LAW PSO TEST ANSWER KEY
1.சி பட்டியலிலிருந்து பதவி உயர்வு பெற்ற ஒருவர் எந்த பட்டியலுக்கு கொண்டு செல்லபடுவார்?
(A) ‘B’ பட்டியல்
(B) முதுநிலை பட்டியல்
(C) ‘A’ பட்டியல்
(D) ‘C’ பட்டியல்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ‘B’ பட்டியல்
2.காவல் பணியாளர்களுக்கு எந்த பதவியிலிருந்து பண வெகுமதி வழங்கப்படுகிறது?
(A) முதல்நிலை காவலர்கள் – ஆய்வாளர்கள்
(B) தலைமை காவலர்கள் – ஆய்வாளர்கள்’
(C) காவலர்கள் – உதவி ஆய்வாளர்கள்
(D) உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காவலர்கள் – உதவி ஆய்வாளர்கள்
3.காவல் ஆய்வாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் MSE யாரால் அனுமதிக்கப்படுகிறது?
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) காவல்துறை இயக்குநர்
(C) காவல்துறை தலைவர்
(D) காவல்துறை துணைத் தலைவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) காவல்துறை இயக்குநர்
4. ஒழுக்கம் தவறிய செயலுக்காக சிறை தண்டனை பெற்ற காவல் அதிகாரிக்குரிய தண்டனை?
(A) கட்டாய ஓய்வு
(B) பதவி குறைப்பு
(C) ஊதிய குறைப்பு
(D) பணியிலிருந்து விடுவிப்பு/நீக்குதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பணியிலிருந்து விடுவிப்பு/நீக்குதல்
5. கரும் புள்ளி தண்டனை எந்த கீழ்நிலையிலுள்ள காவல் அதிகாரிகளுக்கு பொருந்தும்?
(A) உதவி ஆய்வாளர்கள்
(B) ஆய்வாளர்கள்
(C) தலைமை காவலர்கள்
(D) துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) தலைமை காவலர்கள்
6.கீழ்கண்ட காவல் நிலை ஆணையின் படி விடுப்பின்றி 21 நாட்கள் சென்றமைக்கு விட்டோடி ஆணை வழங்கப்படுகிறது?
(A) 95
(B) 145
(C) 151
(D) 89
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 95
7. காவல் ஆய்வாளர் பதவிக்கு மேலானவர்களுக்கு மந்தன கோப்பு யாரால் பேணப்படுகிறது?
(A) காவல்துறை தலைவர்
(B) காவல்துறை துணைத் தலைவர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) காவல்துறை இயக்குநர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) காவல்துறை இயக்குநர்
8.கீழ்கண்ட காவல் நிலை ஆணையின் படி காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உட்கோட்ட அதிகாரிகளால் வாராந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
(A) 157
(B) 99
(C) 143
(D) 151
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 143
9.காவல் நிலை ஆணை 151ன் படி காவல்துறையினரின் துன்புறுத்தலால் மரணமடைந்தது தொடர்பான பூர்வாங்க விசாரணை யாரால் நடத்தப்படுகிறது.
(A) மாவட்ட ஆட்சியர்
(B) கோட்ட வருவாய் அலுவலர்
(C) மாவட்ட வருவாய் அலுவலர்
(D) தாசில்தார்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கோட்ட வருவாய் அலுவலர்
10.உட்கோட்டத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் உட்கோட்ட அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
(A) வருடத்திற்கு ஒரு முறை
(B) இரு மாதத்திற்கு ஒரு முறை
(C) இரு வருடத்திற்கு ஒரு முறை
(D) அரை வருடத்திற்கு ஒரு முறை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) வருடத்திற்கு ஒரு முறை
11.கீழ்கண்டவர்களில் காவல் நிலைய அதிகாரிகளாக பணியாற்றுபவர்கள்
(A) தலைமை காவலர்கள்
(B) முதல் நிலை காவலர்கள்
(C) உதவி ஆய்வாளர்கள்
(D) துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) உதவி ஆய்வாளர்கள்
12.காவல் நிலை ஆணை 280ன் படி காவல் நிலைய அதிகாரிகளால் பயணப்படி பட்டியல் தயாரித்து மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்?
