Course Content
GK TEST – 3
75Q
0/1
GK TEST – 03
About Lesson

101. _____ மாவட்டம், அதிக மனித வள மேம்பாட்டு குறியீட்டில் இடம் பெறவில்லை
(A) கன்னியாகுமரி.
(B) திருநெல்வேலி
(C) தூத்துக்குடி
(D) மதுரை
(E) விடை தெரியவில்லை

 

102. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
1. GSDP – அரசு சிறப்பு மாவட்டத்திட்டம்
2. GSVA – மொத்த மாநில மதிப்புக் கூட்டப்படுதல்
3. RKVY – ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா
4. PMKSY – பிரதம மந்திரி கிரிஷி சுரக்ஷா யோஜனா

(A) 1 மற்றும் 3 சரியானவை
(B) 1 மற்றும் 2 சரியானவை
(C) 2 மற்றும் 3 சரியானவை
(D) 3 மற்றும் 4 சரியானவை
(E) விடை தெரியவில்லை

 

103. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப்படை _____ மாதிரி
(A) ஹெராட்-டோமர் மாதிரி
(B) மஹலநோபிஸ் மாதிரி
(C) சும்பீட்டர் மாதிரி
(D) நர்க்ஸ் மாதிரி
(E) விடை தெரியவில்லை

 

104. 2011 மக்கள் தொகையின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மிகக்குறைந்த கல்வியறிவு விகிதம் _____ மாநிலத்தில் இருந்தது.
(A) ஜார்கண்ட்
(B) பீகார்
(C) அருணாசலப் பிரதேசம்
(D) தமிழ்நாடு
(E) விடை தெரியவில்லை

 

105. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையத்தின் தலைவர்
(A) உள்துறை அமைச்சர்
(B) தொழில்துறை அமைச்சர்
(C) பிரதம மந்திரி
(D) நிதி அமைச்சர்
(E) விடை தெரியவில்லை

 

106. சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கவும், அரசாங்கத்தின் வருவாயின் ஆதாரங்கள்
(i) வரி வருவாய்
(ii) வரியில்லா வருவாய்
(iii) பொதுத்துறை நிறுவனங்களின் உபரி

(A) (i) மட்டும்
(B) (ii) மட்டும்
(C) (i) மற்றும் (ii)
(D) (i), (ii) மற்றும் (iii)
(E) விடை தெரியவில்லை

 

107. நிதி ஆயோக்கின் (NITI Aayog) தலைவர்
(A) இந்தியக் குடியரசுத் தலைவர்
(B) இந்திய பிரதமர்
(C) இந்திய நிதி அமைச்சர்
(D) இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்
(E) விடை தெரியவில்லை

 

108. ‘தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம்’ என்னும் நூலை மகாத்மா காந்தி எப்பொழுது வெளியிட்டார்?
(A) 1928
(B) 1927
(C) 1926
(D) 1930
(E) விடை தெரியவில்லை

 

109. ஒத்துழையாமை இயக்கத்தின் போது காந்திஜி எந்த பட்டத்தை திருப்பி அளித்தார்?
(A) நைட்குட்
(B) ராய் பகதூர்
(C) கெய்சர்-இ-ஹிந்த
(D) ஹிந்த் கெய்சர்
(E) விடை தெரியவில்லை

 

110. தமிழ்நாட்டில் விற்பனை வரி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
(A) இராஜாஜி
(B) சி.என்.அண்ணாதுரை
(C) காமராசர்
(D) பக்தவச்சலம்
(E) விடை தெரியவில்லை

 

 

 

111. அம்பேத்காரால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சி
(A) இந்தியக் குடியரசுக் கட்சி
(B) கம்யூனிஸ்ட் கட்சி
(C) கதார் கட்சி
(D) அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்
(E) விடை தெரியவில்லை

 

 

 

112. இந்திய தேசிய காங்கிரஸின் எந்த அமர்வில் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ முதன் முதலில் பாடப்பட்டது?
(A) மும்பை – 1896
(B) வாரணாசி – 1896
(C) லாகூர் – 1896
(D) கல்கத்தா – 1896
(E) விடை தெரியவில்லை

