Course Content
SCIENCE TEST QUESTIONS
50 QUESTIONS
0/1
SCIENCE DAY – 28
About Lesson

SCIENCE TEST QUESTIONS 

 

1. வாழை மரத்தின் மஞ்சரி தண்டு கீழ்க்கண்டவற்றில் எந்த நோயை குணப்படுத்தப் பயன்படுகிறது?

A) சிறு நீரகத்தில் கல்நீக்கம் செய்ய

B) அதிகபடியான கொழுப்பை நீக்க

C) தோல் நோய்களைக் குணப்படுத்த

D) சுவாச நோய்களைக் குணப்படுத்த

 

 

2. பிரம்மாண்டமான தன்மை ஏற்படக் காரணம்

A) ஆட்டோ – பாலி பிளாயிடி

B) இரட்டை எண் குரோமோசோம்

C) ஒற்றை எண் குரோமோசோம்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

3. ஜிம்னோஸ்பெர்ம்களில் பசுமை மாறாத தாவர உடலம் காணப்படும் நிலை

A) கேமெட்டோபைட் நிலை

B) ஸ்போரோபைட் நிலை

C) (A) மற்றும் (B) இவை இரண்டும்

D) இவைகளில் எதுவுமில்லை

 

 

4. வெப்ப ஊற்றுகளில் ஏறத்தாழ 85°C வெப்ப நிலையில் வாழும் ஆல்காக்கள்

A) ஹேலோபைட்டிக் ஆல்கா 

B) லித்தோபைடிக் ஆல்கா

C) தெர்மல் ஆல்கா 

D) ஸப்டெரேனியன் ஆல்கா

 

 

5. குளோரெல்லா ஆல்கா, அதன் செல் அமைப்பு அடிப்படையில் எந்த பிரிவை சார்ந்தது?

A) சுயஜீவிகள்

B) யூகேரியாட்டுகள்

C) புரோகேரியாட்டுகள்

D (A) மற்றும் (B) இவை இரண்டும்

 

 

6. பருத்தி இழை எதிலிருந்து கிடைக்கிறது?

A) தண்டிலிருந்து

B) வேரிலிருந்து

C) இலையிலிருந்து

D) கனியிலிருந்து

 

 

7. ‘குளம் பட்டு’ என்ற பொதுப் பெயருடைய ஆல்கா

A) கிளாமிடோபோனாஸ் 

B) ஆஸிலடோரியா

C) அனபீனா

D) ஸ்பைரோகைரா

 

 

8. ஈ. கோலியை தாக்கும் வைரசானது

A) சைனோபேஜ்

B) மைக்கோபேஜ்

C) கோலிபேஜ்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

9. பால் இனப்பெருக்கம் நடைபெறாத வகை ஆல்கா

A) நீலப்பசும்பாசி

B) பச்சை ஆல்கா

C) பழுப்பு ஆல்கா

D) சிவப்பு பாசி

 

 

10. உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் ஈஸ்ட்டின் வளர்ப்பு எதற்கு பயன்படுகிறது?

A) கரிம அமிலங்கள்

B) எத்தில் ஆல்கஹால்

C) CO2

D) வைட்டமின்கள் 

 

 

11. லெகூமினேஸியஸ் தாவர வேர்களில் நைட்ரஜனை நிலைநிறுத்த உதவுபவை 

A) குளோரோபில்

B) பாக்டீரியா

C) CO2

D) இவை அனைத்தும்

 

 

12. ரைசோபியம் காணப்படும் வேர்முண்டுகள் உள்ள தாவர குடும்பம்

A) மால்வேஸியி

B) பேபேஸியி

C) ஆஸ்டிரேசியி

D) மியுஸேஸியி

 

 

13. குளோரோபிலில் உள்ள உலோகம்

A) சோடியம்

B) தாமிரம்

C) மக்னீஷியம்

D) இரும்பு

 

 

14. வைரஸ்கள் என்பவை வேதியல் ரீதியாக

A) கார்போஹைட்ரேட்டுகள்

B) நியூக்ளியோ புரதங்கள்

C) லிப்போ பாலி சாக்கரைடுகள்

D) கிளைக்கோ புரதங்கள்

 

 

15. தாவரத்தில் பூங்கொத்து, பூக்கள், கனிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றைப் படிப்பது

A) தாவர செயலியல்

B) தாவர உள்ளமைப்பியல்

C) உடலக புற அமைப்பியல்

D) இனப்பெருக்க புற அமைப்பியல்

 

 

16. அடியாந்தம் ஸ்போரோபைட் நிலைத் தாவங்கள் இவ்வகை குரோமோசோம்களைப் பெற்றிருக்கும்

A) டிரிப்ளாய்டு 

B) ஹப்லாய்டு

C) டிப்ளாய்டு

D) பாலி பிளாய்டு

 

 

17. பாலிடிரைக்கம் தாவரமானது கீழ்க்கண்ட எந்த குழுவை சார்ந்த தாவரம்?