(A) மாதந்தோறும் 10ம் தேதி
(B) மாதந்தோறும் 5ம் தேதி
(C) மாதந்தோறும் 3ம் தேதி
(D) மாதந்தோறும் 7ம் தேதி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மாதந்தோறும் 5ம் தேதி
13.எந்த பதவிக்கு கீழ்நிலையிலுள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சிறு பணிப்புத்தகம் வழங்கப் பட வேண்டும்.
(A) தலைமை காவலர்கள்
(B) உதவி ஆய்வாளர்கள்
(C) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(D) ஆய்வாளர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) ஆய்வாளர்கள்
14.காவல் நிலை ஆணை 322ன் படி உரிமம் ரத்து அல்லது முடிவு பெற்ற ஆயுதங்களை அருகிலுள்ள எங்கு ஒப்படைக்க வேண்டும்.
(A) கருவூலம்
(B) தாலுகா அலுவலகம்
(C) காவல் நிலையம்
(D) வருவாய் கோட்ட அலுவலகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காவல் நிலையம்
15.முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகல் காவல் நிலையத்திலும் வேரொன்று யாருக்கு அனுப்பப்பட வேண்டும்
(A) மாஜிஸ்ட்ரேட்
(B) காவல்துறை இயக்குநர்
(C) தாசில்தார்
(D) காவல்துறை தலைவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மாஜிஸ்ட்ரேட்
16.மாநிலத்திலுள்ள காவல்படை யாருடைய பொதுவான கட்டுப்பாடிலுள்ளது.
(A) காவல்துறை ஆணையர்
(B) காவல்துறை தலைவர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) காவல்துறை இயக்குநர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) காவல்துறை இயக்குநர்
17.ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள காவல் படையும் யாருடைய பொறுப்பிலுள்ளது.
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) உதவி காவல் கண்காணிப்பாளர்
(C) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(D) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A)காவல் கண்காணிப்பாளர்
18.தமிழ்நாடு பணி நிலையில், உயர் பதவியிலுள்ள இந்திய காவல் பணி எத்தனை சதவீதம் தமிழ்நாடு காவல் பணியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
(A) 10%
(B) 33 1/3%
(C) 25%
(D) 30%
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 33 ⅓%
19.இந்திய காவல் பணியின் நேரடி நியமனதாரர்களை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது
(A) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(B) உதவி காவல் கண்காணிப்பாளர்
(C) இணை காவல் கண்காணிப்பாளர்
(D) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) உதவி காவல் கண்காணிப்பாளர்
20.இந்திய காவல் பணியாளர்கள் எவரும் தமது நியமனத்தினை யாருடைய முன் அனுமதியின்றி ராஜினாமா செய்ய இயலாது?
(A) மத்திய அரசு
(B) மாநில அரசு
(C) காவல் ஆணையர்
(D)உள்துறை அமைச்சர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மத்திய அரசு
21.உதவி காவல் கண்காணிப்பாளரின் தகுதி காண் பருவம்.
(A) 2 1/2 வருடங்கள்
(B) 3 ½ வருடங்கள்.
(C) 3 வருடங்கள்
(D) 2 வருடங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 2 வருடங்கள்
22. 4 வருடங்கள் பணியாற்றிய அனைத்து நேரடி உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் வருடந்தோறும் எங்கு நடைபெறும் புத்தாக்க பயிற்சியில் பங்கேறக்க வேண்டும்?
