
LAW PSO TEST ANSWER KEY
1.பணியாளர் ஒருவர் நோயால் ஆள்துணையின்றி பயணம் செய்ய தகுதியற்றவராகும் போது அவருடன் கூடச் செல்வதற்காக ஒரு காவல் அலுவலர் மருத்துவ அதிகாரி ஒருவரால் நியமிக்கப்பட்டால் அவர் அலுவலின் பேரில் பயணம் செய்ததாகக் கருதி அவருக்கு என்ன வழங்க உரிமையுடையவர்?
(A) ஈடுகட்டும் விடுப்பு
(B) மிகை நேரம் ஊதியம்
(C) பயணப்படி
(D) உணவுப்படி
விடை: (C) பயணப்படி
2.காவல் மாவட்டங்களில் சாதாரண அலுவல் நடைமுறையில் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு சேவகர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் யார் நேரில் முடிவு செய்வார்?
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
(C) வட்டாட்சியர்
(D) மாவட்ட ஆட்சியர்
விடை: (D) மாவட்ட ஆட்சியர்
3.இந்திய ஆயுதச்சட்டம், 1959ன் கீழ் அளிக்கப்பட்ட உரிமங்களின் பதிவேடு ஒன்று காவல் துறையில் எங்கு பராமரிக்கப்பட வேண்டும்?
(A) காவல் உட்கோட்ட அலுவலகத்தில்
(B) காவல் வட்ட அலுவலகத்தில்
(C) ஒவ்வொரு காவல் நிலையத்திலும்
(D) காவல் கண்காணிப்பாளரின் அலுவலத்தில்
விடை: (C) ஒவ்வொரு காவல் நிலையத்திலும்
4.காவல் மாவட்ட அலுவலர்கள் அவர்களுடைய சிறு கைத்துப்பாக்கிகளை (pistol) ஆண்டுக்கொருமுறை ஆய்வுக்காக யாரிடம் நேரில் காட்ட வேண்டும்?
(A) காவல் கண்காணிப்பாளரிடம்
(B) மாவட்ட ஆட்சித்தலைவரிடம்
(C) வருவாய் கோட்டாட்சியரிடம்
(D) சிறு படைக்கல தளவாயிடம்
விடை: (C) வருவாய் கோட்டாட்சியரிடம்
5.மாவட்ட கருவூலகக் காப்பு நீங்கலான காப்புகளில் காவல் பணியாளர்கள் இருக்க வேண்டிய கால அளவு என்ன?
(A) ஒரு மணி நேரம்
(B) இரண்டு மணி நேரம்
(C) மூன்று மணி நேரம்
(B) இரண்டு மணி நேரம்
(D) நான்கு மணி நேரம்
விடை: (D) நான்கு மணி நேரம்
6.அனைத்துக் குற்றக் குணத்தோர் வழக்கமாய் குற்றம் செய்பவர்கள், சந்தேகப்படுபவர்கள் ஆகியவர்களைப் பற்றிய ஒரு ஆய்வுப்பதிவேடு எங்கு வைக்கப்பட வேண்டும்?
(A) அனைத்து காவல் வட்ட அலுவலகங்களில்
(B) அனைத்து காவல் உட்கோட்ட அலுவலகங்களில்
(C) அனைத்து காவல் நிலையங்கள்
(D) மாவட்ட குற்றப் பதிவேட்டு கூடத்தில்
விடை: (C) அனைத்து காவல் நிலையங்கள்
7.காவல்துறையில் படைவீரரைக் கைது செய்திடும் போது 24 மணி நேரத்திற்குள் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்?
(A) மாவட்ட ஆட்சியருக்கு
(B) மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு
(C) அவர் சார்ந்துள்ள பிரிவின் தளவாய்க்கும் சம்பந்தப்பட்ட குற்றவியல்துறை நடுவருக்கும்
(D) காவல்துறை இயக்குநருக்கு
விடை: (C) அவர் சார்ந்துள்ள பிரிவின் தளவாய்க்கும் சம்பந்தப்பட்ட குற்றவியல்துறை நடுவருக்கும்
8.அயல்நாட்டவர் ஒருவர் கொடிய குற்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டதாகச் சந்தேகிக்கப்பட்டால் அதன் விபரத்தை யாருக்கு உடன் தெரிவிக்க வேண்டும்?
(A) சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரக அலுவலகத்திற்கு
(B) குற்றப் புலனாய்வுத்துறைக்கு
(C) சம்பந்தப்பட்ட நாட்டின் காவல்துறை தலைவருக்கு
(D) சர்வதேச காவல் அமைப்புக்கு
விடை: (B) குற்றப் புலனாய்வுத்துறைக்கு
9.மலைப்பிரதேச காவல் நிலையங்களில் பொது நாட்குறிப்பு ஆரம்பிக்கப்படும் நேரம்
(A) 07.00 மணிக்கு
(B) 08.00 மணிக்கு
(C) 06.00 மணிக்கு
(D) 09.00 மணிக்கு
விடை: (B) 08.00 மணிக்கு
10.பொதுநாட்குறிப்பு எத்தனை மணி நேரத்திற்குரியதாக இருக்கும்?