 

 

113. தன்னாட்சித் தத்துவமான ‘இந்தியா இந்தியர்களுக்கே’ என்னும் கூற்றை முதலில் வெளியிட்டவர் _______
(A) சுவாமி விவேகானந்தர்
(B) சுவாமி தயானந்த சரஸ்வதி
(C) மகாத்மா காந்தி
(D) தாதாபாய் நௌரோஜி
(E) விடை தெரியவில்லை

 

 

114. காமராசரின் அரசியல் குரு _____
(A) நேரு
(B) காந்திஜி
(C) சத்தியமூர்த்தி
(D) அண்ணாதுரை
(E) விடை தெரியவில்லை

 

 

115. கோடிட்ட இடத்தை நிரப்புக
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த _____
(A) தமிழ்நாடு
(B) தேசியத் திருநாடு
(C) நாவலம் நன்நாடு
(D) தாய்நாடு
(E) விடை தெரியவில்லை

 

 

116. “செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவியரசு”
– இந்தப் பாடலோடு தொடர்புடைய இருவர் யார்?
(A) பாரதியார், அப்துல் ரகுமான்
(B) கலைஞர் கருணாநிதி, வைரமுத்து
(C) கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
(D) பாரதியார், பாரதிதாசன்
(E) விடை தெரியவில்லை

 

 

117. இராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
(A) இராமன்
(B) இலக்குவன்
(C) விபீடணன்
(D) அனுமன்
(E) விடை தெரியவில்லை

 

 

118. ‘தமிழ் நாட்டின் ரூசோ’ என்று அழைக்கப்படுபவர்
(A) ராஜாஜி
(B) சத்தியமூர்த்தி
(C) சி.என். அண்ணாதுரை
(D) தந்தை பெரியார்
(E) விடை தெரியவில்லை

 

 

 

119. சி.என். அண்ணாதுரை அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்தவர் யார்?
(A) நெடுஞ்செழியன்
(B) மாதவன்
(C) சாதிக் பாட்ஷா
(D) கோவிந்தசாமி
(E) விடை தெரியவில்லை

 

 

120. 1929 பிப்ரவரி 17ல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
(A) டாக்டர். பி. சுப்பராயன்
(B) ஈ.வே. ராமசாமி
(C) பி.டி. ராஜன்
(D) பனகல் ராஜா
(E) விடை தெரியவில்லை

 

 

121. நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காலம்
(A) 10 ஆண்டுகள்
(B) 13 ஆண்டுகள்
(C) 15 ஆண்டுகள்
(D) 16 ஆண்டுகள்
(E) விடை தெரியவில்லை

 

 

122. கோடிட்ட இடத்தை நிரப்புக :
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்_____ உடைத்துஇவ் வுலகு.
(A) பெருமை
(B) பொருநர்
(C) கடுமை
(D) சிறுமை
(E) விடை தெரியவில்லை

 

 

123. “செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”
இக்குறள் கூறும் இடைவிடாத கடமை எது?
(A) பொருளீட்டுதல்
(B) தொண்டு செய்தல்
(C) விருந்தோம்பல்
(D) குடும்பத்தைக் காத்தல்
(E) விடை தெரியவில்லை

 

 

124. அறிவுடையவரின் நட்பு பிறைமதி போல நிறைந்து வருவது எனக்கூறும் வள்ளுவர். யாருடைய நட்பு முழுமதி தேய்வதைப் போன்றது எனக் கூறுகிறார்?
(A) அறிவுடையார்
(B) அறிவில்லாதவர்
(C) அன்புடையவர்
(D) அன்பிலாதவர்
(E) விடை தெரியவில்லை

 

 

125. “எல்லாப் பொருளும் இதன்பாலுல; இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்”
என்று திருக்குறளைச் சிறப்பிப்பவர் யார்?
(A) ஔவையார்
(B) எறிச்சலூர் மலாடனார்
(C) மதுரைத் தமிழ்நாகனார்
(D) மாங்குடி மருதனார்
(E) விடை தெரியவில்லை

