனெனில் (D) ஆகையால் (E) விடை தெரியவில்லை
விடை:
100. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு. அவர் நல்லவர் _____ வல்லவரில்லை.
விடை:
REVISION 1/10
91. சரியான இணையைக் காண்க.
(A) ஊழ் ஊழ் – இரட்டைக்கிளவி
(B) வளர் வானம் – வினையாலணையும் பெயர்
(C) செந்தீ – பண்புத்தொகை
(D) பீடு – திரண்டு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) செந்தீ – பண்புத்தொகை
92. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. கிரி – கீரி
(A) மலை பிளந்து (B) மலை – விலங்கு (C) வலை – விலங்கு (D) மலை – வலை (E) விடை தெரியவில்லை
விடை: (B) மலை – விலங்கு
93. இரு பொருள் தருக: திங்கள்
(A) சந்திரன், மாதம் (B) சூரியன், சந்திரன் (C) அமாவாசை, பௌர்ணமி (D) மாதம், கிழமை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) சந்திரன், மாதம்
94. இரு பொருள் தருக. ஆறு
(A) உலகம் – நீர்நிலை (B) நதி – எண் (C) அதிகம் – நீர்நிலை (D) கடல் – எண் (E) விடை தெரியவில்லை
விடை: (B) நதி – எண்
95. சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (இன்பம்)
(A) இயற்கையைப் போற்றுதல் _____ மரபு
(B) பட்டுப்போன மரத்தைக் காண _____ தரும்
(C) கதிர் முற்றியதும் _____ தரும்
(D) பச்சைப்பசேல் என்ற வயலைக் காண _____ தரும்.
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பச்சைப்பசேல் என்ற வயலைக் காண _____ தரும்.
96. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (கண்ணெழுத்து)
(A) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் _____ ஆகும்.
(B) நேர்கோடு, வரைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் _____ ஆகும்.
(C) வண்ணங்கள் குழப்பும் பலகை _____ ஆகும்.
(D) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியம் _____ ஆகும்.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் _____ ஆகும்.
97. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (வளர்பிறை)
(A) _____ நிலவுடன் விரிவானம் அழகாக காட்சியளிக்கிறது
(B) _____ நிலவுடன் விரிவானம் அழகாக காட்சி இழக்கின்றது
(C) ______ நிலவுடன் விரிவானம் அழுக்காக காட்சியளிக்கிறது
(D) _____ நிலவுடன் விரிவானம் அழுக்காக காட்சி இழக்கின்றது
(E) விடை தெரியவில்லை
விடை: (A) _____ நிலவுடன் விரிவானம் அழகாக காட்சியளிக்கிறது
98. சரியான இணைப்புச் சொல் தேர்க .
பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் பயனில்லை _____ இரக்கம் இல்லாவிட்டால், கண்களால் என்ன பயன்?
(A) எனவே (B) ஆகையால் (C) அதுபோல (D) அதனால் (E) விடை தெரியவில்லை
விடை: (C) அதுபோல
99. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். _____ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
(A) அதனால் (B) மேலும் (C) ஏனெனில் (D) ஆகையால் (E) விடை தெரியவில்லை
விடை: (C) ஏனெனில்
100. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு. அவர் நல்லவர் _____ வல்லவரில்லை.
(A) ஆனால் (B) எனவே (C) ஏனெனில் (D) அதனால் (E) விடை தெரியவில்லை
விடை: (A) ஆனால்