(A) காவலர் பயிற்சி பள்ளி
(B) காவல் பயிற்சி கல்லூரி, சென்னை
(C) சரக பயிற்சி மையம்
(D) பவானிசாகர் பயிற்சி நிலையம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) காவல் பயிற்சி கல்லூரி, சென்னை
23.சரக பதவி உயர்வு குழுவின் தலைவராக இருப்பவர்
(A) காவல்துறை தலைவர்
(B) காவல்துறை இயக்குநர்
(C) தொடர்புடைய சரக மூத்த காவல் கண்காணிப்பாளர்
(D) தொடர்புடைய சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) தொடர்புடைய சரக மூத்த காவல் கண்காணிப்பாளர்
24. காவல் அதிகாரியின் மீதான அலுவல் தொடர்பாள குற்றச்சாட்டிற்கான நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அலுவலரது முன் அனுமதி தேவை
(A) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(B) உதவி காவல் கண்காணிப்பாளர்
(C) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) காவல் கண்காணிப்பாளர்
25.மரியாதையோடு விடுவிக்கப்பட்ட அதிகாரியின் பணிநீக்க காலம் எவ்வாறு கருதப்படும்.
(A) பணி காலமாக
(B) தகுதியான விடுப்பு
(C) ஊதியமில்லா விடுப்பு
(D) ஈட்டிய விடுப்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) பணி காலமாக
26.காவல் நிலை ஆணை 127ன் படி காவல் ஆய்வாளர் மீதான வருடாந்திர மந்தண அறிக்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் யாருக்கு அனுப்ப வேண்டும்?
(A) காவல்துறை தலைவர்
(B) காவல்துறை துணைத் தலைவர்
(C) காவல்துறை இயக்குநர்
(D) காவல்துறை உதவித் தலைவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) காவல்துறை துணைத் தலைவர்
27.காவல் நிலை ஆணை 135ன் படி மாவட்டத்திலுள்ள காவல் படையின் தலைவர் யார்?
(A) காவல்துறை தலைவர்
(B) காவல் கண்காணிப்பாளர்
(C) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(D) காவல்துறை துணைத் தலைவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B)காவல் கண்காணிப்பாளர்
28.காவல் கண்காணிப்பாளர் தமது வராராந்திர அறிக்கையை யார் மூலமாக அனுப்ப வேண்டும்.
(A) மாவட்ட ஆட்சியர்
(B) நீதித்துறை நடுவர்
(C) கோட்ட வருவாய் அலுவலர்
(D) மாவட்ட வருவாய் அலுவலர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மாவட்ட ஆட்சியர்
29. இணை காவல் கண்காணிப்பாளராக பணி நியமிக்கப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாருக்கு நிகரானவர்?
(A) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(B) காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் துறை ஆணையர்
(D) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கூடுதல்
காவல் கண்காணிப்பாளர்
30.காவல் உதவி ஆய்வாளர்களின் சிறு பணிப்புத்தகத்தில் பதிவு மேற்கொள்பவர்
(A) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(B) உதவி காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் ஆய்வாளர்கள்
(D) காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காவல் ஆய்வாளர்கள்
31.படைக்கலன் சட்டப்படி மாவட்டத்தில் உரிமம் வழங்கும் அதிகாரி யார்?
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) மாவட்ட ஆட்சியர்
(C) தாசில்தார்
(D) கோட்ட வருவாய் அலுவலர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மாவட்ட ஆட்சியர்
32.படைக்கலன் சட்டம் 1959ன் படி உரிமம் வழங்கப்பட்டவைகளுக்கான பதிவேடு காவல் நிலை ஆணை 319ன் படி எங்கு பராமரிக்கப்பட வேண்டும்?
(A) மாவட்ட ஆயுதப் படை
(B) சார் நிலை கருவூலம்
(C) மாவட்ட கருவூலம்
(D) காவல் நிலையம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) காவல் நிலையம்
33.படைக்கலன் சட்டப்படி விற்பனை உரிமம் வழங்கப்பட்ட ஒவ்வொரு கடை மற்றும் வளாகத்தினை உட்கோட்ட காவல் அதிகாரியால் எந்த கால வரும்புக்கு ஆய்வு செய்யப்பட வேண்டும்?
(A) அரை வருடத்திற்கு ஒரு முறை
(B) வருடந்தோறும்
(C) மாதந்தோறும்
(D) மூன்று மாதத்திற்கு ஒரு முறை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அரை வருடத்திற்கு ஒரு முறை
34.காப்பு பணியிலுள்ள பணியாளர்களை எப்போது காப்பு பணியிலிருந்து மாற்றப்பட சுழற்சி?
