
SCIENCE TEST QUESTIONS
1. இயற்கையில் பெறப்படும் லிப்பிடுகள் எளிதில் கரைவது
A) எண்ணெயில்
B) நீரில்
C) பாதரசத்தில்
D) இவை எதுவுமில்லை
2. 2 NADH2 மூலக்கூறிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
A) 3
B) 4
C) 6
D)12
3. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.உறுதி (A): நைட்ரஜன் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், மரபு சார்ந்த மற்றும் இனப் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.காரணம் (R) : நைட்ரஜன் மலர்கள் தோன்றுதலை அழுத்துகிறது.கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத். தேர்ந்தெடு.
A) (A)ம் (R)ம் சரி, (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
B) (A)-ம் (R)-ம் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி, ஆனால் (R) தவறு
D) (A) தவறு, ஆனால் (R) சரி
4. அன்னாச்சிப் பழம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்
A) திரள்கனி
B) தனிக்கனி
C) பலகனி
D) கூட்டுக்கனி
5. எய்ட்ஸ் இவ்வாறு அழைக்கப்படுகிறது
A) நோய்
B) வைரஸ்
C) பாக்டீரியா
D) சின்ட்ரோம்
6. டிஎம்வி (TMV) என்பது
A) புகையிலை மொசைக் வைரஸ்
B) தக்காளி மொசைக் வைரஸ்
C) சிவப்பு முள்ளங்கி (Turnip) மொசைக் வைரஸ்
D) புகையிலை மல்டி வைரஸ்
7. பெருங்குடலில் காணப்படுகின்ற பாக்டீரியத்தின் பெயர்
A) டி. கோலை
B) பி. கோலை
C) ஈ. கோலை
D) எ. கோலை
8. லேகுமினஸ் வேர் முடிச்சுகளில் காணப்படுகின்ற பாக்டீரியாவின் பெயர்
A) ரைசோபியம்
B) அசடோபேக்பர்
C) நைட்ரோபேக்டர்
D) நைட்ரோசோமானாஸ்
9. புரதம், ஆக்ஸிஜன் அற்ற நிலையில் சிதைவடைவதற்கு பெயர்
A) பியூட்ரிபேக்ஷன்
B) நைட்ரிபிகேஷன்
C) டிநைட்ரோபிகேஷன்
D) அமோனிபிகேஷன்
10. எச்.ஐ.வி. இதை தாக்குகிறது
A) டி செல்கள்
B) இரத்தச் சிவப்பணுக்கள் (RBC)
C) இரத்த வெள்ளையணுக்கள் (WBC)
D) ஈசினோபில்கள்
11. முடக்குவாதம் எதனால் ஏற்படுகிறது
A) தாவர வைரஸ்
B) வைசூரி (பெரியம்மை) வைரஸ்
C) போலியோ வைரஸ்
D) விலங்கு வைரஸ்
12. மரபியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
A) அலெக்சாண்டர் ப்ளெம்மிங்
B) காரென்ஸ்
C) மெண்டல்
D) ஹீகோடிவெரிஸ்
13. ஒரு பண்பு கலப்பின
A) 1 : 2 : 1
B) 1 : 3
C) 1 : 1 : 1 : 1
D) 3 : 1
14. இரு பெயரிடும் வகைப்பாட்டியல் அமைப்பை கூறியவர்
A) லாமார்க்
B) பாஸ்ட்டீயர்
C) பென்தம்
D) லின்னேயஸ்
15. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே குறியீடுகளைக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
a) ஹாலோபைட்டுகள்-1. நீரில் வாழ்பவை
b) ஹைட்ரோபைட்டுகள்-2.உப்பு நீரில் வாழ்பவை.
c) மீஸோபைட்டுகள்-3. வேறுபாட்டில்லாத தாலஸ் தாவரங்கள்.
d) தாலோபைட்டுகள்-4. சாதாரண சூழ்நிலையில் வளர்பவை. குறியீடுகள்
A)2 3 1 4
B)2 1 4 3
C)4 1 3 2
D)3 4 2 1
16. நீர்ப்பூப்பு பொதுவாக ஏற்படக் காரணம்
A) பச்சைபாசி
B) பாக்டீரியா
C) நீலப்பச்சைப்பாசி
D) வேலம்பாசி தாவரம்
17. வைரஸ்களின் நியூக்ளிக் அமிலங்கள்
A) டி.என்.ஏ.
