LAW PSO TEST QUESTIONS – 3
1.தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் அடங்கியுள்ள தொகுதிகள் (வால்யூம்ஸ்)
(A) ஒரு தொகுதி
(B) இரண்டு தொகுதிகள்
(C) மூன்று தொகுதிகள்
(D) நான்கு தொகுதிகள்
2.துறையிலான ஒழுங்கு நடவடிக்கையின் போது “கண்டனம்” என்ற தண்டனை யாருக்கு வழங்கப்படும்
(A) இரண்டு நிலைக் காவலர்கள்
(B) முதல்நிலைக் காவலர்கள்
(C) தலைமைக் காவலர்கள்
(D) காவல் சார் ஆய்வாளர்கள்
3.அனுமதியின்றி பணிக்கு வராமலிருக்கும் போது விட்டோடி உறுதி செய்தல் ஆணை எத்தனை நாட்களுக்குப் பின்னர் ஆணையிடப்படும்
(A) 21 நாட்கள்
(B) 30 நாட்கள்
(C) 60 நாட்கள்
(D) 90 நாட்கள்
4.விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றிய போது கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக ஒரு தலைமைக்காவலர் மீது தண்டனைப்பட்டியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட வேண்டிய தருணத்தில் அவர் கோவை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வரும் போது தண்டனைப் பட்டியலில் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டிய அதிகாரி
(A) காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மாவட்டம்
(B) காவல்துறைத் துணைத்தலைவர், விழுப்புரம் சரகம்
(C) காவல் கண்காணிப்பாளர், கோவை மாட்டம்
(D) காவல்துறைத் துணைத்தலைவர், கோவை சரகம்
5.நற்பணிக்கான பணவெகுமதி பின்வரும் பதிவி யினர்களுக்கு வழங்கப்படும்
(A) காவலர் முதல் தலைமைக்காவலர் வரையிலானவர்களுக்கு
(B) காவலர் முதல் சார் ஆய்வாளர் வரையிலானவர்களுக்கு
(C) காவலர் முதல் ஆய்வாளர் வரையிலானவர்களுக்கு
(D) இவர்களில் எவருமில்லை
6.தண்டளைக் கைதிகளை புகைப்படும் எடுக்க அனுமதிக்கப்பட்டிருப்பது
(A) சிறைக் காவலர்
(B) மாவட்ட காவல் புகைப்படக்கலைஞர்
(C) சமூக நலன் துறையால்
(D) பத்திரிக்கை புகைப்படக்கலைஞர்
7.கரும்புள்ளி தண்டனை ஆணையில், குறிப்பிட்டு ஆணையிடாத நிலையில் தண்டனைக்காலம் அமல்படுத்தப்படும் தேதி
(A) தவறிழைத்த தேதி
(B) ஆணை பிறப்பித்த தேறி
(C) ஆனையினைப் பெற்ற நாள்
(D) இவைகளில் எதுவுமில்லை
8.சார்நிலை காவல் பணியாளர்கள், வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய நிர்னாயிக்கப்பட்ட காலம்
(A) 30 நாட்கள்
(B) 60 நாட்கள்
(C) 3 மாதங்கள்
(D) 6 மாதங்கள்
9.காவல்நிலை ஆணைகள் 111-இன்படி சார்நிலை காவல் அலுவலர்கள் அரசுக்கு அனுப்பும் கடிதப்போக்குவரத்தினை
(A) நேரடியாக மேற்கொள்ளலாம்.
(B) நேரடியாக மேற்கொள்ளலாகாது
(C) காவல்துறை தலைமை இயக்குநர் வழியாக மேற்கொள்ளலாம்
(D) மாவட்ட ஆட்சியர் மூலமாக மேற்கொள்ளலாம்
10.கீழ்க்காணும் காவல்நிலைய ஆணையின் படி, மாநில காவல்படை காவல்துறை இயக்குநரின் கீழ் உள்ளது
(A) காவல்நிலைய ஆனை எண் 100
(B) காவல்நிலைய ஆணை எண் 1
(C) காவல்நிலைய ஆணை எண் 111
(D) காவல்நிலைய ஆனை எண் 10
11.காவல் சார் ஆய்வாளர்களின் மந்தன அறிக்கை கோப்பினை பராமரிக்க வேண்டிய அதிகாரி
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) துணைக்காவல் கண்காணிப்பாளர்
(C) சரசு காவல்துறை துணைத்தலைவர்
(D) மண்டல காவல்துறை தலைவர்/காவல் ஆணையாளர்
12.காவல் உட்கோட்டத்தின் பொறுப்பு அதிகாரி
(A) துணை/உதவி/இணைக்காவல் கண்காணிப்பாளர்
(B) காவல் ஆய்வாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் ஆணையாளர்
13.தாழ்த்தப்பட்டோர்/மலைச்சாதியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1968 ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் புலன் விசாரணை அதிகாரி
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) துணைக்காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் ஆய்வாளர்.
