
SCIENCE TEST QUESTIONS
1. பொருத்துக.
சரியான விடையைக் குறியீடு மூலம் தருக.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) பால் சார்ந்த மரபுக் கடத்தல் 1. பிராக்கிபெலாஞ்சி
b) கொல்லி ஜீன்கள் 2. டர்னர்
c) அன்யூப்ளாய்டி 3. அல்காப்பேடா நியூரியா
d) திடீர்மாற்றம் 4. நிறக்குருடு
குறியீடுகள்
a b c d
A) 3 4 1 2
B) 3 2 1 4
C) 4 1 2 3
D) 4 2 3 1
2. மனிதனின் முன்கர பந்துக்கிண்ண மூட்டில் பங்கேற்கும் இரண்டு எலும்புகள் யாவை?
A) கிளாவிக்கிள் மற்றும் தோள்பட்டை எலும்பு
B) அல்னா மற்றும் கிளாவிக்கிள்
C) மேற்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு
D) மேற்கை எலும்பு மற்றும் கிளாவிக்கிள்
3. கீழ்க்காணும் வாக்கியங்களை ஆய்க.
விளக்கம் (A) : பாஸ்டரைசேஷன் என்பது திரவ உணவிலுள்ள நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்லும் முறையாகும்.
காரணம் (R) : இம்முறையில் மிகக் குறைந்த வெப்பத்தில் திரவ உணவு குளிரூட்டப்படுகிறது. இதில்
A) (A) மற்றும் (R) சரியானவை. (A) க்கு (R) சரியான விளக்கமாகும்.
B) (A) மற்றும் (R) சரியானவை. ஆனால் (A) க்கு (R) சரியான விளக்கமல்ல.
C) (A) சரியானது ஆனால், (R) தவறானது.
D) (A) தவறானது, ஆனால் (R) சரியானது.
4. ஹேவர்ஸியன் கால்வாய் காணப்படுவது
A) குருத்தெலும்புகளில்
B) நீர்ச்சுழற்சி மண்டலத்தில்
C) பாலூட்டிகளின் நீண்ட எலும்புகளில்
D) தண்டுவடத்தில்
5. மனித மூளையின் எப்பகுதி ஞாபகசக்தி, கல்வியறிவு, எண்ணிப் பார்த்தல் மற்றும் ஆய்ந்தறிதல் போன்ற வற்றின் மையமாக உள்ளது?
A) பெருமூளை
B) சிறுமூளை
C) ஹைப்போபைசிஸ்
D) தண்டுவடம்
6. ஸ்பெர்மேட்டிடுகளுக்கு உணவூட்டம் அளிப்பது
A) உட்கரு
B) சைட்டோபிளாசம்
C) குற்றிழை எப்பித்தீலியல் செல்
D) செர்ட்டோலிசெல்
7. எந்த வகை இரத்தம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது?
A) ஏ
B) பி
C) ஏபி
D) ஓ
8. பட்டியல் (1)ல் உள்ளவற்றை பட்டியல் (2)ல் உள்ளவற்றோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடு மூலம் விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் (1 ) பட்டியல் (2)
a) நுரையீரல் மீன் – 1. ஸ்பீனோடான்
b) பறக்கும் பல்லி. – 2. புரோடாப்டிரஸ்
c) உயிர் புதைப்படிவம் – 3. பார்பாயிஸ்
d) நீர் பாலூட்டி – 4. டிராக்கோவோலன்ஸ்
குறியீடுகள்
abcd
A) 3124
B) 2413
C) 1342
D) 4231
9. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
A) 206
B) 208
C) 210
D) 212
10. மரபியல் பொறியியலாக இருப்பது
A) குரோமோசோமில் மாற்றங்கள்
B) சைட்டோ குரோமோசோமில் மாற்றங்கள்
C) ஜீன்களில் மாற்றங்கள்
D) நியூக்ளியஸ் மாற்றங்கள்
11. தேனீக்கள் பொதுவாக உணர்ச்சி வசப்படக் கூடியதாக இருப்பது
A) சிகப்பு நிறத்திற்கு
B) பச்சை நிறத்திற்கு
C) புற ஊதா ஒளிக்கு
D) நிறத்திற்கு அல்ல
12. எந்த ஒன்று சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A) சீலோபிளாஸ்ட்டுலா – இருபக்க சம உறுப்புகள்
B) டிஸ்கோ பிளாஸ்டுலா – பன்றிக்கரு
C) தாய்சேய் இணைப்பிழையம் – கருவின் புறச் சவ்வுகள்
D) எபிபோலி – கரு வளர்ச்சியின்போது நடைபெறும் செல்லின் இடப்பெயர்வு
13. ஓர் அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி
A) பெரியதாகும்
B) வெடிக்கும்
C) பெருகும்
D) மறையும்
14. சிப்பி தொழிற்சாலைக்கு தீமை விளைவிக்கும் கடற்பஞ்சு எது?