 

 

126. கிண்டலாக அறிவுரை சொல்கின்ற ஒரு வகை வாய்மொழி இலக்கியத்தின் பெயர்
(A) விடுகதை
(B) சொலவடை
(C) பிசி
(D) பழமொழி
(E) விடை தெரியவில்லை

 

 

127. ‘திருப்பனந்தாள் காசி மடத்தை நிறுவியவர் யார்?
(A) காளமேகப் புலவர்
(B) ஞான சம்பந்தர்
(C) அருணகிரிநாதர்
(D) குமரகுருபரர்
(E) விடை தெரியவில்லை

 

 

128. பத்துப்பாட்டில் செம்பாதி எவ்வகை நூல்கள்?
(A) அக நூல்கள்
(B) புற நூல்கள்
(C) ஆற்றுப்படை நூல்கள்
(D) அகப்புற நூல்கள்
(E) விடை தெரியவில்லை

 

 

129. ‘இந்திய மருந்து’ எனக் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் கூறிய பொருள்
(A) மிளகு
(B) மஞ்சள்
(C) வேம்பு
(D) பட்டை
(E) விடை தெரியவில்லை

 

 

130. 2020-21 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது
(A) வேளாண்மை
(B) தொழில்துறை
(C) சுரங்கம்
(D) பணிகள்
(E) விடை தெரியவில்லை

 

 

131. ASHA என்பது
(A) அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார செயல்பாட்டாளர்
(B) அங்கீகரிக்கப்பட்ட சுய உதவி நடவடிக்கைகள்
(C) ஆயுஷ் சுத்தம் மற்றும் சுகாதார நடவடிக்கைகள்
(D) சமூக சுகாதார நடவடிக்கைகளுக்கான அமைப்பு
(E) விடை தெரியவில்லை

 

 

132. கீழ்க்கண்டவற்றில் பெண்களின் சமூக நீதிக்காக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அதன் அரசியலமைப்புப் பிரிவுகளோடுப் பொருத்துக.
அரசியலமைப்பு உட்பிரிவு. உரிமைகள்
(a) உட்பிரிவு 14. – 1. வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு
(b) உட்பிரிவு 15. – 2. பேச்சுரிமை
(c) உட்பிரிவு 16. – 3. பாகுபாடின்மை
(d) உட்பிரிவு 19. – 4. சம உரிமை

(A) 3 2 1 4
(B) 4 3 1 2
(C) 2 3 4 1
(D) 4 3 2 1
(E) விடை தெரியவில்லை

 

 

 

133. மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஐந்து முட்டைகள்/ வாழைப்பழங்கள் என அறிமுகப்படுத்திய முதலமைச்சரைக் கண்டறிக.
(A) காமராஜ்
(B) ராஜாஜி
(C) அண்ணா
(D) கருணாநிதி
(E) விடை தெரியவில்லை

 

 

134. தமிழ்நாடு எதில் வளமானது?
(A) வன வளம்
(B) மனித வளம்
(C) கனிம வளம்
(D) தண்ணீர் வளம்
(E) விடை தெரியவில்லை

 

 

135. கூற்று (A) இந்தியாவிலேயே அதிக காற்றாலை ஆற்றல் திறன் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
காரணம் (R) : இம்மாநிலம் மிக உயர்ந்த தரமான கடலோரக் காற்றாலை ஆற்றலைக் கொண்டுள்ளது.
(A) [A] மற்றும் [R] இரண்டும் சரி மேலும் [R], [A]-ன் விளக்கம்
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி மேலும், [R], [A]-ஐ விளக்கவில்லை
(C) [A] சரி ஆனால் [R] தவறு
(D) [A] தவறு ஆனால் [R] சரி
(E) விடை தெரியவில்லை

 

 

136. கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
நிகழ்வுகள்                                                     வருடம்
(a) தேசிய ஊரக சுகாதாரத் திட்டம். – 1. 1992
(b) தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் – 2. 2019
(c) தேசிய மருத்துவக் குழுச் சட்டம். – 3. 1939
(d) தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம். – 4. 2005

(A) 1 3 4 2
(B) 1 2 3 4
(C) 2 1 3 4
(D) 4 1 2 3
(E) விடை தெரியவில்லை

 

 

137. சத்ய ஷோடக் சமாஜ் அமைப்பின் நிறுவனர் யார்?
(A) காந்தி
(B) அம்பேத்கர்
(C) ஜோதிராவ் பூலே
(D) ராஜா ராம் மோகன்
(E) விடை தெரியவில்லை

 

 

138. ஆதி திராவிட மகாஜன சபை என்று பின்நாட்களில் அழைக்கப்பட்ட பறையர் மஹாஜன சபையை தோற்றுவித்து வழிநடத்தியவர் யார்?
(A) அயோத்தி தாஸர்
(B) ரெட்டமலை சீனிவாசன்
(C) M. C. ராஜா
(D) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை.
(E) விடை தெரியவில்லை

 

 

139. மனித வள மேம்பாட்டுப் புள்ளியியல், அமர்த்யாசென் குறிப்பிட்ட “திறன்கள் அணுகுமுறை”யானது_______ ஐ புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
(A) கல்வி
(B) மனித நல வாழ்வு
(C) மகிழ்ச்சி
(D) தேசிய வருமானம்
(E) விடை தெரியவில்லை

 

 

 

165. அறிவியல் முறையைப் படிக்கும் சரியான வரிசையை தேர்வு செய்யவும்
1. அனுபவ சோதனை
2. கருதுகோள்
3. கவனிப்பு
4. முடிவுரை

(A) 3, 2, 1, 4
(B) 2, 3, 1, 4
(C) 1, 2, 3, 4
(D) 3, 1, 2, 4
(E) விடை தெரியவில்லை

 

 

 

166. ‘அறிவியல் தாக்கம்’ என்ற சொல்லினைப் பயன்படுத்தியவர்
(A) மகாத்மா காந்தி ‘சுயசரிதை’
(B) ‘ நேரு ‘கண்டறிந்த இந்தியா’
(C) கௌடில்யர் ‘அர்த்தசாஸ்திரம்’
(D) ‘ பிபின் சந்திரர் ‘நவீன இந்திய வரலாறு’
(E) விடை தெரியவில்லை

 

 

167. அறிவியலைக் கற்றுக் கொள்வதன் மூலம் தேர்ச்சிப் பெறக்கூடிய திறன்கள்
(A) தொடர்புத் திறன் மற்றும் படைப்பாற்றல்
(B) படைப்பாற்றல் மற்றும் ஆர்வம்
(C) எழுதும் திறன் மற்றும் திறந்த மனப்பான்மை
(D) திறந்த மனப்பான்மை மற்றும் தொடர்புத் திறன்
(E) விடை தெரியவில்லை

 

 

 

168. புரோகேரியோட்டுகள் ____ இராஜ்ஜியத்தில் உள்ளடக்கியுள்ளது.
(A) பூஞ்சைகள்
(B) மோனிரா
(C) அளிமேலியா
(D) பிளாண்டே
(E) விடை தெரியவில்லை

 

 

169. பின்வருவனவற்றில் எந்த ஒன்று கடல் சூழல் அமைப்பில் இல்லாதது?
(A) கழிமுகம்
(B) பவள பாறைகள்
(C) கடல்
(D) ஏரி
(E) விடை தெரியவில்லை

 

 

170. கீழ்க்காணும் நோய்களில் எது பாக்டீரியாவினால் ஏற்படுத்தப்படும் நோய் அல்ல?
(A) மேகவெட்டை நோய்
(B) டியூபர்குலோஸிஸ் (காசநோய்)
(C) வயிற்றுப் போக்கு
(D) பொன்னுக்கு வீங்கி
(E) விடை தெரியவில்லை