B) ஆர்.என்.ஏ
C) டி.என்.ஏயும் ஆர்.என்.ஏயும்
D) டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ
18. பொலினியா காணப்படும் குடும்பம் கீழ்க்கண்டவற்றில்
A) ஆஸ்கிலபிடேஸியி
B) அப்போசைனேஷியா
C) ரேனேல்ஸ்
D) நிம்டேஸியி
19. ஏணிப்படி வடிவ இரட்டை சங்கிலி போன்ற டி.என.ஏ. மாடலை அறிவித்தவர்கள்.
A) டி. ராபர்ட்ஸ்
B) வாட்சன் மற்றும் கிரிக்
C) கிரிஃப்பித்
D) ஹெர்ஷே மற்றும் சேஸ்
20. ஜலதோஷம் ஒரு
A) வைரஸ் நோய்
B) பூஞ்சை நோய்
C) பாக்டீரியா நோய்
D) தாவர நோய்
21. டபிள்யூ.எம்.ஸ்டான்லி எதற்காக நோபல் பரிசு பெற்றார்?
A) டி.என்.ஏ
B) வைரஸ்
C) ஆர்.என்.ஏ
D) பாக்டீரியா
22. இந்த பாக்டீரியாக்கள் வளிமண்டலத்தின் உள்ள நைட்ரஜனை, நைட்ரேட்டுகளாக மாற்றுபவை
A) பியூட்டிரி ஃபையிங் பாக்டீரியா
B) டிநைட்ரி ஃபையிங் பாக்டீரியா
C) நைட்ரி ஃபையிங் பாக்டீரியா
D) நைட்ரஜன் நிலைநிறுத்தம் பாக்டீரியா
23.ஒரு போக்கு நரம்பமைப்பு கீழ்காணும் தாவரத்தில் காணப்படுகிறது
A) குக்கர் பிட்டேசி
B) நெல்
C) பருத்தி
D) அவரை
24. கடின தன்மை நார்கள் பொதுவாக கீழ்க்கண்ட ஒன்றிலிருந்து பெறப்படுகின்றன
A) வெப்ப மண்டல இரு வித்திலை தாவரங்கள்
B) வெப்ப மண்டல ஒரு வித்திலை தாவரங்கள்
C) இரு வித்திலை தாவரங்கள்
D) ஒரு வித்திலை தாவரங்கள்
25. கீழ்க்கண்ட எந்த செயலியல் நிலை மூலம் தாவரங்கள் நீரை நீர்ம நிலையில் இழக்கின்றன?
A) நீராவிப் போக்கு
B) சுவாதித்தல்
C) சவ்வூடு பரவுதல் (Osmosis)
D) கட்டேஷன்
26. மாங்குரோ தாவரத்தின் வேர்
A) பட்டைவேர்
B) சுவாச வேர்
C) சல்லிவேர்
D) ஆணிவேர்
27. டர்பன்டைன் இத்துறையை சார்ந்த தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றது
A) கோனிஃபெரோலிஸ்
B) நீட்டேலிஸ்
C) சைக்கடேலிஸ்
D) இவற்றுள் எதுவுமில்லை
28. கிராம்பு என்ற வாசனைப் பொருள் கீழ்க்கண்டவற்றிலிருந்து கிடைக்கிறது
A) வேர்
B) தண்டுநுனி
C) மலர்மொட்டு
D) கனி
29. தாவர செல்லின் செல் சவ்விற்கு மற்றொரு பெயர்
A) பிளாஸ்மா லெம்மா
B) பிளாஸ்மா சவ்வு
C) சைட்டோபிளாசம் சவ்வு
D) உயிருள்ள சவ்வு
30. நிலத்தில் தோன்றிய முதல் தாவரம்
A) பிரையோபைட்டா
B) ஆஞ்சியோஸ்பெர்ம்
C) டெரிடோபைட்டா
D) ஜிம்னோஸ்பெர்ம்
31. பைளஸில் காணப்படும் விதை முளைத்தல் வகை
A) ஹைப்போஜியல்
B) எபிஜியல்
C) அனிமோபில்லஸ்
D) ஹைப்போகாட்டில்
32. கீழ்க்கண்ட தாவரங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்த கூடிய மகரந்தத்தூள்களை தோற்றுவிப்பது எது?
A) காங்கிரஸ் புல்
B) கொரியா புல்
C) பொதுவான புற்கள்
D) இவற்றுள் எதுவுமில்லை
33. “ஓபியம்” என்ற போதைப் பொருள் கீழ்க்கண்டவற்றில் எதிலிருந்து கிடைக்கிறது?
A) பெபாவர்
B) கன்னாபிஸ்
C) டிஜிடாலிஸ்
D) பைபர்
34. கீழ்வருபனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
A) இருவித்திலைத் தாவரங்கள் -நீர் கடத்துதல்
B) ஆஸ்டெரேஸி -சையாத்தியம்
C) ஒளிச்சேர்க்கை -ஸ்டார்ச் உருவாக்கம்
D) சைலம் -இரண்டாம் குறுக்கு வளர்ச்சி
35. வளிமண்டலத்தில் O2 எவ்வாறு ஈடு செய்யப்படுகிறது?