A) டெரிடோபைட்டா

B) ஜிம்னோஸ்பெர்மே

C) பிரையோபைட்டா

D) ஆஞ்சியோஸ்பெர்மே

 

 

18. பெனிசீலியம் என்பது கீழ்க்கண்ட பொதுவான வகையை சார்ந்தது

A) ஆல்கா

B) பாக்டீரியா

C) வைரஸ்

D) பூஞ்சை

 

 

19. “குளோரோமைசீன்” என்ற மருந்து எந்த வியாதியை குணப்படுத்தும்?

A) வயிற்றுப் போக்கு

B) காசநோய்

C) டைபாய்டு

D) இவற்றுள் எதுவுமில்லை

 

 

20. உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள தாவர சிற்றினங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ

A) 40,000

B) 50,000

C) 4,00,000

D) 5,00,000

 

 

21. ஈரத்தை உறிஞ்சும் வேர்களுடைய தாவரம்

A) வாண்டா

B) ஆல்

C) பீட்ரூட்

D) காரட்

 

 

22. மைய அரிசி ஆய்வு நிறுவளம் அமைந்திருப்பது

A) கோயம்புத்தூர்

B) கட்டாக்

C) சிம்லா

D) திருவனந்தபுரம்

 

 

23. பரவல் என்பதன் விளக்கம்

A) நீர் மூலக்கூறுகள் தாழ் அடர்விலிருந்து உயர் அடர்வை நோக்கி செல்லுதல்

B) மூலக்கூறுகள் உயர் அடர்வு பகுதியிலிருந்து தாழ் அடர்வு பகுதிக்கு செல்லுதல்

C) ஒரு செல்லிலிருந்து மற்றுமொரு செல்லுக்கு மூலக்கூறுகளின் அசைவு

D) இறந்த செல்லில் நீர் மூலக்கூறு அசைவுகள்

 

 

24. “அயோடின்” கீழ்க்கண்ட எந்த ஆல்காவிடமிருந்து எடுக்கப்படுகிறது?

A) ஜெலிடியம்

B) ஸ்பைரோகைரா

C) பியூகஸ்

D) வால்வாக்ஸ்

 

 

25. எய்ட்ஸ் நோயை உண்டாக்குவது

A) பாக்டீரியா

B) வைரஸ் 

C) புரோடோசோவா

D) பூஞ்சைகள்

 

 

26. மிகவும் வளர்ச்சியடைந்த தாவர இனம்

A) பூக்கும் தாவரங்கள்

B) ஜிம்னோஸ்பெர்ம்ஸ்

C) கிரிப்டோகேம்ஸ்

D) பினரோகேம்ஸ் 

 

 

27. ஸ்ட்ரெப்டோமைசின் மருந்து தயாரிக்கப் பயன்படும் மருந்து

A) ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிரிஸஸ்

B) S. வெனிசுலே 

C) S. எரித்ரஸ்

D) S. ஃப்ராடியே

 

 

28. உயரமான மரங்களின் அகலமான இலைகள் கீழ்கண்டவற்றில் எதனை ஈர்க்கின்றன?

A) மழை மேகங்கள்

B) நைட்ரஜன் வாயு

C) தூசி படிவுகள்

D) பறவைகள்

 

 

29. சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளைத் தோற்றுவிக்கின்றன இந்த நிகழ்ச்சி _________ எனப்படும்

A) அப்போகார்பி

B) பார்த்தினோகார்ப்பி

C) சின்கார்ப்பி

D) எகார்ப்பி

 

 

30. உடல் முழுவதும் கசை இழையைப் பெற்றுள்ள பாக்டீரியா _______ என்று அழைக்கப்படுகிறது

A) எட்ரைக்கஸ்

B) செஃபலோடிரைக்கஸ்

C) பெரிடிரைக்கஸ் 

D) ஆம்ப்பிடிரைக்கஸ்

 

 

31. இரண்டாம் நிலை வளர்ச்சி (அல்லது) குறுக்கு வளர்ச்சி இல்லாத தாவர வகை இனங்கள்

A) டெரிடோபைட்டுகள்

B) மானோகாட்டிலிடன்கள் 

C) ஜிம்னோஸ்பெர்ம்கள்

D) இரு வித்திலைத் தாவரங்கள்

 

 

32. நுண்ணோக்கியின் கீழ் முதலில் செல்லை பார்த்தவர்

A) ஹுக்

B) லீவன்ஹோயெக்

C) சீவான்

D) ஷெலிடென்

 

 

33. பூக்களின் மிக முக்கிய வேலை

A) ஒளி சேர்க்கை

B) நீராவிப் போக்கு

C) இனப்பெருக்கம்

D) கடத்தல்

 

 

34. நமது நாட்டின் மிகப் பெரிய உலர் தாவர தொகுப்பு காணப்படும் இடம்

A) பெங்களூர்

B) கொல்கத்தா

C) ஊட்டி

D) ஷில்லாங்

 

 

35. கீழ்க்கண்ட மலர்களில் எது பூக்காம்பு அற்றவை?