A) ஸ்பான்ஜில்லா
B) ஹைலோநீமா
C) யூஸ்பான்ஜியா
D) கிளையோனா
15. எறும்புகள், ஒரு குறிப்பிட்ட திசையில் முற்றிலும் சரியான வகையில் ஊர்ந்து செல்வதன் காரணம்
1. தொடு உணர்ச்சி
2. வாசனை அறியும் உணர்ச்சி
3. பார்வை உணர்ச்சி
4. புத்தி நுட்ப உணர்ச்சி இவ்வாக்கியங்களில்
A) 1 மட்டும் சரியானது
B) 2 மட்டும் சரியானது
C) 1, 2 மற்றும் 3 சரியானவை
D) எல்லாமே சரியானவை
16. பிளாஸ்மோடியம் உண்டாக்குவது
A) குவார்டன் ஜூரம்
B) பினைன் ஜுரம்
C) மேலிக்னன்ட் மலேரியா
D) மைல்டு மலேரியா
17. சூழ்நிலை மண்டலத்திலுள்ள மொத்த கரிமப் பொருள்களின் அளவு
A) பயோமாஸ்
B) பயோஸ்பியர்
C) பயோம்
D) பயோசினோசிஸ்
18. நீரோட்டத்திற்கேற்ப அசையும் உயிரிகள்
A) திக்மோடாக்ஸிஸ்
B) ரியோடாக்ஸிஸ்
C) கைனசிஸ்
D) டிரோபிசம்
19. சரியான பதத்தினைக் குறிக்கவும்.
A) பாற்சுரப்பிகள், உரோமங்கள், புறச்செவிமடல், நகங்கள் பாலூட்டிகளில் உள்ளன.
B) பாற்கரப்பிகள், புறச்செவிமடல், பெக்டன் உரோமங்கள் பாலூட்டிகளில் உள்ளன.
C) பாற்சுரப்பிகள், புறச்செவிமடல், உரோமங்கள், உதரவிதானம் பாலூட்டிகளில் உள்ளன.
D) பாற்சுரப்பிகள், பற்கள், புறச்செவிமடல், சைனச் வீனோசஸ் பாலூட்டிகளில் உள்ளன.
20. அதிக அளவு வெப்பத்தைத் தவிர்க்க விலங்கினங்கள் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு என்ன பெயர்?
A) டயபாஸ்
B) எயிஸ்டிவேசன்
C) ஹைபர்னேசன்
D) சைக்ளோமார் போசிஸ்
21. நிறக்குருடு தன்மையுள்ள ஒரு தாய்க்கும், குறைபாடற்ற ஒரு தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகள் கீழ்க்கண்டவாறு இருப்பார்கள்.
A) குறைபாடற்ற மகள்களும், மகன்களும்
B) குறைபாடற்ற மகன்களும், நிறக்குருடு காரணிகளைக் கொண்டுள்ள மகள்களும்
C) நிறக்குருடு தன்மையுள்ள மகன்களும், நிறக்குருடு காரணிகளைக் கொண்டுள்ள மகள்களும்
D) நிறக்குருடு தன்மையுள்ள மகன்களும், மகள்களும்.
22. செல்லை முக்கியமாகக் கட்டுப்படுத்தும் அமைப்பாக இருப்பது
A) நியூக்ளியஸ்
B) மைட்டோகாண்டீரியா
C) ரிபோஸோம்
D) குளோரோ பிளாஸ்ட்
23. கார்போஹைடிரேட்டுகளை பிரித்தறிய உதவும் திசு- வேதியல் முறை சோதனை எது?