(A) வெள்ளிக்கிழமை காலை
(B) திங்கள்கிழமை காலை
(C) ஞாயிற்றுகிழமை காலை
(D) வியாழக்கிழமை காலை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஞாயிற்றுகிழமை காலை
35.விழா, ஊர்வலம் போன்ற பெரும் கூட்டத்தின் போது பணியாற்றும் காவலர்களுக்கு என்ன வழங்கப்பட வேண்டும்?
(A) மஸ்கட்
(B) ரிவால்வர்
(C) ரைபிள்
(D) லத்தி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) லத்தி
36. ரயில் பயணிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவது எவ்வாறு கருதப்படுகிறது?
(A) வழிப்பறி
(B) நெடுஞ்சாலை கொள்ளை
(C) கொள்ளை
(D) திருட்டு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) நெடுஞ்சாலை கொள்ளை
37.குற்ற வழக்கு கோப்புகளில் மேற்கொள்ளப்படும் குறிப்புரை எவ்வாறு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
(A) குற்ற குறிப்பாணை
(B) பொது குறிப்பாணை
(C) பண குறிப்பாணை
(D) குறிப்பானை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) குற்ற குறிப்பாணை
38.காவல் கண்காணிப்பாளரால் எந்த ஒரு காவல் நிலையமும் எந்த கால அளவு மிகாமல் ஆய்வு மேற்கொள்ளப்படும்?
(A) 2 வருடங்கள்
(B) 5 வருடங்கள்
(C) 3 வருடங்கள்
(D) 4 வருடங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 4 வருடங்கள்
39.பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மாற்று திறவு கோல்களை திரும்ப பெற்று, சரிபார்த்து மீண்டும் பாதுகாப்பாக முத்திரையுடன் வைக்கப்பட வேண்டும் கால அளவு?
(A) 4 வருடங்கள்
(B) 2 வருடங்கள்
(C) 3 வருடங்கள்
(D) 5 வருடங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 2 வருடங்கள்
40.தகுதி காண்பருவத்தினர் உட்பட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு மேலான அதிகாரிகள் ஆண்டிற்கு எத்தனை ரிவால்வர் வெடி குண்டுகளை சுட வேண்டும்?
(A) 60
(B) 30
(C) 48
(D) 12
(E) விடை தெரியவில்லை
விடை: (C) 48
41. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட காவல் நிலையங்களுக்கு பொறுப்பு வகிக்கும் காவல் ஆய்வாளர்கள், காவல் நிலை ஆணை 180ன் படி காவல் நிலையங்களை எந்த கால வரம்புக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.
(A) 3 மாதங்களுக்கு
(B) அரை வருடத்திற்கு
(C) வருடத்திற்கு
(D) 9 மாதங்களுக்கு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அரை வருடத்திற்கு
42.காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களை எந்த கால வரம்புக்கு ஒரு முறை பார்வையிட வேண்டும்?
(A) வருடம்
(B) 3 மாதங்கள்
(C) மாதம்
(D) 5 மாதங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) வருடம்
43.துணைக் காவல் கண்காணிப்பாளர்களின் பணியிடமாறுதல் வழங்கும் அதிகாரி யார்?
(A) கூடுதல் காவல்துறை இயக்குநர்
(B) காவல்துறை தலைவர்
(C) காவல்துறை ஆணையர்
(D) காவல்துறை இயக்குநர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) காவல்துறை இயக்குநர்
44. நகரக் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களில் பணியிலிருப்பவர்களை தவிர மற்றவர்கள் வாரத்தின் எந்த நாளில் டிரில் மற்றும் பொது அறிவுரைகள் பெற ஆஜராக வேண்டும்?
