Course Content
BNS CHAPTER 2 TEST
0/1
BNSCHAPTER2TEST
About Lesson

1.  பாரதிய நீதிச் சட்டத்தின் எந்தப் பிரிவு தண்டனைகளின் வகைகள் குறித்து விளக்குகிறது?
A. பிரிவு 5       B. பிரிவு 7          C. பிரிவு 4         D. பிரிவு 6      E.விடை தெரியவில்லை

விடை : C. பிரிவு 4

 

2. மரணதண்டனை பெற்ற குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்ட உறுப்பு எது?
A. சட்ட உறுப்பு 72 B. சட்ட உறுப்பு 74 C. சட்ட உறுப்பு 161 D. சட்ட உறுப்பு 153 E.விடை தெரியவில்லை

விடை : A. சட்ட உறுப்பு 72

 

3. பாரதிய நீதிச் சட்டத்தின் சட்டத்தில் எத்தனை வகையான தண்டனைகள் விளக்கப்பட்டுள்ளன?
A. 5 வகையான     B. 7 வகையான        C. 4 வகையான         D. 6 வகையான      E.விடை தெரியவில்லை

விடை : D. 6 வகையான

 

4. உரிய அரசு குற்றவாளியின் சம்மதம் பெறாமல் அவருக்கு விதிக்கப்பட்ட எந்த தண்டனையினையும் Bharatiya Nagarik Suraksha Sanhita, பிரிவு 474 ல் சொல்லப்பட்டதற்கிணங்க மாற்றலாம் என விளக்கும் பாரதீய நியாய சன்ஹிதா பிரிவு எது?
A. பிரிவு 5                     B. பிரிவு 7                   C. பிரிவு 4             D. பிரிவு 6             E.விடை தெரியவில்லை

விடை : A. பிரிவு 5

 

5. அபராதம் அல்லது சமுதாயப்பணி செய்யாமைக்கான சிறைத்தண்டனை வகை,  அந்தக் குற்றத்திற்காகக் குற்றவாளிக்கு எந்த வகையான சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டிருக்கக்கூடுமோ அந்த வகையான சிறைத்தண்டனை எதையும் விதித்து தண்டிக்கலாம் என விளக்கும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு எது?

A. பிரிவு 9(4)      B. பிரிவு 8(2)     C. பிரிவு 8(3)     D. பிரிவு 8(4)     E.விடை தெரியவில்லை

விடை: D. பிரிவு 8(4

 

6. உரிய அரசு எனும் சொல்லுக்கு விளக்கம் கொடுக்கும் பாரதீய நியாய சன்ஹிதா பிரிவு எது?
A. பிரிவு 5       B. பிரிவு 7     C. பிரிவு 4        D. பிரிவு 6     E.விடை தெரியவில்லை

விடை : A. பிரிவு 5

7. அபராதத்தொகை பத்தாயிரத்திக்கு மேற்படாத குற்றங்களுக்கு சிறைத் தண்டனையானது?

A. இரண்டு மாதங்களாக இருத்தல் வேண்டும்
B. நான்கு மாதங்களாக இருத்தல் வேண்டும்
C. ஒரு வருடமாக இருத்தல் வேண்டும்
D. மூன்று மாதங்களாக இருத்தல் வேண்டும்
E.விடை தெரியவில்லை

விடை : B. நான்கு  மாதங்களாக இருத்தல் வேண்டும்

 

8. பல்வேறு பகுதிகள் சேர்ந்து ஒரு குற்றமாக இருந்து, அந்தப் பகுதிகளில் எந்த ஒன்றும் அதுவே ஒரு குற்றமாக இருக்குமிடத்து, அக்குற்றத்திற்கு வெளிப்படையாக தண்டனை வகை செய்யப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய அவரது குற்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றத்திற்கான தண்டனை விதித்து அக்குற்றவாளி தண்டிக்கப்படுதல்கூடாது என விளக்கும் பாரதிய நீதிச் சட்டப் பிரிவு எது?

A. பிரிவு 9(2)     B. பிரிவு 9(1)      C. பிரிவு 9(3)      D. பிரிவு 8(1)     E.விடை தெரியவில்லை

விடை: B. பிரிவு 9(1)

 

9. பல்வேறு குற்றங்களில் ஒன்றைச் செய்த நபர், அவற்றில் எந்தக் குற்றத்தை செய்தார்  என்பது குறித்து சந்தேகம் இருப்பதாகத் தீர்ப்பில் குறிப்பிடும் போது பல்வேறு குற்றங்களின் தண்டனையின் அளவு சமமாக இல்லாதபோது தண்டனையின் வரம்பு பல்வேறு குற்றங்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனைகளில் எந்த குற்றத்திற்க்கு மிக குறைவான தண்டனை விதிக்கப்படுமோ அந்த தண்டனையினை விதித்து தண்டித்தல் வேண்டும் என விளக்கும் பாரதீய நியாய சன்ஹிதா பிரிவு எது?  
A. பிரிவு 9       B. பிரிவு 10       C. பிரிவு 11      D. பிரிவு 12    E.விடை தெரியவில்லை

விடை: B. பிரிவு 10

 

 

 

 

 

 

 

 

Join the conversation