1. இந்தியா பரப்பளவில் உலகின் எத்தனையாவது பெரிய நாடு?
விடை : ஏழாவது பெரிய நாடு
2. இந்தியா பரப்பளவில் ஆசிய கண்டத்தின் எத்தனையாவது பெரிய நாடு?
விடை: இரண்டாவது பெரிய நாடு
3. இந்தியாவை ஏனைய ஆசிய பகுதியில் இருந்து பிரிப்பது?
விடை: இமயமலை
4. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு?
விடை : 32,87,263 ச. கி. மீ
5. இந்தியா புவியில் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீத பரப்பை பெற்றுள்ளது?
விடை: 2.4%
இந்தியாவின் நிலம் மற்றும் நீர் எல்லைகள்
6. இந்தியா எத்தனை கிலோ மீட்டர் நில எல்லைகளைக் கொண்டுள்ளது?
விடை : 15,200 கி.மீ
7. இந்தியா வடமேற்கில் எந்த நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது?
விடை : பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன்
8. இந்தியா வடக்கில் எந்த நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது?
விடை : சீனா, நேபாளம் மற்றும் பூடானுடன்
9. இந்தியா கிழக்கில் எந்த நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது?
விடை: வங்காளதேசம் மற்றும் மியான்மர்
10. இந்தியா அதிகபட்ச நில எல்லையினை எந்த நாட்டுடன் பகிர்ந்துகொள்கிறது?
விடை: வங்காள தேசத்துடன்
11. இந்தியா வங்காள தேசத்துடன் எத்தனை கி.மீ நீளமுள்ள நில எல்லையினை பகிர்ந்துகொள்கிறது?
விடை: 4,156 கி.மீ நீளமுள்ள நில எல்லை
12. இந்தியா குறுகிய நில எல்லையினை எந்த நாட்டுடன் பகிர்ந்துகொள்கிறது?
விடை: ஆப்கானிஸ்தானுடன்
13. இந்தியா ஆப்கானிஸ்தானுடன் எத்தனை கி.மீ நீளமுள்ள நில எல்லையினை பகிர்ந்துகொள்கிறது?
விடை: 106கி.மீ நில எல்லை
14. இந்தியா, தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், மேற்கே அரபிக் கடலாலும் சூழப்பட்டு சுமார் எத்தனை கி.மீ நீளமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியை மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது?
விடை: 6100 கி.மீ நீளமுள்ள
15. தீவுக் கூட்டங்களையும் சேர்த்து இந்திய கடற்கரையின் மொத்த நீளம் எத்தனை கி.மீ?
விடை: 7516.6 கி.மீ.
16. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி எது?
விடை: பாக்நீர்சந்தி
இந்தியாவும் உலகமும்
17. இந்தியாவின் அமைவிடம்
விடை: கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கு மத்தியிலும், ஆசியாவின் தென்பகுதியிலும் அமைந்துள்ளது.
18. எந்த வழிப்பாதை மேற்கிலுள்ள ஐரோப்பிய நாடுகளையும், கிழக்காசிய நாடுகளையும் இந்தியாவுடன் இணைத்து இந்தியாவிற்கு அமைவிட முக்கியத்துவத்தை அளிக்கிறது?
விடை: இந்தியப் பெருங்கடல் வழிப்பாதை
19. இந்தியாவுடன் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் பாலமாக இருப்பது?
விடை: இந்தியாவின் மேற்கு கடற்கரை
20. தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் இந்தியா நெருங்கிய வணிகத் தொடர்பு கொள்ள உதவி புரிவது?
விடை: கிழக்குக் கடற்கரை
இந்தியா – துணைக்கண்டம்
21. எந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது?
விடை: பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை
22. இந்திய துணைக்கண்டத்தில் எத்தனை நாடுகள் உள்ளன?
விடை: ஏழு நாடுகள்
23. இந்தியா ஒரு துணைக்கண்டம் என ஏன் அழைக்கப்படுகிறது?
விடை: இயற்கை நில அமைப்பு காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
1.1 அமைவிடமும் பரப்பளவும்
24. இந்தியாவின் அட்சப் பரவல்?
விடை: இந்தியா 8°4′ வட அட்சம் முதல் 37°6′ வட அட்சம் வரையிலும் பரவியுள்ளது.
25. இந்தியாவின் தீர்க்க பரவல்?
விடை: 68° 7′ கிழக்கு தீர்க்கம் முதல் 97°25’ கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.
26. அட்ச தீர்க்க பரவல்படி இந்தியா முழுமையும் பூமியின் எந்த பகுதியில் அமைந்துள்ளது?
விடை: வடகிழக்கு அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ளது.
27. இந்தியாவின் தென்கோடி பகுதி எது?
விடை: இந்திரா முனை
28. இந்தியாவின் தென்கோடி பகுதியான இந்திரா முனை முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: பிக்மெலியன்
29. இந்திரா முனை எந்த தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது.?
விடை: அந்தமான் நிக்கோபர்
30. இந்திரா முனை அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளது இட அமைவு?
விடை: 6°45′ வடஅட்சத்தில் அமைந்துள்ளது.
31. இந்திய நிலப்பகுதியின் தென்கோடி முனை எது?
விடை: குமரி முனை
32. இந்திய நிலப்பகுதியின் வடமுனை எது?
விடை: இந்திரா கோல்
33. இந்தியா, வடக்கே லடாக்கிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை எத்தனை கி.மீ நீளத்தை கொண்டுள்ளது?
விடை: 3214 கி.மீ
34. இந்தியா மேற்கே குஜராத்தில் உள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை எத்தனை கி.மீ நீளத்தை கொண்டுள்ளது?
விடை: 2933 கி.மீ
35. 23° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கபடுகிறது
விடை: கடகரேகை
36. 23° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கபடுகிறது
விடை: மகரரேகை
37. 66° 30′ தென் அட்சம் எவ்வாறு அழைக்கபடுகிறது
விடை: அண்டார்டிக் வட்டம்
38. 66° 30′ வட அட்சம் எவ்வாறு அழைக்கபடுகிறது
விடை: ஆர்க்டிக் வட்டம்
39. 90° வட அட்சம் எவ்வாறு அழைக்கபடுகிறது
விடை: வடதுருவம்
40. 90° தென் அட்சம் எவ்வாறு அழைக்கபடுகிறது
விடை: தென் துருவம்
41. 0° அட்சம் எவ்வாறு அழைக்கபடுகிறது
விடை: பூமத்திய ரேகை/ நிலநடுக்கோடு
42. எந்த அட்ச பரவல் இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி வெப்ப மண்டலமாகவும், வடபகுதி மித வெப்ப மண்டலமாகவும், இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.
விடை: 23° 30′ வட அட்சமான கடகரேகை
43. இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்கள் உள்ளன?
விடை: 28 மாநிலங்கள்
44. இந்தியாவில் தற்போது எத்தனை னியன் பிரதேசங்கள் உள்ளன?
விடை: 8 யூனியன் பிரதேசங்கள்
இந்திய திட்ட நேரம்
45. மேற்கில் உள்ள குஜராத் முதல் கிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம் வரை இந்தியா ஏறத்தாழ எத்தனை தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது?
விடை: 30 தீர்க்க கோடுகளைக் கொண்டுள்ளது.
46. இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ளகுஜராத்தைக் காட்டிலும் எத்தனை மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது?
விடை: இரண்டு மணி நேரம்
47. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகை எது?
விடை: 82° 30′ கிழக்கு தீர்க்கரேகை
48. இந்தியாவின் மத்திய தீர்க்கரேகையான 82° 30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகிறது?
விடை: இந்திய திட்டநேரமாக
49. 82° 30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக ஏன் எடுத்துக்கொள்ளப்படுகிறது?
விடை: இந்தியாவின் கிழக்கிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் மேற்கிலுள்ளகுஜராத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதயமாகிறது இந்த நேர வேறுபாட்டை,தவிர்ப்பதற்காக.
50. 82° 30′ கிழக்கு தீர்க்கரேகை இந்தியாவின் எந்த பகுதியின் வழியாக செல்கிறது?