A) உயர் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால்
B) பாக்டீரிய ஒளிச்சேர்க்கையால்
C) ஒளிக்கதிர் மூலம் நீர் பிரிக்கப்படுவதால்
D) வேதிச் சேர்க்கையால்
36. லிம்னோஃபில்லா ஹெட்டிரோ ஃபில்லா என்பது இதற்கு உதாரணம்
A) நடுநிலைத் தாவரம்
B) இருநிலை வாழ் தாவரம்
C) மூழ்கிய நீர்த் தாவரம்
D) மிதக்கும் நீர்த்தாவரம்
37. ஒட்டுண்ணி ஆல்காவுக்கு ‘ஓர் உதாரணம்
A) செபாலூராஸ்
B) அல்வா
C) ஊடோகோனியம்
D) யுலாத்ரிக்ஸ்
38. கீழ்க்கண்டவற்றில் பசுமை இல்ல விளைவை உண்டாக்கும் வாயு எது?
A) CH4
B) So 2
C) CO2
D) o3
39. நியூக்ளிக் அமிலத்திலிருந்து புரதத்திற்கு மரபுச் செய்தி செல்வது கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது
A)ஆர்.என்.ஏ.செம்மைப்படுத்தப்படுதல்
B) படி எடுத்தல்
C) படி பெயர்த்தல்
D) சென்ட்ரல் டாக்மா (Central Dogma)
40. இதனால் வாயு மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்த முடியும்
A) வுவுச்சீரியா
B) நாவிக்குலா
C) பாலிசைபோனியா
D) அன்பீனா
41. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
a) பெனிசில்லியம் -1. மலரும் தாவரப் பண்புகள்
b) கேரா -2. ஒரு பால் தன்மை.
c) நீட்டம் -3. நீர்த் தாவரம்.
d) பாலி டிரைக்கம். -4. கொனிடியம்.
குறியீடுகள் :
A)4 2 3 1
B)3 2 4 1
C)4 3 1 2
D)2 4 1 3
42. ‘காலஸ்’ என அழைக்கப்படுவது
A) வேறுபடுத்தப்பட்ட திசு
B) இளம் இலைத் திசு
C) வேறுபடாத நிலையில் இருக்கும் திசு
D) ஆக்குத் திசு
43. குரோமோசோம்களின் எண்ணிக்கையை ஓர் உயிரினத்தில் நிலை நிறுத்துகிற செல் பகுப்பு வகை
A) மைட்டாஸிஸ்
B) ஏமைட்டாஸிஸ்
C) மயோசிஸ்
D) இவை அனைத்தும்
44. வாஸ்குலார் கிரிப்டோகேம்கள் எனப்படுவது
A) பிரையோபைட்டுகள்
B) பூஞ்சைகள்
C) பாசிகள்
D) டெரிடோபைட்டுகள்
45. பூஞ்சையின் செல்சுவரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான பொருள் முதன்மையாக விளங்குகிறது?
A) மியூக்கோ-பாலிசாக்கரைடு
B) செல்லுலோஸ்
C) a- D – குளுக்கோபைரனோஸ்
D) இவை எதுவுமில்லை
46. பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A) மால்டோஸ் -இரு கூட்டுச் சர்க்கரை
B) பிரக்டோஸ் -ஹெக்சோஸ் சர்க்கரை
C) செல்லுலோஸ் -அமைப்பு சார்ந்த பல கூட்டுச் சர்க்கரை
D) இவை அனைத்தும்
47. ஒரு தாவர செல், விலங்கு செல்லிலிருந்து எதில் மாறுபடுகின்றது?
A) மைட்டோகாண்டிரியன்
B) செல் சுவர்
C) செல் சவ்வு
D) உட்கரு
48. ஸ்போரோபைட் எதிலிருந்து வளர்ச்சியடைகின்றது?
A) ஸ்போர் தாய் செல்
B) கொனிடியம்
C) சைகோட்
D) கேமீட்
49. புவி ஈர்ப்பு நாட்டம் கண்டறியப் பயன்படுத்தப்படும் கருவி
A) ஆக்சானோமீட்டர்
B) கிளினோஸ்டாட்
C) ஆல்டிமீட்டர்
D) போட்டோமீட்டர்
50. இருசெல் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
A) பெந்தம்
B) ஹூக்கர்
C) டார்வின்
D) லின்னேயஸ்