(A) 12 மணி நேரம்
(B) 5 மணி நேரம்
(C) 24 மணி நேரம்
(D) 18 மணி நேரம்
விடை: (C) 24 மணி நேரம்
11.காவல் பாதுகாவலில் காவல் காக்கப்படும் சிறிய சிறைச்சாலைகள் உட்பட காவல் காவலில் ஏற்படும் தற்கொலை வழக்குகள் அனைத்திலும் காவல் கண்காணிப்பாளர் ஒரு முழு அறிக்கையை தாமதமின்றி யாருக்கு அனுப்பப்பட வேண்டும்?
(A) மாவட்ட ஆட்சித் தலைவருக்கு
(B) வருவாய் கோட்டாட்சியருக்கு
(C) சிறைத்துறைத் தலைவருக்கு
(D) காவல்துறை இயக்குநருக்கு
விடை: (D) காவல்துறை இயக்குநருக்கு
12.மாவட்டம், சரகம், வருடாந்திர காவல்துறை விளையாட்டு போட்டிகள் காவல் பயிற்சி பள்ளிகளின் விளையாட்டு தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பிரிவு அணிகளின் விளையாட்டு ஆகியவற்றில் ஆஜராகும் அணிகளின் உறுப்பினர்களின் பயணங்களுக்காகவும் தங்களுக்காகவும் கீழே குறிப்பிட்டுள்ள எதைப் பெற தகுதியுடையவராவார்கள்.
(A) உணவுப்படி
(B) மிகை நேர ஊதியம்
(C) சிறப்புப்படி
(D) பயணப்படி
விடை: (D) பயணப்படி
13.இரயில் வரம்புக்குள் செய்யப்படும் அனைத்து தொல்லைக் குற்றங்களையும் யார் முடிவு செய்வர்?
(A) எல்லைக்குட்பட்ட உள்ளூர் காவல்
(B) இரயில்வே காவல்
(C) ரயில்வே பாதுகாப்புபடை
(D) மத்திய ரிசர்வ் காவல்படை
விடை: (B) இரயில்வே காவல்
14.ஒரு குற்றப்பிரிவு ஆய்வாளர் அவருடைய சார்நிலைப் பணியாளர்களில் ஒருவர் நடத்தும் விசாரணைக்கு வந்திருக்கையில் அவர்
(A) வழக்குநாட்குறிப்பை எழுத வேண்டும்
(B) வழக்கு நாட்குறிப்பில் மேலொப்பமிட வேண்டும்
(C) காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்
(D) புலனாய்வுப் பணியை மேற்பார்வையிட வேண்டும்
விடை: (B) வழக்கு நாட்குறிப்பில் மேலொப்பமிட வேண்டும்
15.காவல்நிலை ஆணை எண். 184ன் படி பெரிய திருவிழாக்களும் பொதுக்கூட்டங்களும் நடக்கையில் யார் வந்திருந்து காவல் ஏற்பாடு முறைகளை மேற்பார்வையிட வேண்டும்?
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) காவல் துணைக்கண்காணிப்பாளர்
(C) காவல் ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு)
(D) நிலைய பொறுப்பு அலுவலர் (SHO)
விடை: (C) காவல் ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு)
16.ஒருவர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன் அவர் எந்த பட்டியவில் இருப்பவராம கருதப்படுவார்?
(A) ” C ‘ பட்டியல்
(B) “D’ பட்டியல்
(C) ‘B’ பட்டியல்
(D) ‘A’ பட்டியல்
விடை: ” C ‘ பட்டியல்
17.ஒருவர் தகுதிகாண் பருவம் முடிக்கப் பெற்றதாக விளம்புகை செய்யப்பட்டவுடன் அவர் எந்தப்பட்டியலில் கொண்டுவரப்பட்டதாக கருதப்படுவர்.
(A) ‘B’ பட்டியல்
(B) ‘A’ பட்டியல்
(C) ‘D’ பட்டியல்
(D) ‘C ‘பட்டியல்
விடை: (B) ‘A’ பட்டியல்
18.மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் முதல் நிலைக் காவலரின் தகுதிகாண் பருவக் காலம் எவ்வளவு ?
(A) இரண்டு ஆண்டுகள்
(B) ஓராண்டு
(C) இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள்
(D) தகுதிகாண் பருவகாலம் இல்லை
விடை: (D) தகுதிகாண் பருவகாலம் இல்லை
19.’C’ பட்டியலிலிருந்து ஒருவர் பதனி உயர்த்தப்பட்டால் அவர் எந்தப்பட்டியலில் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுவர்
(A) ‘B’ பட்டியல்
(B) ‘C’ பட்டியல்
(C) ‘D’ பட்டியல்
(D) ‘A’ பட்டியல்
விடை: (A) ‘B’ பட்டியல்
20.எந்த காவல்நிலை ஆணையில் சாலை ரோந்துகள் பற்றி கூறப்பட்டுள்ளது?
(A) 369
(B) 372
(C) 375
(D) 370
விடை: (A) 369
21.அனைத்து காவல் நிலையங்களிலும் ஆயுதங்களை சுத்தம் செய்தல் பணி என்று நடத்தப்பட வேண்டும்?