 

 

171. பகுத்தறிவுடன் சிந்தித்தல் என்பது
(A) புதிய உத்திகளை உருவாக்குதல்
(B) கடந்த அனுபவத்தைக் காரணங்களோடு தொடர்புபடுத்துதல்
(C) திறந்த மனப்பான்மை உருவாக்குதல்
(D) எதிர்காலத்தை அனுமானம் செய்தல்
(E) விடை தெரியவில்லை

 

 

173. பின்வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
1. சுனில் அரோரா
2. ராஜீவ் குமார்
3. நவீன் சாவ்லா
4. சுஷில் சந்திரா

(A) 3, 1, 4, 2
(B) 1, 2, 3, 4
(C) 4, 3, 2, 1
(D) 1, 2, 4, 3
(E) விடை தெரியவில்லை

 

 

174. கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்குள் மக்களவையில் அதிகமான இடங்களைப் பெற்ற மாநிலம்
(A) மேற்கு வங்காளம்
(B) குஜராத்
(C) அஸ்ஸாம்
(D) இராஜஸ்தான்
(E) விடை தெரியவில்லை

 

 

175. 2009- ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு _______ க்காக வழங்கப்பட்டது.
(A) நொதிகளின் இயக்கப்பட்ட பரிணாமத்திற்கு
(B) ரைபோசோமின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு பற்றிய ஆய்வுகள்
(C) டிஎன்ஏ வை பழுதுபார்க்கும் இயந்திரவியல் ஆய்வுகள்
(D) ஜி-புரதம்-இணைந்த ஏற்பிகளின் ஆய்வுகள்
(E) விடை தெரியவில்லை

 

 

176. இந்தியாவின் எந்த மாநிலத்தில், பூமியைச் சுற்றி வரும் 10 செ.மீ அளவுள்ள பொருட்களைக் கண்காணிக்க முதல் வணிக விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு கண்காணிப்பகம் அமைக்கப்பட உள்ளது?
(A) அசாம்
(B) உத்தரகாண்ட்
(C) மும்பை
(D) சென்னை
(E) விடை தெரியவில்லை

 

 

177. மேகாலயா தனி மாநிலமாக உருவான ஆண்டு
(A) 1968
(B) 1970
(C) 1972
(D) 1973
(E) விடை தெரியவில்லை

 

 

178. ______ மூலம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை மற்றும் ஊதியம் உறுதி செய்யப்படுகிறது
(A) MGNREGA
(B) SBM
(C) CSC
(D) SSA
(E) விடை தெரியவில்லை

 

 

179. UNFCCC-க்கான கட்சிகளின் மாநாட்டின் (cop 27) 27வது அமர்வு எகிப்தில் உள்ள (Sharm el-sheikh) ஷாம் எல் சேக் இல் 6-18 நவம்பர் 2022 வரை எதன் காரணமாக நடத்தப்படுகிறது?
(A) காலநிலைமாற்றம்
(B) கார்பன் வரி
(C) கார்பன் கால் அச்சு
(D) அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க
(E) விடை தெரியவில்லை

 

 

180. தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது?
(A) ஹூப்ளி
(B) அலகாபாத்
(C) புவனேஸ்வர்
(D) ஜபல்பூர்
(E) விடை தெரியவில்லை

 

 

181. கீழே கொடுக்கப்பட்டுள்ளவனவற்றுள் தரமிக்க நிலக்கரி என அறியப்படுவது எது?
(A) புகைமிகு நிலக்கரி
(B) பழுப்பு நிலக்கரி
(C) அனல் மிகு நிலக்கரி
(D) பீட்
(E) விடை தெரியவில்லை

 

 

182. எந்த வகை இரும்பு தாது, இரும்பு ஆக்சைடு என அழைக்கப்படுகிறது?
(A) ஹேமடைட்
(B) மேக்னடைட்
(C) லிமனைட்
(D) சிடரைட்
(E) விடை தெரியவில்லை

 