(A) ஞாயிற்றுக் கிழமை
(B) சனிக்கிழமை
(C) வெள்ளிக்கிழமை
(D) செவ்வாய் கிழமை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) வெள்ளிக்கிழமை
45. காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் 25 ரவுண்ட் பால் மற்றும் 10 ரவுண்ட் பிளாங் குண்டுகளை எப்போது சுட வேண்டும்
(Each man in a station has to fire 25 rounds of ball and 10 rounds of blank)
(A) மாதந்தோறும்
(B) வருடந்தோறும்
(C) அரை வருடத்திற்கு ஒரு முறை
(D) மூன்று மாதத்திற்கு ஒரு முறை
(E) விடை தெரியவில்லை
விடை : (B) வருடந்தோறும்
46.காவல் நிலைய அதிகாரியால் பாதுகாக்கப்படும் மருத்துவ வரலாற்று சீட்டுகளில், மருத்துவமனையில் பெற்ற சிகிச்சை விபரம் யாரால் பதிவு செய்யபடும்?
(A) மருத்துவ அலுவலர்
(B) காவல் கண்காணிப்பாளர்
(C) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் ஆய்வாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மருத்துவ அலுவலர்
47. உரிமம் ரத்து செய்யபட்ட அல்லது முடிவு பெற்ற படைகலங்களை அருகிலுள்ள எங்கு ஒப்படைக்க வேண்டும்?
(A) தாலுகா அலுவலகம்
(B) மாவட்ட கருவூலம்
(C) காவல் நிலையம்
(D) ஆயுத படை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காவல் நிலையம்
48.காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் வருடந்தோறும் எத்தனை முறை ரிவால்வர் வெடி குண்டுகளை சுட வேண்டும்.
(A) 12
(B) 60
(C) 30
(D) 20
(E) விடை தெரியவில்லை
விடை : (B) 60
49.காவல் நிலைய அதிகாரி தன் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களை பார்வையிட வேண்டிய கால வரம்பு?
(A) காலாண்டு தோறும்
(B) மாதம் தோறும்
(C) வருடம் தோறும்
(D) அரை ஆண்டு தோறும்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) காலாண்டு தோறும்
50.காவல் நிலை ஆணை 380ன் படி தனியார் நிகழ்ச்சி மற்றும் தனியாருக்கு வழங்கப்படும் காப்புப்பணிக்கான கட்டணம் பெற்று அரசுக்கு செலுத்துவது யார்?
(A) காவல் ஆய்வாளர்
(B) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) காவல்துறை துணைத் தலைவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காவல் கண்காணிப்பாளர்
51.தமிழ்நாடு காவல் சார்நிலை பணி மற்றும் தமிழ்நாடு காவல் பணியில் பணியாற்றும் IPS அல்லாத காவல் கண்காணிப்பாளர் உட்பட கட்டாயமாக எந்த கால அளவிர்க்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்?
(A) வருடந்தோறும்
(B) இரண்டு வருடங்கள்
(C) அரை வருடம்
(D) மூன்று வருடங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை : (B) இரண்டு வருடங்கள்
52.காவல் நிலை ஆனை 388ன் படி துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலான அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அலமாரியில் பாதுகாவலில் வைக்க கூடியவை?
(A) இரகசிய தாள்கள்
(B) பணம்
(C) அலுவலக கோப்புகள்
(D) வழக்கு நாட்குறிப்பு
(E) விடை தெரியவில்லை
விடை : (A) இரகசிய தாள்கள்
53.காவல் நிலை ஆணை 395ன் படி குறிப்பாணை படிவ மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய அரசு காவல் துறைக்கு எந்த அலுவல் பணிக்கு வழங்கியுள்ளது?
(A) வருவாய் துறையுடன் நடைபெறும் அலுவல் பணி
(B) தலைமை செயலகத்துடன் நடைபெறும் அலுவல் பணி
(C) வனத்துறையுடன் நடைபெறும் அலுவல் பணி
(D) காவல்துறைக்குள் நடைபெறும் அலுவல் பணி
(E) விடை தெரியவில்லை
விடை : (D) காவல்துறைக்குள் நடைபெறும் அலுவல் பணி
54. ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் உள்ள ஆயுதம் தாங்கிய காவல் ஆளிநர்கள் எவ்வாறு அழைக்கபடுகின்றனர்?
