Course Content
MATHS TEST – 9
0/1
MATHS TEST – 9
About Lesson

MATHS TEST 9 – 28012023 

 

  1. பின்வரும் தொடர் வரிசையின் அடுத்த எண்

4, 6, 12, 14, 28, 30, ?  

(A) 32 

(B) 60 

(C) 62 

(D) 64 

(E) விடை தெரியவில்லை 

 

  1. SQUARE என்பது 1917211185 எனக் குறிக்கப்பட்டால் RECTANGLE என்பது எவ்வாறு குறிக்கப்படும்

(A) 1753201147125 

(B) 1853201114126 

(C) 1853201147125 

(D) 1953201147125 

(E) விடை தெரியவில்லை 

 

  1. கடிகாரத்திற்கு’ தொடர்புடைய வார்த்தை “மணி” எனில் வெப்பமானிக்கு தொடர்புடைய வார்த்தை என்ன?

(A) வெப்பம் 

(B) கதிர்வீச்சு 

(C) ஆற்றல் 

(D) வெப்பநிலை 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு நெட்டாண்டில் 53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க?

(A) 1/7 

(B) 2/7 

(C) 3/7 

(D) 4/7 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) 1 

(B) 2 

(C) 3 

(D) 4 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு செங்கல்லின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 24 செ.மீ × 12 செ.மீ x 8 செ.மீ ஆகும். 20 மீ நீளம் 48 செ.மீ. அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?

(A) 25,000 

(B) 20,000 

(C) 30,000 

(D) 22,500 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ₹4,000 க்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.

(A) ₹1,024 

(B) ₹1,032 

(C) ₹1,050 

(D) ₹1,082 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ₹35,000-க்கு வட்டி வீதம் 9% எனில், இரண்டு ஆண்டுகளுக்கான தனி வட்டியைக் காண்க.

(A) ₹6,300 

(B) ₹6,000 

(C) ₹7,400 

(D) ₹6,800 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3:2 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கின்றது?

(A) 16 

(B) 18 

(C) 24 

(D) 25 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 7:5 ஆனது x: 25-க்கு விகித சமம் எனில் ‘X’ ன் மதிப்பு

(A) 35 

(B) 25 

(C) 175 

(D) 125 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?

(A) 2 மணிகள் 20 நிமிடங்கள் 

(B) 2 மணிகள் 40 நிமிடங்கள் 

(C) 2 மணிகள் 24 நிமிடங்கள் 

(D) 2 மணிகள் 44 நிமிடங்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 10 நாற்காலிகளின் விலை 4 மேசைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேசைகள் சேர்த்து விலை ₹4.000, 12 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலை என்ன?

(A) ₹ 3,500 

(B) ₹ 3,750 

(C) ₹ 3,840 

(D) ₹ 3,900 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு

2, 5, 9, 19, 37, ……. 

(A) 74 

(B) 75 

(C) 76 

(D) 82 

(E) விடை தெரியவில்லை 

 

  1. “STILL” என்ற வார்த்தையின் கண்ணாடி பிம்பம்

  

 

 

 

 

 

(E) விடை தெரியவில்லை 

 

  1. BAY = 28  எனில் WON = ?

(A) 46 

(B) 52 

(C) 67 

(D) 89 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒருவர் தான் பெற்ற ₹65,000 கடனை திருப்பிச் செலுத்த முதல் மாதம் ₹400 செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதைவிட ₹300 கூடுதலாகச் செலுத்துகிறார். அவர் இந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

(A) 10 மாதங்கள் 

(B) 15 மாதங்கள் 

(C) 25 மாதங்கள் 

(D) 20 மாதங்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 2 மீ ஆழம் மற்றும் 45 மீ அகலமுள்ள ஒரு ஆற்றிலிருந்து நீரானது 3 km/hr வேகத்தில் கடலில் கலக்கிறது எனில் ஒரு நிமிடத்தில் கடலில் கலக்கும் நீரின் அளவு

(A) 3000 மீ^3 

(B) 3500 மீ^3 

(C) 4500 மீ^3 

(D) 27000 மீ^3 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் எந்த அசலானது ₹2,662 தொகையாகும்.

(A) ₹1,500 

(B) ₹1,800 

(C) ₹2,000 

(D) ₹2,500 

(E) விடை தெரியவில்லை 

 

  1. தனி வட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தனை ஆண்டுகளில் m மடங்கு ஆகும்?

(A) m 

(B) mn 

(C) (m-1) xn 

(D) mn-1 

(E) விடை தெரியவில்லை. 

 

  1. 15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2. கி.கி எடையில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை

(A) 750 

(B) 700 

(C) 680 

(D) 720 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 வினாடிகளுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு சாலை குறுக்கு வெட்டுகளில் போக்குவரத்து விளக்குகள் மாறுகின்றன. காலை 7 மணிக்கு அவை ஒரே நேரத்தில் மாறினால், எந்த நேரத்தில் அவை மீண்டும் ஒரே நேரத்தில் மாறும்

(A) 07:12 

(B) 12:07 

(C) 07:12:07 

(D) 07:07:12 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ‘A’ என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பார். ‘B’ ஆனவர், ‘A’-ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், ‘B’ ஆனவர் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

(A) 15 நாட்கள் 

(B) 25 நாட்கள் 

(C) 35 நாட்கள் 

(D) 45 நாட்கள் 

(E) விடை தெரியவில்லை 

 

  1. (P+ Q) வின் 20% மற்றும் (P-Q) வின் 50% சமம் எனில் P: Qகாண்க.

(A) 2:5 

(B) 3:7 

(C) 7:3 

(D) 5:2 

(E) விடை தெரியவில்லை 

 

  1. 450 மற்றும் 216 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x – 51, என்ற வடிவில் எழுதினால் X-ன் மதிப்பு யாது?

(A) 2 

(B) 3 

(C) 4 

(D) 5 

(E) விடை தெரியவில்லை 

 

  1. ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில் அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?

(A) 7 மணி 

(B) 1 மணி 

(C) 8 மணி 

(D) 10 மணி 

(E) விடை தெரியவில்லை 

Exercise Files
Maths Test 9 – 28-1-2023 – WOA.pdf
Size: 275.99 KB
Join the conversation