
GK TEST QUESTIONS – 2
101.கூற்று [A] : தேவையே கண்டுபிடிப்பின் தாய்.
காரணம் [R] : யார் கடந்த காலத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லையோ, அதன் தவறுகளை மீண்டும் செய்ய நேரிடும்.
(A) [A] சரி ஆனால் (R] தவறு
(B) [A], [R] இரண்டும் சரி. (R] என்பது [A] வின் சரியான விளக்கம்.
(C) [A] தவறு ஆனால் [R] சரி
(D) [A], [R] இரண்டும் சரி, (R) என்பது [A] வின் சரியான விளக்கமல்ல
(E) விடை தெரியவில்லை
102. சில வேட்டையாடும் உயிரினங்கள், அவற்றின் நிறத்தின் காரணமாகச் சில சாத்தியமான இரையை உண்பதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்ளும். அதே போல மற்ற இனங்கள் உண்பதைத் தவிர்ப்பதற்காக அதே நிறத்தைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகளைச் சில உயிரினங்கள் உருவாக்கியுள்ளன. இருப்பினும் அவற்றிடமே சில விரும்பத்தகாத அல்லது நச்சு இரசாயனங்கள் உள்ளன. இந்த நிகழ்வு எவ்வாறுஅழைக்கப்படுகிறது?
(A) நச்சுத்தன்மை
(B) உயிரி கறைபடிதல்
(C) மிமிக்ரி
(D) தழுவல்
(E) விடை தெரியவில்லை
103.யூகேரியாட் செல்லிலுள்ள மிகப்பெரிய உறுப்பு
(A) மைட்டோகாண்ட்ரியா
(B) கோல்ஜி உறுப்புகள்
(C) உட்கரு
(D) ரைபோசோம்
(E) விடை தெரியவில்லை
104.68வது ஐ.நா. பொதுக்குழு……ஆம் ஆண்டினை சர்வதேச மண் ஆண்டாக அறிவித்துள்ளது.
(A) 2005
(B) 2010
(C) 2015
(D) 2020
(E) விடை தெரியவில்லை
105.மிகவும் நிலைத்த தன்மை கொண்ட செயற்கை பொருள் உருவாக்குவதற்கான திட்ட வரையறை எதனைப் பின்பற்றியது?
(A) தாமரை இலை
(B) மார்ஃபோ பட்டாம்பூச்சி
(C) கிளிமீன்
(D) மயிலிறகு
(E) விடை தெரியவில்லை
106.பின்வருவனவற்றில் எது ஹைட்ரைடு சேர்மங்களின் காரத்தன்மையின் சரியான வரிசை
(A) NH3< PH3 < AsH3< Sb H3
(B) P H3< ASH3< N H3 < SbH3
(C) Sb H3 <ASH3 < P H3 < N H3
(D) Sb H3 < PH3 <As H3 < N H3
(E) விடை தெரியவில்லை
107.கூற்று (A) :கண்ணாடியை வெட்டுவதற்கு வைரம் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் [R] : வைரமானது அதிக ஒளிவிலகல் குறியீட்டைக் கொண்டுள்ளது.
(A) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது [A] இன் சரியான விளக்கம்
(B) (A) மற்றும் [R] இரண்டும் உண்மை ஆனால். (R) என்பது [A] இன், சரியான விளக்கம் அல்ல
(C) [A] உண்மை ஆனால் (R) உண்மையல்ல
(D) [A] உண்மையல்ல ஆனால் (R) உண்மை
(E) விடை தெரியவில்லை
108.மின்னோட்டத்தின் அலகு…..ஆகும்.
(A) வோல்ட்
(B) மோல்
(C) கேண்ட்ல
(D) ஆம்பியர்
(E) விடை தெரியவில்லை
109.பொருத்துக.
(a) கார்போட்ரோச்சி கேசிரெசியே – எபோகாடுகளின் பாதுகாவலன்
(b) விக்டோரியா பொலிவியானா – பெர்டா கோசரிஸ்
(c) இம்பேசியன்ஸ் பேனன். – சர்க்கரை வள்ளி
(d) ஐஃபோமியா அக்யுவாடோரியன்சிஸ் – கியு ஹெர்பேரியம்
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 1 3 4 2
(C) 3 4 1 2
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை
110.தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கிணற்று நீர்ப்பாசனம் அதிக அளவில் உள்ளது.