விடை: மிர்சாபூர் (அலகாபாத், உத்திர பிரதேஷ் மாவட்டம்)
51. இந்திய திட்ட நேரமானது கிரீன்விச் திட்ட நேரத்தை விட எத்தனை மணி நேரம் முன்னதாக உள்ளது
விடை: 5 மணி 30 நிமிடம் முன்னதாக உள்ளது.
1.2 இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்
52. இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள்?
விடை: இந்தியா வடக்கில் உள்ள கம்பீரமான இமயமலை முகடுகளையும்,தெற்கில் அழகான கடற்கரைகளையும் மேற்கில் இந்திய பாலைவனத்தையும் கிழக்கில் புகழ்பெற்ற இயற்கைப் பாரம்பரியத்தையும் கொண்ட சிறந்த புவியியல் தோற்றங்களைக் கொண்ட ஒரு வல்லமை பெற்ற நாடாக அமைந்துள்ளது.
53. இந்திய நிலப்பகுதி பல மாறுபட்ட இயற்கை நிலத் தோற்றங்களைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இயற்கை அமைப்பை 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் அவை?
விடை:
1. வடக்கு மலைகள்
2. வட பெரும் சமவெளிகள்
3. தீபகற்பபீடபூமிகள்
4. கடற்கரைச் சமவெளிகள்
5. தீவுகள்
வடக்கு மலைகள்
54. இமயமலைகள் (வடக்கு மலைகள்) உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் ஆகும். ஏனெனில்?
விடை: வடக்கு மலைகள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாகின.
55. இமயமலைகள் (வடக்கு மலைகள்) மடிப்பு மலைகள் என ஏன் அழைக்கப்படுகின்றன?
விடை: புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவி மேலோடு மடிக்கப்பட்டு, மடிப்பு மலைகளாக உருவாகின எனவே மடிப்பு மலைகள் என அழைக்கப்படுகின்றன
56. இமய மலைகளின் பரவல்?
விடை: மேற்கில் சிந்து பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் 2500 கி.மீ நீளத்திற்கு நீண்டு பரவியுள்ளது.
இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கி.மீ அகலத்துடனும், அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கிமீ அகலத்துடனும் வேறுபடுகிறது.
57. பிரபலமான பாமீர் முடிச்சு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: “உலகின் கூரை” என அழைக்கப்படுகிறது.
58. மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமயமலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது எது?
விடை: பாமீர் முடிச்சு
59. இமயமலை பாமீர் முடிச்சியிலிருந்து கீழ்நோக்கி எந்த வடிவத்தில் அமைந்துள்ளது?
விடை: வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது.
60. இமாலயா (Himalaya) என்ற சொல் சமஸ்கிருத மொழியில் “எவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது?
விடை: பனிஉறைவிடம்” (Abode of Snow)
61. இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம். அவை?
விடை:
1. ட்ரான்ஸ் இமயமலைகள் (The Trans Himalayas or Western Himalayas)
2. இமயமலைகள் (Himalayas or Central Himalayas)
3. கிழக்கு இமயமலை / பூர்வாஞ்சல் குன்றுகள் (Eastern Himalayas or Purvanchal Hills)
1.ட்ரான்ஸ் இமயமலை (மேற்கு இமயமலைகள்)
62. மேற்கு இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: ட்ரான்ஸ் இமயமலை
63. ட்ரான்ஸ் இமயமலை எங்கு அமைந்துள்ளது?
விடை: ஜம்மு-காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
64. ட்ரான்ஸ் இமயமலையின் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: “திபெத்தியன் இமயமலை” என அழைக்கப்படுகிறது.
65. ட்ரான்ஸ் இமயமலை அகல பரவல்?
விடை: மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் சுமார் 40 கிமீ அகலத்துடனும் அதன் மையப்பகுதியில் 225 கி.மீ அகலத்துடன் காணப்படுகிறது.
66. ட்ரான்ஸ் இமயமலை பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள்?
விடை: கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
67. எந்த பாறைகளின் ஒரு பகுதி உருமாறிய பாறைப் படிமங்களாக,
இமயமலைத்தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது?
விடை: டெர்சியரி கிரானைட்
68. ட்ரான்ஸ் இமயமலையில் முக்கியமான மலைத்தொடர்கள்?
விடை: சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம்
2. இமயமலை
69. வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ள மலை எது?
விடை: இமயமலை
70. இமயமலை எவ்வகை மலை?
விடை: ஒரு இளம் மடிப்பு மலை
71. இமயமலை எவ்வாறு உருவானது?
விடை: வடக்கே இருந்த யுரேசியா (Eurasia) நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் (Gondwana Land Mass) ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.
72. இமயமலை பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.
இமயமலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது அவை?
விடை: (i) உள் இமயமலைகள் / இமாத்ரி
(ii) மத்திய இமயமலை / இமாச்சல்
(iii) வெளி இமயமலை / சிவாலிக்
73. உள் இமயமலைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
விடை: இமாத்ரி
74. மத்திய இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
விடை: இமாச்சல்
75. வெளி இமயமலை எவ்வாறு அழைக்கப்படுகிறது
விடை: சிவாலிக்
(i) உள் இமயமலைகள் / இமாத்ரி
76. மத்திய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ள மலை எது?
விடை: உள் இமயமலை
77. உள் இமயமலையின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம்?
விடை: அகலம் 25 கி.மீ சராசரி உயரம் 6000 மீ
78. சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது உள் இமயமலை எவ்வாறு மழையைப் பெறுகின்றது?
விடை: குறைவான மழையைப் பெறுகின்றது.
79. மற்ற மலைத்தொடர்களை ஒப்பிடும் போது உள் இமயமலையில் எவ்வாறு உள்ளது?
விடை: பௌதீக சிதைவாக
80. இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை எங்கு அமைந்துள்ளன?
விடை: உள்மலை தொடரில்
81. உள்மலை தொடரில் அமைந்துள்ள முக்கியமான மிக உயர்ந்த சிகரங்கள் எவை?
விடை: எவரெஸ்ட் மற்றும் கஞ்சன் ஜங்கா
82. எவரெஸ்ட் உயரம்?
விடை: 8848 மீ
83. கஞ்சன் ஜங்கா உயரம்?
விடை: 8586 மீ
84. எவரெஸ்ட் சிகரம் எங்கு அமைந்துள்ளது?
விடை: நேபாளத்தில் அமைந்துள்ளது.
85. கஞ்சன் ஜங்கா சிகரம் எங்கு அமைந்துள்ளது?
விடை: நேபாளம் மற்றும் சிக்கிமிற்கு இடையே அமைந்துள்ளது.
86. உள் இமயமலை மற்ற மலைத்தொடர்களை விட எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: தொடர்ச்சியான மலைத்தொடராக
87. கங்கோத்திரி, சியாச்சின் போன்றவை?
விடை: பனியாறுகள்
88. கங்கோத்திரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் உள் இமயமலையில் காணப்படுவதற்கு காரணம்?
விடை: உள் இமயமலையில் எப்போதும் நிரந்தரமாக பனிசூழ்ந்து காணப்படுவதால்
(ii) மத்திய இமயமலைகள் அல்லது இமாச்சல் (Lesser Himalayas or Himachal)
89. இமய மலையின் மத்திய மலைத் தொடர் எது?
விடை: இமாச்சல்
90. மத்திய இமயமலையின் சராசரி அகலம் மற்றும் சராசரி உயரம் அகலம்?
விடை: 80கி.மீ சராசரி உயரம் 3500 மீ முதல் 4500 மீ வரை
91. மத்திய இமயமலை தொடரில் காணப்படும் பாறைகள் எவை?
விடை: வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் மணற்பாறைகள்
92. மண்ணரிப்பு ஏற்பட காரணம்?
விடை: நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு மற்றும் மிக அதிக மழைப்பொழிவின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுகிறது.
93. மத்திய இமயமலைத் தொடரில் காணப்படும் மலைகள் எவை?
விடை: பீர்பாஞ்சல், தவ்லதார் மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் காணப்படுகின்றன.