A) கடுகு

B) செம்பருத்தி

C) சூரியகாந்தி

D) ரோஜா

 

 

36. கீழ்க்கண்டவற்றில் வறண்ட நிலை தாவர அமைவுகளைப் பெற்றுள்ள தாவரம்

A) வாழை

B) புளி

C) எருக்கு

D) மா

 

 

37. பூச்சி உண்ணும் தாவரங்களில் கீழ்க்கண்ட எந்த தனிமம் குறைவாக இருக்கும்?

A) கால்சியம்

B) மக்னீசியம்

C) நைட்ரஜன்

D) அயோடின்

 

 

38. பெனிசிலிளைக் கண்டுபிடித்தவர்

A) லூயிஸ் பாஸ்டர் 

B) அலெக்ஸாண்டர் பிளெம்மிங்

C) ஜெ.சி.போஸ்

D) ஈ.ஜே.கோரே

 

 

39. செல்லில் உள்ள அதிக ஆற்றல் வெளிப்படுத்தக் கூடிய பாஸ்பேட் அணுவிடை கட்டுவுடைய மூலக்கூறு

A) ஆர், என். ஏ

B) டி. என். ஏ

C) எஃப் ஏ. டி

D) ஏ.டி.பி.

 

 

40. பால்பாஸ்சுரைசேஷன் செய்யப்படும் போது அழிக்கப்படுவது

A) வைட்டமின்கள்

B) புரதங்கள்

C) கொழுப்பு பொருட்கள்

D) நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள்

 

 

41. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவற்றிற்கான சிறப்பு பண்புகள்

A) கனிகள் உடையவை 

B) விதைகள் உடையவை

C) சூலகமற்றவை

D) வெஸல் உடையவை

 

 

42. “ஸ்மட்” நோயை உண்டாக்கும் பூஞ்சை

A) பக்ஸினியா

B) அல்புகோ

C) நியூரோஸ்போரா

D) யுஸ்டிலாகோ

 

 

43. ஆல்ஜின் தயாரிக்க பயன்படுபவை

A) டையாட்டம்கள்

B) சிகப்பு ஆல்கா

C) கேரா

D) பழுப்பு நிற ஆல்கா

 

 

44. ‘லெபினேரியா’ விலிருந்து எடுக்கப்படும் பொருள்

A) அகர்-அகார்

B) ஜெலாட்டின்

C) அயோடின்

D) எதிர் உயிரி

 

 

45. நிமோனியா நோயை உண்டாக்குபவை

A) ஆல்கா

B) பூஞ்சை

C) பாக்டீரியா

D) வைரஸ்கள்

 

 

46. ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் வாயு

A) ஹைட்ரஜன்

B) ஆக்ஸிஜன்

C) நைட்ரஜன்

D) குளோரின்

 

 

47. ஆல்காக்களில் காணப்படும் மூன்று முக்கிய பால் இனப்பெருக்க நிலைகள்

A) துண்டாதல், ஐஸோகேமஸ் மற்றும் ஊகேமி

B) ஐஸோகேமி, பாலிலா பெருக்கம் மற்றும் ஊாகேமி

C) ஐஸோகேமி, ஆப்ளனஸ்போர்கள் மற்றும் ஊகேமி

D) ஐஸோகேமி, அன்ஐஸோகேமி மற்றும் ஊகேமி

 

 

48. பருப்பு வகைகள் கீழ்க்காணும் எந்த தாவர குடும்பத்தை சார்ந்தவை?

A) குருசிபெரே

B) லெகுமினேசிய

C) மால்வேசிய

D) ரணன்குலேசியே

 

 

49. கீழ்க்கண்ட எந்த பிரிவு தாவரங்களில் சூலகத்தின் சூல்கள் மூடப்படாமலில்லை அல்லது திறந்ததில்லை?

A) ஜிம்னோஸ்பெர்ம்கள்

B) ஆஞ்ஜியோஸ்பெர்ம்கள்

C) டெரிடோபைட்டுகள்

D) மானோகாட்டிலிடன்கர்

 

 

50. பூச்சிகள் பூக்களை நாடி வருவதன் முக்கிய நோக்கம்

A) மகரந்த தூள்களை எடுக்க

B) தேனை சேகரிக்க

C) மகரந்தத் தாள்களை எடுக்க

D) சூற்பையை சேகரிக்க

 

 

Join the conversation