(A) சிறப்பு காவல் படை காவலர்கள்
(B) மாவட்ட ஆயுதப் படை காவலர்கள்
(C) தாலுகா காவல் படை காவலர்கள்
(D) கிராம காவல் படை காவலர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மாவட்ட ஆயுதப் படை காவலர்கள்
55.காவல் நிலை ஆணை 411ன் படி 4 பிரிவுகளை உள்ளடக்கியது பிளட்டுன், ஒரு பிரிவிலுள்ள காவல் ஆளிநர்கள் எண்ணிக்கை எத்தனை?
(A) 1 த.கா. 2 நாயக் மற்றும் 14 காவலர்கள்
(B) 1 த.கா. 1 நாயக் மற்றும் 10 காவலர்கள்
(C) த.கா, 1 நாயக் மற்றும் 14 காவலர்கள்
(D) 2 த.கா. 1 நாயக் மற்றும் 14 காவலர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) த.கா, 1 நாயக் மற்றும் 14 காவலர்கள்
56. பிளட்டுன் யாருடைய உத்தரவிற்கு கட்டுப்பட்டது.
(A) ஆயுதப்படை உதவி ஆய்வாளர்
(B) தலைமை காவலர்
(C) ஆய்வாளர்
(D) நாயக்
(E) விடை தெரியவில்லை
விடை : (A) ஆயுதப்படை உதவி ஆய்வாளர்
57.மாவட்ட ஆயுதப்படைக்கு வழங்கப்பட்ட பேருந்து பயண புத்தகம் யாருடைய பொறுப்பில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
(A) தலைமை காவலர்கள்
(B) ஆயுதப்படை ஏவல் உதவி ஆய்வாளர்
(C) ஆயுதப்படை ஆய்வாளர்
(D) காவலர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஆயுதப்படை ஏவல் உதவி ஆய்வாளர்
58.பிளட்டுன் கமாண்டரால் பராமரிக்கப்படும் அலுவல் பெயர் பதிவேடு எப்போது சரிபார்க்கப்பட்டு ஆயுதப்படை ஆய்வாளரின் ஒப்புதல் பெறப்படுகிறது.
(A) அரை வருடம்
(B) வருடம் தோறும்
(C) மாதம் தோறும்
(D) காலாண்டுக்கு ஒருமுறை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) மாதம் தோறும்
59. தமிழ்நாடு காவல் வானொலி பிரிவு எப்போது தொடங்கப்பட்டது?
(A) அக்டோபர் 1948
(B) ஜனவரி 1948
(C) ஜனவரி 1950
(D) ஆகஸ்ட் 1950
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அக்டோபர் 1948
60.எந்த அலுவலர் பதவிக்கு குறையாதவரிடமிருந்து விண்ணப்பம் பெற்று. மருத்துவ அதிகாரிகளால் பிண கூராய்வு குறிப்புகளின் நகல் வழங்கப்படுகிறது?
(A) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(B) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் நிலைய அதிகாரி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) காவல் நிலைய அதிகாரி
61. சில வழக்குகளில் தோட்டாவை முக்கிய காரணியாக வைத்து எந்த ஆயுதத்தால் சுடப்பட்டதென தெரிந்து கொள்ள, நிபுணர் கருத்தை எங்கிருந்து பெற்று கொள்ளலாம்?
(A) நடமாடும் தடய அறிவியல் ஆய்வகம்
(B) விரல்ரேகை பிரிவு
(C) தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வகம்
(D) ஆயுதப்படை
(E) விடை தெரியவில்லை
விடை-: (C) தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வகம்
62.ஆளறிவதற்கு சாட்சிகளை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்துபவர் யார்?
(A) காவல் நிலைய அதிகாரி
(B) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(C) மாவட்ட ஆட்சியர்
(D) மாஜிஸ்ட்ரேட்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) மாஜிஸ்ட்ரேட்
63.தீர்புரைகள் மற்றும் வாக்குமூலங்களின் நகல்கள் பெற எந்த அலுவலர் பதவிக்கு குறையாதவரிடமிருந்து விண்ணப்பம் பெற வேண்டும்?