94. மத்திய இமயமலைத் தொடரில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோடை வாழிடங்கள் எவை?
விடை: சிம்லா, முசௌரி, நைனிடால், அல்மோரா, ரானிகட் மற்றும் டார்ஜிலிங்
(iii) வெளி இமயமலை / சிவாலிக்
95. வெளி இமயமலைத் தொடரானது எங்கிருந்து எதுவரை பரவிக் காணப்படுகிறது?
விடை: ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை பரவிக் காணப்படுகிறது.
96. வெளி இமயமலைத் தொடரின் ஒரு பகுதி எதனால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது?
விடை: ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது
97. வெளி இமயமலைத் தொடரின் உயரம்?
விடை: 900 மீட்டரிலிருந்து 1100 மீட்டர் வரை வேறுபடுகிறது.
98. வெளி இமயமலையின் சராசரி உயரம்?
விடை: 1000 மீ
99. வெளி இமயமலையின் சராசரி அகலம்?
விடை: மேற்கில் 50 கிமீ. முதல் கிழக்கில் 10 கி.மீ வரையும் மாறுபடுகிறது.
100. வெளி இமயமலை எப்படிப்பட்ட மலைத் தொடர்களாகும்?
விடை: மிகவும் தொடர்ச்சியற்ற மலைத் தொடர்களாகும்.
101. சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுவது?
விடை: குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள்
102. வெளி இமயமலை கிழக்கு பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: டூயர்ஸ் (Duars)
103. வெளி இமயமலை மேற்கு பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: டூன்கள் (Duns)
104. வெளி இமயமலை பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு?
விடை: ஏற்றதாக உள்ளது.
3. பூர்வாஞ்சல் குன்றுகள்
105. இமயமலையின் கிழக்கு கிளை எது?
விடை: பூர்வாஞ்சல் குன்றுகள்
106. பூர்வாஞ்சல் குன்றுகள் எந்த பகுதியில் பரவியுள்ளது?
விடை: வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
107. பூர்வாஞ்சல் குன்றுகளின் பரவல்?
விடை: பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன. மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.
108. எந்த குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றன?
விடை: டாப்லா, அபோர், மிஸ்மி, பட்காய்பம், நாகா, மாணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள்
இமயமலையின் முக்கியத்துவம்
109. இமயமலை எந்த பருவக்காற்றை தடுத்து வட இந்திய பகுதிக்கு மழையையினைக் கொடுக்கிறது?
விடை: தென்மேற்கு பருவக் காற்றை
110..இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ள மலை எது?
விடை : இமயமலை
111. இமயமலை எந்த வகையான நதிகளின் பிறப்பிடமாக உள்ளது?
விடை : வற்றாத நதிகளின் (சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்)
112. வடக்கு மலைகள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்வதற்கு காரணம் என்ன?
விடை : வடக்கு மலைகளின் இயற்கை அழகு
113. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள புனிதத் தலங்கள் எவை?
விடை : அமர்நாத், கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்
114. இமயமலைகள் எந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது?
விடை : வனப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு
115. இமயமலை எங்கிருந்து வீசும் கடும் குளிர் காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது?
விடை : மத்திய ஆசியாவில் இருந்து
116. இமயமலை எதற்கு பெயர் பெற்றவை?
விடை : பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
வடபெரும் சமவெளிகள்
117. வளமான வடபெரும் சமவெளிகள் எங்கு பரந்து காணப்படுகிறது?
விடை: வடக்கு மலைகளின் தென்புறம்
118. சிந்து, கங்கை பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்ட உலகிலேயே வளமான சமவெளி எது?
விடை: வடபெரும் சமவெளி
119. வட பெரும் சமவெளியின் நீளம்?
விடை: சுமார் 2400 கிமீ
120. வடபெரும் சமவெளியின் அகலம்?
விடை: மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 240 கி.மீ முதல் 320 கிமீ வரை காணப்படுகிறது.
121. வட பெரும் சமவெளி எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு பரவியுள்ளது?
விடை: 7 லட்சம் சதுர கிலோ மீட்டர்
122. வட பெரும் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: பள்ளமற்ற ஒரு சீரான சம பரப்பாக அமைந்துள்ளது.
123. வட இந்திய பெரும் சமவெளி எந்த செயல்முறைகளால் உருவாக்கப்பட்டுள்ளன?
விடை: இமயமலை மற்றும் விந்திய மலைகளிலுள்ள ஆறுகளின் படியவைத்தல் மலையடிச் சமவெளிகள் மற்றும் வெள்ளச் சமவெளிகளில் அதிகமான வண்டல் படிவுகளைப் படியவைக்கின்றன. இந்த செயல்முறைகளால் வட இந்திய பெரும் சமவெளி உருவாக்கப்பட்டுள்ளது.
வட பெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள்:
அ. பாபர் சமவெளி
124. பாபர் சமவெளி எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது?
விடை: இமயமலை ஆறுகளால் படியவைக்கப்பட்ட பெரும் மணல்கள் மற்றும் பலதரப்பட்ட படிவுகளால்
125. பாபர் சமவெளியின் வழியாக ஓடும் சிற்றோடைகள் நீர் உள்வாங்கப்பட்டு மறைந்து விட காரணம்?
விடை: பாபர் சமவெளியின் படிவுகளில் நுண் துளைகள் அதிகமாக உள்ளதால்
126. பாபர் சமவெளியின் அகலம்?
விடை: மேற்கில் (ஜம்மு) அகன்றும் கிழக்கில் (அஸ்ஸாம்) குறுகியும் 8 கி.மீ முதல் 15 கி.மீ வரை உள்ளது.
ஆ. தராய் மண்டலம்
127. தராய் மண்டலத்தின் தன்மை?
விடை: அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும், காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விதமான வனவிலங்குகள் வாழ்வதற்கும் ஏற்ற பகுதியாகவும் உள்ளது.
128. தராய் மண்டலம் எங்கு அமைந்துள்ளது.
விடை: பாபர் பகுதிக்கு தெற்கில்
129. தராய் மண்டலத்தின் அகலம்?
விடை: சுமார் 15 கிமீ முதல் 30 கி.மீ வரை
130. தராய் மண்டலம் கிழக்கு பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு பகுதியில் ஏன் அகலமாக காணப்படுகிறது?
விடை: மிக அதிக மழை காரணமாக அகலமாக காணப்படுகிறது
131. பெரும்பாலான மாநிலங்களில் தராய் காடுகள் ஏன் அழிக்கப்பட்டு வருகின்றன.?
விடை: வேளாண்மை சாகுபடிக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.
இ. பாங்கர் சமவெளி
132. பெரும் சமவெளியில் காணப்படும் பாங்கர் என்பது?
விடை: மேட்டு நில வண்டல் படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்.
133. பாங்கர் சமவெளியில் படிவுகள் யாவும் எந்த வகை மண்ணால் ஆனவை?
விடை: பழைய வண்டல் மண்ணால் ஆனவை.
134. பாங்கர் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: வெள்ளப் பெருக்கு ஏற்படா உயர்நிலப் பகுதிகளில் அமைந்துள்ளது
135. பாங்கர் சமவெளி வேளாண்மைக்கு உகந்ததாக ஏன் உள்ளது?
விடை: பாங்கர் மண்ணானது கருமை நிறத்துடன், வளமான இலைமக்குகளைக் கொண்டும், நல்ல வடிகாலாமைப்பையையும் கொண்டுள்ளதால் வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது.
ஈ. காதர் சமவெளி
136. மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளால் கொண்டுவரப்பட்டு படியவைக்கப்படும் புதிய வண்டல் மண் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: காதர் (அ) பெட் நிலம் (betland)
137. காதர் என்பது?
விடை: மணல், களிமண், சேறு மற்றும் புதிய வண்டலைக் கொண்ட வளமிக்கச் சமவெளியாகும்.
உ. டெல்டா
138. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகளால் முகத்துவாரத்தில் உருவாக்கப்பட்ட வளமான முக்கோண வடிவ நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: சுந்தரவன டெல்டா
139. உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக வேகத்தில் உருவாகும் டெல்டா எது?