(A) தஞ்சாவூர்
(B) விழுப்புரம்
(C) கோயம்புத்தூர்
(D) திருவண்ணாமலை
(E) விடை தெரியவில்லை
111.சஞ்சீவனி திட்டம் தொடர்பான சரியான கூற்றுக்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) இது இமாச்சலப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டது.
(ii) இத்திட்டம் தொலை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலில் வசதியான மற்றும் உயர்தர கால்நடை பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது
(iii) மேலும், இத்திட்டம் மூலம் கால்நடை வளர்ப்போருக்கு மூலிகை சார்ந்த மருந்துகளும் வழங்கப்படுகிறது
(A) (ii) மட்டும்
(B) (ii) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) மட்டும்
(D) (i) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
112.பதிவுரிமை பெற்ற ஒரு அரசியல் கட்சி பல கோஷ்டிகளாக உடைபடும் போது ஏதோ ஒரு கோஷ்டியை மட்டும் பதிவுரிமை பெற்ற கட்சியாக அங்கீகரிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
(A) இந்திய உச்ச நீதிமன்றம்
(B) மக்களவையின் அவைத் தலைவர்
(C) சட்டப் பேரவையின் அவைத் தலைவர்
(D) இந்தியத் தேர்தல் ஆணையம்
(E) விடை தெரியவில்லை
113.பணவீக்கத்தைப் பொறுத்தவரை பின்வருவனவற்றில் எது சரியானது?
(A) பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு
(B) பணத்திற்கான தேவை அதிகரிப்பு
(C) பொது விலைக் குறியீட்டில் உயர்வு
(D) நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வு
(E) விடை தெரியவில்லை
114.“துடிப்பான கிராமங்கள் திட்டம்” பற்றிய பின்வரும் அறிக்கைகளை பரிசீலித்து சரியான விருப்பத்தை தேர்வு செய்யவும்
(A) வெள்ளத்தால் பாதிக்கப்படும் கிராமங்களுக்கு நிதி வழங்குதல்
(B) பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணம் வழங்குதல்
(C) நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்
(D) நாட்டின் வடக்கு நில எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்
(E) விடை தெரியவில்லை
115.……..பல்வேறு நடவடிக்கைகள் மூலம் போதைப் பொருள் துஷ்பிரயோகம்
பற்றி விழிப்புணர்வை மக்களிடம் சென்றடைய விரும்புகிறது.
(A) போதைப்பொருள் விழிப்புணர்வு இயக்கம்
(B) நாஷா முகத் பாரத் அபியான்
(C) போதைப் பொருள் விழிப்புணர்வு
(D) மது விழிப்புணர்வு
(E) விடை தெரியவில்லை
116.கோப்பனின் காலநிலை வகைபாட்டில் As வகை குறிக்கும் காலநிலை எது?
(A) அயன் சவானா வகை
(B) அயன பருவக்காற்று வகை
(C) அயன ஈரப்பத வகை
(D) வெப்ப பாலை வகை
(E) விடை தெரியவில்லை
117.இந்தியாவில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் மைல் கற்களின் கால வரிசையை வரிசைப்படுத்தவும்
1.முதல் கம்பியில்லா தந்தி நிலையம் சாகர் தீவுக்கும் சாண்ட்ஹெட்ஸ் இடையே நிறுவப்பட்டது.
2.சிம்லாவில் முதல் தானியங்கி பரிமாற்றம் நிறுவப்பட்டது
3.UK மற்றும் இந்தியாவுக்கு இடையே ரேடியோ தொலைப்பேசி அமைப்பு துவங்கப்பட்டது.