(A) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(B) காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் ஆய்வாளர்
(D) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) துணைக் காவல் கண்காணிப்பாளர்
64.எந்த காவல் நிலை ஆணையின்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் குற்ற ஆவண காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது?
(A) காவல் நிலை ஆணை 151
(B) காவல் நிலை ஆனை 607
(C) காவல் நிலை ஆணை 95
(D) காவல் நிலை ஆணை 145
(E) விடை தெரியவில்லை
விடை: (B) காவல் நிலை ஆனை 607
65.தொடர் குற்றவாளிகளின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை குற்ற ஆவண காப்பகத்திற்கு தெரிவிப்பவர் யார்?
(A) தலைமை காவலர்கள்
(B) ஆயுதப்படை ஆய்வாளர்
(C) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் நிலைய அதிகாரி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) காவல் நிலைய அதிகாரி
66. காவல் நிலை ஆனை 618ன் படி மாதாந்திர குற்ற ஆய்வு குறித்த முக்கிய பணியை மேற்கொள்வது யார்?
(A) மாவட்ட ஆயுதப்படை
(B) மாவட்ட குற்ற பிரிவு
(C) குற்ற ஆவண காப்பகம்
(D) மாவட்ட காவல் அலுவலகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) குற்ற ஆவண காப்பகம்
67.காவல் குற்ற அருங்காட்சியகம் யாருடைய மேற்பார்வை மற்றும் கட்டுபாட்டில் உள்ளது?
(A) முதல்வர், காவல் பயிற்சி கல்லூரி
(B) காவல் நிலைய அதிகாரி
(C) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(D) முதல்வர், காவலர் பயிற்சி பள்ளி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) முதல்வர், காவல் பயிற்சி கல்லூரி
68.இராணுவ வீரர்களை கைது செய்து விபரத்தை 24 மணி நேரத்திற்குள் யாருக்கு தெரிவிக்க வேண்டும்?
(A) முதன்மை நீதித்துறை நடுவர்
(B) காவல்துறை துணைத் தலைவர்
(C) காவல்துறை இயக்குநர்
(D) கமாண்டிங் ஆபிசர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கமாண்டிங் ஆபிசர்
69. கைது செய்யப்பட்ட ஒரு நபரை உடனடியாக அருகிலுள்ள எங்கு கொண்டு செல்ல வேண்டும்.
(A) கிளை சிறை
(B) மாவட்ட சிறை
(C) காவல் நிலையம்
(D) நீதிமன்றம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காவல் நிலையம்
70. மாவட்ட குற்ற ஆவண காப்பகம் கீழ்க்காணும் எவற்றுடன் தொடர்பற்றது
(A) வரலாற்று தாள்கள்
(B) வழக்குகளின் விசாரணை
(C) மாதாந்திர குற்ற ஆய்வு
(D) தொடர் குற்றவாளிகளின் பட்டியல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) வழக்குகளின் விசாரணை
71. காவல் நிலை ஆணை 669ன் படி நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்குகளை திரும்ப பெறுவதற்கு முன்னர், அரசு வழக்கறிஞர் யாரிடம் கருத்து பெறுவார்.
(A) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(B) மாவட்ட ஆட்சியர்
(C) கோட்ட வருவாய் அலுவலர்
(D) காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) மாவட்ட ஆட்சியர்
72. விடுதலையை எதிர்த்த மேல் முறையீடு கருத்துருக்கள் அனைத்தும் அரசுக்கு எத்தனை மாதங்களுக்குள் அனுப்ப வேண்டும்.
(A) 6 மாதங்கள்
(B) 4 மாதங்கள்
(C) 9 மாதங்கள்
(D) 2 மாதங்கள்
(E) விடை தெரியவில்லை
விடை-(D) 2 மாதங்கள்
73. அரசு ஊழியர் மீதான அலுவல் தொடர்பான குற்றச்சாட்டிற்கான காவல் துறையினர் எடுப்பதற்கு எந்த அலுவலரது முன் அனுமதி தேவை?