விடை: சுந்தரவன டெல்டா
140. சுந்தரவன டெல்டா பகுதியில் அதிக வண்டல் படிவுகள் படிய காரணம்
விடை: அப்பகுதியில் ஆறுகளின் வேகம் குறைவாக இருப்பதால்
141. டெல்டா சமவெளி பகுதி எவ்வாறு உள்ளது?
விடை: டெல்டா சமவெளி புதிய வண்டல் படிவுகள், பழைய வண்டல் படிவுகள் மற்றும் சதுப்புநிலங்களைக் கொண்ட ஒரு பகுதியாக உள்ளது.
142. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: “சார்ஸ்” (Chars)
143. சுந்தரவன டெல்டா வண்டல் சமவெளியில் சதுப்பு நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: “பில்ஸ்” (Bils)
144. இந்தியாவின் வட இந்திய பெரும் சமவெளியைக் காலநிலை மற்றும் நிலப்பரப்பின் பண்புகளைக் கொண்டு எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
விடை: 4 வகைகளாக அவை:
1. இராஜஸ்தான் சமவெளி 2. பஞ்சாப் – ஹரியானா சமவெளி
3. கங்கைச் சமவெளி 4. பிரம்மபுத்திரா சமவெளி
1. இராஜஸ்தான் சமவெளி
145. ஆரவல்வி மலைத்தொடருக்கு மேற்கில் ஏறத்தாழ 1,75,000 சதுரகிமீ பரப்பளவில் பரவியுள்ள சமவெளி எது?
விடை: இராஜஸ்தான் சமவெளி
146. லூனி மற்றும் மறைந்து போன சரஸ்வதி ஆறுகளின் படிவுகளால் உருவாகியுள்ள சமவெளி எது?
விடை: இராஜஸ்தான் சமவெளி
147. சாம்பார் ஏரியின் வேறு பெயர்?
விடை: புஷ்கர் எரி
148. சாம்பார் ஏரி எங்குள்ளது?
விடை: ஜெய்பூருக்கு அருகில் (ராஜஸ்தான்)
149. பல உப்பு ஏரிகள் எங்கு காணப்படுகின்றன?
விடை: இராஜஸ்தான் சமவெளியில்
150. பெரிய இந்திய பாலைவனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: தார் பாலைவனம்
151. இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வறண்ட நிலப்பகுதி எது?
விடை: தார் பாலைவனம்
152. 2 இலட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இயற்கை எல்லையாக அமைந்திருப்பது?
விடை: தார் பாலைவனம்
153. தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனமாகும்?
விடை: 17 வது
154. தார் பாலைவனம் ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே, இராஜஸ்தான் மாநிலத்தின் எத்தனை பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது?
விடை: மூன்றில் இரண்டு பங்கு
155. தார் பாலைவனப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மருஸ்தலி
156. தார் பாலைவனத்தின் அரை பாலைவனப்பகுதி (Semi Desert) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பாங்கர்
157. எந்த பகுதியில் பல உப்பு ஏரிகளும் (Dhands), மணல் திட்டுகளும் உள்ளன?
விடை: தார் பாலைவனப் பகுதியில்
2. பஞ்சாப் ஹரியானா சமவெளி
158. பஞ்சாப் ஹரியானா சமவெளி ஏறத்தாழ எத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது?
விடை: 1.75 லட்சம் சதுர கிலோ மீட்டர்
159. பஞ்சாப் -ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் எந்த பகுதியில் அமைந்துள்ளன?
விடை: வடகிழக்கே அமைந்துள்ளன.
160. எந்த ஆறுகளினால் ஏற்படும் படிவுகளால் பஞ்சாப் – ஹரியானா சமவெளி உருவானது?
விடை: சட்லெஜ், பியாஸ் மற்றும் ராவி
161. பஞ்சாப் – ஹரியானா சமவெளி எந்த ஆறுகளின் ஆற்றிடைச் சமவெளியாகவும் உள்ளது?
விடை: கங்கை – யமுனை, யமுனை- சட்லெஜ்
3.கங்கைச் சமவெளி
162. மேற்கிலுள்ள யமுனை ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்காளதேசம் வரை சுமார் 3.75 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சமவெளி எது?
விடை: கங்கைச் சமவெளி
163. கங்கை ஆற்றின் துணை ஆறுகள் எவை?
விடை: காக்கரா, காண்டக், கோசி, யமுனை, சாம்பல், பெட்வா
164. கங்கைச் சமவெளி எவ்வாறு உருவாகியது?
விடை: கங்கையும் அதன் துணை ஆறுகளான காக்கரா, காண்டக், கோசி, யமுனை, சாம்பல், பெட்வா போன்றவைகளும் அதிக அளவில் வண்டல் படிவுகளைப் படிய வைத்து இந்தியாவின் மிகப்பெரிய கங்கைச் சமவெளியை உருவாக்கியுள்ளன.
165. கங்கைச் சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: கங்கைச் சமவெளி கிழக்கு மற்றும் தென்கிழக்கு நோக்கி மென் சரிவாக அமைந்துள்ளது.
4. பிரம்மபுத்திரா சமவெளி
166. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி எங்கு அமைந்துள்ளது?
விடை: அஸ்ஸாமில்
167. பிரம்மபுத்திரா சமவெளி எந்த பகுதியில் அமைந்துள்ளது?
விடை: பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
168. பிரம்மபுத்திரா சமவெளி சுமார் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது?
விடை: 56.275 சதுர கிலோ மீட்டர்
169. பிரம்மபுத்திரா சமவெளி எவ்வாறு காணப்படுகிறது?
விடை: வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.
தீபகற்ப பீடபூமிகள்
170. வட இந்திய சமவெளிக்கு தெற்கே அமைந்துள்ள பீடபூமி எது?
விடை: தீபகற்ப பீடபூமி
171. தீபகற்ப பீடபூமி சுமார் எத்தனை சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது?
விடை: 16 லட்சம் சதுர கி.மீ
172. தீபகற்ப பீடபூமி இந்தியாவின் மொத்த பரப்பளவில் சுமார் எவ்வளவு பரப்பளவை கொண்டுள்ளது?
விடை: பாதி பரப்பளவை கொண்டுள்ளது
173. இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைப் பிரிவு எது?
விடை: தீபகற்ப பீடபூமி
174. தீபகற்ப பீடபூமி எவ்வாறு காணப்படுகிறது?
விடை: தீபகற்ப பீடபூமி தொன்மையான பாறை அமைப்புகளையும், பல குன்றுகளையும் பல்வேறு சிறு பீடபூமிகளையும், ஆற்றுப் பள்ளத்தாக்குகளால் பிளவுபட்டும் காணப்படுகின்றன.
175. தீபகற்ப பீடபூமியின் எல்லைகளாக அமைந்துள்ள பகுதிகள் எவை?
விடை: வடமேற்கே ஆரவல்லி மலைத்தொடர், வடக்கு மற்றும் வடகிழக்கே பண்டல்கண்ட் உயர்நிலப்பகுதி, கைமூர், ராஜ்மகால் குன்றுகள், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியன தீபகற்ப பீடபூமியின் எல்லைகளாக அமைந்துள்ளன.
176. தீபகற்ப பீடபூமியின் பெரும்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் எத்தனை மீட்டர் உயரத்தைக் கொண்டது?
விடை: 600 மீ.
177. தீபகற்பபீட பூமியின் உயர்ந்த சிகரம்?
விடை: ஆனைமுடிச் சிகரம்
178. ஆனைமுடிச் சிகரம் உயரம்?
விடை: 2695 மீ
179. ஆனைமுடிச் சிகரம் எந்த மலையில் அமைந்துள்ளது?
விடை: ஆனைமலையில்
180. தீபகற்ப பீடபூமி எப்படி சரிந்துள்ளது?
விடை: மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
181. தீபகற்ப பீடபூமி எந்த நிலப்பகுதியின் ஒரு பகுதியாகும்?
விடை: கோண்டுவானா நிலப்பகுதி
182. தீபகற்ப பீடபூமி பகுதியில், அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகள் காணப்பட காரணம்?