4.உள்நாட்டு தகவல் தொடர்புக்கான முதல் செயற்கை கோள் பூமி நிலையம் செகந்திராபாத் ஆந்திர பிரதேசத்தில் நிறுவப்பட்டது
(A) 1, 4, 2, 3
(B) 1, 2, 3, 4
(C) 2, 1, 4, 3
(D) 3, 2, 1, 4
(E) விடை தெரியவில்லை
118.இந்தியாவில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம்
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) ஆந்திர பிரதேசம்
(D) தமிழ்நாடு
(E) விடை தெரியவில்லை
119.கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
(A) கங்கை
(B) பிரம்மபுத்திரா
(C) சிந்து
(D) நர்மதா
(E) விடை தெரியவில்லை
120.பொருந்துக :
(a) பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் – உலக வெப்பமயமாதல்
(b) நைட்ரஜன் ஆக்ஸைடு – உயிரியப் பெருக்கம்
(c) கார்பன்டை ஆக்ஸைடு – ப்ளுபேபி சின்ரோம் (நீலக் குழந்தை நோய்க்குறி)
(d) குடிநீரில் நைட்ரேட் – சுவாச நோய்கள்
(a) (b) (c) (d)
(A) 1 4 3 2
(B) 4 3 2 1
(C) 3 4 1 2
(D) 2 4 1 3
(E) விடை தெரியவில்லை
121.மெஹ்ரோலி இரும்புத்தூண் தற்போது…………ல் உள்ளது.
(A) டெல்லி
(B) அலகாபாத்
(C) மெஹ்ரோலி
(D) சாரநாத்
(E) விடை தெரியவில்லை
122.அக்பர் தனது (வளர்ப்பு) சகோதரர் மிர்சா அஜீஸ் கோக்காவை…….இன் ஆளுநராக நியமித்தா
(A) வங்காளம்
(B) பீகார்
(C) காபூல்
(D) ஜான்பூர்
(E) விடை தெரியவில்லை
123.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தவறானவற்றைத் தேர்ந்தெடுக்க.
(A) முஹதாசிஸ் – பொது ஒழுக்க தணிக்கை
(B) வாக்கியா நவிஸ் – செய்தி நிருபர்கள்
(C) குஃபியா நவிஸ்- ரகசிய கடிதம் எழுதுபவர்கள்
(D) ஹராகாரஸ்- நீதித்துறை ஆய்வாளர்
(E) விடை தெரியவில்லை
124.1573 இல் தோடர்மால் இல் இருந்த அனைத்து நிலங்களையும் தனது பிரபலமான நில அளவியல் முறையில் அளவீடு செய்தார்.
(A) குஜராத்
(B) வங்காளம்
(C) பீகார்
(D) ஒரிசா
(E) விடை தெரியவில்லை
125.பாதிரியார் தாமஸ் ஸ்டீவன்ஸ் ஆக்ஸ்போர்டில் இருந்து வந்து…….நகரில் நாற்பது ஆண்டுகள் தங்கினார்.
(A) பாண்டிச்சேரி
(B) கோவா
(C) காம்பே
(D) வங்காளம்
(E) விடை தெரியவில்லை
126.பெத்துவான் பள்ளி பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகரால்………. ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.
(A) 1843
(B) 1845
(C) 1847
(D) 1849
(E) விடை தெரியவில்லை
127.பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) ராஷ்டிர கூடர்கள் -அதிக எண்ணிக்கையிலான கோட்டைகள்
(b) சோழர்கள் – கிராம உள்ளூர் தன்னாட்சி
(c) பல்லவர்கள் – கட்டடக் கலைக்கு ஆதரவு
(d) சாளூக்கியர்கள் -வேசரா கட்டடக்கலை
(a) (b). (c). (d)
(A) 1 2 3 4
(B) 4 1 2 3
(C) 2 3 4 1
(D) 3 4 1 2
(E) விடை தெரியவில்லை
128.ஹரப்பாவில் இறந்தவர்களை புதைக்கப்பட்டிருக்கும் இடத்தின் ஆதாரத்தை……..என பெயரிடப்பட்டுள்ளது.
(A) கல்லறை R – 37
(B) கல்லறை S – 77
(C) கல்லறை T – 67
(D) கல்லறை U – 87
(E) விடை தெரியவில்லை
129.லோக்பாலை குறித்ததான சொற்றொடர்களில் கீழ்வருவனவற்றுள் எவை சரியானவை?
(i) லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒரு தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப்படுகின்றனர்
(ii) 50 சதவீதத்திற்கும் குறையாமல் SC/ST, OBC சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஆகியோர் பரிசீலனைக் குழுவில் இடம் பெறல் வேண்டும்.
(iii) இதன் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது இவற்றுள் எது முந்தையதோ அது ஆகும்
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (ii) மட்டும்
(C) (i) மற்றும் (iii) மட்டும்
(D) (ii) மற்றும் (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
130.கீழ்வரும் வாக்கியங்களை கவனிக்கவும்.
1.உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றலாம்.