(D) காவல் சார் ஆய்வாளர்
14.காவல் சார்நிலை அலுவலர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டால் அவருடைய சன்னது மற்றும் உடைப்பொருட்களை ஒப்படைக்க வேண்டிய இடம்
(A) அவரே வைத்துக் கொள்ளலாம்.
(B) உட்கோட்ட அலுவலகம்
(C) மாவட்ட காவல் அலுவலக பண்டகம்
(D) பணியாற்றிய காவல் நிலையம்
15.படிவம் எண். 11 ல் வாராந்திர அறிக்கைகளை உயர் அதிகாரிக்கு அனுப்பவேண்டிய அலுவலர்
(A) தலைமைக் காவலர்
(B) காவல் சார் ஆய்வாளர்
(C) காவல் ஆய்வாளர்
(D) காவல் துணைக் கண்காணிப்பாளர்
16.சிறுபணிப்புத்தகம் பராமரிக்கப்படும் அலுவலகம்
(A) மாவட்ட காவல் அலுவலகம்
(B) உட்கோட்ட அலுவலகம்
(C) வட்ட காவல் ஆய்வாளர் அலுவலகம்
(D) உட்கோட்ட அலுவலகம் காவல் நிலையம்
17.உட்கோட்ட காவல் அதிகாரி காவல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டிய கால வேரையறை
(A) ஒவ்வொரு காலண்டர் ஆண்டும்
(B) ஒவ்வொரு நிதி ஆண்டும்
(C) ஒவ்வொரு அரையாண்டும்
(D) ஒவ்வொரு மாதமும்
18.இரும்பு பாதுகாப்பு பெட்டகம் மற்றும் பணப்பெட்டிகளின் மாற்றுச் சாவிகள் முத்திரையிடப்பட்ட உறைகளில் எங்கு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் வரையறை
(A) மாவட்ட காவல் அலுவலகம்
(B) சரக அலுவலகம்
(C) மாவட்ட கருவூலம்
(D) மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
19.தமிழ்நாடு சிறப்புக்காவல் அணியின் தலைமை அதிகாரி பின்வருமாறு அழைக்கப்படுவார்
(A) உதவித் தளவாய்
(B) துணைத்தளவாய்
(C) தளவாய்
(D) ஆயுதப்படை காவல்துறைத் துணைத்தலைவர்
20.காவல் ஆய்வாளர் பணியாற்றும் காவல் நிலையத்தின் நிலைய பொறுப்பு அதிகாரி
(A) காவல் ஆய்வாளர்
(B) காவல் சார் ஆய்வாளர்
(C) சிறப்புக் காவல் சார் ஆய்வாளர்
(D) துணைக் காவல் கண்காணிப்பாளர்
21.காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காவல் நிலையத்தில் இல்லாத நேரங்களில் யார் நிலைய பொறுப்பு அதிகாரியாக செயல்படுவார்
(A) நிலைய எழுத்தர்
(B) காவல் சார் ஆய்வாளர்
(C) தலைமைக் காவலர்
(D) நிலையத்தில் ஆஜரில் உள்ள முதுநிலை காவல் அலுவலர்
22.புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம் உள்ளவர்கள்
(A) இரண்டாம் நிலைக் காவலர்
(B) முதல்நிலைக் காவலர் மற்றும் அதற்கும் மேல் உள்ளோர்
(C) தலைமைக் காவலர்
(D) நிலைய பொறுப்பு அதிகாரி மட்டும்
23.காவலர் முதல் தலைமைக் காவலர் பதவியில் உள்ளவர்களுக்கு எப்படி ஓய்வு நாள் கனக்கிடப்படுகிறது
(A) வாரத்திற்கு ஒரு நாள்
(B) ஞாயிற்றுக்கிழமை தோறும்
(C) மாதத்திற்கு நான்கு நாட்கள்
(D) இவைகளில் எதுவுமில்லை
24.மிகைநேரப்படி பெறத் தகுதியுள்ளோர்
(A) காவலர் முதல் ஆய்வாளர் வரை
(B) காவலர் முதல் சார் ஆய்வாளர் வரை
(C) காவலர் முதல் தலைமைக் காவலர் வரை
(D) காவலர்கள் மட்டும்
25.காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார் ஆய்வாளர்களுக்கு ரிவால்வர் சுடும் பயிற்சிக்கு ஆண்டு தோறும் எத்தனை குண்டுகள் கொடுக்கப்படுகின்றன.
