
2010 DEPT QUOTA ORIGINAL QUESTION PAPER IPC QUESTON CONVERTED TO`BNS SECTIONS
119. குற்றப்பத்திரிகையில் எதிரியின் முன் தண்டனையை பற்றி குறிப்பிட வேண்டிய காரணம் ?
A) அதிக தண்டனை வழங்க
B) குறைந்த தண்டனை வழங்க
C) தண்டனையை நீக்க
D) எந்த விதமான காரணமும் இல்லை
E) விடை தெரியவில்லை
விடை: A) அதிக தண்டனை வழங்க
120. ஒரு வழக்கில் தண்டனை தூக்கு, சாகும் வரை சிறை தண்டனை (அ) இரண்டு வருடத்திற்கு மேல் தண்டனை என்பது எவ்வகை வழக்கு?
A) அழைப்பானை வழக்கு
B) பிடியானை வழக்கு
C) செஷன்ஸ் வழக்கு
D) மேலே சொன்னவை எதுவும் பொருந்தாது
E) விடை தெரியவில்லை
விடை: B) பிடியானை வழக்கு
121. பாரதிய நீதிச் சட்டத்தின் பிரிவு 223 எந்த குற்றத்தினை பற்றி குறிப்பிடுகிறது?
A) பொது ஊழியரால் முறையாக விளம்பப்பட்ட ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமை
B) சச்சரவு
C) காயம் விளைவிப்பது
D) அரசு ஊழியர் லஞ்சம் வாங்குவது
E) விடை தெரியவில்லை
விடை: A) பொது ஊழியரால் முறையாக விளம்பப்பட்ட ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமை
122. எவராயினும் சட்டரீதியாகக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு எதனின்றும் தப்பிக்க அல்லது தப்ப முயலும் போது கீழ்காணும் எந்த பிரிவின் கீழ் தண்டிக்கப்படுகிறார் ?
A) பிரிவு 249 பா.நீ.ச
B) பிரிவு 260 பா.நீ.ச
C) பிரிவு 258 பா.நீ.ச
D) பிரிவு 262 பா.நீ.ச
E) விடை தெரியவில்லை
விடை:: D) பிரிவு 262 பா.நீ.ச
123. ஆபாச புத்தகங்கள் விற்பனை செய்தல் முதலியன எந்த கீழ்காணும் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது?
A) பா.நீ.ச பிரிவு 101
B) பா.நீ.ச பிரிவு 294
C) பா.நீ.ச பிரிவு 292
D) பா.நீ.ச பிரிவு 298
E) விடை தெரியவில்லை
விடை: B) பா.நீ.ச பிரிவு 294
124. பாரதிய நீதிச் சட்டம் பிரிவு 204 கீழ்காணும் எந்த குற்றத்தினை குறிப்பிடுகிறது?
A) ஆள்மாறாட்டத்தால் ஏமாற்றுவதற்குத் தண்டனை
B) ஏமாற்றுவதற்குத் தண்டனை
C) பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்தல்
D) திருட்டுப் பொருளை மறைப்பதற்கு உதவி செய்தல்
E) விடை தெரியவில்லை
விடை: C) பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்தல்
125. உயிருக்கு அல்லது மற்றவர்களின் உடற் பாதுகாப்பிற்கு அபாயம் விளைவிக்கிற செய்கை எந்த கீழ்காணும் பிரிவினில் குற்றம்?
A) பிரிவு 100 பா.நீ.ச
B) பிரிவு 101` பா.நீ.ச
C) பிரிவு 125 பா.நீ.ச
D) பிரிவு 126 பா.நீ.ச
E) விடை தெரியவில்லை
விடை: C) பிரிவு 125 பா.நீ.ச
126. இயற்கைக்கு மாறான பாலியல் உறவு குற்றங்கள் கீழ்காணும் எந்த பிரிவின் படி குற்றம் ?
A) பா.நீ.ச பிரிவு 64
B) பிரிவு பா.நீ.ச 63
C) பிரிவு பா.நீ.ச 303
D) பா.நீ.சட்டத்தில் இக்குற்றம் நீக்கப்பட்டுள்ளது
E) விடை தெரியவில்லை
விடை: D) பா.நீ.சட்டத்தில் இக்குற்றம் நீக்கப்பட்டுள்ளது
127. எந்த வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையின் செயல் குற்றமற்றதாக கருதப்படுகிறது?