(A) ஒவ்வொரு சனிக்கிழமையும்
(B) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
(C) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
(D) ஒவ்வொரு வியாழக்கிழமையும்
விடை: (C) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
22.கள்ளப்பணத்தாள்களை அது தொடர்பான புலன் விசாரணை அல்லது வழக்கு முடிந்த பிறகு யாருக்கு அனுப்ப வேண்டும்?
(A) இந்திய ரிசர்வ் வங்கி
(B) அரசு அச்சகம் நாசிக்
(C) கருவூலம்
(D) வட்டார பணத்தாள் அலுவவர்
விடை: (D) வட்டார பணத்தாள் அலுவவர்
23.காவல்நிலைய குற்ற வரலாற்றின் அனைத்துப் பகுதிகளும் எந்த மொழியில் வைத்து வர வேண்டும்?
(A) தமிழ்
(B) ஆங்கிலம்
(C) தமிழ் (அ) ஆங்கிலம்
(D) எந்த மொழியிலும்
விடை: (B) ஆங்கிலம்
24.குற்றப் புலனாய்வுத்துறை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது அவை
(A) குற்றப்பிரிவு மற்றும் ”பிரிவு
(B) குற்றப்பிரிவு மற்றும் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு
(C) குற்றப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு
(D) நுண்ணறிவுப்பிரிவு மற்றும் குற்றப்பிரிவு
விடை: குற்றப்பிரிவு மற்றும் ”பிரிவு
25.குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை எந்த சட்டங்களை செயலுறுத்த செயல்படுகிறது?
(A) மனித உரிமை
(B) குடியுரிமை சட்டங்கள்
(C) உணவுப் பொருள்கள் நடமாட்டம் இன்றியமையாப் பொருள்கள் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள்
(D) சமூக நீதி மற்றும் மனித உரிமை
விடை: (C) உணவுப் பொருள்கள் நடமாட்டம் இன்றியமையாப் பொருள்கள் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள்
26.காவல் ஆய்வாளர்களுக்கெதிரான ஒழுங்கு நடவடிக்கையில் வாய்மொழி விசாரணை அல்லது நேர்முகக் கேட்டல் நிகழ்வுகளில் எந்த நிலையிலுள்ள அலுவலர் இருக்க வேண்டும்?
(A) காவல்துறை துணை தலைவர்
(B) காவல் துணைக்கண்காணிப்பாளர்”
(C) காவல் கண்காணிப்பாளர் (அ) காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் (அ) காவல் கூடுதல் கண்காணிப்பாளர்
(D) அரசிதழ் பதிவு பெற்ற ஒரு காவல் அலுவலர்
விடை: (D) அரசிதழ் பதிவு பெற்ற ஒரு காவல் அலுவலர்
27.அலகு குத்தலும் சம்பந்தப்பட்ட இதர பழக்கங்களும் எந்த காவல்நிலை ஆணையின்படி தடை செய்யப்பட்டுள்ளது?
(A) காவல் நிலை ஆணை எண் 700
(B) காவல் நிலை ஆணை எண் 701.
(C) காவல் நிலை ஆணை எண் 702
(D) காவல் நிலை ஆணை எண் 703
விடை: (B) காவல் நிலை ஆணை எண் 701
28.மாநகர் காவல் ஆணையரகங்களில் சார்பு ஆய்வாளர்களின் மந்தனக் கோப்பு யாரால் பராமரிக்கப்பட வேண்டும்?
(A) காவல் ஆணையாளர்
(B) காவல் துணை ஆணையாளர்
(C) காவல் உதவி ஆணையாளர்
(D) காவல் ஆய்வாளர்
விடை: (B) காவல் துணை ஆணையாளர்
29.காவல் நிலைய ஆணை எண் 657ன் படி குற்றவியல் வழக்கு நடைமுறை விதித்தொருப்பிள் எந்த பிரிவின்படி ஒரு குற்றவியல் நடுவர் முன்பு கைதிகளை ஆஜர் செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட கால வரம்பினின்று ஞாயிற்றுகிழமைகள் விலக்கப்படவில்லை
(A) 55 கு.வி.முச
(B) 56 கு.வி.முச
(C) 57 கு.வி.முச
(D) 58 கு.வி.முச
விடை: (C) 57 கு.வி.முச
30.தமிழ்நாடு காவல் பணியிலிருந்து காவல் கண்கானிப்பாளர்களுக்கு இந்திய காவல் பணிக்கு நிலை உயர்வு வழங்க எத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு?
(A) 25%
(B) 30%
(C) 33%
(D) 18%
விடை: (A) 25%
31.இரண்டு பிரிவுகள் அடங்கிய ஒரு கண்ணீர்ப்புகை அணியின் காவல் ஆளினர்களின் எண்ணிக்கை
(A) 1 தலைமை காவலர் + 4 காவலர்கள்
(B) 1 தலைமை காவலர் 5 காவலர்கள்
(C) 1 தலைமை காவலர் + 6 காவலர்கள்
(D) 1 தலைமை காவலர் + B காவலர்கள்
விடை: (C) 1 தலைமை காவலர் + 6 காவலர்கள்
32.காவல் நிலையங்களுக்கு எத்தனை ரவைத் தோட்டாக்கள் வழங்கப்படுகிறது?