2.தேவை ஏற்பட்டால், உச்ச நீதிமன்றம் இந்தியாவின் எந்தப்பகுதியிலிருந்தும் செயல்படலாம்.
3.உறுப்பு 144 உச்சநீதிமன்றத்தின் ஆலோசனை அதிகாரங்களை கையாள்கிறது.
4.ஆட்கொணர்வு நீதிப்பேராணை அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு.
மேற்கூறிய வாக்கியங்களுள் எவை சரியானவை?
(A) 1, 2 மற்றும் 3 சரியானவை
(B) 2,3 மற்றும் 4 சரியானவை
(C) 1 மற்றும் 2 சரியானவை
(D) 2 மற்றும் 3 சரியானவை
(E) விடை தெரியவில்லை
131.பின்வரும் எந்தச் சட்டத்தின் மூலம் மாநில அரசுகள் மத்திய அரசின் ஒப்புதலோடு வெளிநாடுகளிடமிருந்து கடன் பெற முடியும்
(A) இந்திய அரசு சட்டம், 1909
(B) இந்திய அரசு சட்டம், 1919
(C) இந்திய அரசு சட்டம், 1935
(D) இந்திய அரசு சட்டம், 1947
(E) விடை தெரியவில்லை
132.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
1.அரசமைப்பு விதியின்படி ஒரு மாநில சட்ட மன்றம் ஒரு ஆண்டில் குறைந்தது இருமுறை கூட வேண்டும்.
2.சட்ட மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு வரியும் விலக்கிக் கொள்ள முடியாது
3.சட்ட மன்றத்தின் பதவிக்காலமான ஐந்து ஆண்டுகள் ஒரு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நீட்டிக்கப்படலாம்.
4.மாநிலத்தின் நிதியை சட்டமன்றம் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
மேற்கூறியவற்றுள் எவை சரியானவை?
(A) 2,3 மற்றும் 4 சரியானவை
(B) 1,2 மற்றும் 4 சரியானவை
(C) 1,2,3 மற்றும் 4 சரியானவை
(D) 1,3 மற்றும் 4 சரியானவை
(E) விடை தெரியவில்லை
133.மக்களவையின் சபாநாயகர் தான் வகிக்கும் பதவியின் காரணமாக கீழ்வரும் எந்த நாடாளுமன்ற குழுக்களின் தலைவராக செயல்படுகிறார்?
(i) அலுவல் ஆலோசனை குழுவின்
(ii) பொது நோக்கு குழுவின்
(iii) விதி குழுவின்
(iv) மதிப்பீட்டு குழுவின்
(A) (i) மற்றும் (ii) மட்டும்
(B) (i), (ii) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மற்றும் (iv) மட்டும்
(D) (iii) மற்றும் (iv) மட்டும்
(E) விடை தெரியவில்லை
134.கீழ்கண்டவற்றை பொருத்துக.
(a) விதி 350A- ஆரம்ப பள்ளி நிலைகளில் தாய்மொழிக் கல்வி
(b) விதி 351 – ஹிந்தி பாடத்தினை பரவி மேன்மையடையச் செய்தல்
(c) விதி 335 – Scமற்றும் ST பிரிவினருக்கு பணி நியமனம்
(d) விதி 51 -சர்வதேச அமைதி மேம்பாடு
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 1 4 3 2
(D) 2 3 4 1
(E) விடை தெரியவில்லை
135.1978-ம் ஆண்டு 44 வது சட்டத் திருத்தம் மூலம் சொத்துரிமை எடுக்கப்பட்டு எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் சட்ட உரிமையாக இணைக்கப்பட்டுள்ளது
(A) 300 A
(B) 206 A
(C) 200 A
(D) 400 A
(E) விடை தெரியவில்லை
136.பின்வரும் கூற்றை கூறியது யார்? “சுயராஜ்ஜியம் என்பது இந்திய மக்கள் சுதந்திரமாக தங்கள் பிரதிநிதிகள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதாகும்”.
(A) மகாத்மா காந்தி
(B) B.R. அம்பேத்கர்
(C) நெல்சன் மண்டேலா
(D) ஜவஹர்லால் நேரு
(E) விடை தெரியவில்லை
137.எந்த வகை வேலையின்மை வேளாண் துறையில் அதிகமாக காணப்படுகிறது?
