Course Content
BNS CHAPTER 12 CLASS
About Lesson

1. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 198 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடு குற்றம்
III. முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. I, III மட்டும் தவறு
C. I, II மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: C. I, II மட்டும் தவறு

2. மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வேறு எந்த நபரால் நடத்தப்படும் மருத்துவமனை, பொது அல்லது தனியார் பொறுப்பில் இருப்பவர் இப்பிரிவில் குறிபிட்டுள்ள குற்றங்களில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க மறுப்பது குற்றம் என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 200 B. பிரிவு 197 C. பிரிவு 199
D. பிரிவு 198 E. விடை தெரியவில்லை
விடை: A. பிரிவு 200

3. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல் கட்டாயம், விதிகளை மீறுவது குற்றம் என விளக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு எது?
A. பிரிவு 200 B. பிரிவு 397 C. பிரிவு 297
D. பிரிவு 198 E. விடை தெரியவில்லை
விடை: B. BNSS பிரிவு 397

4. எந்த ஒரு நபருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் அரசு ஊழியர் சட்டத்திற்கு கீழ்ப்படியாமல் இருத்தல் குற்றம் மற்றும் தண்டனை குறித்து விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 196 B. பிரிவு 197 C. பிரிவு 199
D. பிரிவு 198 E. விடை தெரியவில்லை
விடை: D. பிரிவு 198

5. தீங்கு ஏற்படுத்தும் எண்ணத்துடன் தவறாக ஆவணங்களை பொது ஊழியர் உருவாக்குதல் குற்றத்திற்கு தண்டனை?
A. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும்
B. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
C. மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஏதேனும் ஒருவகை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டும்.
D. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
E. விடை தெரியவில்லை
விடை: C. மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஏதேனும் ஒருவகை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டும்.
பார்வை: பிரிவு 201

6. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 199 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடுக் குற்றம்
III. அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க கூடிய குற்றம்
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. III மட்டும் தவறு
C. II மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: B. III மட்டும் தவறு
விளக்கம்: முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்.

7. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 200 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடுக் குற்றம்
III. அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க கூடிய குற்றம்
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. I, III மட்டும் தவறு
C. II மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: B. I, III மட்டும் தவறு
விளக்கம்:
I. கைது செய்யக்கூடாதக் குற்றம்
III. முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்.

8. ஒரு நீதிமன்றத்தால் A என்பவருக்கு ஆதரவாக கொடுக்கப்பட்ட தீர்ப்பானையை நிறைவேற்றி சொத்துக்களை எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்ட பொது ஊழியர் A விற்க்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் அறிந்து கொண்டே நீதிமன்ற கட்டளையினை செயல்படுத்த கீழ்ப்படியாமல் இருந்தால் எந்த பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை செய்துள்ளார்.
A. பிரிவு 196 B. பிரிவு 197 C. பிரிவு 199
D. பிரிவு 198 E. விடை தெரியவில்லை
விடை: D. பிரிவு 198
பார்வை: பிரிவு 198 எடுத்துக்காட்டு

9. பொது ஊழியர் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுதல் குற்றம் என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 200 B. பிரிவு 201 C. பிரிவு 202
D. பிரிவு 198 E. விடை தெரியவில்லை
விடை: C. பிரிவு 202

10. பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தல் குற்றத்திற்கு தண்டனை?
A. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும்
B. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
C. ஓர் ஆண்டு வரை நீட்டிக்க கூடிய சாதாரண சிறை தண்டனை
D. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
E. விடை தெரியவில்லை
விடை: A. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும்
பார்வை: D. பிரிவு 200

11. பொது ஊழியர் சட்டத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் இருத்தல் குற்றம் மற்றும் தண்டனை குறித்து விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 196 B. பிரிவு 197 C. பிரிவு 199
D. பிரிவு 198 E. விடை தெரியவில்லை
விடை: C. பிரிவு 199

12. தீங்கு ஏற்படுத்தும் எண்ணத்துடன் தவறாக ஆவணங்களை பொது ஊழியர் உருவாக்குதல் குற்றம் என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 200 B. பிரிவு 201 C. பிரிவு 199
D. பிரிவு 198 E. விடை தெரியவில்லை
விடை: B. பிரிவு 201

13. பொது ஊழியர் சட்டத்திற்குப் புறம்பாக சொத்து வாங்குவது அல்லது ஏலம் எடுப்பது குற்றம் என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 200 B. பிரிவு 201 C. பிரிவு 202
D. பிரிவு 203 E. விடை தெரியவில்லை
விடை: D. பிரிவு 203

14. எந்த ஒரு நபருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணத்துடன் அரசு ஊழியர் சட்டத்திற்கு கீழ்ப்படியாமல் இருத்தல் குற்றத்திற்கு தண்டனை?
A. ஓர் ஆண்டு வரை நீட்டிக்க கூடிய சாதாரண சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
B. ஆறு வருடங்கள் வரை நீட்டிக்க கூடிய ஏதேனும் ஒரு வகை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
C. ஓர் ஆண்டு வரை நீட்டிக்க கூடிய சாதாரண சிறை தண்டனை
D. ஓர் ஆண்டு வரை நீட்டிக்க கூடிய சாதாரண சிறை தண்டனை மற்றும் அபராதம்
E. விடை தெரியவில்லை
விடை: A. ஓர் ஆண்டு வரை நீட்டிக்க கூடிய சாதாரண சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
பார்வை: D. பிரிவு 198