விடை: ஆற்றின் மூப்பு நிலைக்காரணமாக ஆறுகள் அகலமான மற்றும் ஆழமற்ற பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளன.
183. எந்த ஆறு தீபகற்ப பீடபூமியை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றது?
விடை: நர்மதை ஆறு
184. தீபகற்ப பீடபூமியின் வட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மத்திய உயர்நிலங்கள்
185. தீபகற்ப பீடபூமியின் தென் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: தக்காண பீடபூமி
186. விந்திய மலைக்கு தென் பகுதியில் பாயும் ஆறுகள் எவை?
விடை: கோதாவரி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா
187. விதீபகற்ப பீடபூமியில் கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் எவை?
விடை: கோதாவரி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா
188. விந்தியமலையின் தென் பகுதியிலுள்ள பிளவு பள்ளத்தாக்குகளின் வழியே மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்ற ஆறுகள் எவை?
விடை: நர்மதை மற்றும் தபதி
அ. மத்திய உயர் நிலங்கள்
189. மத்திய உயர் நிலங்கள் எங்கு அமைந்துள்ளது?
விடை: நர்மதை ஆற்றிற்கும் வடபெரும் சமவெளிக்கும் இடையே அமைந்துள்ளது.
190. ஆரவல்லி மலைத்தொடர் எங்கு அமைந்துள்ளது?
விடை : மத்திய உயர்நில பகுதியின் வடக்கு மற்றும் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது.
191. ஆரவல்லி மலைத்தொடரின் பரவல் ?
விடை: வடமேற்காக குஜராத்திலிருந்து ராஜஸ்தான் வழியாக டெல்லி வரை சுமார் 700 கி.மீ வரை நீண்டுள்ளது.
192. ஆரவல்லி மலைத்தொடரின் உயரம்?
விடை: வடக்கில் டெல்லிக்கு அருகில் சராசரியாக சுமார் 400 மீ உயரத்தையும் தென் மேற்கில் 1500 மீ உயரத்தையும் கொண்டுள்ளது.
193. ஆரவல்லி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது ?
விடை: குருசிகார் (1722 மீ)
194. தீபகற்ப பீடபூமியில் மேற்கு பகுதியிலுள்ள மத்திய உயர்நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: மாளவப் பீடபூமி
195. மாளவப் பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
விடை: ஆரவல்லி மலைத்தொடருக்கு தென்கிழக்கிலும் விந்திய மலைக்கு வடக்கிலும்
196. மாளவப் பீடபூமியில் பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலக்கும் ஆறுகள் எவை?
விடை: சம்பல், பீட்வா, கென்
197. மாளவப் பீடபூமியின் கிழக்குத் தொடர் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பண்டல்கண்ட்
198. மாளவப் பீடபூமியின் கிழக்குத் தொடர் பகுதியின் (பண்டல்கண்ட்) தொடர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பாகல்கண்ட்
199. சோட்டாநாகபுரி பீடபூமி எங்கு அமைந்துள்ளது?
விடை: மத்திய உயர் நிலங்களின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
200. சோட்டாநாகபுரி பீடபூமி உள்ளடக்கிய பகுதிகள் எவை?
விடை: ஜார்கண்ட் மாநிலத்தின் பெரும் பகுதி, மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகள்
201. சோட்டாநாகபுரி பீடபூமியில் கிடைக்கும் புகழ்பெற்ற கனிம வளங்கள் எவை?
விடை: இரும்புத்தாது மற்றும் நிலக்கரி
ஆ. தக்காண பீடபூமி
202. தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டது எது?
விடை: தக்காண பீடபூமி
203. தக்காண பீடபூமி தோராயமாக எந்த வடிவம் கொண்டது?
விடை: முக்கோணம்
204. தக்காண பீடபூமி எல்லைகள் எவை?
விடை: வடமேற்கு திசையில் விந்திய, சாத்பூரா மலைத்தொடர்களையும் வடக்கில் மகாதேவ், மைக்காலா குன்றுகளையும் வடகிழக்கில் இராஜ்மகால் மேற்கில் மேற்கு தொடர்ச்சிமலைகளையும் கிழக்கில் கிழக்கு தொடர்ச்சி மலைகளையும் எல்லைகளாகக் கொண்டது.
205. தக்காண பீடபூமியின் பரப்பளவு?
விடை: சுமார் 7 லட்சம் சதுர கி.மீ
206. தக்காண பீடபூமியின் கடல் மட்டத்திலிருந்து உயரம்?
விடை: 500 மீ முதல் 1000 மீ
I. மேற்குத் தொடர்ச்சி மலைகள்
207. மேற்குத் தொடர்ச்சி மலைகள் எங்கு காணப்படுகிறது?
விடை: தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில்
208. மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்வது எது?
விடை: மேற்குத் தொடர்ச்சி மலைகள்
209. மேற்குத் தொடர்ச்சி மலையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: சயாத்ரி
210. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயரமானது எந்த திசையில் அதிகரிக்கிறது?
விடை: வடக்கிலிருந்து தெற்கு நோக்கி
211. ஆனைமலை, ஏலக்காய் மலை மற்றும் பழனிமலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள சிகரம் எது ?
விடை: ஆனைமுடிச் சிகரம் அமைந்துள்ளது
212. மலைவாழிடமான கொடைக்கானல் எந்த மலையில் அமைந்துள்ளது?
விடை: பழனி மலை
I. கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
213. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் எங்கு அமைந்துள்ளது?
விடை: இந்தியாவின் தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
214. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: பூர்வாதிரி
215. கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும் எங்கு ஒன்றிணைகின்றன?
விடை: கர்நாடக, தமிழ்நாடு எல்லையிலுள்ள நீலகிரி மலையில்
216. மேற்குத் தொடர்ச்சி மலைகள் எவ்வாறு அமைந்துள்ளன?
விடை: தொடர்ச்சியாக
217. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் எவ்வாறு அமைந்துள்ளன?
விடை: தொடர்ச்சியற்று
218. மேற்குத் தொடர்ச்சி மலைகள் பிளவு பட்ட குன்றுகளாக காட்சியளிப்பதற்கான காரணம் என்ன?
விடை: மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பென்னாறு மற்றும் காவிரி போன்ற ஆறுகளால் அரிக்கப்படுவதால்
கடற்கரைச் சமவெளிகள்
219. இந்திய தீபகற்ப பீடபூமி எவைகளால் சூழப்பட்டுள்ளது?
விடை: குறுகலான, வேறுபட்ட அகலத்தையுடைய வடக்கு தெற்காக அமைந்துள்ள கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.
220. இந்திய கடற்கரைச் சமவெளிகள் எவ்வாறு உருவானவை?
விடை: ஆறுகள், கடல் அலைகள் ஆகியவற்றின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால்
221. இந்திய கடற்கரைச் சமவெளிகளை எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
விடை: இரண்டு . அவை,
அ. மேற்கு கடற்கரைச் சமவெளி
ஆ. கிழக்கு கடற்கரைச் சமவெளி
அ. மேற்கு கடற்கரைச் சமவெளி
222. மேற்கு கடற்கரைச் சமவெளி எங்கு அமைந்துள்ளது?
விடை: மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ளது.
223. மேற்கு கடற்கரைச் சமவெளியின் பரவல்?
விடை: வடக்கில் உள்ள ரானா ஆப் கட்ச் முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டு உள்ளது.
224. மேற்கு கடற்கரை சமவெளியின் அகலம்?
விடை: 10 கி.மீ முதல் 80 கி.மீ வரை
225. மேற்கு கடற்கரைச் சமவெளியின் நிலத்தோற்றம் எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: மணற்கடற்கரை, கடற்கரை மணல்குன்றுகள், கழிமுகங்கள், காயல்கள், எஞ்சிய குன்றுகள் மற்றும் சரளை மணல் மேடுகள்
226. மேற்கு கடற்கரையின் வடபகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: கொங்கணக் கடற்கரை
227. மேற்கு கடற்கரையின் மத்திய பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: கனரா கடற்கரை
228. மேற்கு கடற்கரையில் தென்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : மலபார் கடற்கரை
229. மலபார் கடற்கரையின் நீளம் மற்றும் அகலம்?