(A) 50 குண்டுகள்
(B) 60 குண்டுகள்
(C) 70 குண்டுகள்
(D) 80 குண்டுகள்
26.இறந்த போன அல்லது பணியினை விட்டு அகன்ற காவல் அதிகாரியின் இறுதி ஊதியம்
(A) பட்டுவாடா செய்யக்கூடாது.
(B) பட்டுவாடா செய்யலாம்
(C) அரசுக்கு செலுத்தவேண்டிய தொகைகள் செலுத்தப்படாத வரை வழங்ககூடாது
(D) இவைகளில் எதுவுமில்லை
27.காவல் நிலைய பணப்பதிவேட்டை தினந்தோறும் யார் தணிக்கை செய்ய வேண்டும்.
(A) நிலைய எழுத்தர்
(B) வட்ட காவல் ஆய்வாளர்
(C) நிலைய பொறுப்பு அதிகாரி
(D) துணைக்காவல் கண்காணிப்பாளர்
28.காவலர்கள் முதல் தலைமைக்காவலர் வரையிலானவர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க யாருக்கு அதிகாரம் கிடையாது
(A) காவலர் சார் ஆய்வாளர்
(B) துணைக்காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் ஆய்வாளர்
(D) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
29.காவல்நிலை ஆணைகளின் படி விடுப்பில் செல்லும் போது எந்தெந்த சார்நிலை அலுவலர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட வேண்டும்.
(A) காவலர் முதல் ஆய்வாளர் வரை
(B) காவலர் முதல் சார்ஆய்வாளர் வரை
(C) காவலர் முதல் தலைமைக் காவலர் வரை
(D) அனைத்து சார்நிலை அலுவலர்
30.காவல் சார் ஆய்வாளர்களுக்கும் கீழ் நிலையில் உள்ளவர்களின் மருத்துவ வரலாற்றுத் தாட்கள் படிவம் 42 ல் பாராமரிக்கப்பட வேண்டிய அலுவலகம்
(A) மாவட்ட காவல் அலுவலகம்
(B) உட்கோட்ட அலுவலகம்
(C) வட்ட அலுவலகம்
(D) காவல் நிலையம்
31.1969 ம் ஆண்டு படைக்கவச் சட்டத்தின் படி படைக்கல உரிமம் வழங்கப்பட்டவர்கள் குறித்த பதிவேடு பேணப்பட வேண்டிய அலுவலகம்
(A) உட்கோட்ட அலுவலக
(B) வட்ட அலுவலகம்
(C) காவல் நிலையம்
(D) மாவட்ட காவல் அலுவலகம்
32.படைக்கலன்கள் மற்றும் வெடிபொருட்கள் உரிமம் பெற்ற கடைகள் மற்றும் வளாகங்களை உட்கோட்ட அதிகாரி ஆய்வு செய்ய வேண்டிய காலம் வரையறை
(A) மாதம் ஒரு முறை
(B) காலாண்டுக்கு ஒரு முறை
(C) அரையாண்டுக்கு ஒரு முறை
(D) ஆண்டுக்கு ஒரு முறை
33.காவல் நிலைய பாரா பணி மாற்றம் செய்யப்பட வேண்டிய கால வரையறை
(A) 2 மணி நேரத்திற்கு ஒரு முறை
(B) 3 மணி நேரத்திற்கு ஒரு முறை
(C) 6 மணி நேரத்திற்கு ஒரு முறை
(D) 6 மணி நேரத்திற்கு ஒரு முறை
34.சார்நிலை காவல் அலுவலர்கள் கட்டாயமாக மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய கால அளவு
(A) 6 மாதத்திற்கு ஒரு முறை
(B) ஆண்டுக்கொருமுறை
(C) 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை
(D) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை
35.நீதிமன்றத்தால் பண வெகுமதி ஒப்பளிக்கப்படுவது
(A) கடுங்குற்றங்களை கண்டு பிடித்தமைக்கு
(B) கொலைக் குற்றத்தை கண்டு பிடித்தமைக்கு
(C) சூதாட்ட வழக்குகளைக் கண்டு பிடித்தமைக்கு
(D) குற்றவாளிகளை குண்டர்கள் சட்டத்தில் சிறையில் அடைத்தமைக்கு
36.காவல் ஆய்வாளர் பிழையாளியாக இருந்தால் விசாரணை அதிகாரியாக யார் இருப்பார்
(A) மற்றொரு மூத்த காவல் ஆய்வாளர்
(B) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(C) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்/இணை காவல் கண்கானிப்பாளர் காவல் கண்காணிப்பாளர்
(D) காவல்துறை துணைத்தலைவர்
37.காவல் சார் ஆய்வாளருக்கு எதிரான 3(b) விதியின் கீழான குற்றச்சாட்டு குறிப்பானை யாரால் ஒப்பளிக்கப்பட வேண்டும்
(A) காவல் ஆய்வாளர்
(B) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் துறைத்துணைத் தலைவர்
38.திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் சந்தேகமான முறையில் பெண் மரணம் தெடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் புவன் விசாரணை செய்ய வேண்டிய அதிகாரி
(A) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(B) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) வருவாய் உட்கோட்ட அலுவலர்
39.பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை கொடுக்க வேண்டிய அலுவலர்
(A) மாவட்ட மருத்துவ அதிகாரி
(B) பணியில் இருந்த மருத்துவ அதிகாரி
(C) பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ அதிகாரி
(D) இருப்பிட மருத்துவ அதிகாரி
40.குவிமுச 154 ன் படி காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய அமைந்த படிவம்
(A) படிவம் எண் 73
(B) படிவம் எண் 75
(C) படிவம் எண் 90
(D) படிவம் எண் 91
41.முதல் தகவல் அறிக்கையின் நகல் கொடுக்கப்பட வேண்டிய நபர்
(A) புகார்தாரர்
(B) எதிரி
(C) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவர்
(D) நிலைய எழுத்தர்
42.”சாட்சியால் குற்றவாளியை அடையாளம் காண அடையாள அணி வகுப்பு நடத்த வேண்டிய அதிகாரி
(A) சிறைத்துறை கண்காணிப்பாளர் —
(B) துணைக்காவல் கண்காணிப்பாளர்
(C) நீதிமன்ற நடுவர்
(D) மாவட்ட செஷன்ஸ் நீதிபதி
43.ஒரு வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நடுவருக்கு அனுப்பப்பட வேண்டிய நாள்
(A) அன்றைய தினத்திலேயே
(B) 3 நாட்களுக்குள்
(C) எதிரியைக் கைது செய்த பின்னர்
(D) மாவட்ட காவல் கண்கானிப்பாளரின் ஆணைக்குப் பின்னர்
44.யாருடைய தலைமையின் கீழ் மாவட்ட குற்றப்பதிவேடு கூடம் செயல்படுகிறது?
(A) காவல் ஆய்வாளர்.