A) ஏழு வயதிற்குட்பட்ட
B) எட்டு வயதிற்குட்பட்ட
C) ஒன்பது வயதிற்குட்பட்ட
D) ஆறு வயதிற்குட்பட்ட
E) விடை தெரியவில்லை
விடை: A) ஏழு வயதிற்குட்பட்ட
128. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் சண்டையிடுவதன் மூலம் பொது அமைதியைக் குலைக்கும் போது அவர்கள் கீழ்காணும் எந்த குற்றத்தை புரிகிறார்கள் ?
A) காயம் உண்டாக்குதல்
B) கலகம் விளைவித்தல்
C) தாக்குதல்
D) சச்சரவு
E) விடை தெரியவில்லை
விடை: D) சச்சரவு
133. கீழ்கண்டவற்றில் எந்த பிரிவு “வரதட்சணை மரணம்” பற்றி குறிப்பிடுகிறது?
A) பா.நீ.ச பிரிவு 105
B) பா.நீ.ச பிரிவு 80
C) பா.நீ.ச பிரிவு 108
D) பா.நீ.ச பிரிவு 85,86
E) விடை தெரியவில்லை
விடை: B) பா.நீ.ச பிரிவு 80
134. கற்பழிப்பு குற்றங்களில் பாதிக்கப்பட்டவரை ஆள் அடையாளத்தை தெரியும் படி வெளிப்படுத்துதல் பாரதிய நீதிச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் குற்றம் ?
A) பிரிவு 73 B) பிரிவு 74 C) பிரிவு 72 D) பிரிவு 76 E) விடை தெரியவில்லை
விடை: C) பிரிவு 72
135. ‘அ’ என்ற நபர் இடுகாட்டினுள் அத்துமீறி நுழைந்து ‘மனித பிரேதத்தை’ அவமதிப்பு செய்தும். அவ்விடத்தில் ஈமச்சடங்குகளைச் செய்வதற்குக் கூடியுள்ளவர்களுக்கு இடையூறு விளைவிக்கிறார். மேற்படி ‘அ’ நபரின் செயலானது கீழ்கானும் பாரதிய நீதிச் சட்டத்தின் எந்த பிரிவின் கீழ் குற்றம் ?
A) பிரிவு 298
B) பிரிவு 299
C) பிரிவு 300
D) பிரிவு 301
E) விடை தெரியவில்லை
விடை: D) பிரிவு 301
136. பிரிவு 82 பாரதிய நீதிச் சட்டம் கீழ்காணும் எவ்வகையான குற்றத்தினை குறிப்பிடுகிறது?
A) கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போதே மீண்டும் திருமணம் செய்தல்
B) முறை பிறழ்ந்த புணர்ச்சி
C) விபச்சாரம்
D) குற்றமுறு சதி
E) விடை தெரியவில்லை
விடை: A) கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போதே மீண்டும் திருமணம் செய்தல்
137. கீழ்காணும் பிரிவுகளில் எந்த பிரிவு “சட்டபூர்வமற்ற கட்டாய உழைப்பு” குற்றத்தினை பற்றி குறிப்பிடுகிறது?
A) பிரிவு 145 பா.நீ.ச.
B) பிரிவு 147 பா.நீ.ச.
C) பிரிவு 146 பா.நீ.ச.
D) பிரிவு 148 பா.நீ.ச.
E) விடை தெரியவில்லை
விடை: C) பிரிவு 146 பா.நீ.ச.
38. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கட்டிடம் கும்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகிறதோ, அக்கட்டிடத்தினுள் உள்ள விக்கிரகத்தையோ அல்லது சிலை வடிவத்தையோ களவாடும் செயலானது எந்த கீழ்காணும் பிரிவின் கீழ் தண்டிக்கத்தக்கது ?
A) பிரிவு 305(b) பா.நீ.ச.
B) பிரிவு 304(d) பா.நீ.ச.
C) பிரிவு 305(d) பா.நீ.ச.
D) பிரிவு 381(b) பா.நீ.ச.
E) விடை தெரியவில்லை
விடை: C) பிரிவு 305(d) பா.நீ.ச.
139. கீழ்காணும் தண்டனைகளில் எந்த தண்டனை பிரிவு 4 பாரதிய நீதிச் சட்டத்தில் குறிப்பிடப்படாத ஒன்று ?
A) மரண தண்டனை
B) தனியாக சிறைவைப்பது
c) ஆயுள் தண்டனை
D) அபராதம்
E) விடை தெரியவில்லை
விடை: B) தனியாக சிறைவைப்பது
140. இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து விளைவிக்கும் செயல் குற்றம் என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?
A) பிரிவு 162 B) பிரிவு 152 C) பிரிவு 142 D) பிரிவு 112 E) விடை தெரியவில்லை
விடை: B) பிரிவு 152