விடை: 20 முதல் 100 கி.மீ அகலம் மற்றும் 550 கி.மீ நீளம்
230. மலபார் கடற்கரைப் பகுதியின் தோற்றம் எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: ஆழமில்லாத பல காயல்கள், உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ்
231. மலபார் கடற்கரைப் பகுதியில் உள்ள முக்கியமான ஏரி எது?
விடை: வேம்பநாடு ஏரி
ஆ. கிழக்கு கடற்கரை சமவெளி
232. கிழக்கு கடற்கரைச் சமவெளியின் பரவல்?
விடை: கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
233. கிழக்கு கடற்கரை சமவெளி எவ்வாறு உருவானது?
விடை: கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் படிய வைக்கப்பட்ட வண்டல் படிவுகளால்
234. கிழக்கு கடற்கரை சமவெளி எவ்வாறு காணப்படுகிறது?
விடை: புதிய வண்டல் படிவுகளால் நன்கு வரையறுக்கப்பட்ட கடற்கரையைக் கொண்டது.
235. கிழக்கு கடற்கரை சமவெளியில் மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: வடசர்க்கார்
236. கிழக்கு கடற்கரை சமவெளியில் கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: சோழமண்டல கடற்கரை
237. சிலிகா ஏரி எங்கு அமைந்துள்ளது?
விடை: மகாநதி டெல்டாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ளது.
238. இந்தியாவின் மிகப்பெரிய காயல் ஏரி எது?
விடை: சிலிகா ஏரி
239. கொல்லேறு ஏரி எங்கு அமைந்துள்ளது?
விடை: கோதாவரி ஆற்றுக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ளது.
240. பழவேற்காடு (புலிகாட்) ஏரி எங்கு அமைந்துள்ளது?
விடை: தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில்
241. கிழக்கு கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள முக்கியமான ஏரிகள் எவை?
விடை: சிலிகா ஏரி, கொல்லேறு ஏரி மற்றும் புலிகாட் ஏரி
தீவுகள்
242. இந்தியாவில் எத்தனை பெரும் தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ளன?
விடை: இரண்டு. அவை அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள்
243. அந்தமான் நிக்கோபார் தீவுகள் எங்கு அமைந்துள்ளது?
விடை: வங்காள விரிகுடா
244. அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?
விடை: 572
245. இலட்சத்தீவுகள் எங்கு அமைந்துள்ளது?
விடை: அரபிக் கடல்
246. இலட்சத்தீவுக் கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?
விடை: 27
247. அந்தமான் நிக்கோபர் தீவுகள் எப்படி உருவானது?
விடை: புவி உள் இயக்க விசைகள் மற்றும் எரிமலைகளால்
248. இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை எது?
விடை: பாரன் தீவு
249. பாரன் தீவு எங்கு அமைந்துள்ளது?
விடை: அந்தமான் நிக்கோபர் தீவுக்கூட்டத்தில்
அ. அந்தமான் நிக்கோபர் தீவுகள்
250. அந்தமான் நிக்கோபார் தீவு எவ்வாறு அமைந்துள்ளது?
விடை: கடலடி மலைத் தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளது.
251. அந்தமான் நிக்கோபார் தீவில் அடர்ந்த காடுகள் இருப்பதற்கான காரணம்?
விடை: பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதாலும், அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும்
252.அந்தமான் நிக்கோபர் தீவின் பரப்பளவு?
விடை : 8,249 ச.கி.மீ
253. அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
விடை: இரண்டு. அவை
1. அந்தமான் தீவுகள்
2. நிக்கோபர் தீவுகள்
254. அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தின் வடபகுதி தீவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: அந்தமான்
255. அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டத்தின் தென்பகுதி தீவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: நிக்கோபர்
256. இந்திய நாட்டின் அமைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள தீவுக் கூட்டங்கள் எவை?
விடை: அந்தமான் நிக்கோபர் தீவுக் கூட்டங்கள்
257. அந்தமான் நிக்கோபர் தீவின் நிர்வாகத் தலைநகரம் எது ?
விடை: போர்ட் பிளேயர்
India recently renamed Port Blair, the capital of the Union Territory of Andaman and Nicobar(A&N) Islands, as Sri Vijaya Puram.
258. அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து பிரிக்கும் கால்வாய் எது?
விடை: 10° கால்வாய்
259. நிக்கோபரின் தென்கோடி முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: இந்திரா முனை
ஆ. இலட்சத்தீவுகள்
260. இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு எதனால் உருவானது?
விடை: முருகைப் பாறைகளால்
261. இலட்சத்தீவின் பரப்பளவு
விடை: 32 ச.கி.மீ
262. இலட்சத்தீவின் நிர்வாகத் தலைநகரம் எது?
விடை: கவரட்டி
263. இலட்சத்தீவுக் கூட்டங்களை மாலத்தீவிலிருந்து பிரிக்கும் கால்வாய் எது?
விடை: 8° கால்வாய்
264. இலட்சத்தீவில் மனிதர்கள் வசிக்காத தீவு எது?
விடை: பிட் தீவு (Pitt Island)
265. பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்ற தீவு எது?
விடை: பிட் தீவு (Pitt Island)
266. இலட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமினித் தீவு கூட்டங்கள் எந்த ஆண்டு முதல் இலட்சத்தீவுகள் என அழைக்கப்படுகிறது?
விடை: 1973 ஆம் ஆண்டு
இ. மற்ற கடல் தீவுகள்
267. இந்தியாவின் இரு பெரும் தீவுக் கூட்டங்களைத் (அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள்) தவிர்த்து காணப்படும் தீவுகள் எவை?
விடை : பல்வேறு சிறிய தீவுகள், மேற்கு கடற்கரை, கிழக்கு கடற்கரை, கங்கை டெல்டா பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காணப்படுகின்றன.
268. இந்தியாவில் மனிதர்கள் வசிக்காத தீவுகள் எவை?
விடை: பல்வேறு சிறிய தீவுகள், மேற்கு கடற்கரை, கிழக்கு கடற்கரை, கங்கை டெல்டா பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மனிதர்கள் வசிப்பதில்லை.
269. இந்தியாவின் இரு பெரும் தீவுக் கூட்டங்களைத் தவிர்த்து (அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள்) மற்ற தீவுக் கூட்டங்கள் எந்த அரசால் நிர்வாகம் செய்யப்படுகிறது?
விடை: அருகாமையில் உள்ள அந்தந்த மாநில அரசால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
இந்தியாவின் வடிகாலமைப்பு
270. வடிகாலமைப்பு என்றால் என்ன?
விடை: முதன்மையாறுகளும், துணையாறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ, ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும் செயலாகும்.
271. முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: வடிகால் கொப்பரை
272. வடிகால் அமைப்பானது எதை பொறுத்து அமைகிறது?
விடை: ஒரு பிரதேசத்தில் உள்ள நிலவியல் அமைப்பை
273. இந்தியாவின் அமைவிட அடிப்படையில் வடிகாலமைப்பை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
விடை: இரு பெரும் பிரிவுகள். அவை
(i) இமயமலையில் தோன்றும் ஆறுகள்
(ii) தீபகற்ப இந்திய ஆறுகள்
(i) இமயமலையில் தோன்றும் ஆறுகள்
சிந்து
கங்கை
பிரம்மபுத்திரா
(ii) தீபகற்ப இந்திய ஆறுகள்
நர்மதை
தபதி
மகாநதி
கோதாவரி
கிருஷ்ணா
காவிரி
274. இமயமலையில் தோன்றும் ஆறுகள் எவை?
விடை: சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா
275. தீபகற்ப இந்திய ஆறுகள் எவை?
விடை : நர்மதை, தபதி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி
இமயமலையில் தோன்றும் ஆறுகள்
276. இமயமலையில் தோன்றும் ஆறுகள் இந்தியாவில் எந்தப் பகுதியில் பாய்கின்றன?
விடை: இந்தியாவின் வட பகுதியில்
277. இமயமலையில் உருவாகும் ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: இமயமலை ஆறுகள்
278. இந்தியாவின் வற்றாத ஜீவ நதிகள் என்று அழைக்கப்படுவது
எது?
