About Lesson
BNS CHAPTER XIV
SECTION 227 TO 269
OF FALSE EVIDENCE AND OFFENCES AGAINST PUBLIC JUSTICE
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227
பொய் சாட்சியம் கொடுத்தல்
ஒரு ஆணை உறுதி மொழியில் அல்லது தனிப்பட்ட சட்ட வகைமுறையில் உண்மையை கூறுவதற்கு கட்டுப்பட்ட எவரும் பொய்யாக இருக்கின்ற வாக்குமூலத்தை அறிந்து அல்லது பொய் என்று நம்பிக்கையுடன் அல்லது உண்மை என்று நம்பாமல் வாக்குமூலம் எதனையும் அளித்தால் பொய் சாட்சி அளிக்கிறார் என கூறப்படும்.
விளக்கம்
-
வாய்மொழியாகவோ அல்லது வேறு விதமாகவோ செய்யப்படும் ஓர் அறிக்கை இந்த பிரிவின் பொருளில் அடங்கும்.
-
சாட்சி கையொப்பமிட்டவரின் நம்பிக்கை பற்றிய ஒரு பொய்யுரை இந்த பிரிவின் பொருளில் அடங்கும்.
மேலும் தான் நம்பாத ஒன்றை அல்லது அறியாத ஒன்றை நம்புவதாக அல்லது அறிந்ததாக கூறுவதால் அவர் பொய் சாட்சியம் கூறுகின்ற குற்றம் செய்தவராவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (a)
B யிற்கு Z கொடுக்க வேண்டிய ரூபாய் ஆயிரத்திற்கான நியாயமான கோரிக்கையினை ஒரு விசாரணையின் போது Z ஒப்புக்கொண்டதை தான் கேட்டதாக A சொல்கிறார் A பொய் சாட்சியம் கூறியவர் ஆவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (b)
உண்மையை சொல்ல கட்டுப்பட்ட A B யின் கையெழுத்து என்று அவர் நம்பவில்லை என்றாலும் B யின் கையெழுத்து என்று தான் நம்புவதாக கூறுகிறார் இங்கு தனக்கு பொய் என்று தெரிந்ததை உண்மை என்று கூறுவதால் பொய் சாட்சியம் அளித்தவர் ஆவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (c)
Z இன் கையெழுத்தின் பொதுவான தன்மையை அறிந்து A ஒரு குறிப்பிட்ட கையெழுத்து Z இன் கையெழுத்து என்று தான் நம்புவதாக நல்ல எண்ணத்தில் அவரது நம்பிக்கை பொறுத்து கூறுகிறார், அது Z இன் கையெழுத்து இல்லை என்றாலும் A பொய் சாட்சியம் கூறியவராகமாட்டார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (d)
உண்மையை சொல்வதற்கு கட்டுப்பட்ட A ஒரு குறிப்பிட்ட நாளில் Z என்பவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அந்த நபர் அந்த குறிப்பிட்ட நாளில் எங்கு இருந்தார் என்பது அவருக்கு தெரியாது Z அந்த குறிப்பிட்ட நாளில் அந்த இடத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த பொருண்மையில் A பொய் சாட்சியம் கூறியவர் ஆவார்.
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 227 எடுத்துக்காட்டு (e)
ஒரு வாக்கு மூலத்தை அல்லது ஆவணத்தை உண்மையாக மொழிபெயர்க்க கட்டுப்பட்ட ஒருவர் உண்மை இல்லாத மொழிபெயர்ப்பை உண்மையான மொழிபெயர்ப்பு என்று தருகிறார் அவர் பொய் சாட்சியம் அளித்தவர் ஆவார்.
*********************************************************************************************************************************************************
பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 228
பொய் சாட்சியம் புனைதல்
ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் அல்லது ஒரு பொது ஊழியர் முன்பு அல்லது ஒரு இசைவுத் தீர்ப்பாளர் முன்போ தவறான புரிதலை ஏற்படுத்துவதற்காக புத்தகம் அல்லது பதிவேடு அல்லது மின்னணு பதிவு எதிலும் பொய்யான பதிவு எதனையும் தருகின்ற ஒருவர் பொய் சாட்சியம் புனைந்தவராவார்
எடுத்துக்காட்டு (a) பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 228
Z என்பவரை திருட்டு குற்றத்திற்கு உள்ளாக்கும் வகையில் z க்கு தெரியாமல் அவரது பெட்டியில் A நகைகளை வைப்பது பொய்சாட்சியும் புனைதல்
குற்றமாகும்.
எடுத்துக்காட்டு (b) பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 228
A ஒரு நீதிமன்ற நடவடிக்கையில் உறுதிப்படுத்தும் சாட்சியமாக பயன்படுத்துவதற்காக தனது கடை புத்தகத்தில் ஒரு தவறான பதிவை செய்கிறார் A பொய் சாட்சியம் உருவாக்கியவர் ஆவார்.
எடுத்துக்காட்டு (c) பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 228
சதி குற்றத்தில் z தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக அத்தகைய சதி குற்றவாளிக்கு z கடிதம் எழுதுவது போல அவரது கையெழுத்தில் A கடிதம் எழுதி காவல் அலுவலர் அனேகமாக பார்க்கக்கூடிய சோதனை செய்யக்கூடிய இடத்தில் அந்த கடிதத்தை வைக்கின்றார் A பொய் சாட்சியம் புனைதல் குற்றத்தை செய்தவராவார்.
*******************************************************************************************************************************************************
Join the conversation