(A) 300 ரவைத் தோட்டாக்கள்
(B) 200 ரவைத் தோட்டாக்கள்
(C) 400 ரவைத் தோட்டாக்கள்
(D) 410 ரவைத் தோட்டாக்கள்
விடை: (D) 410 ரவைத் தோட்டாக்கள்
33.நகரம் மற்றும் மாவட்டங்களில் கருவிகலபட்டி தணிக்கை யாரால் மேற்கொள்ளப்படும்?
(A) நிலைய பொறுப்பு அலுவலர்
(B) காவல் ஆய்வாளர்
(C) காவல் துணைக்கண்காணிப்பாளர் / உதவி காவல்ஆணையர்
(D) காவல் கண்காணிப்பாளர் / காவல் ஆணையர்
விடை: (A) நிலைய பொறுப்பு அலுவலர்
34.எப்போது திறமைச் சுடுதல் வில்லை வழங்கப்படும்
(A) சுடுதல் போட்டியில் வெற்றி பெறும் போது
(B) சுடுதல் போட்டியில் கலந்து கொண்டால்
(C) சுடுதல் போட்டி முடிவடைந்ததும்
(D) ஆண்டு பயிற்சி முடிந்தவுடன்
விடை: (D) ஆண்டு பயிற்சி முடிந்தவுடன்
35.காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு எத்தனை தோட்டாக்கள் சுட வேண்டும்?
(A) 50 தோட்டாக்கள்
(B) 45 தோட்டாக்கள்
(C) 55 நோட்டாக்கள்
(D) 60 தோட்டாக்கள்
விடை: (D) 60 தோட்டாக்கள்
36.வட்ட காவலர்களுக்கு ஒவ்வொரு வாரத்திலும் எத்துனை நாட்கள் பணியில்லா நாள் பிரித்துக் கொடுக்கப்படும்?
(A) இரண்டு நாட்கள்
(B) ஒரு நாள்
(C) பணியில்லா நாட்கள் கிடையாது
(D) மூன்று நாட்கள்
விடை: (B)ஒரு நாள்
37.பகல் காப்பு அலுவலின் நேரம் என்ன?”
(A) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
(B) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை
(C) காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை
(D) காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை
விடை: (C) காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை
38.சாலை வழிக்காவலர்கள் அவர்கள் கடந்து செல்லும்போது எங்கு அறிவித்துக் கொள்ள வேண்டும்?
(A) அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்கள்
(B) தனிப்பிரிவு அலுவலகம்
(C) அனைத்து காவல் நிலையங்கள்
(D) அறிவித்துக் கொள்ள வேண்டாம்.
விடை: (C)அனைத்து காவல் நிலையங்கள்
39.ஒரு கைதியை மாலை 7 மணிக்கும் காலை 7 மணிக்குமிடையே சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வழிக்காவல் செய்து கொண்டு போக வேண்டியிருக்கும் பொழுது எந்த காவல் நிலையத்தில் தற்காலிகமாக அடைத்து வைக்கப்பட வேண்டும்.
(A) எழும்பூர் ரயில் காவல்நிலையம்
(B) எழும்பூர் காவல்நிலையம்
(C) வேப்பேரி காவல்நிலையம்
(D) ரயில்வே பாதுகாப்புப்படை
விடை: (C) வேப்பேரி காவல்நிலையம்
40.தமிழ்நாடு காவல் சார்நிலைப் பணியாளர்கள் தொகுதியின் உறுப்பினர் ஒருவர், ஒரு குற்றவியல் குற்றச்சாட்டின் மேலோ மற்றபடியோ 48 மணி நேரத்திற்கு மேற்பட்ட கால அளவுக்கு சிறை வைக்கப்பட்டால் அவரை
(A) உடன் தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
(B) விட்டோடி ஆணை பிறப்பிக்க வேண்டும்
(C) பணிநீக்கம் செய்ய வேண்டும்
(D) பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டவராக கருத வேண்டும்.
விடை: (D) பணியிடை நீக்கத்தில் வைக்கப்பட்டவராக கருத வேண்டும்.
41.ஆயுதங்கள், வெடிக் காவியங்கள் உட்பட ஆயுதப்படையில் உள்ள அனைத்துப் பொருட்களின் ஏலம் மற்றும் பயனற்றவை தொடர்பான பதிவேடுகளை யார் பேணி வருவார்?
(A) ஆயுதப்படை ஆய்வாளர் (பண்டகம்)
(B) ஆயுதப்படை ஆய்வாளர் (நிறுமம்)
(C) ஆயுதப்படை ஆய்வாளர் (வாகனப்பிரிவு)
(D) காவல் துணைக்கண்காணிப்பாளர் (ஆயுதப்படை)
விடை: (A) ஆயுதப்படை ஆய்வாளர் (பண்டகம்)
42.எந்த அலுவலரால் காவல் ஆய்வாளர் (வகை 11)க்கு தற்செயல் விடுப்பு ஒப்பளிப்பு செய்ய Գրեգ Ան 7-
(A) காவல் துணை கண்காணிப்பாளர் (வகை
(B} காவல் துணைக்கண்காணிப்பாளர் (AR)
(C) காவல் கண்கானிப்பாளர்
(D) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
விடை: (B) காவல் துணைக்கண்காணிப்பாளர் (AR)
43.காவல் அலுவலர்கள் தங்களது சார்நிலைப் பணியாளர்களுக்கு பண்பு அல்லது நடத்தைச் சான்றிதழ்கள் அளிக்கலாமா?