விடை : இமயமலையில் தோன்றும் ஆறுகள்
அ. சிந்து நதி தொகுப்பு
279. சிந்து நதியின் மொத்த நீளம்?
விடை: 2850 கி.மீ
280. இந்திய பகுதியில் சிந்து நதியின் நீளம்?
விடை: 709 கி.மீ
281. உலகில் உள்ள நீளமான நதிகளில் ஒன்றாகத் திகழ்வது எது?
விடை: சிந்து நதி
282. சிந்து நதி எங்கு உற்பத்தியாகிறது?
விடை: திபெத் பகுதியில் உள்ள கைலாஷ் மலைத் தொடரின் வடக்கு சரிவில் மானசரோவர் ஏரிக்கு அருகில் 5150 மீ. உயரத்தில் உற்பத்தியாகிறது.
283. சிந்து நதி பாயும் மொத்த வடிகாலமைப்பின் பரப்பு?
விடை : 11,65,500 ச.கி.மீ
284. சிந்து நதி இந்தியாவில் பாயும் வடிகாலமைப்பின் பரப்பு?
விடை : 3,21,289 ச.கி.மீ
285. லடாக் மற்றும் ஜாஸ்கர் மலைத்தொடர் வழியாக பாய்ந்து குறுகிய மலை இடுக்குகளை உருவாக்கும் நதி எது?
விடை : சிந்து நதி
286. சிந்து நதி இறுதியில் எந்த கடலில் கலக்கிறது?
விடை : அரபிக் கடலில் கலக்கிறது.
287. சிந்து நதி அரபிக் கடலில் கலப்பதற்கு முன்பு கடந்து வரும் பகுதிகள் எவை?
விடை : ஜம்மு-காஷ்மீர் வழியாக பாய்ந்து பின் தென்புறமாக பாகிஸ்தானின் சில்லார் பகுதியில் நுழைந்து, பின் அரபிக்கடலில் கலக்கிறது.
288. சிந்து நதியின் துணை ஆறுகள் எவை?
விடை : ஜீலம், சீனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்
289. சிந்து நதியின் மிகப்பெரிய துணை ஆறு எது?
விடை : சீனாப்
ஆ. கங்கை நதி தொகுப்பு
290. கங்கை நதி தொகுப்பின் மொத்த பரப்பளவு?
விடை : 8,61,404 ச.கி.மீ
291. இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டிருக்கும் நதி எது?
விடை : கங்கை நதி
292. கங்கை சமவெளி எவ்வாறு அமைந்துள்ளது?
விடை : பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகவும்
293. கங்கை ஆறு எந்த மாநிலத்தில் உருவாகிறது?
விடை : உத்தரகாண்ட் மாநிலத்தில்
294. கங்கை ஆறு எந்த மாவட்டத்தில் உருவாகிறது?
விடை: உத்தர் காசி மாவட்டத்தில் உருவாகிறது.
295. கங்கை ஆறு எவ்வளவு உயரத்தில் இருந்து உற்பத்தியாகிறது?
விடை: 7010 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகிறது.
296. கங்கை ஆறு எந்த பனியாற்றில் இருந்து உற்பத்தியாகிறது?
விடை: கங்கோத்ரி பனியாற்றில்
297. கங்கை ஆறு உற்பத்தியாகும் இடத்தில் எந்த பெயருடன் உற்பத்தியாகிறது?
விடை: பாகிரதி
298. கங்கை நதியின் நீளம்?
விடை: 2524 கி.மீ
299. கங்கை ஆற்றுடன் இணையும் துணை ஆறுகள் எவை?
விடை: வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டக், கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள்
300. கங்கை ஆற்றின் மிகப்பெரிய துணையாறு எது?
விடை: யமுனை
301. வங்கதேசத்தில், கங்கை ஆறு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
விடை : பத்மா
302. உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் எவை?
விடை : கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள்
இ. பிரம்மபுத்திரா ஆற்றுத்தொகுப்பு
303. பிரம்மபுத்திரா ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
விடை: திபெத்தில் உற்பத்தியாகிறது.
304. பிரம்மபுத்திரா ஆறு எந்த மலைத்தொடரில் உற்பத்தியாகிறது?
விடை: மானசரோவர் எரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் உற்பத்தியாகிறது.
305. பிரம்மபுத்திரா ஆறு எந்த பனியாற்றில் இருந்து உற்பத்தியாகிறது?
விடை: செம்மாயுங்டங் என்ற பனியாற்றில் இருந்து உற்பத்தியாகிறது.
306. பிரம்மபுத்திர ஆறு எவ்வளவு உயரத்தில் இருந்து உற்பத்தியாகிறது?
விடை: 5150 மீ உயரத்திலிருந்து உற்பத்தியாகிறது.
307. பிரம்மபுத்திரா ஆற்றுத்தொகுப்பின் மொத்த வடிகாலமைப்பு?
விடை : 5,80,000 ச.கி.மீ
308. இந்தியாவில் பிரம்மபுத்திரா ஆறு பாயும் பரப்பு?
விடை : 1,94,413 ச.கி.மீ
309. பிரம்மபுத்திரா ஆறு திபெத் பகுதியில் எப்படி அழைக்கப்படுகிறது?
விடை : சாங்போ
310. சாங்போ என்பதன் பொருள் என்ன?
விடை: தூய்மை
311. பிரம்மபுத்திரா ஆற்றின் மொத்த நீளம்?
விடை : 2900 கி.மீ.
312. இந்தியாவில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் நீளம்?
விடை : 900 கி.மீ.
313. பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவிற்குள் எவ்வாறு நுழைகிறது?
விடை : அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக
314. பிரம்மபுத்திரா ஆற்றின் முக்கியத் துணை ஆறுகள் எவை?
விடை: திஸ்டா, மனாஸ், பராக் மற்றும் சுபன்ஸ்ரீ
315. பிரம்மபுத்திரா ஆறு வங்கதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: ஜமுனா
316. பிரம்மபுத்திரா ஆறு கங்கை ஆற்றுடன் இணைந்த போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : மேக்னா
இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள்
317. இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் எவை?
விடை:
1) நீளமானவை மற்றும் அகலமானவை
2) வற்றாத நதிகள்
3) நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
4) ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.
தீபகற்ப இந்திய ஆறுகள்
318. தென்னிந்தியாவில் பாயும் ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: தீபகற்ப ஆறுகள்
319. தீபகற்ப இந்திய ஆறுகளில் பெரும்பாலான ஆறுகள் எந்த மலையில் உற்பத்தியாகின்றன?
விடை: மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
320. தீபகற்ப இந்திய ஆறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை : பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள்
321. நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடும் ஆறுகள்?
விடை: தீபகற்ப இந்திய ஆறுகள்
322. தீபகற்ப இந்திய ஆறுகள் எவ்வாறு பாய்கிறது?
விடை : செங்குத்து சரிவுடன் கூடிய பள்ளத்தாக்கு வழியே பாய்கிறது.
323. தீபகற்ப ஆறுகளை அவை பாயும் திசையின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
விடை: இரண்டு. அவை
1. கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
2. மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
324. தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை?
விடை: மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி
325. தீபகற்ப இந்திய ஆறுகளில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை?
விடை: நர்மதை மற்றும் தபதி
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
அ. மகாநதி
326. மகாநதி எங்கு உற்பத்தியாகிறது?
விடை: சத்தீஸ்கார் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகிறது.
327. மகாநதி எந்த மாநிலத்தின் வழியாக பாய்கிறது?
விடை: ஒடிஸா
328. மகாநதியின் நீளம்?
விடை: 851 கி.மீ
329. மகாநதியின் முக்கிய துணையாறுகள் எவை?
விடை: சீநாத், டெலன், சந்தூர், சித்ரட்லா, கெங்குட்டி மற்றும் நன்
330. தீபகற்ப இந்திய ஆறுகளில் பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்கும் நதி எது?
விடை: மகாநதி
331. மகாநதி எந்த கடலில் கலக்கிறது?