(A) விருப்ப வேலையின்மை
(B) விருப்பமற்ற வேலையின்மை
(C) அமைப்பு வேலையின்மை
(D) மறைமுக வேலையின்மை
(E) விடை தெரியவில்லை
138.தொழில் துறையின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு எந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது?
(A) தொழில்கள் மேம்பாடு மற்றும் ஸ்தாபன சட்டம்
(B) நலிவடைந்த தொழில்கள் நிறுவனங்கள் சட்டம்
(C) சிறுதொழில்கள் சேவைகள் சட்டம்
(D) தொழில்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம்
(E) விடை தெரியவில்லை
139.இந்தியாவில் நிதி குழுவின் பணிகள்
(a) நிகர வரி வருவாயை மத்திய மற்றும், மாநில அரசுகளுக்கு இடையே பகிர்தல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே அவற்றிற்கான பங்கினை ஒதுக்கீடு செய்தல்
(b) மாநிலங்களுக்கான மத்திய அரசின் மானியங்கள் மற்றும் நிதி உதவிக்கான நெறிகள் பற்றி வழிகாட்டுதல்
(A) (a) சரி (b) தவறு
(B) (a) தவறு (b) சரி
(C) (a) மற்றும் (b) சரி
(D) (a) மற்றும் (b) தவறு
(E) விடை தெரியவில்லை
140.ரெப்போ விகிதம் என்பதன் பொருள் என்ன?
(A) ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டியை குறிக்கும்
(B) வங்கி விகிதக் கொள்கை
(C) தள்ளுபடி விகிதக் கொள்கை
(D) கடன் பங்கீடு
(E) விடை தெரியவில்லை
141.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
நீல பொருளாதாரம் எதனுடன் தொடர்புடையது அல்ல
1.மீன் உற்பத்தி அதிகரித்தல்
2.மீன் தொடர்புடைய செயல்களில் இளைஞர்களை செயல்பட வைத்தல்
3.தேன் உற்பத்தி அதிகரித்தல்
4.மீன் ஏற்றுமதி அதிகரித்தல்
கீழ்கண்டவற்றில் எது/எவை தவறானது?
(A) 3 மட்டும்
(B) 1 மற்றும் 2
(C) 1 மற்றும் 4
(D) 3 மற்றும் 2
(E) விடை தெரியவில்லை
142.கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியாவில் மகா ரத்னா தொழிற்சாலை இல்லை?
(A) கெயில்
(B) பெல் (BHEL)
(C) கோல் இந்தியா லிமிடெட்
(D) இந்திய விமானப் போக்குவரத்து கழகம்
(E) விடை தெரியவில்லை
143.நிதி ஆயோக்கின் தலைவர் யார் ?
(A) நிதி அமைச்சர்
(B) குடியரசுத் தலைவர்
(C) பிரதம மந்திரி
(D) ரிசர்வ் வங்கி கவர்னர்
(E) விடை தெரியவில்லை
144.இந்துக்களும், முஸ்லிம்களும் “இந்தியா என்ற அழகிய மணப்பெண்னின் இரு கண்கள்” என சித்தரித்தவர் யார்?
(A) சர் சையத் அஹமத் கான்
(B) சர் மன்சர்ஜி பௌநாக்ரி
(C) டாக்டர் லால் பஹதூர்
(D) மதன்மோஹன் மாலவியா
(E) விடை தெரியவில்லை
145.பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) சம்பரான் சத்தியாகிரகம்
(ii) மகத் சத்தியாகிரகம்
(iii) தண்டி உப்புச் சத்தியாகிரகம்
(iv) கேதா சத்தியாகிரகம்
(A) (ii), (iii), (iv), (i)
(B) (iii), (ii), (i), (iv)
(C) (i), (iv), (ii), (iii)
(D) (i), (ii), (iv), (iii)
(E) விடை தெரியவில்லை
146.“ஐம்பதாயிரம் நன்கு பயிற்சிப்பெற்ற படைவீரர்களால் என்ன செய்ய முடியவில்லையோ, அதனை மகாத்மா செய்து முடித்தார். அவர் அமைதியை ஏற்படுத்தினார். அவர் ஓர் தனிமனித படை” இதனை கூறியது யார்?