A) மெர்க்குரிக் புரோமோஃபினால் புளூ முறை
B) பெஸ்ட் கார்மின் முறை
C) பெர் அயோடிக் ஆசிட்- சிஃப் முறை
D) சூடான் பிளாக்- B முறை
24. கொழுப்பின் செரிக்கப்பட்ட பொருள்கள்
A) கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசரால்
B) கைலோ மைக்ரான்கள்
C) டிரைகிளைசெரிட்ஸ்
D) நியூட்ரல் கொழுப்புகள்
25. பட்டியல் I மற்றும் பட்டியல் II ஆகியவற்றை சரியாக பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு முறைப்படி விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
a) வைட்டமின் A1 – ஆன்டிராக்கிட்டிக்
b) வைட்டமின் B2. -ஆன்டிஸ்டெரிலிடிக்
c) வைட்டமின் D3. – ஆன்டிஜெராப்தால்மிக்
d) வைட்டமின் E4. – ஆன்டிநியூரிடிக்
குறியீடுகள்
A) 3412
B) 2341
C) 4231
D) 3124
26. மிகப் பெரியவை இவ்வகையைச் சார்ந்தவை வாழும் விலங்குகளில்
A) பறவைகள்
B) மீன்கள்
C) ஊர்வன
D) பாலூட்டிகள்
27. கீழ்க்கண்டவற்றில் எதுசரியாகப் பொருந்தியுள்ளது?
A) சார்லஸ் டார்வின். – பேன்ஜெனிசிஸ் கோட்பாடு
B) டீவரிஸ் – செல் கோட்பாடு
C) லாமார்க் – திடீர் மாற்றக் கொள்கை
D) ஸ்பென்சர் – தேற்றப் பண்புகளின் பரம்பரைக் கோட்பாடு
28. பட்டுப்புழு வளர்ப்புக்கு என்று பெயர்
A) எபிகல்ச்சர்
B) ஹார்ட்டி கல்ச்சர்
C) பிஸிகல்ச்சர்
D) செரிகல்ச்சர்
29. சூழ்நிலை தொகுப்பு கீழ்க்கண்டவற்றை கொண்டது
A) உயிர்வாழும் இனமும் அதன் சூழலும்
B) ஒரு பகுதியில் உள்ள அனைத்து தாவரங்களும் விலங்குகளும்
C) மாமிச பட்சினிகளும், தாவர பட்சினிகளும் அடங்கிய பகுதி
D) ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பாளர்கள்.
30. பொருத்துக.
பட்டியல் (1) பட்டியல் (2)
a) வெஜிடல் முனை – 1. பிளாஸ்டுலாவின் அணு
b) பிளாஸ்டோமியர் – 2. கருவுறாக் கருவளர்ச்சி
c) பார்தினோஜெனிஸிஸ் – 3. முட்தோலி முட்டை
d) ஜேனஸ் பச்சை. – 4. கரு உணவு
குறியீடுகள்
abcd
A) 1342
B) 3124
C) 4123
D) 3214
31. நிலப்பூச்சிகள் உற்பத்தி செய்வது
A) யூரியா
B) அம்மோனியா
C) ஹிப்புயூரிக் அமிலம்
D) யூரிக் அமிலம்
32. மாலைக்கண் நோய் வருவதற்குக் காரணம் பற்றாக்குறையே ஆகும்.
A) வைட்டமின் A
C) வைட்டமின் K
B) வைட்டமின் B
D) வைட்டமின் C
33. போனிலியா என்ற கடற்புழுவில், இளம் உயிரி ஆணாக மாறுவதன் காரணம்
A) கடற்பஞ்சுகளின் குழாய்க்குள் தங்குவதால்
B) பெண் புழுவின் கருப்பையில் ஒட்டுவதால்
C) பெண் புழுவின் நீண்ட உறிஞ்சியில் தங்குவதால்
D) வேதியல் பொருளைச் சுரப்பதால்
34. எந்த இன மனிதனின் புதைப்படிவங்கள் இந்தியாவில் காணப்பட்டன?
A) ஹோமோபெங்காளன்சிஸ்
B) அஸ்டிரலோபித்திக்கஸ்
C) ராமாபித்திகஸ்
D) ஹோமோஹபிலிஸ்
35. “திடீர் மாற்றம்” கோட்பாட்டை விளக்கியவர் யார்?