(A) மாவட்ட ஆட்சியர்
(B) முதன்மை நீதித்துறை நடுவர்
(C) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(D) கோட்ட வருவாய் அலுவலர்
(E) விடை தெரியவில்லை
விடை –(A) மாவட்ட ஆட்சியர்
74. தகவல் திரட்டுவது மற்றும் சந்தேக நபர்களை கண்காணிப்பது போன்ற துப்பறியும் பணிக்கு யாரை வேலைக்கு அமர்த்தலாம்.
(A) கிராம காவலர்கள்
(B) ஊர் காவல்படை
(C) தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள்
(D) காவல்துறை நண்பர்கள்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள்
75. ஒவ்வொரு ஆயுதப்படையும் ஒரு கம்பெனியாக கருதப்பட்டால் கம்பெனி கமாண்டர் யார்?
(A) ஆயுதப்படை உதவி ஆய்வாளர்
(B) ஆயுதப்படை ஆய்வாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை – (B) ஆயுதப்படை ஆய்வாளர்
76.காவல் சார் நிலை அதிகாரிகள் தனி அலுவலாக வேறு மாநிலத்திற்கு செல்ல, கடவுச்சீட்டில் கையெழுத்திடுவது யார்?
(A) ஆயுதப்படை ஆய்வாளர்
(B) காவல் நிலைய அதிகாரி
(C) காவல் உதவி ஆய்வாளர்
(D) காவல் கண்காணிப்பாளர்
(E) விடை தெரியவில்லை
விடை – (D) காவல் கண்காணிப்பாளர்
77.காவல் நிலை ஆணை 697ன் படி சாதாரண உடையில் இரவு ரோந்து அனுப்பியும் மற்றும் காவலர்களை சாதாரண உடையில் நியமித்து கவனிப்பது எதற்காக?
(A) குற்ற குணத்தார்கள்
(B) ரவுடிகள்
(C) கேடிகள்
(D) பயணிகள்
(E) விடை தெரியவில்லை
விடை – (A) குற்ற குணத்தார்கள்
78.காவல் நிலை ஆணை 732ன் படி ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெயற்பலகை எந்த மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்?
(A) ஆங்கிலம் மற்றும் ஹிந்தி
(B) தமிழ் மற்றும் ஆங்கிலம்
(C) ஆங்கிலம்
(D) தமிழ்
(E) விடை தெரியவில்லை
விடை- (B) தமிழ் மற்றும் ஆங்கிலம்
79. அரசிதழ் பதிவுறா அலுவலர்களின் பதவி உயர்வு குறித்து விளக்கும் காவல் நிலை ஆணைகள் அத்தியாயம் எது?
(A) காவல் நிலை ஆணைகள் அத்தியாயம் 6
(B) காவல் நிலை ஆணைகள் அத்தியாயம் 5
(C) காவல் நிலை ஆணைகள் அத்தியாயம் 3
(D) காவல் நிலை ஆணைகள் அத்தியாயம் 7
(E) விடை தெரியவில்லை
விடை (D) காவல் நிலை ஆணைகள் அத்தியாயம் 7
80. உதவி ஆய்வாளர் பணியிலிருந்து ஆய்வாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கிட பதவி உயர்வு பட்டியலை பரிசீலனை செய்யும் குழு எது?
(A) மாநிலப் பதவி உயர்வு குழு (STATE PROMOTIONAL BOARD)
(B) சரகப் பதவி உயர்வு குழு (RANGE PROMOTIONAL BOARD)
(C) மாவட்டப் பதவி உயர்வு குழு (DISTRICT PROMOTIONAL BOARD)
(D) உட்கோட்டப் பதவி உயர்வு குழு
(SUBDIVISIONAL PROMOTIONAL BOARD)
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மாநிலப் பதவி உயர்வு குழு (STATE PROMOTIONAL BOARD)