(A) லுயி ஃபிஷ்ஷர்
(B) ஹாலிஃபாக்ஸ் பிரபு
(C) டாக்டர். இராஜேந்திர பிரசாத்
(D) மவுண்ட்பேட்டன் பிரபு
(E) விடை தெரியவில்லை
147.மது ஒழிப்பு மீதான விவாதமொன்றில் பங்குபெற்ற ____ என்பவர் “இந்தியா உட்பட எந்த நாட்டிலும் மது ஒழிப்பு கொள்கை நடைமுறைபடுத்துவது என்பது ஏற்புடைய கொள்கை அல்ல” என்றார்.
(A) டி.டி. கிருஷ்ணமாச்சாரி
(B) எம்.சி. இராஜா
(C) வில்லியம் ரைட்
(D) வைத்யநாதர்
(E) விடை தெரியவில்லை
148.கி.பி. 1920 இல் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்வில் நான்காவது இடம் பிடித்தும் ஆனால் பயிற்சி காலம் முடிப்பதற்கு முன்பே அந்த பொறுப்பை ராஜினாமா செய்த வரை கண்டுபிடிக்க.
(A) ஆனந்த் மோகன் போஸ்
(B) கோபால் கணேஷ் அகர்கர்
(C) சுபாஷ் சந்திர போஸ்
(D) சித்ரன்ஜன் தாஸ்
149.______ தான் அநேகமாக சமதர்ம தத்துவம் மற்றும் போல்ஷ்விஸம் பற்றி எழுதிய முதல் இந்திய எழுத்தாளர் ஆவார்.
(A) மனபேந்திர நாத் ராய்
(B) லாலா லஜ்பதி ராய்
(C) நளினி குப்தா
(D) S.A.டாங்கே
(E) விடை தெரியவில்லை
150.1806-ல் வேலூர் கலகம் நடந்த போது சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்தவர் யார்?
(A) வில்லியம் மேடோவ்ஸ்
(B) சர் சார்லஸ் ஒக்காலே
(C) வில்லியம் பென்டிங்
(D) சர் ஜார்ஜ் பார்லோவ்
(E) விடை தெரியவில்லை.
151.கீழே கொடுக்கப்பட்ட தென்னிந்திய புரட்சிக்கான பொருளாதார காரணங்களில் எது தவறு என்பதை எழுதுக.
(i) திண்டுக்கல்லில் 25% அதிகமாக வரி உயர்த்தப்பட்டது
(ii) 50% வரி மக்களின் நலனுக்கு உபயோகப்படுத்தப்பட்டது
(iii) பிரிட்டிஷார் மன்னர்களிடம் கடன் பெற்றனர்
(iv) 1798ல் அங்கே கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.
(A) (i) மற்றும் (ii) சரி (iii) மற்றும் (iv) தவறு
(B) (iii) மற்றும் (iv) சரி (i) மற்றும் (ii) தவறு
(C) (i) மற்றும் (iv) சரி (ii) மற்றும் (iii) தவறு
(D) (ii) மற்றும் (iii) சரி (i) மற்றும் (iv) தவறு
(E) விடை தெரியவில்லை
152.தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கும் வாய்மொழி வழக்காறுகளை என்னவென்று கூறலாம்?
(i) பாண் மரபு
(ii) பாணர் மரபு
(A) (i) மட்டும்
(B) (i) மட்டும்
(C) (i) மற்றும் (ii)
(D) மேற்காணும் எவையும் அல்ல
(E) விடை தெரியவில்லை.
153.கோடிட்ட இடங்களை நிரப்புக.
வெட்சி நிறைகவர்தல் மீட்டல் கரந்தையாம் வட்கார்மேற் செல்வது ____யாம் உட்கா எதிரூன்றல் _____
(A) வஞ்சி, காஞ்சி
(B) தும்பை, வாகை
(C) நொச்சி, உழிஞை
(D) முல்லை, பாலை
(E) விடை தெரியவில்லை
154.“உடுக்கை இழந்தவன் கைபோல” ஒருவனின் துன்பத்தை எது போக்குவதாகத் திருவள்ளுவர் கூறுகின்றார்?
(A) அன்பு
(B) நட்பு
(C) பண்பு
(D) கருணை
(E) விடை தெரியவில்லை
155.கோடிட்ட இடங்களை நிரப்புக.
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது ____ பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும் இல்லது _____
(A) நகரம், நாடு
(B) நாடு. நாடு
(C) நகரம், நகரம்
(D) நாடு, நகரம்
(E) விடை தெரியவில்லை
156.உலக வாழ்க்கைக்கு அடிப்படை உயிர் யார் ? அல்லது எது ?