(B) துணைக்காவல் கண்காணிப்பாளர்
(C) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
(D) இணைக்காவல் கண்காணிப்பாளர்
45.அனைத்து (dossier) குற்றவாளிகளின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து காவல் நிலையத்திலிருந்து மாவட்ட குற்றப்பதிவேடு கூடத்திற்கு அறிக்கை அனுப்பவேண்டிய அதிகாரி
(A) காவல் உதவி ஆய்வாளர்
(B) காவல் ஆய்வாளர்
(C) நிலைய பொறுப்பு அதிகாரி
(D) நிலைய எழுத்தர்
46.ஒருங்கிணைந்த மாதாந்திர குற்ற ஆய்வு அறிக்கை விவரங்கள் தயார் செய்யப்படும் அலுவலகம்
(A) காவல் நிலையம்
(B) உட்கோட்ட அலுவலகம்
(C) மாவட்ட காவல் அலுவலகம்
(D) குற்ற பதிவேடுகூடம்
47.அயல்நாட்டு தூதரக பணியாளர் ஒருவரை கைது செய்த விவர அறிக்கை அனுப்பவேண்டியது
(A) மாநில அரசுக்கு
(B) மத்திய அரசுக்கு
(C) சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு
(D) காவல்துறை தலைமை இயக்குநருக்கு
48.ஒருவரை கைது செய்யும் போது எந்த நீதிமன்ற வரைமுறை ஆணைகளை பின்பற்ற வேண்டும்
(A) தலைமை நடுவர் நீதிமன்றம்
(B) மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம்
(C) உயர்நீதிமன்றம்
(D) உச்ச நீதிமன்றம்
49.மாவட்ட ஆயுதப்படை ஆளினர்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றனர்
(A) நிறுமங்களாக
(B) பிரிவுகளாக
(C) முப்பிரிவுகளாக (பிளட்டுள்களாக)
(D) இவைகளில் எதுவுமில்லை
50.தமிழ்நாடு சிறப்புக் காவல் அணி ஆளினர்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றனர்
(A) நிறுமங்களாக
(B) பிரிவுகளாக
(C) முப்பிரிவுகளாக (பிளட்டூன்களாக)
(D) இவைகளில் எதுவுமில்லை
51.தொடர் குற்றவாளிகளின் வரலாற்றுத் தாள்கள் பராமரிக்கப்படும் இடம்
(A) காவல் நிலையங்கள்
(B) குற்ற பதிவேடு கூடம் :
(C) உட்கோட்ட அலுவலகம்
(D) மாவட்ட காவல் அலுவலகம்
52.வெளி மாவட்டங்களுக்கு பாதுகாப்பு பணிக்காகச் செல்லும் காவல் ஆளிநர்களுக்கு வழங்கப்படுவது
(A) பயணப்படியும் உணவுப்படியும்
(B) மிகை நேர ஊதியம்
(C) மிகை நேர ஊதியமும் பயணப்படியும்
(D) பயணப்படி அல்லது மிகைநேர ஊதியம் ஏதாவது ஒன்று
53.மிகைநேர ஊதியம் ஒப்பளிப்பு செய்யும் அதிகாரி
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(C) நிர்வாக அதிகாரி
(D) காவல் ஆய்வாளர்
54.காவல்நிலைய ஆவணம் பகுதி-4 ல் உள்ள விவரங்கள்
(A) குற்றவாளிகளின் வரலாற்றுத் தாள்கள்
(B) காவல் நிலைய வரலாறு
(C) ஆண்டு வாரியான வழக்கு விவரங்கள்
(D) காவல் அலுவலர்களின் பெயர்ப் பட்டியல்
55.காவல் நிலைய வழக்குகளின் புலன் விசாரணை விவரங்களை அமை படிவ வழக்கு நாட்குறிப்புகளை எழுத வேண்டியவர்
(A) நிலைய எழுத்தர்
(B) புலன் விசாரணை அலுவலர்
(C) காவல் சார் ஆய்வாளர்
(D) காவல் ஆய்வாளர்
56.காவல் நிலைய பொது நாட்குறிப்புகளில் உள்ள பதிவுகளின் விவரங்கள்
(A) அவ்வப்போது காவல் நிலைய நிகழ்வுகள்
(B) நிலுவையில் உள்ள புலன் விசாரணை வழக்குகள்
(C) பாதுகாப்புப் பணி விவரங்கள் மட்டும்
(D) இவைகளில் எதுவுமில்லை
57.குற்றவாளிகளின் வரலாற்றுத் தாள்களை முடிக்குமாறு ஆணை பிறப்பிக்க வேண்டிய அதிகாரி
(A) காவல்துறைத் துணைத்தலைவர்
(B) காவல் கண்காணிப்பாளர்