 

183. இந்தியாவின் முதல் வானிலை இயக்குநர் ஜெனரல்
(A) வி.பி. சுப்ரமணியம்
(B) ஆர்.எல். சிங்
(C) கே.எல். ராவ்
(D) ஹச்.ஈ. பிளாண்டு ஃபோர்டு
(E) விடை தெரியவில்லை

 

 

184. ஜெட் காற்றோட்டம் இந்திய பருவ காற்றில் எந்த பருவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
(A) தென் – மேற்கு பருவகாற்று
(B) கோடை மற்றும் குளிர்காலம்
(C) பின்னடைவு பருவகாலம்
(D) மழைக் காலம்
(E) விடை தெரியவில்லை

 

 

185. குப்த ஆட்சியாளர்களை காலவரிசைப்படி அடுக்குக :
1. சமுத்திர குப்தர்
2. ஸ்ரீ குப்தர்
3. இரண்டாம் குமார குப்தர்
4. ராமா குப்தர்

(A) 2, 1, 4, 3
(B) 2, 3, 4, 1
(C) 4, 2, 3, 1
(D) 4, 3, 1, 2
(E) விடை தெரியவில்லை

 

 

186. அரசியலமைப்பின் மற்றொரு துணிச்சலான கூறு என்னவென்றால் இது மதச்சார்பற்ற அரசை நிறுவ முயல்கிறது. கீழ்க்காணும் கூற்றுகளில் மதச்சார்பற்ற அரசு பற்றிய கருத்துகளில் பொருத்தமற்றது எது?
(A) மதச்சமத்துவம் வழங்கப்பட்டுள்ளது
(B) சிறுபான்மையினரின் பண்பாட்டுப் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது
(C) தீண்டாமை ஒழிக்கப்பட்டது
(D) அதன் சில கருத்துக்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது
(E) விடை தெரியவில்லை

 

 

187. கீழ்க்குறிப்பிடப்படுபவற்றில் பழைய கற்காலத்தில் வராத இடம் எது?
(A) சேலம்
(B) மதுரை
(C) வல்லம்
(D) பல்லாவரம்
(E) விடை தெரியவில்லை

 

 

188. கீழே கொடுக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளை அதனுடன் தொடர்புடைய காலத்தோடு பொருத்துக.
1. இரும்பின் கண்டுபிடிப்பு – (a) இடைக் கற்காலம்
2. வெண்கலத்தின் கண்டுபிடிப்பு – (b) புதிய கற்காலம்
3. விவசாயத்தின் துவக்கம். – (c) சிந்து சமவெளிப்பண்பாடு
4. தீயின் கண்டுபிடிப்பு. – (d) ஆரியர்கள்

(A) 4 3 2 1
(B) 3 2 1 4
(C) 2 3 4 1
(D) 1 2 3 4
(E) விடை தெரியவில்லை

 

 

189. இந்திய அரசியலமைப்பின் முகவுரையிலுள்ள ‘சோசியலிஸ்ட்’ என்ற வார்த்தையுடன் தொடர்புடைய அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்
(A) 24 -வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்
(B) 28 – வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்
(C) 42 – வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்
(D) 44 -வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம்
(E) விடை தெரியவில்லை

 

 

190. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள போர்களை அவை நடந்த வருடத்தோடு பொருத்துக
(a) முதல் பானிபட் போர். – 1. 1527
(b) காக்ரா போர்.                – 2. 1529
(c) இரண்டாவது பானிபட் போர் – 3. 1526
(d) கான்வா போர்.             – 4. 1556

(A) 1 2 3 4
(B) 4 2 1 3
(C) 4 1 2 3
(D) 3 1 2 4
(E) விடை தெரியவில்லை

 

 

191. பின்வரும் ஆட்சியாளர்களில் யார் ‘கவிராஜா’ என்றழைக்கப்பட்டார்?
(A) முதலாம் குமாரகுப்தர்
(B) முதலாம் சந்திரகுப்தர்
(C) சந்திரகுப்த விக்ரமாதித்தியா
(D) சமுத்திரகுப்தர்
(E) விடை தெரியவில்லை