(A) பண்பு அல்லது நடத்தைச் சான்றினை காவல்துறை தலைவரின் அனுமதி பெற்று அளிக்கலாம்.
(B) பண்பு அல்லது நடத்தைச் சான்றினை அவர்களது விருப்பப்படி வழங்கலாம்
(C) பண்பு அல்லது நடத்தைச் சான்றிதழ்களை அளிக்கலாகாது என தடை செய்யப்பட்டுள்ளது
(D) காவல் கண்காணிப்பாளர் அனுமதி பெற்று வழங்கலாம்.
விடை: (C) பண்பு அல்லது நடத்தைச் சான்றிதழ்களை அளிக்கலாகாது என தடை செய்யப்பட்டுள்ளது
44.காவல் அலுவலர்கள் இந்திய துணைப்படை அல்லது இந்திய ரிசர்வ் படை அல்லது காவல்படையில் பதிவு செய்யலாமா?
(A) பதிவு செய்து கொள்ளலாம்.
(B) இந்திய படைப்பிரிவுகள் விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம்.
(C) இந்திய அரசின் அனுமதி பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.
(D) பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை
விடை: (D) பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை
45.தமிழ்நாடு காவல்நிலை ஆணை (புதிய பதிப்பு) எண். 145ல் என்ன பொருள் சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) காவல்துறையினர் சித்ரவதை செய்தல்
(B) காவல் நிலையங்களில் காவல் துறையினர் மரணம் விளைவித்தல்
(C) காவல் உட்கோட்ட அலுவலர்கள் வார அறிக்கையில் அறிக்கை செய்ய வேண்டிய வழக்குகள்
(D) காவல் கண்காணிப்பாளர் வார அறிக்கையில் அறிக்கை செய்ய வேண்டிய வழக்குகள்
விடை: (C) காவல் உட்கோட்ட அலுவலர்கள் வார அறிக்கையில் அறிக்கை செய்ய வேண்டிய வழக்குகள்
46.காவல் துணைக்கண்காணிப்பாளர் (DSP) மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர் (ASP) உட்கோட்டத்தில் பணி செய்யும்போது துறைரீதியான தகுதி நிலை
(A) சம்மான தகுதி நிலை
(B) காவல் உதவிக்கண்காணிப்பாளர் முதுநிலை கொண்டவராவர்
(C) வயதை பொறுத்து தகுதி நிலை நிர்ணயிக்கப்படும்
(D) பணி நியமனம் நாளைப் பொறுத்து தகுதி நிலை நிர்ணயிக்கப்படும்
விடை: (A) சம்மான தகுதி நிலை
47.காவல் பணியாளர்களின் தனிப்பட்ட நடத்தை குறித்து விவரிக்கப்பட்டுள்ள விதி
(A) தமிழ்நாடு காவல் சார்நிலைப் பணியாளர்கள் (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1955
(B) தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள் 1973
(C) தமிழ்நாடு சார்நிலை காவல் பணி அலுவலர்கள் நடத்தை விதிகள் 1964
(D) தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) விதிகள் 1955
விடை: (C) தமிழ்நாடு சார்நிலை காவல் பணி அலுவலர்கள் நடத்தை விதிகள் 1964
48.காவல்துறை அதிகாரிகள் அரசுடன் நேரடியாக தொடர்பு கொள்ள எந்த காவல் நிலை ஆணையின் படி தடை செய்யப்பட்டுள்ளது7″
(A) காவல் நிலை ஆணை எண் 101
(B) காவல் நிலை ஆணை எண் 201
(C) காவல் நிலை ஆணை எண் 301
(D) காவல் நிலை ஆணை எண் 111
விடை: (D) காவல் நிலை ஆணை எண் 111
49.தண்டனையை ஒத்திவைக்கும் முறையானது எந்த அளவுக்கு பொருந்தும் ?
(A) சார்நிலைக் காவல் பணியாளர்கள்
(B) காவல் மேல்நிலை அலுவலர்
(C) அரசிதழ் பதிவுப்பெற்ற காவல் அலுவலர்
(D) அனைத்துக் காவல் அலுவலர்கள்
விடை: (A) சார்நிலைக் காவல் பணியாளர்கள்
50.காவல்நிலை ஆணை எண். 286ன்படி தற்செயல் விடுப்பை ஈடுசெய் விடுப்பு மற்றும் விடுமுறை அனுமதி உட்பட அதிகபட்சமாக எத்தனை நாள் அனுபவிக்க முடியும்?
(A) 12 நாட்கள்
(B) 20 நாட்கள்
(C) 07 நாட்கள்
(D) 10 நாட்கள்
விடை: (D) 10 நாட்கள்
51.”போலி பணத்தாள்” குற்றங்களின் ஆய்வைக் கண்காணிப்பதுடன் சாத்தியமான போதெல்லாம் யாரால் நேரில் விசாரணை செய்யப்பட வேண்டும்?