விடை: வங்காள விரிகுடாவில்
ஆ. கோதாவரி
332. தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு எது?
விடை : கோதாவரி
333. கோதாவரி ஆற்றின் நீளம்?
விடை: 1465 கி.மீ
334. கோதாவரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
விடை: மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில்
335. தீபகற்ப இந்திய ஆறுகளில் விருத்தகங்கா என்று அழைக்கப்படும் ஆறு எது?
விடை: கோதாவரி
336. கோதாவரி நதியின் மொத்த பரப்பளவு?
விடை: 3.13 இலட்சம் ச.கி.மீ
337. கோதாவரி நதி எந்த கடலில் கலக்கிறது?
விடை: வங்காள விரிகுடா
338. கோதாவரி நதி எந்த மாநிலங்கள் வழியாக கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது?
விடை: தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசம்
339. கோதாவரியின் துணை ஆறுகள் எவை?
விடை: பூர்ணா, பென்கங்கா, பிரனிதா, இந்திராவதி, தால் மற்றும் சாலாமி
340. ராஜமுந்திரிக்கு அருகில் கவுதமி மற்றும் வசிஸ்தா என இரண்டு கிளைகளாகப் பிரிந்து பெரிய டெல்டாவை உருவாக்கும் நதி எது?
விடை: கோதாவரி நதி
341. கோதாவரி டெல்டா பகுதியில் அமைந்துள்ள நன்னீர் ஏரி எது?
விடை: கொல்லேறு ஏரி
இ. கிருஷ்ணா
342. கிருஷ்ணா நதி எங்கு உருவாகிறது?
விடை: மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகா பலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகிறது.
343. கிருஷ்ணா நதியின் நீளம்?
விடை : 1400 கி.மீ நீளம்
344. கிருஷ்ணா நதி கொண்டிருக்கும் பரப்பளவு வடிநிலம்?
விடை: 2.58 இலட்சம் ச.கி.மீ
345. தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது பெரிய நதி எது?
விடை: கிருஷ்ணா
346. கிருஷ்ணா ஆற்றின் முக்கிய துணையாறுகள் எவை?
விடை: கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு
347. கிருஷ்ணா நதி எந்த கடலில் கலக்கிறது?
விடை : வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
348. கிருஷ்ணா நதி ஆந்திர பிரதேசத்தின் வழியாக பாய்ந்து எந்த இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது?
விடை: ஹம்சலாதேவி
ஈ. காவிரி
349. காவிரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
விடை: கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில்
350. காவிரி ஆற்றின் நீளம்?
விடை: 800 கி.மீ
351. தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு எது?
விடை: காவிரி
352. கர்நாடகாவில் இரண்டாக பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய புனித ஆற்றுத் தீவுகளை உருவாக்கும் ஆறு எது?
விடை : காவிரி
353. காவிரி தமிழ்நாட்டில் நுழைந்து தொடர்ச்சியான மற்றும் குறுகலான மலையிடுக்குகள் வழியாக எந்த நீர்வீழ்ச்சியாக பாய்கிறது?
விடை: ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி
354. காவிரி எந்த கடலில் கலக்கிறது?
விடை: வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
355. காவிரி எந்த இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது?
விடை: திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம், மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து
இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
அ. நர்மதை
356. நர்மதை ஆறு எங்கு உற்பத்தியாகிறது?
விடை : மத்தியப் பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் 1057 மீ உயரத்தில்
357. நர்மதை ஆற்றின் நீளம்?
விடை: 1312 கிமீ
358. நர்மதை ஆற்றின் வடிநிலத்தின் பரப்பளவு?
விடை: 98796 ச.கி.மீ
359. நர்மதை ஆறு எந்த கடலில் கலக்கிறது?
விடை : அரபிக் கடலில் கலக்கிறது.
360. நர்மதை ஆறு எந்த வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது?
விடை: 27 கி.மீ நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
361. மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமான ஆறு எது?
விடை: நர்மதை
362. நர்மதை ஆற்றின் முதன்மையான துணையாறுகள் எவை?
விடை: பர்னா, ஹலுன், ஹெரன், பஞ்சர், தூதி, சக்கார், டவா, மற்றும் கோலர்
ஆ. தபதி
363. தபதி நதியின் நீளம்?
விடை: 724 கிமீ
364. தபதி நதியின் வடிநிலத்தின் பரப்பளவு?
விடை: 65145 ச.கி.மீ
365. தபதி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தியாகிறது?
விடை: மத்திய பிரதேசத்தில் உற்பத்தியாகிறது.
366. தபதி நதி எந்த மாவட்டத்தில் உற்பத்தியாகிறது?
விடை: பெட்டூல் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.
367. தபதி நதி எந்த இடத்திலிருந்து உற்பத்தியாகிறது?
விடை: கடல் மட்டத்திலிருந்து 752 மீ உயரத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
368. தபதி நதி எந்த கடலில் கலக்கிறது?
விடை : அரபிக் கடலில் கலக்கிறது.
369. தபதி நதி எந்த வளைகுடா வழியாக அரபிக் கடலில் கலக்கிறது?
விடை : காம்பே வளைகுடா வழியாக
370. தீபகற்ப இந்திய ஆறுகளில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை?
விடை : நர்மதை, தபதி மற்றும் மாஹி
371. தபதி ஆற்றின் துணை ஆறுகள் எவை?
விடை: வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி
372. தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகள் எவை?
1. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
2. குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
3. வற்றும் ஆறுகள்.
4. நீர் (புனல்) மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.
5. நீர்வழி போக்குவரத்திற்குப் பயன்படாதவை.
உங்களுக்கு தெரியுமா பகுதி வினாக்கள்
373. ஆந்திரப்பிரதேசத்தின் தலைநகரம் எது?
விடை : அமராவதி நகர்
374. ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டத்தின்படி எந்த ஆண்டு வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்?
விடை : 2024 வரை
375. இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் எது?
விடை : ஆரவல்லி மலைத்தொடர்
376. உலகிலுள்ள ஏனைய மலைத்தொடர்களைக் காட்டிலும் அதிகமான சிகரங்களைக் கொண்டுள்ள மலைத்தொடர் எது?
விடை: இமயமலை
377. உலகிலுள்ள 14 உயரமான சிகரங்களில் எத்தனை சிகரங்களை இமயமலை தன்னகத்தே கொண்டுள்ளது?
விடை: 9
378. காரகோரம் கணவாய் எங்கு அமைந்துள்ளது?
விடை : ஜம்மு-காஷ்மீர்
379. ஜொஷிலா கணவாய் மற்றும் சிப்கிலா கணவாய் எங்கு அமைந்துள்ளது?
விடை : இமாச்சல் பிரதேசம்
380. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள கணவாய் எது?
விடை: பொமிடிலா கணவாய்
381. சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள கணவாய்கள் எவை?
விடை: நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய்
382. இமயமலையின் முக்கிய கணவாய்கள் எவை?
விடை: காரகோரம் கணவாய், ஜொஷிலா கணவாய், சிப்கிலா கணவாய், பொமிடிலா கணவாய், நாதுலா மற்றும் ஜெலிப்லா கணவாய்
383. பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் எது?
விடை: கைபர் கணவாய்
384. போலன் கணவாய் எங்கு அமைந்துள்ளது?
விடை : பாகிஸ்தான்
385. இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள முக்கியக் கணவாய்கள் எவை?
விடை: கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய்
386. எந்த ஆற்றில் ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
விடை : ஷராவதி ஆறு (கர்நாடகம்)
387. ஜெர்சப்பா நீர்வீழ்ச்சியின் வேறு பெயர்?
விடை: ஜோக் நீர்வீழ்ச்சி
பாடநூல் பயிற்சி வினாக்கள் (BOOK BACK QUESTIONS)
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
A) 2500 கி.மீ B) 2933 கி.மீ C) 3214 கி.மீ
D) 2814 கி.மீ E) விடை தெரியவில்லை
விடை: C) 3214 கி.மீ
2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
A) நர்மதா B) கோதாவரி C) கோசி
D) தாமோதர் E) விடை தெரியவில்லை
விடை: இ) கோசி