(A) அரசன்
(B) நெல்
(C) நீர்
(D) இம்மூன்றும்
(E) விடை தெரியவில்லை
157.கீழ்வருவனவற்றுள் எவை சோழர்கள் காலத்தில் கல்வி மையமாகத் திகழ்ந்தது?
1.எண்ணாயிரம்
2.திருபுவனம்
3.திருமுக்கூடல்
4.திருவொற்றியூர்
(A) 1, 2 மட்டும்
(B) 2.3 மட்டும்
(C) 4 மட்டும்
(D) மேற்கூறிய அனைத்தும்
(E) விடை தெரியவில்லை
158.வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல்
(A) திரிகடுகம்
(B) ஏலாதி
(C) இனியவை நாற்பது
(D) நாலடியார்
(E) விடை தெரியவில்லை.
159.திருவள்ளுவர் எப்பொழுது யாக்கைக்கு மருந்து என்பது தேவைப்படுவதில்லை எனக் கூறுகிறார்?
(A) அளவாக உண்டால்
(B) சமைத்து உண்டால்
(C) உடலுக்கு ஏற்புடையது உண்டால்
(D) அருந்தியது அற்றது உண்டால்
(E) விடை தெரியவில்லை.
160.வெண்மணி நிகழ்வை மையப்படுத்தி வெளிவந்த இந்திரா பார்த்தசாரதியின் புதினம் எது ?
(A) கால வெள்ளம்
(B) புளிய மரத்தின் கதை
(C) நித்திய கன்னி
(D) குருதிப்புனல்
(E) விடை தெரியவில்லை
161.காங்கிரஸ் அமைப்பிற்கு சாதகமாக செயல்பட்ட மதராஸ் இளைஞர் குழுவை ஒருங்கமைத்தது _____
(A) M. முஹம்மத் ஆயிஷா கனி
(B) K.அங்கசி அம்மாள்
(C) கிருஷ்ணாபாய் நிம்ப்கர்
(D) T.V. ஜானகி அம்மாள்
(E) விடை தெரியவில்லை
162.ஈ.வே.ரா பெரியார் திராவிட கழகத்தை துவக்கிய ஆண்டு
(A) 1944
(B) 1945
(C) 1947
(D) 1951
(E) விடை தெரியவில்லை
163.தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை தொடராமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தது யார்?
(A) சி.என். அண்ணாதுரை
(B) செல்வி. ஜெ. ஜெயலலிதா
(C) மு. கருணாநிதி
(D) எம்.ஜி. இராமச்சந்திரன்
(E) விடை தெரியவில்லை
164.ஆதிச்சநல்லூர் தொல்பொருள் ஆய்வுகள் குறித்த கூற்றுகளில் சரியான கூற்று எது ?
(1) ஆதிச்சநல்லூர் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்த ஊர் ஆகும்.
(2) ராபர்ட் புரூஸ் ஃபுட் என்பவர் ஆதிச்சநல்லூரில் தொல் பொருள் ஆய்வுகள் நடத்தினார்
(3) ஆதிச்சநல்லூர் தொல்பொருள் தாதுக்களில் இரும்பாலாகிய வேலும் வெண்கலத்தாலாகிய சேவற் கொடியும் காணக் கிடைக்கின்றது
(4) ஆதிச்சநல்லூரில் பொன்னால் ஆன வாய் மூடிகள் காணக் கிடைக்கின்றன
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (1), (2), (3) மட்டும்
(D) (1), (2), (3), (4)
(E) விடை தெரியவில்லை
165.சதுர் தண்டி பிரகாசிகா என்ற நூலை எழுதியவர்____
(A) வேங்கட முகி
(B) சாமா சாஸ்திரிகள்
(C) முத்துசாமி தீட்சிதர்
(D) வேதநாயகம் பிள்ளை.
(E) விடை தெரியவில்லை
166.தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
(A) அறிஞர். அண்ணா
(B) எம்.ஜி. ராமச்சந்திரன்
(C) மு.கருணாநிதி
(D) ஜெ.ஜெயலலிதா
(E) விடை தெரியவில்லை
167.சுகாதார சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முதல் குழு அறிக்கை ஆகும்.