(C) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(D) காவல் ஆய்வாளர்
58.காவல் நிலை ஆணை எண். 151 (பழைய ஆணை எண். 145) ன் கீழ் விசாரனை நடத்த மேற்கொள்ள வேண்டிய அதிகாரி
(A) காவல் கன்கானிப்பாளர்
(B) துணைக் காவல் கண்காணிப்பாளர்
(C) உட்கோட்ட நடுவர்
(D) மாவட்ட ஆட்சியர்
59.இரவு ரோந்து அதிகாரிகளின் பணி குறித்து எந்த காவல் நிலை ஆனையில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) கா.நி.ஆ. 834
(B) கா நி ஆ 835
(C) கா.நி.ஆ.836
(D) கா.நி.ஆ.837
60.நிலைய எழுத்தரின் பணிகள் குறித்து வரையறுக்கப்பட்டுள்ள காவல் நிலை ஆணை
(A) கா.நி.ஆ.821
(B) கா.நி.ஆ.831
(C) கா.நி.ஆ.841
(D) கா.நி.ஆ.851
61.ஒரு காவலர் அல்லது தலைமைக்காவலர் அல்லது காவல் சார் ஆய்வாளர் தற்செயல் விடுப்பு தவிர இதர
விடுப்பில் செல்லும் போது காவல் நிலை ஆணை எண். 729 ன் படி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நிலைய பொறுப்பு அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டிய படிவம்
(A) படிவம் எண்.34
(B) படிவம் எண். 44
(C) படிவம் எண் 54
(D) படிவம் எண்.64
62.நீதிமன்ற அழைப்பாணை குறித்த விவரங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டினை (process) நீதிமன்ற பதிவேடுகளுடன் எந்த காலத்திற்குள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
(A) 2 மாதத்திற்கு ஒரு முறை
(B) காலாண்டுக்கு ஒரு முறை
(C) அரையாண்டுக்கு ஒரு முறை
(D) பிரதி மாதம்
63.காவலர்கள்/தலைமைக் காவலர்களின் நோட்டுப் புத்தகங்களை காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டியவர்
(A) நிலைய எழுத்தர்
(B) நிலைய பொறுப்பு அதிகாரி
(C) நிலைய பாரா காவலர்
(D) காவல் ஆய்வாளர்
64.படைக்கலச் சட்டம் பிரிவு 25 ன் படி குற்றவாளி மீது குற்ற நடவடிக்கை எடுக்க நிலைய பொறுப்பு அதிகாரி
யாரிட்மிருந்து ஆணை பெற வேண்டும்
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) மாவட்ட ஆட்சியர்
(C) காவல்துறை துணைத்தலைவர்
(D) வருவாய் உட்கோட்ட அதிகாரி
65.பிணையில் விடுவிக்க அதிகாரம் பெற்றவர்
(A) உட்கோட்ட காவல் அதிகாரி
(B) வட்ட காவல் ஆய்வாளர்
(C) காவல் ரார் ஆய்வாளர்
(D) நிலைய பொறுப்பு அதிகாரி
66.ராணுவத்தினரை கைது செய்யும் போது சம்பந்தப்பட்ட பிரிவின் ராணுவ கமாண்டிங் அதிகாரிக்கு அறிக்கை அனுப்ப வேண்டிய கால அளவு
(A) 24 மணி நேரத்திற்குள்
(B) 48 மணி நேரத்திற்குள்
(C) 7 நாட்களுக்குள்
(D) 15 நாட்களுக்குள்
67.காவல் ஆணையாளர்/காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் ஆணையின் படி ஆயுதப்படையினரின் வருடாந்திர மொபிலிசேஷன் நடத்தப்பட வேண்டிய கால வரையறை
(A) 3 மாதத்திற்கு ஒருமுறை
(B) 6 மாதங்களுக்கு ஒரு முறை
(C) ஆண்டுக்கு ஒரு முறை
(D) 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை
68.மாவட்ட ஆயுதப்படையின் முப்பிரிவு (பிளட்டூன்) தலைவர்
(A) ஆயுதப்படை காவல் ஆய்வாளர்
(B) ஆயுதப்படை சார் ஆய்வாளர்
(C) முப்பிரிவு எழுத்தர்
(D) மூத்த தலைமைக் காவலர்
69.மாநகர/மாவட்ட காவல் அலுவலகத்தில் கருவூல ஏவலாளராக பணியாற்றும் மு.நி.கா./தா.கா ஆகியோர் – ஒரு முறை மாற்றம் செய்ய வேண்டும்.