B) மார்கன்
A) டார்வின்
C) லாமார்க்
D) ஹயூகே டி வெரிஸ்
36. விளையாட்டு வீரனுக்கு உடனடி சக்தி தரும் உணவு
A) குளுகோஸ்
B) வெண்ணெய்
C) புரதம்
D) வைட்டமின்
37. ஒரே மாதிரியான இரட்டைக் குழந்தைகள் பிறக்கக் காரணம்
A) கருவுற்ற ஒரு முட்டை இரண்டாகப் பிரிந்து விடுதல்
B) இரு வேறு முட்டைகள் கருவுறுதல்
C) ஒரு முட்டை இரு விந்தணுக்களால் கருவுறுதல்
D) ஒரே நேரத்தில் பல முட்டைகள் கருவுறுதல்
38. தேளின் எந்த உறுப்பில் விஷம் உள்ளது?
A) கால்
B) கை
C) வாய்
D) கொடுக்கு
39. சாதாரணமாக ஒரு சரிவிகித உணவு கிட்டத் தட்ட பெற்றிருக்க வேண்டியது
A) ஒரு நாளைக்கு 2,500 கலோரிகள்
B) ஒரு நாளைக்கு 3,000 கலோரிகள்
C) ஒரு நாளைக்கு 3,500 கலோரிகள்
D) ஒரு நாளைக்கு 4,000 கலோரிகள்
40. எலும்புகள் மற்றும் பற்களில் முக்கியப் பொருளாக இருப்பது எது?
A) கால்சியம் கார்பனேட்
B) கால்சியம் ஃபாஸ்ஃபேட்
C) கால்சியம் சல்ஃபேட்
D) கால்சியம் நைட்ரேட்
41. கிளாக்கிடியம் இன உயிரி
A) ஆரிலியாவுடையது
B) நன்னீர் மட்டியுடையது
C) இறாலுடையது
D) கடற்பஞ்ஜினுடையது
42. டென்டாண்கள்
A) தசையை எலும்புடன் இணைக்கிறது.
B) எலும்பை எலும்புடன் இணைக்கிறது.
C) உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கிறது.
D) இதில் ஏதுமில்லை
43. அடினோஃபிஸிஸ்……ஒரு பகுதி
A) சிறுநீரகத்தின்
B) பிட்டியூட்டரியின்
C) கணையத்தின்
D) தைராய்டின்
44. கழிவுகளை அகற்றுவதற்கான சிறந்த முறை
A) புழு வளர்த்தல்
B) தகனம் செய்தல்
C) குழிகளை நிரப்புதல்
D) எரித்தல்
45. சாதாரணமாக மனித இரத்த பிளாஸ்மாவில் அடங்கியுள்ள நீரின் விழுக்காடு அளவு மாறுபாடு
A) 60- 64
B) 70- 75
C) 80- 82
D) 91 – 92
46. ஜீன் சடுதி மாற்றம் நடைபெறும் இடம்
A) டியாக்ஸிரைபோஸ் நியூக்ளியிக் அமிலம்
B) மைட்டோ கோன்ட்ரியான்
C) குளோரோப்ளாஸ்ட்
D) ரைபோசோம்
47. ‘அக்ரோமெகாலி’ இந்த சுரப்பியின் ஒழுங்கற்ற சுரத்தலினால் ஏற்படுகிறது?
A) பிட்யூட்டரி
B) தைராய்டு
C) அட்ரீனல்
D) கணையம்
48. A, B, O இரத்த வகைகளைக் கண்டு பிடித்தவர்
A) சார்லஸ் டார்வின்
B) கிரிகர் மெண்டல்
C) கார்ல் லாண்ட்ஸ்டெயினர்
D) வாட்சன்
49. மனிதனுக்கு நெருங்கிய உறவுடன் உயிர் வாழ்வது
A) மனித வாலில்லா குரங்குகள்
B) பழைய உலக குரங்குகள்
C) புதிய உலக குரங்குகள்
D) இவற்றில் எதுவுமில்லை
50. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி
1. ஹீமோகுளோபின், முதுகெலும்புள்ள பிராணிகளிலுள்ள இரத்த நிறமியாகும்.
2. ஹீமோகுளோபின் ஒரு பிராணவாயு தாங்கியாகும்.
3. ஹீமோகுளோபின் ஒரு கார்போஹைட்ரேட்டாகும்.
4. ஹீமோகுளோபின் நீலநிறத்தில் இருக்கும்.
மேற்கூறிய கூற்றுகளில்
A) 1 மட்டும் சரி
B) 1, 2 சரி
C) 1, 2, 3 சரி
D) எல்லாம் சரி