(A) முகர்ஜி குழு
(B) சர் சி.வி. ராமன் குழு
(C) சர். ஜான் மார்ஷல் குழு
(D) சர் ஜோசப் ஃபோர் குழு
(E) விடை தெரியவில்லை
168.NSDP 2019-2020 ன் படி, தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் ____ தரவரிசையில் உள்ளது.
(A) மூன்றாவது
(B) நான்காவது
(C) ஐந்தாவது
(D) ஆறாவது
(E) விடை தெரியவில்லை
169.மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் இங்கு அமைந்துள்ளது?
(A) திண்டுக்கல்
(B) வேலூர்
(C) ஈரோடு
(D) சென்னை
(E) விடை தெரியவில்லை
170.கிரிஷி ஸ்ராமிக் சமாஜிக் சுரக்ஷா யோஜ்னா வின் முக்கிய நோக்கம் ____
(A) 18 முதல் 60 வயதிற்குட்பட்ட வேளாண் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிப்பது
(B) போதுமான அளவு உணவு தானிய இருப்பை உறுதி செய்வது
(C) வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவரின் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 100 கல்வி படி வழங்குவது
(D) ஏழைகளுக்கு மிகக் குறைந்தவட்டியில் கடன் முன்பணம் வழங்குவது
(E) விடை தெரியவில்லை
171.தவறான அறிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
(I) ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் சேவைகள் அடங்குவன 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தல்
(ii) பின் தங்கிய சமூக மக்களின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வியை மேம்படுத்தல்
(iii) பாலின சார்புப் பார்வையுடன் குறிப்பிட்ட மாற்றுப் பாலினத்தைப் புறந்தள்ளுவதைத் தடுத்தல்
(A) (i) மற்றும் (ii) மட்டும்
(B) (ii) மற்றும் (iii) மட்டும்
(C) (i) மட்டும்
(D) (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை
172.கூற்று [A]: தமிழ்நாட்டின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அகாடமி. (ஐ.சி.டி.எ.சி.டி) தொடங்கப்பட்டது.
காரணம் [R] : தொழில்களுக்கு மட்டுமே பயிற்சித் திட்டத்தை நடத்த உதவுகிறது.
(A) (A) உண்மை ஆனால் (R] தவறு
(B) [R] [A] வுக்கு சரியான விளக்கம்
(C) [A] மற்றும் (R] இரண்டும் உண்மை
(D) [A] மற்றும் (R] இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
173.Covid 19 எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் பேக்கேஜ் இன்சூரன்ஸ் திட்டத்தில் பின்வருவனவற்றில் எது உண்மையானது?
(i) மொத்தம் 22.12 லட்சம் பொது சுகாதாரப் பாதுகாப்பாளருக்கு 90 நாட்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை வழங்குதல்
(ii) கோவிட் 19 நோயாளிகளின் நேரடித் தொடர்பு மற்றும் பராமரிப்பில் இருக்க வேண்டிய சமூக சுகாதாரப் பணியாளர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
(A) (i) மட்டும்
(B) (ii) மட்டும்
(C) (i) மற்றும் (ii) இரண்டும்
(D) (i) மற்றும் (ii) இல்லை
(E) விடை தெரியவில்லை
174.உலக உயிர்க்கோள இருப்பு வலைதளத்தில் தமிழ்நாட்டின் ____ மற்றும் ______ தாவர விலங்கினங்களை பாதுகாக்க சேர்க்கப்பட்டுள்ளது.
(A) பெரிய நிக்கோபார் மற்றும் நீலகிரி
(B) மன்னார் வளைகுடா மற்றும் நீலகிரி
(C) மன்னார் வளைகுடா மற்றும் அகஸ்தியமலை
(D) பெரிய நிக்கோபார் மற்றும் அகஸ்தியமலை
(E) விடை தெரியவில்லை
175.தமிழ்நாடு கிராமப்புற வாழ்விட முன்னேற்ற திட்டத்தின் தேவையான குறிக்கோள் என்ன?
(A) மின்சாரம் வழங்குதல்
(B) குடிநீர் வழங்குதல்
(C) வாழ்விடமில்லாதவருக்கு குறைந்தபட்ச அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வழங்குதல்
(D) ஒழுங்கற்ற முறையிலான வினியோக முறையை கடந்து வருதல்
(E) விடை தெரியவில்லை