15. பொது ஊழியர் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுதல் குற்றத்திற்கு தண்டனை?
A. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும்
B. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் அல்லது சமூக சேவை தண்டனையாக விதிக்கப்படலாம்
C. மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஏதேனும் ஒருவகை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டும்.
D. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
E. விடை தெரியவில்லை
விடை: B. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சாதாரண சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் அல்லது சமூக சேவை தண்டனையாக விதிக்கப்படலாம்
பார்வை: பிரிவு 202

16. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 201 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடுக் குற்றம்
III. அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க கூடிய குற்றம்
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. I, III மட்டும் தவறு
C. III மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: C. III மட்டும் தவறு
விளக்கம்:
III. முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்.

17. பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தல் குற்றத்திற்கு தண்டனை?
A. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும்
B. ஆறு மாதங்களுக்கு குறையாத ஆனால் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
C. மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஏதேனும் ஒருவகை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டும்.
D. இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டும். மேலும் சொத்தை வாங்கினால் பறிமுதல் செய்யப்படும்.
E. விடை தெரியவில்லை
விடை: B. ஆறு மாதங்களுக்கு குறையாத ஆனால் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம்
பார்வை: பிரிவு 204

18. பொது ஊழியர் சட்டத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல் இருத்தல் குற்றத்திற்கு தண்டனை?
A. ஓர் ஆண்டு வரை நீட்டிக்க கூடிய சாதாரண சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
B. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
C. ஓர் ஆண்டு வரை நீட்டிக்க கூடிய சாதாரண சிறை தண்டனை
D. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
E. விடை தெரியவில்லை
விடை: B. ஆறு மாதங்களுக்கு குறையாமல் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பார்வை: D. பிரிவு 199

19. மோசடி எண்ணத்துடன் அரசு ஊழியர் அணியும் உடைகளை அணிவது அல்லது அடையாளச் சின்னங்களை எடுத்துச் செல்வது குற்றம் என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 205 B. பிரிவு 204 C. பிரிவு 202
D. பிரிவு 203 E. விடை தெரியவில்லை
விடை: A. பிரிவு 205

20. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 203 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடுக் குற்றம்
III. அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க கூடிய குற்றம்
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. I, III மட்டும் தவறு
C. III மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: B. I, III மட்டும் தவறு
விளக்கம்:
I. கைது செய்யக்கூடாதக் குற்றம்
III. முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்.

21. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 202 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடுக் குற்றம்
III. அமர்வு நிதிமன்றதால் விசாரிக்க கூடிய குற்றம்
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. I, III மட்டும் தவறு
C. III மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: B. I, III மட்டும் தவறு
விளக்கம்:
I. கைது செய்யக்கூடாதக் குற்றம்
III. முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்.

22. பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தல் குற்றம் என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A. பிரிவு 200 B. பிரிவு 204 C. பிரிவு 202
D. பிரிவு 203 E. விடை தெரியவில்லை
விடை: B. பிரிவு 204

23. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 205 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடுக் குற்றம்
III. முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்.
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. I, III மட்டும் தவறு
C. III மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: C. III மட்டும் தவறு
விளக்கம்:
III. எந்த நடுவாராலும் விசாரிக்க கூடிய குற்றம்.

24. பாரதிய நீதிச் சட்டப் பிரிவு 204 ல் விளக்கபட்ட குற்ற வகைபாட்டில் தவறான கூற்று/கூற்றுகள் எது/ எவை?
I. கைது செய்யக்கூடிய குற்றம்
II. பிணைவிடாக் குற்றம்
III. முதல் வகுப்பு நடுவாரால் விசாரிக்க கூடிய குற்றம்.
IV. சமரசம் செய்து கொள்ள முடியாத குற்றம்
A. அனைத்தும் தவறு B. I, III மட்டும் தவறு
C. III மட்டும் தவறு D.IV மட்டும் தவறு
E. விடை தெரியவில்லை
விடை: C. III மட்டும் தவறு
விளக்கம்:
III. எந்த நடுவாராலும் விசாரிக்க கூடிய குற்றம்.

25. பொது ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்தல் குற்றத்திற்கு தண்டனை?
A. ஓராண்டு வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும்
B. மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஐயாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்.
C. மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஏதேனும் ஒருவகை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டும்.
D. இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்பட வேண்டும். மேலும் சொத்தை வாங்கினால் பறிமுதல் செய்யப்படும்.
E. விடை தெரியவில்லை
விடை: B. மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது ஐயாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கக்கூடிய அபராதம் அல்லது இரண்டும்.
பார்வை: பிரிவு 205

Join the conversation