(A) காவல் துணை கண்காணிப்பாளர்
(B) காவல் ஆய்வாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
விடை: (C) காவல் கண்காணிப்பாளர்
52.நெடுஞ்சாலை வழிப்பறிக் கொள்ளை குற்றங்கள் தொடர்பான வழக்குகள் யாரால் நேரில் விசாரணை செய்யப்பட வேண்டும்?
(A) காவல் துணை கண்காணிப்பாளர்
(B) காவல் ஆய்வாளர்
(C) காவல் கண்காணிப்பாளர்
(D) கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
விடை: (A) காவல் துணை கண்காணிப்பாளர்
53.விரல்ரேகை பதிவுப் பிரிவை சரக காவல் துறை துணைத் தலைவர் ஆய்வு செய்யப்பட வேண்டிய கால அளவுகள்
(A) ஆறுமாதங்களுக்கொருமுறை
(B) ஆண்டுதோறும்
(C) இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை
(D) இரண்டு மாதங்களுக்கொருமுறை
விடை: (B) ஆண்டுதோறும்
54.மாவட்டத்தின் குற்றவியல் நிர்வாகத்திற்கும். சட்டம் ஒழுங்கு இவற்றைப் பேணுவதற்கும் முதன்மை பொறுப்புள்ளவர் யார்?
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) மாவட்ட நீதிபதி
(C) மாவட்ட ஆட்சித்தலைவர்
(D) வருவாய் கோட்ட அலுவலர்
விடை: (C) மாவட்ட ஆட்சித்தலைவர்
55.சென்னை மாநகருக்கு வரும் வழிக்காவலர்கள் எங்கு அறிக்கை செய்ய வேண்டும்?
(A) காவல்துறை இயக்குநர் அலுவலகம்
(B) எழும்பூர் காவல் நிலையம்
(C) காவல் ஆணையாளர் அலுவலகம்
(D) பூக்கடை காவல் நிலையம்
விடை: (D) பூக்கடை காவல் நிலையம்
56.சென்னை மாநகருக்கு வரும் வழிக்காவலர், அவர்களது ஆயுதங்களையும், உடுப்புகளையும் எங்கு வைத்துக் கொள்ளலாம்?
(A) காவல் ஆணையர் அலுவலகத்தில்
(B) சிறு படைக்கல அலுவலகம்
(C) பூக்கடை காவல் நிலையம் (அ) வாலாஜா ரோடு காவல் நிலையம்
(D) சென்னையிலுள்ள ஏதாவதொரு காவல் நிலையம்
விடை: பூக்கடை காவல் நிலையம் (அ) வாலாஜா ரோடு காவல் நிலையம்
57.வழிக்காவல் பயணத்தின் போது மாலை நேரத்திற்கு பின்பு பெருஞ் செல்வத்தினை மாற்றி ஏற்ற அனுமதிக்கலாமா?
(A) அனுமதிக்கலாம்.
(B) மறுக்க வேண்டும்.
(C) தேவைப்பட்டால் அனுமதிக்கலாம்.
(D) உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று அனுமதிக்கலாம்
விடை: (B) மறுக்க வேண்டும்
58.அனைத்து அரசாங்க கடிதத் தொடர்பாலும் அரசு பதிவுகளிலும் இந்திய திருமணம் முடிந்த பெண்களின் பெயர்களுக்கு முன் என்ன பட்டங்களைச் சேர்க்க வேண்டும்?
(A) திருமதி
(B) ஸ்ரீமதி
(C) திருவாட்டி
(D) அம்மா
விடை: (A) திருமதி
59.காவல் நிலையத்தில் நிர்வாகத்தை நடத்துவதற்கு உத்திரவாதமுள்ள அலுவலர் யார்?
(A) வட்ட ஆய்வாளர்
(B) சார்பு ஆய்வாளர்
(C) காவல் நிலைய எழுந்தர்
(D) மூத்த தலைமைக் காவலர்
விடை: (B) சார்பு ஆய்வாளர்
60.ஒரு காவலர் ஒவ்வொரு ஆண்டிலும் சுடப்பட வேண்டிய குண்டுத் தோட்டாக்கள் எத்தனை? வெற்றுத் தோட்டாக்கள் எத்தனை?”
(A) 20 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
(B) 30 குண்டுத் தோட்டாக்கள் 15 வெற்றுத் தோட்டாக்கள்
(C) 10 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
(D) 25 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
விடை: (D) 25 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
61.காவல் கண்காணிப்பாளர்களின் வார அறிக்கை பகுதி 11 வ் கீழ்க்கண்ட வழக்குகளில் எந்த வழக்கினை அறிக்கை செய்ய வேண்டும்?