 

 

192. சிந்து நாகரிகத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் சரியான காலவரிசை எது?
(1) மொஹஞ்ச தாரோ
(2) சன்ஹுதாரோ
(3) ஹரப்பா
(4) லோத்தால்

(A) (3), (1), (2), (4)
(B) (1), (3), (2), (4)
(C) (2), (1), (3), (4)
(D) (3), (4), (2), (1)
(E) விடை தெரியவில்லை

 

 

193. ஆம்புட்ஸ்மேன் என்னும் அமைப்பை முதலில் உருவாக்கிய நாடு
(A) இந்தியா
(B) பின்லாந்து
(C) சுவீடன்
(D) நார்வே
(E) விடை தெரியவில்லை

 

 

194. கீழ்வருவனவற்றுள் எது/எவை உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தேவையற்றது / தேவையற்றவை?
(i) இந்தியக் குடிமகனாக இருத்தல்
(ii) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல்
(iii) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக இருத்தல்
(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (ii) ஆகியன மட்டும்
(C) (ii) மட்டும்
(D) (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

195. இந்திய அரசமைப்பு விதி 264 முதல் 300A வரை ____ பகுதி -ல் அடங்கும்.
(A) IX
(B) X
(C) XI
(D) XII
(E) விடை தெரியவில்லை

 

 

196. கீழே. உயர்நீதிமன்றங்கள் மற்றும் அவை நிறுவப்பட்ட ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தவறான இணையை தேர்ந்தெடு.
உயர்நீதிமன்றம்.                         நிறுவப்பட்ட ஆண்டு
(A) மதராஸ்.                                  – 1862
(B) கர்நாடகா.                              – 1884
(C) அலஹாபாத்                          – 1954
(D) கேரளா.                                    – 1958
(E) விடை தெரியவில்லை

 

 

197. மாநிலங்களவை பற்றிய பின்வரும் சொற்றொடர்களில் எவை சரியானவை?
(i) இது ஒரு நிரந்தரமான அவை.
(ii) ஒவ்வொரு இரண்டாம் ஆண்டின் முடிவிலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
(iii) இவை இந்த அவையின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது.

(A) (i) மட்டும்
(B) (i) மற்றும் (ii) ஆகியன மட்டும்
(C) (ii) மற்றும் (iii) ஆகியன மட்டும்
(D) (iii) மட்டும்
(E) விடை தெரியவில்லை

 

 

198. பின்வரும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகளில் சமூகச் சிந்தனையைப் பிரதிபலிப்பது எது?
(A) கிராமப் பஞ்சாயத்துகளை நிறுவுதல்
(B) குடிசைத் தொழிற்சாலைகளை ஊக்குவித்தல்
(C) வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளை போதுமான அளவு வழங்குதல்
(D) நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல்
(E) விடை தெரியவில்லை

 

 

199. ‘ஒருவரது உயிரோ, உடல்சார் உரிமையோ சட்டம் விதித்தமைத்துள்ள நெறிமுறைப்படி அன்றி, வேறு எவ்வகையிலும் பறிக்கப்படுதல் ஆகாது’. இங்ஙனம் கூறும் இந்திய அரசமைப்பு விதி எது?
(A) விதி 20
(B) விதி 21
(C) விதி 22
(D) விதி 23
(E) விடை தெரியவில்லை

 

 

200. கீழ்க்கண்ட எந்த நாட்டு அரசியலமைப்புடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை பெரும் பகுதி ஒத்துள்ளது?
(A) பிரெஞ்சு அரசமைப்பு
(B) அமெரிக்க அரசமைப்பு
(C) ஜெர்மனி அரசமைப்பு
(D) அயர்லாந்து அரசமைப்பு
(E) விடை தெரியவில்லை

Exercise Files
WOA – GK TEST 3 – 15032023 – TM.pdf
Size: 597.63 KB
Join the conversation