(A) 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை
(B) ஆண்டுக்கு ஒரு முறை
(C) 6 மாதங்களுக்கு ஒரு முறை
(D) 3 மாதங்களுக்கு ஒரு முறை
70.மிக ஆபத்தான சிறைவாசிகள் 6 நபர்களுக்கும் மேல் 10 நபர்களுக்குள் உள்ள மிக ஆபத்தான சிறைவாசிகளின் வழிக்காவல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட வேண்டிய பாதுகாவலர்களின் எண்ணிக்கை அளவு
(A) 16 காவலர்கள்
(B) 10 காவலர்கள்
(C) 2 தலைமைக் காவலர்கள் மற்றும் 8 காவலர்கள்
(D) 2 சார் ஆய்வாளர்கள் மற்றும் 8 காவலர்கள்
71.கிராம நிர்வாக அலுவலரின் பதிவேடுகளின் பதிவு செய்யப்பட்டுள்ள கேடிகள் மற்றும் சந்தேக நபர்களின் பெயர் விவரங்களை கிராம நிர்வாக அதிகாரியால் தெரிவிக்கப்பட வேண்டிய அதிகாரி
(A) வட்டாட்சியர்
(B) மாவட்ட ஆட்சியர்
(C) காவல் நிலையம்
(D) மாவட்ட காவல் கண்கானிப்பாளர்
72.காவல் நிலை ஆணை 493 ன் படி குற்றப் புலனாய்வுத் துறை பின்வரும் எந்த இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது
(A) சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம்
(B) சட்டம் ஒழுங்கு மற்றும் நுண்ணறிவு
(C) நுண்ணறிவு மற்றும் குற்றம்
(D) சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து
73.காவல் நிலை ஆனை 218 ல் விளக்கப்பட்டுள்ளது எதைப் பற்றி
(A) வட்ட தகவல்
(B) காவல் நிலைய தகவல்:
(C) பயணக் குறிப்பு
(D) பொதுநாட்குறிப்பு
74.வாய்மொழி விசாரணையின் போது அரசுத்தரப்பு சாட்சியால் தாக்கல் செய்யப்படும் ஆதாரம் எவ்வாறு பெயரிடப்படுகிறது
(A) பொது ஆவணம்
(B) அரசுத்தரப்பு ஆவணம்
(C) எதிர்த்தரப்பு ஆவணம்
(D) நிகழ்ச்சிப் பதிவு
75.மிகச்சிறப்பான பணிப் பதிவுகள் பின்வரும் எவருக்கு வழங்கப்படுகிறது
(A) காவல் ஆய்வாளர்
(B) துணைக்காவல் கண்காணிப்பாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) காவலர் முதல் சார் ஆய்வாளர் வரை
76.புலன் விசாரணை முடிவுற்ற பின்னர் கள்ள ரூபாய் நோட்டுக்கள் பின்வரும் எவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்
(A) அரசு அச்சகம், நாசிக்
(B) கருவூலம்-பாதுகாப்பாக வைக்க
(C) வட்ட கரன்சி அலுவலர்-அழிப்பதற்காக
(D) இந்திய ரிசர்வ் வங்கி
77.காவல்நிலைய பணிப்பயன்பாட்டிற்காக மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகன வசதிகள் வழங்குவது குறித்து பின்வரும் எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது
(A) காவல் நிலை ஆணை எண் 218
(B) காவல் நிலை ஆணை எண் 228
(C) காவல் நிலை ஆணை எண் 238
(D) காவல் நிலை ஆணை எண் 248
78.காவல் சார்நிலை பணியாளர்களின் சிறுபணிப்பதிவேடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பதிவுகளைச் செய்ய பின்வரும் யார் அதிகாரம் கொண்டவர்
(A) நிலைய எழுத்தர்கள்
(B) தலைமைக் காவலர்கள்
(C) காவல் சார் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள்
(D) துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்
79.காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆளிநர்களின் பிழைத்தாள்களில் பின்வரும் எந்த விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
(A) மருத்துவ பரிசோதனைகள்
(B) ஆளிநர்களின் தனி விவரங்கள்
(C) வெகுமதி விவரங்கள்
(D) தண்டனை விவரங்கள்
80.பறிமுதல் செய்யப்பட்ட படைக்கலன்கள் மற்றும் படைக்கல குண்டுகள் ஆகியவைற்றை முடிவு செய்தல் தொடர்பான விதிமுறைகள் பின்வரும் எந்த காவல் நிலை ஆணையில் வரையறுக்கப்பட்டுள்ளது
(A) காவல் நிலை ஆணை எண் 323
(B) காவல் நிலை ஆணை எண் 324
(C) காவல் நிலை ஆணை எண் 325
(D) காவல் நிலை ஆணை எண் 326
_________________________________________________THANK U -NCA IAS ACADEMY_____________________________________