(A) கூட்டுக் கொள்ளை
(B) சதி வழக்குகள்
(C) இந்திய தண்டனைச் சட்டபிரிவுகள் 400, 401ன் கீழான வழக்குகள்
(D) வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகள் 3,4 -ன் கீழான குற்றங்கள்
விடை: (A) கூட்டுக் கொள்ளை
62.காவல் நிலையங்களின் பொறுப்பு வகிக்கும் காவல் ஆய்வாளர் காவல் நிலையங்களை ஆய்வு செய்யப்பட வேண்டிய காலக்கெடு
(A) ஆண்டுதோறும்
(B) ஆறுமாதங்களுக்கொரு முறை
(C) இரண்டு மாதங்களுக்கொரு முறை
(D) ஒவ்வொரு மாதமும்
விடை: (B) ஆறுமாதங்களுக்கொரு முறை
63.கெட்ட நடத்தை அவ்வாத குற்றம் ஒன்றிற்கு குற்றம் செய்தநாக தீர்வுக்குட்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட காவல் அலுவலர் ஒருவருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
(A) பதவி இறக்கம்
(B) சுட்டாய ஓய்வு
(C) சம்பள குறைப்பு
(D) பணி நீக்கம் / பணியறவு
விடை: (B) சுட்டாய ஓய்வு
64.காவல் துறையினர் சிதரவதை செய்ததாக (அ) மரணம் விளைவித்ததற்காக (அ) கொடுங்காயம் ஏற்படுத்தியதாக குற்றச் சரத்துக்களின் பேரில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை எந்த காவல் ஆணை எண்ணில் குறிப்பிடப்பட்டுள்ளது?
(A) காவல் நிலை ஆணை எண். 64.
(B) காவல் நிலை ஆணை எண். 90
(C) காவல் நிலை ஆணை எண். 151
(D) காவல் நிலை ஆணை எண். 82:
விடை: (C) காவல் நிலை ஆணை எண். 151
65.தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் 1959 பிரிவு 10ன் படி துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய சிறு குற்றங்களுக்காக அச்சட்டத்தின் கீழ் காவல் அலுவலர்கள் மீது குற்ற வழக்கீடு செய்யலாமா?
(A) குற்ற வழக்கீடு செய்யமுடியும்
(B) அது சட்டமுரணானதாகும்
(C) இது சட்டப்படியாகும்
(D) குற்ற வழக்கீடு செய்ப முடியாது
விடை: (B) அது சட்டமுரணானதாகும்
66.எந்த ‘காவல் நிலைய ஆணையின்படி பெருங் குற்றச்சாட்டு தொடர்பான ஒழுங்கு நடவடிக்கைகளில் இறுதிஆணை பிறப்பிக்கும் முன் நிகழ்ச்சிப்பதிவின் நகலினை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும்?
(A) காவல் நிலை ஆணை எண் 90
(B) காவல் நிலை ஆணை எண் 145
(C) காவல் நிலை ஆணை எண் 151
(D) காவல் நிலை ஆணை எண் 88
விடை: (D) காவல் நிலை ஆணை எண் 88
67.சிறு முக்கியத்துவம் கொண்ட குற்றங்களில் வழக்கு தொடர்வது யாருடைய கடமையின் பாகமாகும்?
(A) சார்பு ஆய்வாளர்
(B) தலைமைக் காவலர்
(C) காவல் ஆய்வாளர்
(D) நிலைய பொறுப்பு அலுவலர்
விடை: (B) தலைமைக் காவலர்
68.இயன்றளவு எந்த பதிவு நிலைக்கு குறையாத அதிகாரி அனைத்து குற்ற விசாரணைகளையும் நடத்த வேண்டும்?
(A) காவல் ஆய்வாளர்
(B) காவல் சார்பு ஆய்வாளர்
(C) தலைமைக் காவலர்
(D) காவல் துணைக் கண்காணிப்பாளர்
விடை: (B) காவல் சார்பு ஆய்வாளர்
69.எந்த காவல் நிலை ஆணையின்படி ஒரு பணியிடை நீக்க உத்தரவை அதைப் பிறப்பித்த அதிகாரியாவது அல்லது அவருக்கு மேற்பட்ட எந்த அதிகாரியாவது எச்சமயத்திலும் revoke செய்யலாம்?”
(A) காவல் நிலை ஆணை எண் 91.
(B) காவல் நிலை ஆணை எண் 90
(C) காவல் நிலை ஆணை எண் 81
(D) காவல் நிலை ஆணை எண் 10
விடை: காவல் நிலை ஆணை எண் 90
70.காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தினையும் குற்றவியல் நடுவர்கள் மற்றும் வட்டாட்சியர்களை முகவரியிடும் போது பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள்
(A) அய்யா, பணிந்தனுப்பப்பட்டது மற்றும் மீளப்பணிந்தனுப்பப்பட்டது
(B) அய்யா,
(C) அய்யா, மேலனுப்பப்பட்டது
(D) அய்யா, மீள அனுப்பப்பட்டது
விடை: (A) அய்யா, பணிந்தனுப்பப்பட்டது மற்றும் மீளப்பணிந்தனுப்பப்பட்டது
71.ஒரு கடும் அமைதிக் குலைவு எதிர்பார்க்கப்பட்டால் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை யார் எடுக்க வேண்டும்?
(A) காவல் கண்காணிப்பாளர்
(B) உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்
(C) காவல் ஆய்வாளர் (சட்டம் (ம) ஒழுங்கு)
(D) நிலைய பொறுப்பு அலுவலர்
விடை: (C) காவல் ஆய்வாளர் (சட்டம் (ம) ஒழுங்கு)
72.காவல் அலுவலர் ஒருவர் குற்றம் ஒன்றிற்காக குற்றவாளியென தீர்வுக்குட்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அவருக்கு எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை வழங்கப்பட வேண்டும் ?
(A) காவல் நிலை ஆணை எண் 77
(B) காவல் நிலை ஆணை எண் 777
(C) காவல் நிலை ஆணை எண் 68
(D) காவல் நிலை ஆணை எண் 666
விடை: (C) காவல் நிலை ஆணை எண் 68
73.எந்த விதியின்படி காவல் சார்நிலை அலுவலரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யலாம்?”
(A) தமிழ்நாடு காவல் சார்நிலை பணி (ஒழுக்கம் மேல்முறையீடு) 1955 பிரிவு 3(b)
(B) தமிழ்நாடு காவல் சார்நிலை பணி மற்றும் (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 1955 பிரிவு 3(ப)
(C) தமிழ்நாடு காவல் சார்நிலை பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 1955 பிரிவு 3(c)
(D) தமிழ்நாடு சார்நிலை காவல் அலுவலர் நடத்தை விதிகள் 1964
விடை: (C) தமிழ்நாடு காவல் சார்நிலை பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 1955 பிரிவு 3(c)
74.இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 400. 401 கீழான குற்றங்களை சாத்தியமான போதெல்லாம் யார் நேரில் விசாரணை செய்ய வேண்டும்? ‘
(A) காவல் சார்பு ஆய்வாளர்
(B) காவல் ஆய்வாளர்
(C) காவல் துணைக் கண்காணிப்பாளர்
(D) காவல் கண்காணிப்பாளர்
விடை: (D) காவல் கண்காணிப்பாளர்
75.காவல் உட்கோட்ட அலுவலர்களின் வார அறிக்கை பகுதி IIல் கீழ்க்கண்ட வழக்குகளில் எந்த வழக்கினை அறிக்கை செய்ய வேண்டும்?
(A) ஒன்றுக்கு மேற்பட்ட மரணம் நிகழும் சாலை விபத்துகள்
(B) ஆதிதிராவிடர்களுக்கு கொடுங்காயம் விளைவிக்கும் வன்முறை
(C) ஆதிதிராவிடர்கள் பாதிப்புக்குள்ளாகும் வண்புணர்ச்சி
(D) ஆதிதிராவிடர்கள் சொத்தின் மீதான கடும் அழிப்பு (அ) தீவைப்பு
விடை: (A) ஒன்றுக்கு மேற்பட்ட மரணம் நிகழும் சாலை விபத்துகள்
76.காவல் நிலையங்களைப் பொறுப்பு வகிக்கும் காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையங்களை பார்வையிட வேண்டிய காலக்கெடு
(A) இருமாதங்களுக்கொரு முறை
(B) மாதந்தோறும்
(C) ஆறுமாதங்களுக்கொரு முறை
(D) காலாண்டுக்கொரு முறை
விடை : (B) மாதந்தோறும்
77.காவல்நிலையத்திலுள்ள காவலர்களுக்கு சுடுதல் பயிற்சியின் காலஅளவு என்ன?
(A) ஆண்டுக்கொரு முறை
(B) ஆறு மாதங்களுக்கொரு முறை
(C) மாதந்தோறும்
(D) மூன்று மாதங்களுக்கொருமுறை
விடை: (B) ஆறு மாதங்களுக்கொரு முறை
78.ஒரு சார்பு ஆய்வாளர் ஒவ்வொரு ஆண்டிலும் சுடப்பட வேண்டிய குண்டுத் தோட்டாக்கள் மற்றும் வெற்றுத் தோட்டாக்கள் எத்தனை?
(A) 20 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
(B) 30 குண்டுத் தோட்டாக்கள் 15 வெற்றுத் தோட்டாக்கள்
(C) 10 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
(D) 25 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
விடை: (D) 25 குண்டுத் தோட்டாக்கள் 10 வெற்றுத் தோட்டாக்கள்
79.ஒரு காவலர் 21 நாட்களுக்கு மேல் பணிக்கு வராமல் ஆஜரின்மையாக இருந்தால் அவரது பெயரை எந்த தேதியிலிருந்து நீக்க வேண்டும்?
(A) தகவல் பெறப்பட்ட நாளிலிலிருந்து
(B) ஆஜரின்மையாக 21 நாட்கள் முடிவடைந்த தேதியிலிருந்து
(C) ஆரின்மையான தேதி முதல்
(D) ஆணையிடப்பட்ட தேதி முதல்
விடை: (C) ஆரின்மையான தேதி முதல்
80.”தள்ளி வைக்கப்பட்ட தண்டனைகள்” எந்த காவல் நிலை ஆணையில் விவரிக்கப்பட்டுள்ளது?
(A) காவல் நிலை ஆணை எண் 97
(B) காவல் நிலை ஆணை எண் 98.
(C) காவல் நிலை ஆணை எண் 95
(D) காவல் நிலை ஆணை எண் 99
விடை: (A) காவல் நிலை ஆணை எண் 97